Followers

Search Here...

Saturday 13 October 2018

உலகில் பல விதத்தில் மனிதர்கள் துன்பப்படுகிறார்கள். ஏன்?

உலகில் பல விதத்தில் மனிதர்கள் துன்பப்படுகிறார்கள். ஏன்?


மனிதனால் மட்டும் தான், கடந்த காலத்தை பற்றியும், எதிர்காலத்தை பற்றியும் சிந்திக்க முடிகிறது.
பலமாக கொடுக்கப்பட்ட இந்த வரத்தை, வீண் செய்பவர்கள் துன்பப்படுகிறார்கள்.

மிருகங்கள் எதற்கும் கடந்த காலத்தை நினைத்தோ, எதிர்காலத்தை நினைத்தோ வருத்தம் அடைவது இல்லை. இதனாலேயே அவை நிம்மதியாகவே உள்ளன.

மூளை கலங்கிய கடந்த காலத்தை மறந்து, எதிர்கால சிந்தனையும் இல்லாமல், சில பைத்தியம் பிடித்தவர்கள் கூட,  வருத்தம் அடைவது இல்லை. இதனாலேயே அவர்களும், நிம்மதியாகவே உள்ளனர்.

கடந்த கால வாழ்வில் நடந்த சோகங்கள், இனி நடக்காமல் இருக்க, வழி செய்வதை விட்டுவிட்டு, கடந்த கால வாழ்வில் நடந்த சோகத்தை நினைவில்  மட்டும் வைத்து கொள்பவர்கள், துன்பப்படுகிறார்கள்.

எதிர் கால வாழ்வில் என்ன விபரீதங்கள் நடக்குமோ? என்று பயந்து, நல்லவைகள் நடக்க இன்று செயலில் இறங்குவதை விட்டுவிட்டு, எதிர் கால வாழ்வில் என்ன நடக்குமோ என்று பயத்தை மட்டும் நினைவில் வைத்து கொள்பவர்கள், துன்பப்படுகிறார்கள்.

ஸ்ரீ கிருஷ்ணர், "கடமையை செய்" என்று, "இன்று நீ செய்ய வேண்டிய கடமையை செய்ய செயலில் இறங்கு" என்று வழி காட்டுகிறார்.


ஸ்ரீ கிருஷ்ணரின் கர்ம யோக வழியில், கடந்த கால வாழ்க்கையை உணர்ந்து, அதில் கற்ற பாடம் என்ன? என்று அறிந்து, எதிர்காலத்தில் நல்ல படியாக வாழ இன்று என்ன செய்ய வேண்டும்? என்று உணர்ந்து, நம் கடமையை தர்மத்துடன் செய்து வந்தால், பகவான் நம்மை காப்பாற்றுகிறார்.

கிருஷ்ண பக்தன் நாசமாக மாட்டான் என்று, பக்தனும் தைரியமாக கடந்த கால சோகத்தில் மூழ்காமல், எதிர்கால பயத்தில் மூழ்காமல், இன்று என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டு, துன்பம் அடையாமல் சந்தோஷமாக வாழ்கிறான்.

கிருஷ்ணர் சொன்ன கீதையை படித்து, கிருஷ்ண பக்தனாகி, நாமும் தைரியமாக கடந்த கால சோகத்தில் மூழ்காமல், எதிர்கால பயத்தில் மூழ்காமல், இன்று என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டு, துன்பம் அடையாமல் சந்தோஷமாக வாழுவோம்.