Followers

Search Here...

Thursday 10 January 2019

கடவுளின் பெயரால், பாவ மன்னிப்பு கொள்கைகள் ஏற்படுத்தும் ஒழுக்க கேடுகள். ஹிந்துக்கள் வழிபடும் முறை என்ன? ஹிந்துக்கள் சிந்தனைக்கு...

"கடவுளின் பெயரால்"
என்று 'கடவுள் மேல் பழியை போட்டு', நல்லதோடு, கெட்ட காரியங்களையும் சேர்த்து செய்வதை, பிற மதங்கள் கொள்கையாக கொண்டுள்ளன.
இது வேதனைக்குரியது. சிந்திக்க வேண்டியதும் ஆகிறது.



இதற்கு மாறாக,
"பரமேஸ்வரன் என்னை பார்த்து 'இவன் என் பக்தன்' என்று மகிழ்ச்சியும் பெருமிதமும் அடையும் படி, நான் நற்செயல்களை மட்டுமே செய்ய ஆசைப்படுகிறேன்"
என்று ஹிந்துக்களை பிரார்த்திக்க வைக்கிறது வேத தர்மம்.

இந்த கொள்கையினாலேயே பாரதத்தில் உள்ள ஹிந்துக்கள்
"எந்த காலத்திலும்
அடுத்தவன் வீட்டில் புகுந்தோ,
அடுத்தவன் நாட்டில் புகுந்தோ
குண்டு வைத்தோ!, கொள்ளை அடித்தோ!
அடுத்தவன் நாட்டுக்கு சென்று அவர்கள் வழிபடும் ஆலயத்தை அழித்தோ!
நாசம் செய்ததில்லை"
ஸ்ரீ ராமர், இலங்கை சென்று ராவணனை கொன்று, சீதையை மீட்டார். ப்ராம்மண குலத்தில் பிறந்தாலும் விபீஷணனை போல நல்ல குணம் ராவணனிடத்தில் இல்லை. பிறர் மனைவியை அபகரித்த குணம் கெட்ட ராவணன் அழிந்தான்.

இலங்கை முழுவதையும் தன் கையில் கொண்டு வந்தும், விபீஷணனை இலங்கைக்கு அரசனாக்கி, அந்த ஊரில் உள்ள ஒரு சிறு தங்கத்தை கூட வரியாகவோ, மரியாதைக்காகவோ எடுத்துக்கொள்ளவில்லை ஸ்ரீ ராமர்.
சீதையுடன், மரவுரி அணிந்த ஸ்ரீ ராமராகவே அயோத்தி திரும்பினார்.
பிறர் சொத்தில் துளியும் ஆசை இல்லாதவராக இருந்த ஸ்ரீ ராமர் நம் அனைவருக்கும் தெய்வமாக உள்ளார்.
தெய்வத்திடம் ஒழுக்கம் இருக்கும் போது, ஹிந்துக்கள் ஒழுக்கமாக இருப்பதில் ஆச்சர்யமில்லையே.

மனித பண்பு உள்ள எவனும் ஸ்ரீ ராமரை போல வாழ ஆசைப்படுவான் அல்லவா?
பிராம்மண ஜாதியில் பிறந்த ராவணனை விட, அவன் தம்பி விபீஷணன் நியாயத்தின் பக்கம் நின்றார்.

இன்றுவரை, ஹிந்துக்கள் எங்கும் வரவேற்கப்படுகின்றனர்.
இதற்கு காரணம்,
இவர்களிடம் காலம் காலமாக தகப்பன், அவன் தகப்பன் என்று ஊறி உள்ள ஹிந்து கொள்கைகள் தான்.

வேத தர்மத்தில் இருக்கும் ஹிந்துக்கள், எண்ணத்தில் கூட உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
இது ஹிந்துக்களின் பெருமை.

பொதுவாக மற்ற மதங்களில், "நாம் செய்யும் பாவங்களை கடவுள் மன்னிப்பார்"
என்று பாவ மன்னிப்பை "முக்கிய கொள்கையாக" வைத்து உள்ளது.


"பாவத்திற்கு மன்னிப்பு" என்பதை முக்கிய கொள்கையாக வைத்து உள்ளதாலேயே,
அந்த மதங்களில் "பாவம் செய்யலாம்" என்று சொல்லாமலேயே இடம் தருகிறது.

இதனாலேயே அவர்களிடத்தில் ஒழுக்கம் இல்லை.
ஒழுக்கத்தை இவர்களுக்கு, போதிக்க வேண்டியுள்ளது.

எதற்கும் "சட்டம்" இயற்றினால் தான், இவர்களுக்கு ஒழுக்கத்தை ஏற்படுத்த முடிகிறது.
கடுமையான சட்டங்கள், இவர்கள் நாட்டில் இருப்பதற்கு காரணம் இந்த "பாவ மன்னிப்பு" கொள்கையே..

பாவத்திற்கு அஞ்சாதவனை, சட்டத்தால் தான் ஒடுக்க வேண்டி இருக்கிறது.

"பாவம் செய்தால், கடவுள் மன்னிப்பார்" என்கிறது மற்ற மதங்கள்.
"பாவம் செய்யாதே, தெய்வம் தண்டிக்கும்" என்று பாவத்திற்கு அஞ்ச வைத்து, ஒழுக்கத்தை போதிக்கிறது நம் வேத தர்மம்.

பாவத்திற்கு அஞ்சும் ஹிந்துக்கள் உள்ள பாரத நாட்டில், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், "தானாகவே சுய ஒழுக்கத்துடன்" பெரும்பான்மை ஹிந்துக்கள் இருக்கிறோம். வாழ்கிறோம்.
இங்கு, ஒருவன் கையிலும் துப்பாக்கி இல்லை, உயிர் பயமும் இல்லை.
இதற்கு காரணம் நம் ஹிந்து கொள்கையே..

ஹிந்துக்களை தெய்வமே காக்கிறது.
உருவாக்கப்பட்ட மற்ற மதங்களில், மனிதர்கள் மதத்தை காக்கிறார்கள்.

20 வருடம் ஒரு தம்பதிகள் மற்ற மதங்களில் சேர்ந்து வாழ்ந்தாலே, அது ஆச்சரியமாகவும், உயர்வாகவும் மதிக்கப்படுகிறது.
ஒழுக்கம் உள்ளவனை அங்கு தேட வேண்டியுள்ளது.

இந்தியாவில், ஹிந்துவாக பிறந்து, நாத்தீக புத்தி கொண்டவன் கூட 'மனசாட்சிக்கு கட்டுப்பட்டோ', 'தாய் தந்தையே தெய்வம்' என்று நினைத்தோ, ஒரு ஒழுக்கத்தில் வாழ்கிறான்.

ஒழுக்கம் என்ன விலை? 
என்று கேட்கும் சமுதாயமாக உள்ளனர் வெளி மதத்தினர் கொள்கையின் காரணமாக.

"பாவம் செய்தால் மன்னிப்பு கிடைக்கும்"
என்று மத கொள்கைகளே இடம் தருவதால்,
இன்னொரு ஜீவன் மேல் கருணை ஏற்படுவதில்லை.
"மிருகங்களை கொல்லாதே...கருணையாக இரு"
என்று தனியாக சங்கம் வைத்து, அதையும் இவர்களுக்கு போதிக்க வேண்டியுள்ளது.

மனித பண்பான ஜீவகாருண்யம் இவர்களிடம் இல்லை. பணமும், உணவுமே இவர்களின் முக்கிய தேடல்.
இவர்கள் மதங்களில் மிருகங்களை கொல்வது கூட இறைவன் பெயரால் தான். இவர்களிடம் சிக்கும் விலங்குகள் நிலை அந்தோ பரிதாபம்.
கொலை செய்த பாவத்தை "இறைவன் மேல்" போடுகின்றனர் மத கொள்கையினாலேயே.



இன்னும் ஒரு படி மேலே போய், பிற நாட்டில் உள்ளே புகுந்து ஆயிரக்கணக்கான மனிதர்களை இறைவன் பெயரால் கொலை செய்கின்றனர்.
பணத்தாலும்,
பாவ மன்னிப்பு போன்ற பிதற்றல் கொள்கையாலும்,
கத்தி முனையிலும்
மதம் மாற்றுகின்றனர்.

ஏமாறும் மனிதர்கள்,
ஒழுக்கத்தில் ஆர்வம் இல்லாதவர்கள்,
பண தேவை உள்ள அப்பாவிகள் 
இவர்கள் மதத்தில் தாவுகின்றனர்.






இது இன்று அல்ல, இந்த கொள்கைகள் விதிக்கப்பட்டு பிற மதங்கள் தோன்றிய காலத்தில் இருந்தே, நடந்து கொண்டு இருக்கிறது.

இதற்கு குறையாக பிற மதத்தவர்களை சொல்ல முடியாது.
அவர்களும் மனிதர்கள் தானே.

பொதுவாக, மனிதர்கள்
தான் சார்ந்த மத கொள்கைகளாலும்,
அவர்களை சுற்றி இருக்கும் மனிதர்களின் ஒழுக்கத்தாலும் வளர்க்கப்படுகின்றனர்.

ஆதலால் பிற மதத்தில் உள்ள மனிதர்களை குறை சொல்லி பயனில்லை.
ஆனால்,
பிற மதங்களில் உள்ள சில கொள்கைகளில் உள்ள ஓட்டைகள் தான், மனிதர்களை தவறான பாதைக்கு இழுத்து செல்கிறது..

இதை அவர்கள் புரிந்து கொள்கிறார்களோ இல்லையோ, ஹிந்துக்கள் தெரிந்து கொண்டால், குறைந்த பட்சம் பொய் மதங்களில் விழுந்து விடாமல் இருக்கலாம்.
பிறமத கொள்கை "பாவ மன்னிப்பை" முக்கிய கொள்கையாக அனுமதிப்பதால், தன் புத்திக்கு தோன்றிய நியாயத்தில் காரியங்கள் செய்து, அதை "கடவுளின் பெயரால்" என்று மொத்த பாவத்தையும் கடவுள் மேல் போடுகின்றனர் பிற மதத்தினர்.
நமக்கோ கருட புராணம் போன்ற பெரிய தர்ம சாஸ்திரத்தை காண்பித்து, "தண்டனை நிச்சயம்" என்று எச்சரிக்கிறது.


ஹிந்துக்களுக்கு
நாராயணனின் பெருமை தெரியுமோ, இல்லையோ,
சிவபெருமானின் பெருமை தெரியுமோ, இல்லையோ,
ஆனால் அனைவருக்கும் பாவம் என்றால் என்ன? யமன் யார்? என்று தெரிகிறது.
பாவத்தையும், மரணத்தையும் காட்டி, ஹிந்துக்களை ஒழுக்கத்தில் நிறுத்துகிறது நம் வேத தர்மம்.

ஹிந்துவாக பிறப்பதற்கே கோடி ஜென்மங்கள் புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.
உலகத்தில் எந்த மூலையிலும் நாம் பிறந்து இருக்கலாம்.
ஆனால் ஹிந்துவாக, ஒரு ஹிந்துவுக்கு பிறந்துள்ளோம்.

அதிலும் ஹிந்துவின் பெருமை உணர்ந்தவனாக வாழ்வதற்கு அதை விட கோடி புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.

நாயன்மார், ஆழ்வார்கள், சித்தர்கள், மகான்கள் போன்றவர்கள் சொன்ன அருள் மொழிகளை கேட்கும் பாக்கியமும் பெற்று இருந்தால், அதை விட கோடி புண்ணியம் செய்தவராக இருக்க வேண்டும்.

ஹிந்துவாக பிறப்பதற்கு, நாம் எத்தனை புண்ணியம் செய்து இருக்க வேண்டும்? என்று எண்ணி பார்த்தாலே, நம்மை நாமே மெச்சிக்கொள்ள தோன்றும்.

பாவத்திற்கு தண்டனையை காட்டி, ஒழுக்கத்தில் வாழ வைக்கிறது நம் தர்மம்.

செய்த பாவத்திற்கு தண்டனை போதாது என்றால், மறு பிறவியும் நிச்சயம்,
அதுவும் போதாது என்றால்,
குருடனாக, நொண்டியாக, திருடனுக்கு மகனாக, மகளாக பிறக்க நேரும்,
அதுவும் போதாது என்றால்,
பிற மதங்களில் பிறக்க நேரும்,
அதுவும் போதாது என்றால்,
மரமாகவும், விலங்காகவும் பிறக்க நேரும்
என்று பாவத்தை கண்டு அஞ்ச வைத்து, 'பாவம் செய்யாதே' என்று வழி நடத்துகிறது வேத தர்மம்.

பிற மதத்தில் உள்ள "ஒழுக்க குறைபாடு, தீவிரவாதம்" தீர்க்க முடியாத சிக்கல்.
இந்த மதங்களில் பிறந்தவர்கள்,  தன் மனசாட்சியை உண்மையாக கேட்டு கொண்டால் ஒழிய இதற்கு தீர்வு இல்லை.

"எந்த பாவத்தையும் கடவுள் மன்னிப்பார்" என்பதால், பாவம் செய்ய தூண்டுவதே இதற்கு காரணமாக உள்ளது.
இது வருந்தத்தக்கது.

பல நல்ல விஷயங்கள் மற்ற மதங்களிலும் உள்ள போதிலும், இந்த "பாவ மன்னிப்பு" கொள்கையும், "கடவுளின் பெயரால்" செயல் செய்யும் அனுமதிப்பும், ஒழுக்கத்தில் இருந்து நழுவ செய்கிறது.
பகுத்தறிவு உள்ளவன் சிந்திப்பான்.

சமுதாய சீர்கேட்டுக்கு முக்கிய காரணம் ஆகிறது, இந்த கொள்கைகள்.


உலகத்தில் உள்ள பிராணிகள் அனைத்தும், "மனிதன் பயன்படுத்தவும், தின்பதற்குமே" என்று கொள்கையாக வைத்து உள்ளது பிற மதங்கள்.
இது வேதனைக்குரியது.

நம் வேத தர்மத்தில், மனித சமுதாயத்தை பார்த்து,
  • சத்தியம் பேசு,
  • தர்ம வழியில் செல்,
  • தாய் தந்தையை தெய்வம் போல நினை,
  • உன் உயிருக்கு நீ கொடுக்கும் மதிப்பை, மற்ற உயிர்களுக்கும் கொடு, ஜீவ ஹிம்சை முடிந்தவரை செய்யாதே,
  • உனக்கே கூட ஜீவ ஹிம்சை செய்து கொள்ளாதே.. தற்கொலை எண்ணம் கொள்ளாதே,
  • குருவை தெய்வம் போல நினை,
  • உன் வீட்டுக்கு நேரம் காலம் சொல்லாமல் வரும் விருந்தாளியையும் (அதிதி) தெய்வம் போல நினை,

நீ எந்த செயல் செய்தாலும் உனக்குள் இருக்கும் இறைவன் 'உன் செயலை பார்த்து மகிழ்ச்சி அடைவாரா?' 
என்று எப்பொழுதும் கேட்டுக்கொண்டே, கவனித்து எந்த காரியமும் செய்
என்று ஆச்சர்யமாக வழிகாட்டுகிறது வேத தர்மம்.

பொய் பேசும் போது,
ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை வாழும் போது,
நல்ல குணம் இல்லாத போது,
நமக்குள்ளேயே இருக்கும் பரமாத்மா நம் செயலை கண்டு அறுவருப்பார்.

ஒரு தகப்பன் நல்ல பிள்ளையை கண்டு மகிழ்ச்சியோடு "இவன் என் பிள்ளை" என்று சொல்லிக்கொள்வார்.
அதே தகப்பனுக்கு பொய் பேசும், கெட்ட குணங்கள் உள்ள இன்னொரு பிள்ளை இருந்தால், வேதனையுடன், ஒரு வித வெறுப்புடன் "இவனும் என் பிள்ளை தான்" என்று சொல்வார்.

நாம் அனைவரும் பகவான் நாராயணனின் பிள்ளைகள் தான்.
நற்செயல்கள் செய்தால், பகவான் நம்மை ஒரு நல்ல பிள்ளையை போல பார்க்கிறார். 'இவன் என் பக்தன்' என்று பெருமிதமாக சொல்லிக்கொள்கிறார்.
தீய செயல்களை செய்தால், வெறுப்போடு அணுகிரஹம் செய்கிறார்.

மனித பண்பு உள்ள நாம், தீய குணத்தில் இருந்து விலகி இருக்க சொல்கிறது நம் வேத தர்மம்.

எந்த காரியம் செய்தாலும் "இந்த காரியம் எனக்குள் அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மாவுக்கு மகிழ்ச்சி தருமா?" என்று  தன்னையே நாம் கேட்டுகொண்டாலே, ஒழுக்கமாக வாழ ஆரம்பிப்போம்.
இந்த அற்புதமான வாழ்க்கை நெறியை சொல்லிக்கொடுப்பது நம் வேத தர்மமே.

"அந்தர்யாமியாக நமக்கு உள்ளேயே, பகவான் இருக்கிறார்" என்று தெரிந்த பின்னும், ஒருவன் தீய குணத்துடன், ஒழுக்கமில்லாத வாழ்க்கை வாழ்வானா மனித பண்பு உள்ள ஒருவன்?

"கடவுள் எங்கேயோ ஆகாசத்தில் இருக்கிறார்" என்று சொல்லாமல், "உன் இதயத்தில் அமர்ந்து இருக்கிறார்" என்று சொல்லி எச்சரிக்கிறது நம் வேத தர்மம்.
நாத்தீகன் உள்ளிருந்து நம்மிடம் பேசும் நாராயணனை "மனசாட்சி" என்று சொல்கிறான்.

"உள்ளே ஒருவன் பேசுகிறான்" என்பதை எவனும் மறுப்பதில்லை.
ஜீவாத்மாவாகிய நம்மோடு, "எப்பொழுதும் அந்த பரமாத்மா கூட இருந்து பேசுவதை" கவனித்து வாழ்பவர்கள் மனித பண்பு உள்ளவர்கள்.

"வானத்தில் மட்டும் இல்லை, எங்கும் இருக்கிறார் பகவான். அந்தர்யாமியாக நமக்கு உள்ளேயே, பகவான் இருக்கிறார்" என்று ஹிந்துக்கள் உணர்வதால், நல்ல குணத்துடன், ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்து,
உள்ளிருக்கும் பரமாத்மா சந்தோஷப்படுவதை உணர்கிறார்கள்.
ப்ராம்மணர்கள் தினமும் செய்யும் சந்தியாவந்தனத்தில்,
அனைவரும் செய்யும் "கல்யாணம், திவசம்" போன்ற காரியங்களில் ஆரம்பிக்கும் போது கூட, பரமாத்மா மகிழ்ச்சி அடைய இதே பிரார்த்தனை தான் செய்கிறோம்.
நன்றாக கவனித்தோமென்றால், எத்தனை அற்புதமான வழிகாட்டியாக வருகிறது நம் வேத தர்மம் என்று நமக்கு புரியும்..

கல்யாணம், திவசம், சந்தியா வந்தனம் என்று எதை செய்தாலும்,
"மமோபாத்த சமஸ்த... " என்று சங்கல்பம் செய்ய சொல்லும் போது, "பரமேஸ்வர ப்ரீத்யர்தம்" என்று சொல்லி ஆரம்பிக்கிறோம்.
இதற்கு பொருள் என்ன?
நான் செய்யப்போகும் திவசம்/கல்யாணம்/சந்தியா வந்தனம் போன்ற கடமைகளை பார்த்து, பரமேஸ்வரன் மகிழ்ச்சி அடைவார்" என்று கடவுள் நம் செயலை கண்டு மகிழ்வார் என்ற ஆர்வத்தோடு கடமையாக செய்கிறோம்.
சுயநலத்தை விட, நான் என் பெற்றோருக்கு செய்யும் திவசத்தை கண்டு, பரமேஸ்வரன் 'என்னை பார்த்து பெருமிதம்' கொள்வார் என்று நோக்கில் கடமையாக செய்கிறோம்.

நாம் செய்யும் திவசமோ, சந்தியா வந்தனமோ, கோவிலுக்கு செல்வதோ, பரமேஸ்வரனை மகிழ்ச்சி படுத்தும் என்று தெரிந்தும், இதை செய்யாமல் இருப்பானா ஒரு ஹிந்து?

இன்றைய நிலையிலும், சில ப்ராம்மணர்கள் இன்று வரை சந்தியா வந்தனம் போன்ற விதிக்கப்பட்ட கடமையை செய்வதற்கு காரணமும் இதுவே.
இறைவனின் மன உகப்புக்காக வாழ்கின்றனர் வேதியர்கள்.

95% ப்ராம்மணர்கள், இன்று  சந்தியாவந்தனம் செய்வதில்லை.
இது ப்ராம்மணருக்கு மட்டுமல்ல, பிராம்மண பெண்களுக்கு மட்டுமல்ல, மற்ற அனைவருக்கும் செய்யும் துரோகம்.

சந்தியாவந்தனத்தில், உலகத்தில் உள்ள எல்லோருக்காகவும் பிராம்மணன் தெய்வத்திடம் பிரார்த்திக்கிறான்.
இதை செய்யாமல் தனக்கும் துரோகம் செய்து, மற்றவர்களுக்கும் துரோகம் செய்கிறான்.
ப்ராம்மணர்கள் தங்களை தானே கேட்டு கொள்ள வேண்டிய கேள்வி இது.

"முக்கால்வாசி பிராமணர்கள் சந்தியாவந்தனம் செய்யவில்லையே, நீங்கள் சிலர் மட்டும் விடாமல் செய்வதற்கு காரணம் என்ன?" என்று கேட்டால்,
"கடமைக்காக செய்யவில்லை, பணத்திற்காகவும் செய்யவில்லை.
"இது எனக்கு கொடுக்கப்பட்ட கடமை.
இதை செய்தால் எனக்கு என்ன நன்மை ஏற்படும்? என்பதை விட... எனக்கு கடமையாக கொடுக்கப்பட்ட இந்த  சந்தியாவந்தனம் செய்தால், என் உள்ளிருக்கும் பகவான் மகிழ்ந்து "சபாஷ்..." என்று சொல்வாரே என்பதால் செய்கிறேன் என்பார்கள்.

சந்தியா வந்தனம் செய்யும் போதும், நாம் என்ன சொல்லி ஆரம்பிக்கிறோம், என்ன சொல்லி முடிக்கிறோம் என்று பார்த்தால், எத்தனை அற்புதம் என்று நமக்கு புரியும்.

சந்தியா வந்தனம் ஆரம்பிக்கும் போது, "பரமேஸ்வர ப்ரீத்யர்தம்" என்று சொல்லி, "நான் செய்யும் இந்த நித்ய கடமையை (Daily Duty), பார்த்து பரமேஸ்வரன், என்னை கண்டு சந்தோஷம் அடைவார்" என்று உற்சாகத்துடன் ஆரம்பிக்கிறோம்.

கடைசியில், "நாராயணாயேதி சமர்பயாமி" என்று முடிக்கும் போது,
"அனைத்து பலன்களையும் நாராயணன் பாதத்தில் சமர்ப்பித்து விட்டு" கடமையை செய்தோம், என்ற மட்டில் திருப்தி அடைகிறோம்.

பகவத் கீதையில், "கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே" என்று ஏன் சொன்னார்? என்பது இப்போழுது புரிந்து கொள்ள முடியும்.

மற்ற மதங்களில் உள்ளவர்கள்,
"எனக்கு பெரிய குடும்பம். எனக்கு கடமைகள் உள்ளது. நான் தான் பார்த்து கொள்ள வேண்டும்.
என்னை கடவுள் காக்க வேண்டும், எனக்கு அது வேண்டும், இது வேண்டும்" என்று கடவுளிடம் பிரார்த்திப்பார்கள்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், நம்மை பார்த்து,
"உன் குடும்பம், உன் கடமை என்று நினைப்பதை நிறுத்து.
நீயும், உன் குடும்பமும் என் குடும்பம் என்று தெரிந்து கொள்.
உன் கடமையை என் குடும்பத்தில் ஒருவனாக, சந்தோஷமாக செய்து கொண்டு இரு.
நீ உன் கடமையை செய்வதை பார்த்தே நான் சந்தோஷப்படுகிறேன்.
நீ உன் கடமையை குறையாக செய்தாலும், நிறையாக செய்தாலும்,
நீ ஆசைப்படுவதை விட அனைத்து பலன்களும் கிடைக்க செய்து, அதோடு எதிர்பாராத ஆபத்துக்களையும் வராமல் செய்து, நான் காக்கிறேன். குடும்ப கவலையை குடும்ப தலைவனான என்னிடம் ஒப்படைத்து விட்டு, நீ என் குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினர் என்ற நினைவோடு, தைரியமாகவும், சந்தோஷமாகவும் கடமையை செய்து கொண்டிரு. உன் குடும்ப நலன் என் பொறுப்பு"
என்ற அர்த்தத்தில் "கர்மாவை செய், பலனை எதிர்பார்க்காதே" என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

இந்த காரியம் செய்தால், பகவான் ப்ரீதி அடைவார்,
இந்த காரியம் செய்தால், பகவான் வெறுப்பு அடைவார்,
என்று எந்த காரியத்தையும் செய்வதற்கு முன், இது பகவானுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துமா?
என்று கேள்விகேட்டு கொண்டு வாழ்ந்தாலே, இந்த கலியிலும் எந்த தவறான வழியிலும் நம்மை போக விடாமல், நல்ல வழியையே நமக்கு காட்டி, நம் ஆயுசு முடியும் சமயத்தில் திவ்யகாட்சி கொடுத்து, வைகுண்டமும் கூட்டி செல்வார்.

சந்தியா வந்தனம், ஏகாதசி விரதம் இருப்பவரை கண்டால், பகவான் "இவன் என் பக்தன்' என்று பெருமிதம் கொள்கிறார்.


சந்தியா வந்தனம் பிராம்மணர்கள் மட்டும் செய்ய கூடிய கடமை.
ஏகாதேசி விரதம் அனைவருக்கும் பொதுவானது.
ஓம் என்ற ஓங்காரம் உச்சரிக்க, பொதுவாக சந்யாசிகளுக்கு (உலக வாழ்க்கை விட்ட) மட்டுமே அதிகாரம்.
ப்ரணவத்திற்கு ஈடான "ராம" மந்திரம் அனைவருக்கும் பொது.

"ராம ராம" என்றோ, "நாராயணா" என்றோ, "விஸ்வநாதா" என்றோ, "சிவ சிவ' என்றோ சொல்ல அனைவருக்கும் தகுதி உண்டு.

வேதங்கள் புராணங்கள் எல்லாம், இந்த தெய்வங்களை தான் வழிபடுகிறது.
அந்த தெய்வங்களை நேரிடையாக நாமும் அழைக்கலாம் என்று அந்த தெய்வங்களின் பெயரை சொல்ல நாம் எல்லோருக்கும் அனுமதி உள்ளது.

எதற்காக எப்பொழுதும் "சிவ சிவ", "ராம ராம" என்று சொல்கிறாய்? என்றால், அதற்கு பதிலும் இதுவே.
"ராம ராம" என்று சொல்வதால் ஏற்படும் புண்ணியத்தை விட,
"ராம ராம" என்று சொல்லும் போது, "அந்த பகவான் இவன் என்னை சேர்ந்தவன், இவன் என் பக்தன்" என்று நம்மை பார்த்து ஆனந்தப்படுவார்.

இந்த வாக்கியத்தின் அழகை உற்று கவனித்து பார்த்தால் தான், சந்தியா வந்தனத்தின் அருமை கூட நமக்கு புரியும்..

சந்தியா வந்தனத்தை இன்றும் சிலர் உயிர் மூச்சாக ஏன் விடாமல் செய்கிறார்கள்? என்று புரியும்.

ஹிந்துக்களாக பிறந்ததில் பெருமை கொள்வோம்.
பாவ மன்னிப்பும் வேண்டாம், இறைவன் பெயராலும் செயலையும் செய்ய வேண்டாம்.
இறைவன் மகிழ்ச்சி அடையும் படி, மனசாட்சி (பரமாத்மா) விருப்பப்படி வாழ்ந்து, இறைவன் நம்மை கண்டு மகிழும் படியாக வாழுவோம். இதுவே பரமாத்மா நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

ஹிந்துக்கள் ஒன்று படுவோம்.
ஆதி காலத்தில் அனைவரும் ஹிந்துக்களே. ஹிந்துக்களாக அனைவரையும் ஆக்குவோம். 

HARE RAMA HARE KRISHNA - BHAJAN

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 



sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka