Followers

Search Here...

Showing posts with label sahadev. Show all posts
Showing posts with label sahadev. Show all posts

Sunday, 14 August 2022

அக்னி ஸ்துதி (ஸ்தோத்திரம்) - பாபங்கள் பொசுங்க - சஹாதேவன் செய்த அக்னி ஸ்துதி - வியாசர் மஹாபாரதம்

ராஜசூய யாகம் செய்ய சங்கல்பித்த யுதிஷ்டிரர், சஹாதேவனை தென் தேசம் நோக்கி திக்விஜயம் செய்ய அனுப்பினார். 

திக்விஜயம் செய்து பல வெற்றிகளோடு தென்திசை நோக்கி சென்று கொண்டிருந்த சஹாதேவன் 'மாஹிஷ்மதி' தேசத்தை நெருங்கினார்

அந்த தேசத்தையும், அரசனையும் அக்னி பகவானே காப்பதையும், திக்விஜயம் தடைபட்டு தன் சேனைகள் கொளுத்தப்படுவதையும் கண்ட சஹாதேவன், அக்னி தேவனை தியானித்து ஸ்தோத்திரம் செய்ய ஆரம்பிக்கிறார்.

सहदेव उवाच(சஹதேவ உவாச)

त्वद् अर्थ: अयं समारम्भः कृष्णवर्त्मन् नमोस्तु ते।

मुखं त्वम् असि देवानां यज्ञ: त्वम् असि पावक।।

த்வத் அர்த: அயம் சம ஆரம்ப: 

க்ருஷ்ணவர்த்மன் நமோஸ்து தே |

முகம் த்வம் அஸி தேவானாம்

யஞ: த்வம் அஸி பாவக ||

- மஹாபாரதம் (வ்யாஸர்)

அக்னி பகவானே! என்னுடைய இந்த முயற்சியே (திக் விஜயமே) உங்களுக்காக தானே! பவித்ரமானவரே! நீங்கள் தேவர்களுக்கு முகமாக இருக்கிறீர்கள். நீங்களே யஞ புருஷனாக இருக்கிறீர்கள்.

पावनात् पावक: च असि वहनाद् हव्यवाहनः।

वेदा:  त्वद् अर्थं जाता वै जातवेदा: ततो हि असि।।

பாவநாத் பாவக: ச அஸி

வஹநாத் ஹவ்ய-வாஹன: |

வேதா: த்வத் அர்தம் ஜாதா வை

ஜாதவேதா: ததோ ஹி அஸி ||

- மஹாபாரதம் (வ்யாஸர்)

அனைத்தையும் பரிசுத்தம் செய்பவராக இருக்கும் நீங்களே, ஹவ்ய வாஹனனாக இருந்து கொண்டு, ஹோமத்தில் கொடுக்கப்பட்டதை அந்தந்த தேவர்களுக்கு கொண்டு போய் சேர்க்கிறீர்கள். உங்களுக்காகவே வேதங்கள் உண்டானதால், நீங்கள் ஜாதவேதனாக இருக்கிறீர்கள்.

चित्रभानुः सुरेश: च अनल: त्वं विभावसो।

स्वर्गद्वार स्पृश: च असि हुताशो ज्वलनः शिखी।।

சித்ரபானு: சுரேஸ: ச

அனல: த்வம் விபாவசோ |

சுவர்க-த்வார ஸ்ப்ருஷ: ச

அஸி ஹுதாஸ: ஜ்வலன: சிகீ ||

- மஹாபாரதம் (வ்யாஸர்)

நீரே சித்ரபானு என்று அறியப்படுகிறீர்கள். நீரே தேவர்களில் சிறந்தவர். நீரே அனலன் என்று அறியப்படுகிறீர்கள். சொர்க்க வாசலை திறப்பவர் தாங்களே! ஹோமங்களை புஜிப்பது தாங்களே! ஜ்வலிப்பவர் தாங்களே! நீரே சிகீ என்றும் அறியப்படுகிறீர்கள்.

वैश्वानर: त्वं पिङ्गेशः प्लवङ्गो भूरि-तेजसः।

कुमारसू: त्वं भगवान् ऋद्र-गर्भो हिरण्य-कृत्।।

வைஸ்வானர: த்வம் பிங்கேஸ:

ப்லவங்கோ பூரி-தேஜஸ: ||

குமாரஸூ: த்வம் பகவான்

ருத்ர-கர்போ ஹிரண்ய-க்ருத் ||

- மஹாபாரதம் (வ்யாஸர்)

நீரே வைஸ்வான அக்னியாகவும் இருக்கிறீர்கள். நீரே பிங்கேசன் என்று அறியப்படுகிறீர்கள். நீரே ப்லவங்கன் என்று அறியப்படுகிறீர்கள். மஹா பொலிவோடு இருக்கும் நீரே பூரிதேஜன் என்று அறியப்படுகிறீர்கள். நீரே முருகப்பெருமானாக அறியப்படுகிறீர்கள். நீரே மகிமையுடையவராக இருக்கிறீர்கள். நீரே ருத்ர-கர்பன் என்று அறியப்படுகிறீர்கள். நீரே தங்கத்துக்கு காரணமாகவும் இருப்பதால், ஹிரண்ய-க்ருத் என்றும் அறியப்படுகிறீர்கள்.

अग्नि: ददातु मे तेजो वायुः प्राणं ददातु मे।

पृथिवी बलम् आदध्याच्छिवं चापो दिशन्तु मे।।

அக்னி: ததாது மே தேஜோ

வாயு: ப்ராணம் ததாது மே |

ப்ருதிவீ பலம் ஆதத்யாச் 

சிவம் சாபோ திஷந்து மே ||

- மஹாபாரதம் (வ்யாஸர்)

அக்னி தேவா நீங்களே எனக்கு பொலிவை (தேஜஸ்) அருள வேண்டும். வாயு பகவான் பிராணனை அருள வேண்டும். இந்த பூமி பலத்தை அருள வேண்டும், ஜலம் சுகத்தை அருள வேண்டும்.

अपां गर्भ महासत्व जातवेदः सुरेश्वर।

देवानां मुखम् अग्ने त्वं सत्येन विपुन् ईहि माम्।।

அபாம் கர்பம் மஹாஸத்வ

ஜாதவேத: சுரேஸ்வர |

தேவானாம் முகம் அக்னே த்வம்

சத்யேன விபுன் ஈஹி மாம் ||

- மஹாபாரதம் (வ்யாஸர்)

ஜலத்தின் கர்ப்பமாக (வடவாமுக அக்னி) இருப்பவரே! மஹாசக்தி உள்ளவனே! ஜாதவேதனே! தேவர்களில் ஈஸ்வரனே! தேவர்களுக்கு முகமாக இருக்கும் அக்னி பகவானே, நான் சொல்வது சத்யமானால், என் முன்னே காட்சி கொடுத்து என்னை பரிசுத்தமாக்குங்கள்.

ऋषिभि:  ब्राह्मणै: च एव दैवतै: असुरै: अपि।

नित्यं सुहुत यज्ञेषु सत्येन विपुन् ईहि माम्।।

ரிஷிபி: ப்ராஹ்மணை: ச ஏவ

தைவதை: அசுரை: அபி |

நித்யம் சுஹுத யஞேஸு

சத்யேன விபுன் ஈஹி மாம் ||

- மஹாபாரதம் (வ்யாஸர்)

ரிஷிகளாலும், ப்ராம்மணர்களாலும், தேவர்களாலும், அசுரர்களாலும் யாகங்களில் எப்போதும் நன்றாக ஹோமம் செய்யப்பட்டவரே! இந்த சத்யத்தினால் என்னை காப்பீராக. 

धूमकेतुः शिखी च त्वं पापहाऽनि सम्भवः।

सर्वप्राणिषु नित्यस्थः सत्येन विपुन् ईहि माम्।।

தூமகேது: சிகீ ச த்வம்

பாபஹானி சம்பவ: |

சர்வ-ப்ராணிஷு நித்யஸ்த:

சத்யேன விபுன் ஈஹி மாம் ||

- மஹாபாரதம் (வ்யாஸர்)

புகையையே கொடியாக உள்ளவரே! ஜ்வலிக்கும் கேசமுடையவரே! பாவங்களை அழிப்பவரே! எல்லா பிராணிகளிடத்திலும் எப்போதும் இருப்பவரே! அக்னி பகவானே! சத்யமாக என்னை நீங்கள் காக்க வேண்டும்.

एवं स्तुतोऽसि भगवन्प्रीतेन शिचिना मया।

तुष्टिं पुष्टिं श्रुतं चैव प्रीति च अग्ने प्रयच्छ मे।।

ஏவம் ஸ்துதோஸி பகவன்

ப்ரீதேன ஸிசினா மயா |

துஷ்டிம் புஷ்டிம் ஸ்ருதம் ச ஏவ

ப்ரீதி ச அக்னே ப்ரயச்ச மே ||

- மஹாபாரதம் (வ்யாஸர்)

அக்னி பகவானே! நான் உங்களை பரிசுத்தமாக பக்தியோடு துதிக்கிறேன். எனக்கு சந்தோஷமும், ஆரோக்கியமும், சாஸ்திர ஞானமும், மென்மேலும் அன்பும் வளர எனக்கு அருள வேண்டும்.

वैशम्पायन उवाच  (வைசம்பாயனர் சொல்கிறார்)

इत्येवं मन्त्रम् आग्नेयं पठन्यो जुहुयाद् विभुम्।

ऋद्धिमान् सततं द अन्तः सर्वपापैः प्रमुच्यते।।

இத்யேவம் மந்த்ரம் ஆக்நேயம்

படன்யோ ஜுஹுயாத் விபும் ||

ருத்திமான் சததம் த அந்த:

சர்வபாபை: ப்ரமுச்யதே ||

- மஹாபாரதம் (வ்யாஸர்)

அக்னி பகவானை குறித்து சஹதேவரால் சொல்லப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை படித்து, அக்னியில் ஹோமம் செய்பவன், அழியாத செல்வ செழிப்புடன் எப்போதும் புலன்களை வென்றவனாக, எல்லா பாவங்களாலும் விடுபடுவான்.