Followers

Search Here...

Showing posts with label lyrics. Show all posts
Showing posts with label lyrics. Show all posts

Friday, 4 December 2020

Vishnu sahasranamam (விஷ்ணு சஹஸ்ரநாமம் / श्रीविष्णु सहस्रनाम स्तोत्रम्) lyrics in english, Tamil, Sanskrit - Simply Readable for Everyone..

श्रीविष्णु सहस्रनाम स्तोत्रम्

விஷ்ணு சஹஸ்ரநாமம்

Vishnu Sahasranaamam


शुक्लाम् बरधरं विष्णुम् शशि र्णं चतुर भुजं |

प्रसन्न वदनं ध्यायेत् सर्व विघ्नोप शान्तये  ‖

சுக்லாம் பரதரம் விஷ்ணும்

சி வர்ணம் சதுர்புஜம் |

ப்ரஸன்ன வதனம் த்யாயேத்

ஸர்வ-விக்னோப ஸாந்தயே || 1

Shuklaam-baradharam Vishnum

shashi Varnam chaturbhujam |

Prasanna vadh  anam dhyayet

sarva vignopa-shanthaye ||


यस्य द्विरद वक्त्राद्याः पारि षद्याः परः शतम् ।

विघ्नं निघ्नन्ति सततं विष्वक् सेनं तमाश्रये ॥

யஸ்ய த்விரத வக்த்ராத்யா:

பாரி ஷத்யா: பர: ஸதம் |

விக்னம் நிக்னந்தி ஸததம்

விஷ்வக் ஸேநம் தமாஸ்ரயே || 2

yasya dhviradha vakth raadhyaa

paari shadhyaa para sadham |

vignam nignanthi sadhadham

visvak senam thamaasraye ||





व्यासं वसिष्ठ नप्तारं शक्तेः पौत्रम् अकल्मषम् ।

पराशरात् मजं वन्दे शुकतातं तपो निधिम् ॥

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம்

ஸக்தே: பௌத்ரம் அகல்மஷம் |

பராசராத் மஜம் வந்தே

ஸுக-தாதம் தபோ நிதிம் || 3

Vyaasam vashista-napthaaram

shakteh poutramam akalmasham |

Paraasharaath majam vande

shuka thaatam thapo nidhim |


व्यासाय विष्णुरूपाय व्यास रूपाय विष्णवे ।

नमो वै ब्रह्म निधये वासिष्ठाय नमो नमः ॥

வ்யாஸாய விஷ்ணு ரூபாய

வ்யாஸ ரூபாய விஷ்ணவே |

நமோ வை ப்ரஹ்ம நிதயே

வாஸிஷ்டாய நமோ நம : || 4

Vyaasaya vishnu roopaya

vyaasa roopaya vishnave |

Namo vai brahma nidhaye

vaashistaaya namo namah ||


अविकाराय शुद्धाय नित्याय परमात्मने ।

सदैक रूप रूपाय विष्णवे सर्व जिष्णवे ॥

அவிகாராய ஸுத்தாய

நித்யாய பரமாத்மனே |

ஸதைக ரூப ரூபாய

விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே || 5

Avikaaraaya shudh dhaaya 

nithyaaya paramaath mane |

Sadhaika roopa roopaya

vishnave sarva jishnave ||


यस्य स्मरण मात्रेण जन्म संसार बन्धनात् ।

विमुच्यते नमस् तस्मै विष्णवे प्रभ विष्णवे ॥

யஸ்ய ஸ்மரண மாத்ரேண

ஜன்ம ஸம்ஸார பந்தனாத் |

விமுச்யதே நமஸ் தஸ்மை

விஷ்ணவே ப்ரப விஷ்ணவே || 6

Yasya smarana-maatrena

janma-samsaara bhandanaath |

Vimuchyate namas thasmai

vishnave praba-vishnave ||


ॐ नमो विष्णवे प्रभ विष्णवे ।

ஓம் நமோ விஷ்ணவே ப்ரப விஷ்ணவே

Om namo vishnave praba vishnave


श्री वैशम्पायन उवाच -- ஸ்ரீ வைஸம்பாயன உவாச 

VAISHAMPAAYANA UVACHA


श्रुत्वा धर्मान शेषेण पावनानि च सर्वशः ।

युधिष्ठिरः शान्त नवं पुनरे वाभ्य भाषत ॥

ஸ்ருத்வா தர்மான ஸேஷேண

பாவநாநி ச ஸர்வஸ: |

யுதிஷ்ட்டிரஸ் ஸாந்த நவம்

புனரே வாப்ய பாஷத || 7

Shrutvaa dharmaana seyshena

paavanaani cha sarvashah |

Yudhishtiras shaantha navam

punare vaabhya-bhaashata ||


युधिष्ठिर उवाचயுதிஷ்ட்டிர உவாச

YUDHISHTHIRA UVACHA


किमेकं दैवतं लोके किं वाप्येकं परायणम् ।

स्तुवन्तः कं कमर्चन्तः प्राप्नुयुर् मानवाः शुभम् ॥

கிமேகம் தைவதம் லோகே

கிம் வாப்யேகம் பராயணம் |

ஸ்துவந்த: கம் கமர்சந்த:

ப்ராப்னுயுர் மானவா: சுபம் || 8

Kimeykam dhaivatham lokey

kim vaap yekam paraayanam |

Sthuvantha kam kamar chanthah

praapnuyur maanavaah-shubham ||


को धर्मः सर्व धर्माणां भवतः परमो मतः ।

किं जपन् मुच्यते जन्तुर् जन्म संसार बन्धनात् ॥

கோ தர்ம: ஸர்வ தர்மாணாம்

பவத: பரமோ மத: |

கிம் ஜபன் முச்யதே ஜந்துர்

ஜன்ம ஸம்ஸார பந்தனாத் || 9

Ko dharmah sarva-dharmaanaam 

bhavatah paramo mathah |

Kim japan muchyate janthuh 

janma samsaara-bandhanaath ||


भीष्म उवाच --- ஸ்ரீ பீஷ்ம உவாச

BHISHMA UVACHA


जगत् प्रभुं देव देवम् अनन्तं पुरुषोत्तमम् ।

स्तुवन् नाम सहस्रेण पुरुषः सत तोत्थितः ॥ १०॥

ஜகத்‌ ப்ரபும்‌ தேவதேவம்‌

அனந்தம் புருஷோத்தமம் |

ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண

புருஷ: ஸத தோத்தித: || 10

Jagath-prabhum deva-devam 

anantam purushothamam |

Sthuvan naama-sahasrena 

purushah satha thoththitah ||


तमेव चार्चयन् नित्यं  भक्त्या पुरुष मव्ययम् ।

ध्यायन् स्तुवन् नमस्यंश्च यजमानस् मेव च ॥ ११॥

தமேவ சார்சயந்‌ நித்யம்

பக்த்யா புருஷ மவ்யயம்‌ |

த்யாயன்‌ ஸ்துவந்‌ நமஸ்யம்ஸ்ச

யஜமானஸ் தமேவ ச || 11

Thameyva chaarchayan nithyam 

bhakthyaa purusha mavyayam |

Dhyaayan sthuvan namas-yamschha 

yajamaanas thameyva cha ||


अनादि निधनं विष्णुं सर्व लोक महेश्वरम् ।

लोकाध्यक्षं स्तुवन् नित्यं सर्व दुःखा तिगो भवेत् ॥

அனாதி நிதனம் விஷ்ணும்‌

ஸர்வ லோக மஹேஸ்வரம்‌ |

லோகாத் யக்ஷம்‌ ஸ்துவந் ‌நித்யம் 

ஸர்வ துக்கா திகோ பவேத் || 12

Anaadhi-nidhanam vishnum 

sarva loka maheshvaram |

Lokaadh yaksham sthuvan nithyam 

sarva dhuhkhaa thigo bhavet ||


ब्रह्मण्यं सर्व धर्मज्ञं लोकानां कीर्ति वर्धनम् ।

लोकनाथं महद् भूतं सर्व भूत भवोद्भवम् ॥ १३॥

ப்ரஹ்மண்யம்‌ ஸர்வ தர்மஜ்ஞம்‌

லோகானாம் கீர்த்தி வர்த்தனம்‌ |

லோக நாதம்‌ மஹத் பூதம்‌

ஸர்வபூத பவோத்பவம் || 13

Brahmanyam sarva-dharmagyam

lokaanaam keerthi-vardhanam |

Lokanaatham mahath bhootham

sarva bhootha-bhavodh-bhavam ||


एष मे सर्व धर्माणां धर्मो धिकतमो मतः ।

यद् क्त्या पुण्डरीकाक्षं स्तवै रर्चेन् रः सदा ॥ १४॥

ஏஷ மே ஸர்வ தர்மாணாம் 

தர்மோ திகதமோ மத: |

யத் பக்த்யா புண்டரீகாக்ஷம்‌ 

ஸ்தவை ரர்சேந் நர:ஸதா || 14

Yesha mey sarva-dharmanaam 

dharmo-dhikathamo mathah |

Yadh bhaktyaa pundaree-kaaksham 

sthavai rarchen nara sadhaa ||





परमं यो महत् तेजः परमं यो महत् तपः ।

परमं यो महद् ब्रह्म परमं यः परायणम् ॥ १५॥

பரமம்‌ யோ மஹத்‌ தேஜ:

பரமம்‌ யோ மஹத் தப: |

பரமம்‌ யோ மஹத்‌ ப்ரஹ்ம

பரமம்‌ ய:பராயணம் || 15

Paramam yo mahath tejaha

paramam yo mahath tapaha |

Paramam yo mahath-brahma

paramam yah paraayanam ||


पवित्राणां पवित्रं यो मङ्गलानां च मङ्गलम् ।

दैवतं दैवतानां च भूतानां यो अव्ययः पिता ॥

பவித்ராணாம்‌ பவித்ரம்‌ யோ 

மங்களானாம்‌ ச மங்களம் |

தைவதம்‌ தைவதானாம் ச 

பூதானாம் ‌யோ அவ்யய: பிதா || 16

Pavithraanaam pavitram yo 

mangalaanaam cha mangalam |

Daivatham daivathaanaam cha 

bhoothaanaam yo avyayah pithaa ||


यतः सर्वाणि भूतानि भवन्त्यादि युगागमे ।

यस्मिंश्च प्रलयं यान्ति पुनरेव युगक्षये ॥ १७॥

யத: ஸர்வாணி பூதானி

பவந்த் யாதி யுகாகமே |

யஸ்மிம்ஸ் ச‌ ப்ரலயம்‌ யாந்தி

புனரேவ யுகக்ஷயே || 17

Yathah sarvaani bhoothaani

bhavanth yaadhi yugaagamey |

Yasmims cha pralayam yaanthi

punareva yugakshaye ||

तस्य लोक प्रधानस्य जगन् नाथस्य भूपते ।

विष्णोर् नाम सहस्रं मे श‍ृणु पाप भया पहम् ॥ १८॥

தஸ்ய லோக ப்ரதானஸ்ய

ஜகன் நாதஸ்ய பூபதே |‌

விஷ்ணோர்‌ நாம ஸஹஸ்ரம் ‌மே 

ஸ்ருணு பாப பயா பஹம் || 18

Thasya loka pradhaanasya

jagan naathasya bhoopathe |

Vishnor naama-sahasram me

shrunu paapa bhayaa paham ||


यानि नामानि गौणानि विख्या तानि महात्मनः ।

ऋषिभिः परिगी तानि तानि वक्ष्यामि भूतये ॥

யானி நாமானி கெளணானி

விக்யாதானி மஹாத்மன: |

ருஷிபி: பரிகீதானி

தானி வக்ஷ்யாமி பூதயே || 19

Yaani naamaani gounaani

vikhyaa thaani mahaath manah |

Rishibhih parigee thaani

thaani vakshyaami bhoothaye ||


ऋषिर् नाम्नां सहस्रस्य वेद व्यासो महामुनिः ।

छन्दो अनुष्टुप् तथा देवो भगवान् देवकी सुतः ॥ २०॥

ருஷிர்‌ நாம்னாம்‌ ஸஹஸ்ரஸ்ய 

வேத வ்யாஸோ மஹாமுனி: ||

ச்சந்தோ அனுஷ்டுப்‌ ததா தேவோ 

பகவான்‌ தேவகீ ஸுத: || 20

Rushir-naamnaam sahasrasya 

vedha vyaaso mahaa munih |

Chchandho anushtup thathaa devoh 

bhagavaan devakee-suthah ||


अमृतां शूद्भवो बीजं शक्तिर् देवकि नन्दनः ।

त्रिसामा हृदयं तस्य शान्त्यर्थे विनियोज्यते ॥ २१॥

அம்ருதாம் ஸூத்பவோ பீஜம்

ஸக்திர் தேவகி நந்தன: |

த்ரிஸாமா ஹ்ருதயம்‌ தஸ்ய

ஸாந்த்யர்த்தே விநியோஜ்யதே || 21

Amruthaam-shoodhbhavo beejam

shaktir-devaki nandanah |

Trisaamaa hrudhayam thasya

shaanthyarththe viniyojyate ||


विष्णुं जिष्णुं महाविष्णुं प्रभविष्णुं महेश्वरम् ॥

अनेक रूप दैत्यान्तं नमामि पुरुषोत्तमं ॥

விஷ்ணும்‌ ஜிஷ்ணும்‌ மஹாவிஷ்ணும்‌

ப்ரப விஷ்ணும்‌ மஹேஸ்வரம்‌ |

அநேக ரூப தைத்யாந்தம்‌ 

நமாமி புருஷோத்தமம்‌ || 22

Vishnum jishnum mahaa-vishnum 

prabha-vishnum mahesvaram |

Aneka roopam daithyaantham 

namaami purushoththamam ||


अस्य श्रीविष्णोर्दिव्य सहस्रनाम स्तोत्र महा मन्त्रस्य ।

அஸ்ய ஸ்ரீ விஷ்ணோர்‌ திவ்ய

ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய |

asya sree vishnor dhivya

sahasranaama sthothra mahaa manthrasya |


श्री वेद व्यासो भगवान् ऋषिः ।

अनुष्टुप् छन्दः ।

श्रीमहाविष्णुः परमात्मा श्रीमन्नारायणो देवता ।

ஸ்ரீ வேத வ்யாஸோ பகவான்‌ ருஷி:

அனுஷ்டுப்ச் சந்த: 

ஸ்ரீ மஹாவிஷ்ணு: பரமாத்மா 

ஸ்ரீமந் நாராயணோ தேவதா |

sree vedha vyaaso bagavaan rushi

anushtup chandhah

sree mahaavishnu paramaathmaa

sreeman naaraayano devathaa |

இந்த சஹஸ்ரநாமத்திற்கு ரிஷியாக வேத வ்யாஸரே இருக்கிறார். ஒவ்வொரு அடியிலும் 8 உயிர் எழுத்துக்கள் கொண்ட அனுஷ்டுப் சந்தஸில் இந்த சஹஸ்ரநாமம் உள்ளது.  மஹாவிஷ்ணுவான ஸ்ரீமன் நாராயணனே இதை அங்கீகரிக்கும் பகவானாக இருக்கிறார்


अमृतां शूद्भवो भानुरिति बीजम् ।

देवकी नन्दनः स्रष्-टेति शक्तिः ।

அம்ருதாம் ஸூத்பவோ

பானுரிதி பீஜம்‌ |

தேவகீ நந்தன:

ஸ்ரஷ்டேதி ஸக்தி:

amrudhaam soodhbavo baanuridhi beejam |

devakee nandhana srastedhi sathih ||

"அம்ருதாம்ஸூத்பவ:" என்பது இந்த மந்திரத்துக்கு பீஜம். தேவகீ நந்தன் கிருஷ்ணனே இந்த மந்திரத்துக்கு சக்தியாக இருக்கிறார்.


उद्भवः क्षोभणो देव इति परमो मन्त्रः ।

शङ्ख भृन् नन्दकी चक्रीति कीलकम् ।

உத்பவ: க்ஷோபணோ

தேவ இதி பரமோ மந்த்ர: |

ஸங்க ப்ருந்‌ நந்தகீ

சக்ரீதி கீலகம்‌ |

udhbava shobano deva iti paramo mandhrah |

sanga brun nandhakee sakreethi keelakam ||





शार्ङ्ग धन्वा गदाधर इत्यस्त्रम् ।

रथाङ्ग पाणि रक्षोभ्य इति नेत्रम् ।

ஸார்ங்க தன்வா

கதாதர இத் யஸ்த்ரம் ‌|

ரதாங்கபாணி

ரக்ஷோப்ய இதி நேத்ரம்‌ |

saarnga dhanvaa gadhaadhara ith yasthram |

radhaangapaani rakshobya iti nethram ||


त्रिसामा सामगः सामेति कवचम् ।

आनन्दं पर ब्रह्मेति योनिः ।

த்ரிஸாமா ஸாமக: ஸாமேதி கவசம்‌ |

ஆனந்தம்‌ பர ப்ரஹ்மேதி யோனி: ||

trisaamaa saamaga saamedhi kavacham |

aanandham para brahmedhi yonih ||


ऋतुः सुदर्शनः काल इति दिग्बन्धः 

श्रीविश्वरूप इति ध्यानम् ।

ருது: ஸுதர்ஸன: கால இதி திக்பந்த: |

ஸ்ரீவிஸ்வரூப இதி த்யானம் |‌

ruthu sudharsana kaala iti dhikbandhah |

sree viswaroopa iti dhyaanam ||


श्रीमहाविष्णु प्रीत्यर्थे सहस्रनाम जबे विनियोगः ॥

ஸ்ரீ மஹாவிஷ்ணு ப்ரீத்யர்த்தே

ஸஹஸ்ர நாம ஜபே விநியோக: 

sree mahaavishnu preeth yarthey

sahasra naama jape viniyogah |


ध्यानम् த்யானம்‌ 

Dhyaanam


क्षीरो दन्वत् प्रदेशे शुचि मणि विलसत् सैकतेर् मौक्तिकानां

मालाक् लुप्ता सनस्थः स्फटिक मणि निभैर् मौक्तिकैर् ण्डिताङ्गः ।

க்ஷீரோ தன்வத்‌ ப்ரதேஸே

ஸுசிமணி விலஸத்

ஸைகதேர் மெளக்திகானாம்‌ |

மாலாக் லுப்தா

ஸனஸ்த: ஸ்ஃபடிகமணி நிபைர்‌

மெளக்திகைர்‌ மண்டிதாங்க: ||

Ksheero-dhanvath-pradheshey

suchimani vilasath saikatheyr mauktikanaam |

Maalaak-luptha-sanasthah spatikamani nibhair

maukthikair mandithaangah ||


शुभ्रै रभ्रै रदभ्रै रुपरि विरचितैर् मुक्त पीयूष वर्षैः

आनन्दी नः पुनीया दरि नलिन गदा शङ्ख पाणिर् मुकुन्दः ॥

ஸுப்ரை-ரப்ரை-ரதப்ரை-ருபரி விரசிதைர்‌

முக்த பீயூஷ வர்ஷை: |

ஆனந்தீ ந: புனீயா தரி நளின கதா

ங்க பாணிர்‌ முகுந்த: || 1

Shubrai-rabrai-radhabrai rupari virachithair 

muktah peeyusha-varshaih |

Aanandhee nah puneeya dhari nalina gadhaa 

shankha-paanir mukundaha ||


भूः पादौ यस्य नाभिर् वियद सुर निलश्चन्द्र सूर्यौ च नेत्रे

कर्णा वाशाः शिरोद् यौर् मुखमपि दहनो यस्य वास्तेय मब्धिः ।

பூ: பாதெள யஸ்ய நாபிர்‌

வியத ஸூர நிலஸ் சந்த்ர

ஸூர்யெள ச நேத்ரே |

கர்ணா வாஸா

ஸிரோத் யெளர்‌ முகமபி தஹனோ

யஸ்ய வாஸ்தேய மப்தி: ||

Bhooh paadhou yasya naabihr viyadha-sura

nelas chandhra-sooryau-cha-nethrey |

Karnaa-vaasaa-sirodh yaur mukamapi dhahano

yasya vaastheya-mabdhihi ||


अन्तःस्थं यस्य विश्वं सुर नर खगगो भोगि गन्धर्व दैत्यैः

चित्रं रं रम् तेतं त्रिभुवन वपुषं विष्णु मीशं नमामि ॥ २॥

அந்தஸ்த் தம்‌ யஸ்ய விஸ்வம்‌

ஸுர நர ௧௧கோ 

போகி கந்தர்வ தைத்யை: |

சித்ரம் ‌ரம் ரம் யதேதம்

த்ரிபுவன வபுஷம்‌

விஷ்ணு மீம்‌ நமாமி || 2

Anthastham-yasya-vishwam-sura nara khagago

bhogi gandharva dhaithyaihi |

Chitram ram-ram yathe tham tribhuvana-vapusham

vishnu-meesham namaami ||


शान्ता कारम् भुजग शयनं पद्मनाभं सुरेशं

विश्वा धारं गगन सदृशं मेघ वर्णं शुभाङ्गम् ।

ஸாந்தாகாரம்‌ புஜக ஸயனம்‌

பத்மநாபம்‌ ஸுரேஸம்‌ |

விஸ்வாதாரம்‌ ௧௧ன ஸத்ருஸம்‌

மேகவர்ணம்‌ ஸுபாங்கம்‌ ||

Shaanthaa-kaaram bhujaga-shayanam

padma-naabham suresham |

Vishvaa-dhaaram gagana sadhrusham

mayga varnam shubhaangam ||


लक्ष्मीकान्तं कमल नयनं योगि हृद् ध्यान गम्यं

वन्दे विष्णुं भव भयहरं सर्व लोकैक नाथम् ॥ ३॥

லக்ஷ்மீகாந்தம்‌ கமல நயனம்

யோகி ஹ்ருத்-த்யான கம்யம்‌ |

வந்தே விஷ்ணும்‌ பவ பய ஹரம்‌

ஸர்வ லோகைக நாதம்‌ || 3

Lakshmi-kaantham kamala-nayanam 

yogi-hrudh dhyaana-gamyam |

Vandhe vishnum bava-bhaya-haram 

sarva-lokaika-naatham ||


मेघ श्यामं पीत कौशेय वासं

श्रीवत्साङ्कं कौस्तु भोद् भासिताङ्गम् ।

पुण्यो पेतं पुण्डरी कायताक्षं

विष्णुं वन्दे सर्व लोकैक नाथम् ॥ ४॥

மேக ஸ்யாமம்‌ பீத கெளசேய வாஸம்‌

ஸ்ரீவத்ஸாங்கம்‌ கெளஸ்து போத் பாஸி தாங்கம்‌ |

புண்யோ பேதம்‌ புண்டரீ காய தாக்ஷம்‌

விஷ்ணும்‌ வந்தே ஸ்ர்வ லோகைக நாதம்‌ || 4

Megha-shyaamam peetha-kauseya-vaasam

sree vathsaangam kausthu-bhodh-bhaasi-thaangam |

Punyo-petam pundari-kaaya thaaksham

vishnum vandhe sarva-lokaika naatham ||

மேகம் போன்ற வண்ணமுடையவனும், பீதாம்பர தாரியும், ஸ்ரீ வத்ஸமுடையவனும், கௌஸ்துப மணி அணிந்தவனும், கமல கண்ணனும், ஸர்வலோக நாதனுமான விஷ்ணுவை சேவிக்கிறேன்


(नमः समस्त भूतानाम् आदि भूताय भूभृते ।

अनेक रूप रूपाय विष्णवे प्रभ विष्णवे ॥ ५॥)

நம: ஸமஸ்த பூதானாம்‌

ஆதிபூதாய பூப்ருதே |

அனேக ரூப ரூபாய

விஷ்ணவே ப்ரப விஷ்ணவே || 5

Namah samastha bhoothaanaam

aadhi-bhoothaaya bhoobrutey |

Aneka-roopa roopaaya

vishnave prabha-vishnave ||


स शङ्ख चक्रं स किरीट कुण्डलं

सपीत वस्त्रं सरसी रुहेक्षणम् ।

सहार वक्षःस्थल शोबि कौस्तुभं

नमामि विष्णुं शिरसा चतुर्भुजम् ॥ ६॥

ஸ சங்க சக்ரம்‌ ஸ கிரீட குண்டலம்‌

ஸபீத வஸ்த்ரம்‌ ஸரஸீ ருஹேக்ஷணம்‌ |

ஸஹார வக்ஷஸ்தல சோபி கெளஸ்துபம்‌

நமாமி விஷ்ணும்‌ சிரஸா சதுர்புஜம்‌ || 6

Sa shankha-chakram-sa kireeta-kundalam

sapeetha-vasthram-sarasee ruhekshanam |

Sahaara-vakshasthala-shobi-kausthubham

namaami vishnum-sirasaa chathur bhujam ||

சங்கு, சக்கரம், கிரீடம், குண்டலம், பீதாம்பரம், ஹாரம், கௌஸ்துபம் இவைகளை தரிப்பவனும், தாமரை போன்ற கண்கள் உடையவனும், நான்கு கைகள் உடையவனுமான விஷ்ணுவை சேவிக்கிறேன்.


छायायां पारिजातस्य हेम सिंहास नोपरि

आसीन मम्बुद श्यामम् आताक्ष मलंकृतम् ।

சாயாயாம்‌ பாரிஜாதஸ்ய

ஹேம ஸிம்ஹாஸ னோபரி |

ஆஸீன மம் புத ஸ்யாமம்

ஆயதாக்ஷ மலங்க்ருதம்‌ || 7

chaayaayaam paarijaathasya

hema simhaasa nopari |

aaseena mam budha syaamam

aayathaaksha malangkrutham ||





चन्द्रा ननं चतुर् बाहुं श्रीवत्साङ्कित वक्षसं

रुक्मिणी सत्य भामाभ्यां सहितं कृष्णमाश्रये ॥ ७॥

சந்த்ரா னனம்‌ சதுர்பாஹும்‌

ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம்‌ |

ருக்மிணீ-ஸத்ய பாமாப்யாம்‌

ஸஹிதம்‌ க்ருஷ்ண மாஸ்ரயே || 8

chandraa nanam chathur baahum

sreevath saangitha vakshasam |

rukminee sathya baamaapyaam

sahitham krishna maasraye ||

ॐ विश्वस्मै नम:

ஓம் விஸ்வஸ்மை நம:

Om visvasmai namaha


विश्वं विष्णु: वषट्कारो भूत-भव्य-भवत्प्रभुः ।

भूत-कृद् भूत-भृद् भावो भूतात्मा भूत-भावनः ॥

விஸ்வம்‌ விஷ்ணு: வஷட்கார:

பூதபவ்ய-பவத்-ப்ரபு: |

பூத-க்ருத்‌ பூத-ப்ருத்‌ பாவ:

பூதாத்மா பூத-பாவன: || 1

Vishvam vishnur vashatkaaro

bhootha-bhavya bhavath-prabhuh |

Bhootha-kruth bhootha-bhrudh-bhaavo

bhoothaatma bhoota-bhaavanah ||

பூர்ணமானவன், முழுமையானவன் (விஸ்வம்)‌, அனைத்திலும் பிரவேசித்து இருப்பவன் (விஷ்ணு), அனைத்தையும் தன் வசத்தில் வைத்து இருப்பவன் (வஷட்காரோ), மூன்று உலகங்களுக்கும் எஜமானனாக இருப்பவன் (பூத பவ்ய பவத்‌ ப்ரபு:), ப்ரம்ம தேவன் கோபாலர்களை, அவர்கள் கொண்டு வந்த மாடு, பாத்திரம் உட்பட எடுத்து சென்று விட, அனைத்தையும் (உயிருள்ள, உயிரற்ற) தானே ஸ்ருஷ்டி செய்தார். எதனுடைய உதவியும் இல்லாமல், எதையும் சார்ந்து இல்லாமல், அனைத்தையும் தானே ஸ்ருஷ்டி செய்பவன், எல்லோரையும் படைத்தவன் (பூதக்ருத்), உலகங்கள் எல்லாவற்றையும் அந்தந்த இடத்தில் தாங்கி நிற்பவன் (பூதப்ருத்‌),  எல்லா பொருள்களிடமும் கூடி இருப்பவன் (பாவோ), உலகம் அனைத்துமே சரீரமாக, தான் உலகத்துக்கு ஆத்மாவாக இருப்பவன் (பூதாத்மா), அனைத்து பூதங்களின் (ஜீவன்) தேவைகளையும் கொடுத்து போஷாக்கு அளிப்பவன் (பூதபாவன:)


पूतात्मा परमात्मा च मुक्तानां-परमा-गतिः ।

अव्ययः पुरुषः साक्षी क्षेत्रज्ञो अक्षर एव च ॥ 

பூதாத்மா பரமாத்மா ச

முக்தானாம்‌-பரமாகதி: |

அவ்யய: புருஷ:‌ ஸாக்ஷீ

க்ஷேத்ரஞ: க்ஷர ஏவ ச || 2

boothaatma paramaatmaa cha

muktaanaam paramaa-gatih |

Avyayah purusha saakshee

kshetragyo-kshara eva cha ||

மிகவும் பரிசுத்தமானவன். நம் இதயத்தில் இருந்தாலும் நம் தோஷங்கள் படாமல், சுத்தமாகவே இருப்பவன் (பூதாத்மா), பரம புருஷனாய், பரம் பொருளாய், நாமும், நாம் காணும் அனைத்துமே ஒடுங்கி தான் மட்டுமே மிச்சப்பட்டு இருப்பவர், ஆத்மாக்களுக்கும் அப்பாற்பட்டவர், (பரமாத்மா), இந்த ஸம்ஸாரத்தில், மறுபிறப்பிலிருந்து விடுதலை பெற விரும்புவோருக்கு கதியாய் இருப்பவன் (முக்தானாம் பரமா கதி:), கால சக்கரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் இவர், அழிவே இல்லாதவர் (அவ்யய:), காலத்துக்கும், தேசத்துக்கும், பொருளுக்கும் கட்டுப்படாதவன், புராணமாக ஆதியில் இருந்தே இருப்பவன், பூர்ண வஸ்துவாக இருப்பவர் (புருஷ:), உலகம், அதில் உள்ள சரீரங்கள் அனைத்துக்குமே க்ஷேத்ரம் என்று பெயர். இந்த க்ஷேத்ரம் இருப்பதை சாட்சியாக பார்த்து கொண்டிருப்பவர். (ஸாக்ஷீ), அனைத்து சரீரத்திலும் (க்ஷேத்திரத்திலும்) இவரே உள்இருந்து செயல்படுத்துகிறார். (க்ஷேத்ரஞ), குறையாதவன். அனுபவிக்க அனுபவிக்க தெவிட்டாதவன் (அக்ஷர)


योगो योग-विदां-नेता प्रधान-पुरुषेश्वरः ।

नारसिंह-वपुः श्रीमान् केशवः पुरुषोत्तमः ॥ ३॥

யோக: யோகவிதாம்-நேதா

ப்ரதான-புருஷேஸ்வர: |

நாரஸிம்ஹ-வபு: ஸ்ரீமான்

கேசவ: புருஷோத்தம: || 3

Yogo yoga-vidhaam nethaa 

pradhaana purusheshvarah |

Naarasimha vapu shreeman 

keshavah purushothamah ||

மோக்ஷம் தந்து நம்மை சேர்த்துக் கொள்பவன் (யோக:), நாம் செய்யும் காரியங்களுக்கு பலன் அளிப்பவன் (யோகவிதாம் நேதா:), இயற்கைக்கும், ஜீவனுக்கு (ப்ரதான புருஷ) ஈஸ்வரனாக இருப்பவன், (ப்ரதான புருஷேஸ்வர:), மனிதனாயும் சிங்கமாயும் சேர்த்து, வேண்டும் உருவம் எடுக்கும் சக்தி உள்ளவன் (நாரஸிம்ம வபு:), எந்த உருவம் எடுத்தாலும், மிக்க அழகுடையவன் (ஸ்ரீ மான்:), அழகான கேசம் உடையவன், கேசி என்ற அசுரனை வதம் செய்தவர், ப்ரம்மாவுக்கும் (க:) ருத்ரனுக்கும் (ஈச:) அந்தர்யமியாக இருப்பவன் (கேசவ:), புருஷர்களில்  சிறந்தவன்: தான் ஒருவனே புருஷன் என்ற பெருமை உடையவன் (புருஷோத்தம:)


सर्वः शर्वः शिवः स्थाणुर् भूतादि: निधि:-अव्ययः ।

सम्भवो भावनो भर्ता प्रभवः प्रभु ईश्वरः ॥ ४॥

ர்வ: ர்வசிவ: ஸ்தாணு:

பூதாதி:‌ நிதி-ரவ்யய: |

ஸம்பவ: பாவன: பர்தா

ப்ரபவ: ப்ரபு: ஈஸ்வர: || 4

Sarvah sharvah shivah sthaanoor

bhoothadir nidhi ravyayah |

Sambhavo bhaavano bharthaa

prabhavah prabhu reeshvarah ||

எல்லா படைப்புகளுமாய் இருப்பவன் (ர்வ:), நம் தோஷங்களை விலக்குபவன் (ர்வ), மங்களத்தை அளி்ப்பவன் (சிவ:), அகிலாண்ட கோடி ப்ரம்மாண்டத்தையும் தாங்கி கொண்டு, தூண் போல இருப்பவன் (ஸ்தாணு:), எல்லோராலும்  விரும்பப்படுபவன் (பூதாதி:), அழிவற்ற நிதியாய், வைத்த மாநிதியாய், பொக்கிஷாமாய் இருப்பவன் (நிதிரவ்யய:), ஸம்பவாமி யுகே யுகே என்று அவ்வப்போது அவதாரம் செய்பவன் (ஸம்பவ:), நம்முள் பக்தியை வளரச்செய்து நம்மை உயர்த்துபவன்  (பாவன:), நம்மை ஆதரித்து போஷிப்பவன் (பர்தா:), தன் இச்சையாலே ஸங்கல்பத்தாலே சிறப்பான அவதாரங்கள் செய்பவன் (ப்ரபவ:), மிருகமாய்,மனிதனாய்  அவதரித்தாலும் தனது மேன்மை குறையாதவன் (ப்ரபு : ), வ்யூஹ, விபவ, அர்ச்சா அவதாரத்திலும் ஈச்வரத் தன்மையோடு இருப்பவன் (ஈச்வர :).


स्वयम्भूः शम्भु: आदित्यः पुष्क-राक्षो महास्वनः ।

अनादि-निधनो धाता विधाता धातु:-उत्तमः ॥ ५॥

ஸ்வயம்பூ‌ ஸம்பு: தித்ய:

புஷ்கராகஷ: மஹாஸ்வன: |

அநாதி-நிதன: தாதா

விதாதா தாது:-உத்தம:|| 5

Swayambhoo shambhu raadhithyah

pushka raaksho mahaa-svanah |

Anaadi nidhano dhaathaa

vidhaathaa dhaatur uththamah ||

நம் மீது உள்ள கருணையாலே தானே அவதரிப்பவன் (ஸ்வயம் பூ:), தன் அழகிய உருவத்தாலும், நற்குணங்களாலும் நம் மனதை கவர்பவன் (சம்பு:), சூர்ய மண்டலத்தின் நடுவே இருந்து நமக்கு ஒளி தருபவன் (ஆதி்த்ய:), செந்தாமரை  கண்களை உடையவன் (புஷ்கராக்ஷ:), வேத ஒலியால் பூஜிக்கப்படும் திருநாமத்தை உடையவன் (மஹாஸ்வன்:), ஆதியும் அந்தமும் இல்லாதவன். முதலும் முடிவும் அற்றவன் (அநாதி நிதன:), எல்லோரையும் ஸ்ருஷ்டி செய்பவன் (தாதா:), பிரம்மனையும்  படைத்தவன் (விதாதா:), தான் படைத்த எல்லாவற்றையும் விட சிறந்தவன் (தாது:உத்தம:)


अप्रमेयो हृषीकेशः पद्मनाभो अमर-प्रभुः ।

विश्व-कर्मा मनु: त्वष्टा स्थविष्ठः स्थविरो ध्रुवः ॥ ६॥

அப்ரமேயோ ஹ்ருஷீகேஸ:

பத்மநாபோ அமரப்ரபு: |

விஸ்வகர்மா மனு:‌ த்வஷ்டா

ஸ்தவிஷ்ட: ஸ்தவிரோ-த்ருவ: || 6

Aprameyo hrushee-keshah 

padhmanaabho-amara-prabhuh |

Vishva-karmaa manus thvastaa 

sthavishtah sthaviro dhruvah ||

நம் அறிவுக்கு எட்டாத பெருமைகளை உடையவன் (அப்ரமேய:), நமக்கு கண், கை, கால் முதலிய இந்த்ரியங்களைக் கொடுத்தவன் (ஹ்ருஷீகேச:), தன் தொப்புள் கொடியில் தாமரையை உடையவன் (பத்ம நாப: ), நமக்கு காற்று, மழை, ஒளி இவைகளைக் கொடுக்கும் தேவர்களை நடத்திச் செல்லும் தலைவன் (அமர ப்ரபு:), உலகங்களை அமைத்தவன் (விஸ்வகர்மா:), மனதில் எண்ணியவாறே ஸ்ருஷ்டிப்பவன் (மனு:), உருவமற்ற விந்துகளுக்கு உருவத்தைக் கொடுக்கும் சிற்பி (த்வஷ்டா:), சிறியதாக தோன்றியவற்றைப் பெரியதாக்குபவன் (ஸ்தவிஷ்ட:), எக்காலத்திலும் அழியாதிருப்பவன் (ஸ்தவிர:), காலத்தால் மாறும் நம்மைப் போல் அல்லாது மாறாதிருப்பவன் (த்ருவ:)


अग्राह्यः शाश्वतः कृष्णो लोहिताक्षः प्रतर्दनः ।

प्रभूतस् त्रिक-कुब्धाम पवित्रं मङ्गलं-परम् ॥ ७॥

அக்ராஹ்ய: சாஸ்வத: க்ருஷ்ணோ

லோஹிதாக்ஷ: ப்ரதர்-தன: |

ப்ரபூத:‌ த்ரிக-குப்தாம

பவித்ரம்‌ மங்களம்-பரம்‌ || 7

Agraahyah shaashvatah krishno 

lohithaakshah prathar dhanah |

Prabhoothas trika kubdhaama 

pavithram mangalam param ||

நம் புலன்களுக்கு புலப்படாதவன் (அக்ராஹ்ய:), ஓய்வில்லாத ஜகத் கார்யங்களைச் செய்தவன் (ஸாஸ்வத:), லீலைகள் செய்பவன், ஆனந்தமயன், ஆனந்தத்துக்கு இருப்பிடமானாவன் (க்ரு‌ஷ்ண),  நம் மீதுள்ள வாத்ஸல்யத்தால் அன்பினால் கண்களில் கருணை என்ற நீர் கோத்து, சிவந்த கண்களை பெற்றவன் (லோஹி தாக்ஷ :), ப்ரளய காலத்தில் நம்மைத் தன் வயிற்றில் வைத்துக் காப்பவன் (ப்ரதர்தன:), அளவற்ற செல்வம் உடையவன் (ப்ரபூத:), த்ரிபாத் விபூதி எனப்படும் பரமபதத்தை தன் இல்லமாகக் கொண்டவன் (த்ரிக குப்தாமா), தானும் பரிசுத்தனாய், பக்தர்களையும் பரிசுத்தமாக்குபவன் (பவித்ரம்:), மங்கள குணங்களே நிரம்பியவன் (மங்களம்பரம்)


ईशानः प्राणदः प्राणो ज्येष्ठः श्रेष्ठः प्रजापतिः ।

हिरण्य-गर्भो भू-र्भो माधवो मधुसूदनः ॥ ८॥

ஈஸான: ப்ராணத: ப்ராண:

ஜ்யேஷ்ட: ஸ்ரேஷ்ட: ப்ரஜாபதி: |

ஹிரண்ய-கர்போ பூ-கர்போ

மாதவோ மதுஸூதன:|| 8

Eeshaanah praanadhah praano

jyeshtah shreshtah prajaapathih |

Hiranya-garbho bhoo-garbho

maadhavo madhu-soodanah ||

உலகங்களையெல்லாம் அடக்கி ஆள்பவன் (ஈஸான :), தன்னை எக்காலமும் அனுபவிக்கும் சக்தியைக் கொடுப்பவன் (ப்ராணத:), தன்னை நேசிப்பவர்க்கு உயிராய் இருப்பவன் (ப்ராண:), எவ்வுயிர்க்கும் முதல்வன் (ஜ்யேஷ்ட:), மிக்க மேன்மையானவன் (ஸ்ரே‍ஷ்ட:), ப்ரக்ரு‌ஷ்ட ஜன்மமுடைவர்களான நித்ய ஸுரிகளுக்கும்  தலைவன் (ப்ராஜபதி:), பொனுலகமான பரமபதத்தில் வாழ்பவன் (ஹ்ரண்யகர்ப:), நம் பூமியை தன்னுள் வைத்து காப்பவன் (பூ கர்ப),மஹாலக்ஷ்மியைப் பெற பாற்கடலையே கடைந்த ஸ்ரீ வல்லபன் (மாதவ), அரக்கர் போன்ற நம் இந்திரியங்களை வெல்ல கதியாய் இருப்பவன் (மதுஸுதன: )


ईश्वरो विक्रमी धन्वी मेधावी विक्रमः क्रमः ।

अनुत्तमो दुराधर्षः कृतज्ञः कृति: आत्मवान् ॥ ९॥

ஈஸ்வர: விக்ரமீ தன்வீ

மேதாவீ விக்ரம: க்ரம: |

அனுத்தமோ துராதர்ஷ:

க்ருதக்ஞ: க்ருதி: ஆத்மவான்|| 9

Eeshvaro vikramee dhanvee

medhaavee vikramah kramah |

Anuththamo dhuraa-dharshah

kruthagyah kruthi-raathmavaan ||

எல்லோருக்கும் ஸ்வாமியாய் இருப்பவன் (ஈஸ்வர:), எத்  தடைகளையும் போக்கும் பராக்ரம் உடையவன் (விக்ரமீ:), வில்லை திவ்ய ஆயுதமாக தன் திருக்கையில் தரித்துள்ளனர் (தன்வீ:), எங்கும் நடந்ததும், நடப்பதும், நடக்கப்போகும் அறிந்த ஸர்வக்ஞன் (மேதாவீ:), கருடாழ்வானை தன் வாஹனமாகக் கொண்டவன் (விக்ரம:), எங்கும் வ்யாபித்து எல்லாவற்றையும் தனதாக கொண்டவன் (க்ரம:), தனக்கு மேம்பட்டவர் யாரும் இல்லாதவன் (அனுத்தம:), கடல் போன்று கலக்கம் ஏதுமில்லாது, தெளிந்த ஸ்வாபம் உடையவன் (துராதர்ஷ:), தன் பக்தர்களுக்கு கடன்பட்டவனாக தன்னை நினைத்திருப்பவன் (க்ருதக்ஞ:), தன்னிடம் பக்தி கொள்ளும்படியான மனதை நமக்கு கொடுப்பவன் (க்ருதி:), நம் ஆத்மாவுக்குள் அந்தராத்மாவாய் இருப்பவன் (ஆத்மவான்)


सुरेशः शरणं शर्म विश्वरेताः प्रजाभवः ।

अहः संवत्सरो व्यालः प्रत्ययः सर्व-दर्शनः ॥ १०॥

ஸுரேச: ஸரணம்‌ சர்ம

விஸ்வ-ரேதா: ப்ரஜாபவ: |

அஹ:‌ ஸம்வத்ஸரோ வ்யால:

ப்ரத்யய: ஸர்வ-தர்ஸன: || 10

Suresha sharanam sharma 

vishva-rethaah prajaa-bhavah |

Ahah samvathsaro vyaalah 

prathyaya sarva-darshanah ||

ப்ரம்மா முதலிய தேவர்களுக்கும் தலைவனாக இருப்பவன் (ஸுரேச:), நாம் முக்தி பெற உபாயமாய் இருப்பவன் (சரணம்:), நமக்கு பகலாய் இருந்து நம் வாழ்க்கைக்கு ஒளி தருபவன் (அஹ:), நம்முள் அந்தராத்மாவாய் நன்கு வசிப்பவன் (ஸம்வத்ஸர:), தன்னை அண்டினார்க்கு அபயம் கொடுத்து அருளுபவன் (வ்யாள:), நம்ப தகுந்தவன். தன்னைச் சரணம் அடைந்தவர்களை நல்வழி நடத்துபவன்  (ப்ரத்யய), மெள்ள மெள்ள, தன் மகிமைகள் எல்லாவற்றையும் நமக்கு காட்டுபவன்  (ஸர்வதர்சன:)


अजः सर्वेश्वरः सिद्धः सिद्धिः सर्वादि: अच्युतः ।

वृषा-कपि: मेयात्मा सर्व-योग-विनिःसृतः ॥ ११॥

அஜ: ஸர்வேஸ்வர: ஸித்த:

ஸித்தி:‌ ஸர்வாதி: ச்யுத: |

வ்ருஷா-கபி: மேயாத்மா

ஸர்வ-யோக-வினிஸ்ருத: || 11

Ajas sarveshvaras siddhah 

siddhi sarvaadhi rachyuthah |

Vrushaa kapira meyaathmaa 

sarva-yoga vinih-sruthah ||

தன்னை அடையவொட்டாமல் தடுக்கும் இடையூறுகளை போக்குபவன் (அஜ:), தன்னைப் பற்றியவர்களைத் தானே சென்று அடைபவன் (ஸர்வேஸ்வர:), பக்தர்கள் தன்னை அடையத் தானே உபாயமாய் இருப்பவன் (ஸித்த:), தன்னை அடைய எவ்வுபாயம் மேற்கொண்டாலும் பலனளிப்பவன் (ஸித்தி:), இம்மையிலும், மறுமையிலும் நாம் வேண்டுவதை அளிப்பவன் (ஸர்வாதி:), தன்னைப் பற்றியவர்களைக் கை விடாதவன் (அச்யுத:).


वसुर् वसुमनाः सत्यः समात्मा सम्मितः समः ।

अमोघः पुण्डरीकाक्षो वृषकर्मा वृषाकृतिः ॥

வஸு:‌ வஸுமனா: ஸத்ய:

ஸமாத்மா ஸம்மித: ஸம: |

அமோக: புண்டரீகாக்ஷோ

வ்ருஷ-கர்மா வ்ருஷா-க்ருதி: || 12

Vasur vasumaanas sathyah

samaathma sammithas samah |

Amoghah pundaree-kaaksho

vrusha-karmaa vrushaa-krutih ||

எத்தனையோ திருப்பதிகள் இருப்பினும் நம்முள் வசிப்பவன் (வஸு:), பக்தர்களை தன் சொத்தாக நினைப்பவன் (வஸுமனா:), பக்தர்களுக்கு அனுகூலமாக இருப்பவன் (ஸத்ய:), வேடுவன் குகன், ஜாம்பவான், காட்டுவாசியான சபரி, வானரர்கள் என்று விருப்பு வெறுப்பு இல்லாமல் சமமாக பழகுபவர், தூது சென்ற போது சிறைபிடிக்க முயன்ற துரியோதனனுக்கு, தன் முழு சேனையையும் கொடுத்து, ராக துவேஷம் இல்லாமல் சமமாக பழகுபவர்,  (ஸமாத்மா:), பக்தர்களுக்கு கட்டுப்பட்டவன். அவர்களுக்காக தூது போயும் காப்பவன் (ஸம்மித:), தன்னை அடைந்தவர் எல்லோரிடமும் ஸமமான அன்பு வைத்துள்ளவன் (ஸம:), தன்னை அடைந்தவர் யாவருக்கும் மோகமில்லாமல் பாரபட்சம் காட்டாமல், சரண் தருபவன் (அமோக :), பக்தர்கள் அனைவருக்கும் கண்ணாய் இருக்கும் தாமரைக் கண்ணன் (புண்டரீ காக்ஷ:), நம் நலத்தை மனதில் கொண்டு நம்மை நடத்துபவன் (வ்ருஷ கர்மா:), தர்மமே உருவானவன். பரிசுத்தமானவன் (வ்ருஷா க்ருதி :)


रुद्रो बहुशिरा बभ्रु: विश्वयोनिः शुचि-श्रवाः ।

अमृतः शाश्वत-स्थाणु: वरारोहो महातपाः ॥ १३॥

ருத்ர: பஹுசிரா பப்ரு:‌

விஸ்வயோனி: ஸுசி-ஸ்ரவா: |

அம்ருத: ஸாஸ்வத-ஸ்தாணு:

வராரோஹ: மஹா-தபா: || 13

Rudro bahushiraa babhruh 

vishva-yoni shuchi-shravaah |

Amrita shaashvathas sthaanur 

varaa roho mahaa-thapaah ||

பக்தர்களின் கண்களில் ஆனந்தக்கண்ணீரை பெருக செய்பவன் (ருத்ர:), ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: என்று பல தலைகளை உடையவன் (பஹுஸிர:), உலகங்களையெல்லாம் தாங்குபவன் (பப்ரு:), அனைத்து உலகத்தோருடனும் தொடர்பு உடையவன் (விஸ்வயோனி:), அடியார்களின் ஸ்தோத்திரங்களை மனமுவந்து கேட்பவன் (ஸுசி ஸ்ரவா:), பக்தர்களுக்கு அமுதமாய் தித்திப்பவன் (அம்ருத:), ப்ரும்ம ருத்ராதி தேவர்களைப் போலில்லாமல் என்றும் அழிவில்லாதவன் (ஸாஸ்வத ஸ்தாணு), தம்மை அடைந்தவர்களை மிக மேன்மையுடயவர்களாக ஆக்குபவன் (வராரோஹ:), எல்லையில்லா ஞானத்தை உடையவன் (மஹாதபா:)


सर्वगः सर्वविद् भानुर् विष्वक्सेनो जनार्दनः ।

वेदो वेदविद् अव्यङ्गो वेदाङ्गो वेदवित् कविः ॥ १४॥

ஸர்வக: ஸர்வவித்- பானு:

விஷ்வக்ஸேனோ ஜநார்தன: |

வேதோ வேதவித வ்யங்கோ

வேதாங்கோ வேதவித்‌ கவி: || 14

Sarvaga sarva-vidh bhaanuh

vishva-kseno janardhanah |

Vedho vedha-vidhav yango

vedhaango vedha-vith-kavih ||

எல்லாவற்றையும் தன்னுள் வைத்திருந்து பின் அவற்றை அப்படியே ஸ்ருஷ்டிப்பவன் (ஸர்வக:), ப்ரளயத்தின் போது, எல்லாவற்றையும் மறுபடியும் தன்னுள் வைப்பவன் (ஸர்வவித்:), எல்லோரையும் படைத்தும் தான் தன் உருவில் மாறாதிருப்பவன் (பாநு:), எல்லோருக்கும் ரக்ஷகன் (விஷ்வக்ஸேன:), பக்த விரோதிகளை,தீயோர்களை அழிப்பவன் (ஜநார்தன்:), வேதங்களைத் தந்த சாஸ்த்ர ப்ரதன் (வேத:), வேதங்களை உபதேசித்தவன் (வேதவித்), வேதங்களின் அங்கங்களான ஸிக்ஷை,வ்யாக்ரணம், சந்தஸ், நிருக்தம், கல்பம், ஜோதிஷம் அனைத்துமாக தானேயாயிருப்பவன் (அவ்யங்க), வேதங்களையே தன் அங்கங்களாய் உடையவன் (வேதாங்க:), வைதீக கர்மங்களை அனுஷ்டிக்கும்படி செய்து அவைகளை தன் ஆராதனமாய் ஏற்பவன் (வேதவித்:), நம் கணகளுக்கு அப்பால் இருப்பவையையும் காண்பவன் (கவி:)


लोकाध्यक्षः सुराध्यक्षो धर्माध्यक्षः कृताकृतः ।

चतुरात्मा चतुर्-व्यूहश् चतुर्दंम्ष्ट्रश् चतुर्भुजः ॥ १५॥

லோகா-த்யக்ஷ: ஸுரா-த்யக்ஷோ

தர்மா-த்யக்ஷ: க்ருதா-க்ருத: |

சதுராத்மா சதுர்-வ்யூஹ:

சதுர்- தம்ஷ்ட்ர:‌ சதுர்-புஜ: || 15

Lokaadh yaksha suraadh yaksho

dharmaadh yakshah kruthaa-kruthah |

Chaturaathmaa chathur vyooha

chatur-dhamshtras chathur-bhujah ||

அனைத்து லோகங்களுக்கும் அத்யக்ஷன் / அதிபதி (லோகா த்யக்ஷ:), ப்ரம்ம ருத்ராதி அனைத்து தேவர்களுக்கும் தலைவன் (ஸுரா த்யக்ஷ:), ஸகல கர்மங்களுக்கும் உரிய பலனைத் தருபவர் (தர்மா த்யக்ஷ:), நித்யமான இவ்வுலக சுகங்கள்,நித்யமான மோக்ஷம் இரண்டும் தருபவன் (க்ருதா க்ருத:). வாஸுதேவன் (தன்னை மறைத்து கொண்டிருக்கும் தேவன்), ப்ரத்யும்னன் (விஷ்ணுவுக்கு ஆத்மாவாக), அனிருத்தன் (ப்ரம்மாவுக்கு ஆத்மாவாக), ஸங்கரஷன்ன் (ருத்ரனுக்கு ஆத்மாவாக) என்று உலக ச்ருஷ்டிக்காக நான்கு வ்யூஹ மூர்த்திகளானவன் (சதுராத்மா ), நான்கு  மூர்த்திகளாய் (நாராயணன், விஷ்ணு,ப்ரம்மா,ருத்ரன்) த்யானத்திலும் அனுக்ரஹிப்பவன் (சதுர் வ்யூஹ),  சிங்கம் போன்று வீர பற்களை உடையவன் (சதுர் தம்ஷ்ட்ர), திவ்ய ஆயுதங்களை ஏந்திய நான்கு திருக்கைகளை உடையவன் (சதுர் புஜ:)


भ्राजिष्णुर् भोजनं भोक्ता सहिष्णुर् जगदादिजः ।

अनघो विजयो जेता विश्वयोनिः पुनर्वसुः ॥

ப்ராஜிஷ்ணு:‌ போஜனம்‌ போக்தா

ஸஹிஷ்ணு:‌ ஜகதாதிஜ: |

அனக: விஜய: ஜேதா

விஸ்வயோனி: புனர்வஸு: || 16

Bhraajishnur bhojanam bhokthaa

sahishnur jagadhaadhijah |

Anagho vijayo jethaa

vishva-yonih punar-vasuh ||

திவ்ய ஆயுதங்களுடன் தன் சதுர்புஜத்தை பக்தர்களுக்கு காட்டி அருள்பவன் (ப்ராஜிஷ்ணு), நாம் ருசித்து உண்ணும் உணவாக நீராக தானே இருப்பவன். பக்தர்களுக்கு தன்னையே நல் உணவு போல் அனுபவிக்கக் கொடுப்பவன். (போஜனம்), தனக்கு முன்னால் வந்து நிற்கும் அனைவரையும் விழுங்கி தன் பக்தனாக ஆக்குபவன், பக்தர்கள் அன்புடன் சமர்ப்பிக்கும் ப்ரஸாதத்தை ஏற்பவன் (போக்தா). தன்னை சரணடைந்தோரின் பாபங்களை மன்னித்து அருள்பவன் (ஸஹி‌ஷ்ணு), ஆதி முதல்வன், இவ்வுலங்கள் படைக்கப்பட்டதற்கும் முன்னமேயே இருந்தவன் (ஜகதாதிஜ)தோஷங்களுள்ள நம்முள் அந்தராத்மாவாக இருந்தாலும் தோஷமற்றவன் (அனக:), நல்லோருக்கு ஜெயத்தை தருபவன் (விஜய :), நம் அறியாமைகளைப் போக்கி நம்மையும் ஜெயித்து பக்தனாக ஏற்பவன் (ஜேதா :), உலகத்துக்கு காரணமானவன் (விச்வயோனி:), பிரம்மா, சிவ: என்று எல்லோருக்குள்ளும் அந்தராத்மாவாக இருப்பவன் (புனர்வஸு:)


उपेन्द्रो वामनः प्रांशुरमोघः शुचिरूर्जितः ।

अतीन्द्रः सङ्ग्रहः सर्गो धृतात्मा नियमो यमः ॥ १७॥

உபேந்த்ர: வாமன: ப்ராம்ஸு:

அமோக: ஸுசி ஊர்ஜித: |

அதீந்த்ர: ஸங்க்ரஹ: ஸர்க:

த்ருதாத்மா நியமோ யம: || 17

Upendhro vaamanah praamshuh

amogha suchi roorjithah |

Atheendhra sangrahah sargo

dhruthaatmaa niyamo yamah ||

கஸ்யப முனிவரின் பிள்ளை இந்திரன். அவருடைய இளைய சகோதரனாக வாமன அவதாரம் செய்தவன். ஆதலால், உப-இந்திரனாக இருப்பவன் (உபேந்த்ர:), இந்திரனுக்கு இளையவன், குள்ளன் என்றாலும், பால் திரட்டி போனாலும் எப்படி அழகாக சுவையாக இருக்குமோ அது போல, குட்டி உருவில் தோன்றிய பேரழகன் (வாமன:), அதே அவதாரத்தில் ஓங்கி உலகளந்து வையம் கண்ட த்ரிவிக்ரமன் (ப்ராம்ஸு :), அபரிமிதமான,அளவற்ற பெருமைகளை உடையவன் (அமோக :), நமக்கு நன்மைகள் பல செய்தும், ப்ரதிபலன் எதிர்பாராத பரிஸுத்தன் (ஸுசி :), எதையும் நடத்தி காண்பிக்கும் வல்லமை படைத்தவன் (ஊர்ஜத:). இந்திரனுக்கு தம்பியாகப் பிறந்தும் அவனுக்கும் மேம்பட்டவன் (அதீந்த்ர :), அடியவர்களால் எளிதில் கிரஹிக்கப்படுபவன். உணரப்படுபவன். (ஸங்க்ரஹ :), அடியவர்களுக்காக, தானே அனைத்து அவதாரங்களும் செய்து கொள்பவன் (ஸர்வ :), எல்லா ஆத்மாக்களுக்கும் உயிரளித்து தரிப்பவன். நடத்திச் செல்பவன் (த்ருதாத்மா), காற்று, வெப்பம், கடல், பருவங்களை சீராக நடத்த தேவர்களை நியமிப்பவன் (நியம :), ஈரேழு பதிநான்கு லோகங்களையும் உள்ளிருந்து ஆள்பவன், மரணத்திற்கு அதிபதியானவன் (யம :)





वेद्यो वैद्यः सदायोगी वीरहा माधवो मधुः ।

अतीन्द्रियो महामायो महोत्साहो महाबलः ॥ १८॥

வேத்ய: வைத்ய: ஸதா-யோகீ

வீரஹா மாதவோ மது: |

அதீந்த்ரியோ மஹா-மாயோ

மஹோத்ஸாஹ: மஹாபல: || 18

Vedhyo vaidhya sadhaa yogee

veeraha maadhavo madhuh |

Atheendhriyo mahaa-maayo

mahoth saaho mahaa-balah ||

அடியார்களுக்கு எளியவன் (வேத்ய), நோய்களை போக்குபவன் (வைத்ய), நம்மை நினைத்து யோகத்திலிருப்பவன் (ஸதாயோகீ), வீரம் பேசும் அன்ய மதவாதிகளின் வார்த்தைகளை பொய்யாக்குபவன் (வீரஹா), மா தவத்தாலே அடையப்படும் லக்ஷ்மீ பதி (மாதவ), தேனிலும் இனியவன் (மது). புலன்களுக்கு அப்பாற்பட்டவன் (அதீந்த்ரிய:), புலன்களை இயக்கம் பெரிய மாயன். (மஹாமாய:), அடியார்க்கு நன்மை செய்வதில் ஊக்கமுடையவன் (மஹோத்ஸாஹ:), எவரின் உதவியும் இல்லாமல் அனைத்தையும் செய்து முடிக்கும் அஸஹாய சூரன் (மஹாபல:)


महाबुद्धिर् महावीर्यो महाशक्तिर् महाद्युतिः ।

अनिर् देश्य वपुः श्रीमान् अमेयात्मा महाद्रि धृक् ॥ १९॥

மஹா-புத்தி:‌ மஹா-வீர்ய:

மஹா-ஸக்தி:‌ மஹா-த்யுதி: |

அநிர்-தேஸ்ய-வபு: ஸ்ரீமான்

அமேயாத்மா மஹாத்ரி-த்ருக்|| 19

Mahaa-buddhir-mahaa-veeryo 

mahaa-shakthir-mahaa-dhyuthih |

Anir dheshya vapu-shreemaan 

ameyaathma mahaadhri dhruk ||

நாம் நினைப்பது, நாம் செய்வதுஎல்லாம் அறிந்தவன் (மஹாபுத்தி:), அழியாத சக்தியை உடையவன் (மஹாவீர்ய:), தன் சங்கல்பத்தாலேயே உலகங்களை எல்லாம் படைத்தவன் (மஹாசக்தி:), நம் உள்ளும் புறமும் உள்ள இருளைப் போக்க வல்லவன் (மஹாத்யுதி:). உவமை சொல்ல முடியாத திருமேனியை உடையவன் (அநிர்தேஸ்ய  வபு:), பெரும் செல்வமும், அழகும், ஒளியும், ஞானமும் உடையவன் (ஶ்ரீமான் :), கணக்கற்ற திவ்ய கல்யாண குணங்கள் உடையவன் (அமேயாத்மா :), ஆமையாய் மந்தர மலையை தாங்கி, சிறுவனாய் கோவர்த்தன மலையைத் தாங்கி, தன்னை அண்டினரை மலை தூக்கியும் காப்பவன் (மஹாத்ரி த்ருத் :).


महेष्वासो महीभर्ता श्रीनिवासः सतां गतिः ।

अनिरुद्धः सुरानन्दो गोविन्दो गोविदां पतिः ॥ २०॥

மஹேஷ்வாஸ: மஹீ-பர்தா

ஶ்ரீநிவாஸ: ஸதாங்கதி: |

அநிருத்த: ஸுரா-நந்த:

கோவிந்தோ கோவிதாம்‌-பதி: || 20

Mahesh vaaso mahee-bharthaa

shreenivaasa sathaangathih |

Aniruddha suraa-nandho

govindo govidhaam pathih ||

மகாவில்லாளன். அம்பு மழை பொழிந்து சத்ரு நிரஸனம் செய்பவன். (மஹேஷ்வாஸ:), இப்பூமியை தாங்குபவன் (மஹீ பர்தா:), மஹாலக்ஷ்மியை தன் திரு மார்பில் வைத்துள்ளவன் (ஶ்ரீநிவாஸ்:), நல்லோர்களுக்கு புகலிடமாய் இருப்பவன் (ஸதாங்கதி :). தன் இச்சையை நிறைவேற்றுவதில் தடங்கலற்றவன் (அனிருத்த:), நல்லோர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுபவன் (ஸுராநந்த:),கோவர்தன மலையை கொடையாக பிடித்து தன் பக்த ஜனங்களை காப்பவன், நம் துதிகளை ஏற்று அனுக்ரஹிப்பவன் (கோவிந்த:), வேத கோஷத்தால், தன்னை ஆராதிப்பவர்களைக் காப்பவன் (கோவிதாம்பதி:)


मरीचिर् दमनो हंसः सुपर्णो भुजगोत्तमः ।

हिरण्यनाभः सुतपाः पद्मनाभः प्रजापतिः ॥

மரீசி:‌ தமன: ஹம்ஸ:

ஸுபர்ணோ புஜகோத்தம: |

ஹிரண்யநாப: ஸுதபா:

பத்மநாப: ப்ரஜாபதி: || 21

Mareechir dhamano hamsah 

suparno bhuja-goththamah |

Hiranya-naabhah suthapaah 

padma-naabhah prajaa-pathih ||

பூரண சந்திரன் போன்ற அழகிய ஒளி உள்ளவன் (மரீசி:), தன் குளிர்ந்த ஒளியால் நம் தாபங்களைத்  தீர்ப்பவன் (தமந:), அழகிய நடை உள்ளவன். ஹம்ஸாவதாரம் செய்தவன் (ஹம்ஸ:), கருடனை வாகனமாக உடையவன். நம்மை ஸம்ஸார சாகரத்தை தாண்டுவிப்பவன் (ஸுபர்ண:), ஆதிசேஷன் மீது சயனித்து நமக்கு சேவை சாதிப்பவன் (புஜ கோத்தம:), அழகிய திருநாபியை உடையவன் (ஹிரண்ய நாப:), பெரும் தவம் செய்து பெறத்தக்க திவ்ய ஞான ஸ்வரூபி (ஸுதபா:), தாமரை பூத்த திருநாபியை உடையவன் (பத்மநாப:), பிரம்மனுக்கும் ஸ்வாமி (ப்ரஜாபதி:)


अमृत्युः सर्वदृक् सिंहः सन्धाता सन्धिमान् स्थिरः ।

अजो दुर्मर्षणः शास्ता विश्रुतात्मा सुरारिहा ॥ २२॥

அம்ருத்யு: ஸர்வத்ருக்‌ ஸிம்ஹ:

ஸந்தாதா ஸந்திமான்‌ ஸ்திர: |

அஜ: துர்மர்ஷண: சாஸ்தா

விஸ்ருதாத்மா ஸுரா-ரிஹா || 22

Amruthyu sarva-dhruk-simhah 

sandhaathaa sandhi-maan sthirah |

Ajo dhurmarshana shaastha 

vishru thaathma suraa-rihaa ||

அழிவில்லாதவன். ஜீவாத்மாக்களை ப்ரளயத்திலிருந்து காப்பாற்றுபவன் (அம்ருத்யு :), யாவரையும் கண்காணிப்பவன் (ஸர்வ த்ருக்), பக்த விரோதிகளைத் தண்டிக்கும் சிங்கப்பெருமான் (ஸிம்ஹ:), பக்தர்களுக்கு அபயம் அளித்து காப்பவன் (ஸந்தாதா), தன்னை சரண்டைந்த பக்தர்களைக் கைவிடாதவன் (ஸந்திமான்), பக்தர்களின் குறைகளைப் பாராமல், நிலை நின்று அருள் செய்பவன் (ஸ்திர:), யாருக்கும் பிறவாதன் (அஜ:), எதிரிகளால் ஜெயிக்க முடியாதவன் (துர்மர்ஷண:), எல்லா உலகங்களிலும் ஆட்சி செய்பவன் (சாஸ்தா:), வியந்து கேட்கும், செவிக்கு இனிய ஆச்சர்யமான காரியங்களை  செய்பவன் (விச்ருதாத்மா:), நல்லோர்களின் எதிரிகளைத் தீர்ப்பவன் (ஸுராரிஹா:)


गुरुर् गुरुतमो धाम सत्यः सत्यपराक्रमः ।

निमिषो ऽनिमिषः स्रग्वी वाचस्पति रुदारधीः ॥ २३॥

குரு:‌ குருதம: தாம

ஸத்ய: ஸத்ய-பராக்ரம: |

நிமிஷ: நிமிஷ: ஸ்ரக்வீ

வாசஸ்பதி-உதாரதீ: || 23

Gurur guru-thamo dhaama 

sathya sathya paraakramah |

Nimisho-nimisha sragvee 

vaachaspathi rudhaa-radheeh ||

நம் அஞ்ஞானத்தை போக்கும் ஆதி குரு, பரமாசார்யன் (குருர் குருதம:), நமக்கு இருப்பிடமாய் உள்ள விச்வ ரூபன் (தாம:), உண்மையின் உருவமாய் இருப்பவன் (ஸத்ய:), ஸத்யமான தர்மத்தை நிலைநாட்டும் அபார சக்தி உடையவன் (ஸத்ய பராக்ரம:). கண் மூடி திருபாற்கடலில் யோகம் செய்பவன் (நிமிஷ:), கண் மூடியிருந்தாலும் எல்லாவற்றையும் பார்ப்பவன் (அநிமிஷ:), அடியார்களைக் காக்க விரதம் பூண்டவன் (ஸ்ரக்வீ), வேதங்களை அருளி, கல்விக்கு அதிபதியாய் உள்ளவன் (வாசஸ்பதி:), எல்லையில்லாமல் கொடுப்பவன் (உதாரதீ:)


अग्रणीर् ग्रामणीः श्रीमान् न्यायो नेता समीरणः ।

सहस्र मूर्धा विश्वात्मा सहस्राक्षः सहस्र पात् ॥ २४॥

அக்ரணீ: க்ராமணீ: ஸ்ரீமான்‌

ந்யாய: நேதா ஸமீரண: |

ஸஹஸ்ர-மூர்தா விஸ்வாத்மா‌

ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்‌ || 24

Agraneer graamanee shreeman

nyaayo nethaa samee-ranah |

Sahasra-moordha vishvaathmaa

sahas raakshah sahasra paath ||

நாம் குழந்தையாயிருக்கும்போதே நமக்கு அறிவைக் கொடுத்து வளர்ப்பவன் (அக்ரணீ :), எல்லா ஜீவன்களுக்கும் தலைவன் (க்ராமணீ :), மிகுந்த சிறப்புடையவன் (ஸ்ரீ மான்:), நீதி வழுவாமல், அவரவர் செய்த கர்மாவுக்கு பலனை கொண்டு, உலகங்களை நடத்துபவன் (ந்யாய:), வைகுந்தம் அடைவித்து நம்மைக் கரை சேர்ப்பவன் (நேதா:), பற்பல திவ்ய அவதாரங்கள் எடுத்து ஆச்சர்ய சேஷ்டிதங்கள் செய்பவன் (ஸமீரண:). ஆயிரம் தலைகளை  உடையவன், அதாவது தானே அனைத்துமாக இருப்பவன் (ஸஹஸ்ர மூர்தா:), ஸகல லோகங்கத்துக்கும் ஆத்மாவாக  இருப்பவன் (விச்வாத்மா:), ஆயிரம் கண்களை உடையவன், அதாவது அனைத்தையும் பார்க்கும் சக்தி உள்ளவன் (ஸஹஸ்ராக்ஷ:), ஆயிரம் திருவடிகளை உடையவன், அதாவது எங்கும் ப்ரத்யக்ஷம் ஆக கூடியவன் (ஸஹஸ்ரபாத்:)


आवर्तनो निवृत्तात्मा संवृतः सम्प्रमर्दनः ।

अहः संवर्तको वह्नि रनिलो धरणीधरः ॥ २५॥

ஆவர்தன: நிவ்ருத்தாத்மா

ஸம்-வ்ருத: ஸம்-ப்ரமர்தன: |

அஹ:-ஸம்வர்தக: வஹ்னி

நில: தரணீ-தர: || 25

Aavarthano nivruththaathmaa 

sam-vrutha sam pramardhanah |

Aha-samvarthako vahnih 

ranilo dharanee-dharah ||

கால சக்கரத்தை தன் இஷடபடி சுழற்றுபவன். தன் சக்தியினால் சூரிய சந்திரர்களை நடத்திச் செல்பவன் (ஆவர்த்தன:), இயற்கையையே நடத்தும் அளவற்ற மேன்மை உடையவன் (நிவ்ருத்தாத்மா:), தன் பக்தர் அல்லாதவர்க்கு  தன்னை மறைத்து வைத்திருப்பவன் (ஸம்வ்ருத:), பக்தர்களின் அஞ்ஞானத்தைப் போக்கி மாயையிலிருந்து விடுவிப்பவன் (ஸம்ப்ரமர்தன:), பகல்,இரவு, பருவ காலங்கள் என்று காலத்தை சுழலச்செய்யும் பரம்பொருள் (அஹஸ் ஸம்வர்தக:), உலகங்களையெல்லாம் எங்கும் பரந்த ஆகாயத்தில் தாங்கி நிற்பவன் (வஹ்னி:), கண்ணுக்குத் தெரியாத காற்றாய் இருந்து நம்மை வாழ வைப்பவன் (அனில:), நம்மைத் தாங்கும் பூமியையும் அந்தரத்தில் நிற்க வைத்து தாங்குபவன் (தரணீ தர:)


सुप्रसादः प्रसन्नात्मा विश्वधृग् विश्वभुग् विभुः ।

सत्कर्ता सत्कृतः साधुर् जह्नुर् नारायणो नरः ॥

ஸுப்ரஸாத: ப்ரஸன்னாத்மா

விஸ்வத்ருக்‌ விஸ்வபுக்‌ விபு: |

ஸத்-கர்தா ஸத்-க்ருத: ஸாது:‌

ஜஹ்நு:‌ நாராயணோ நர: || 26

Suprasaadhah prasannathmaa

vishvadhruk vishva-bhug vibhuh |

Sath karthaa sath kruthas saadhuh

jahnur-naarayano narah ||

நம்மை தம் பக்தனாக ஏற்று மென்மேலும் அருள் புரிபவன் (ஸுப்ரஸாத:), விருப்பு,வெறுப்பு அற்ற தெளிவான சிந்தனை உள்ள நேர்மையாளன் (ப்ரஸந்நாத்மா:), தன் கருணையாலே, நமக்காக பற்பல பொருட்களை படைத்தருளியவன் (விஸ்வத்ருக்:), கரந்த பாலில் நெய்யே போல எங்கும் வியாபித்து தானே உலகாள்பவன் (விச்வபுக் விபு:), நல்லோர்களிடம் அன்புடன் இருப்பவன் (ஸத் கர்தா:), நல்லோர்களால் பூஜிக்கப்படுபவன் (ஸத் க்ருத:), தன் பக்தன் கேட்டால், தூது போகவும், தேரோட்டவும் தயாராக இருக்கும் எளியோன் (ஸாது :), பக்தரல்லார்க்குத் தன் பெருமைகளையெல்லாம் மறைப்பவன் (ஜஹ்நு:), அனைத்து நர ஜீவனுக்கும் அயணமாக / அடைக்கலமாக  இருப்பவன் (நாராயண:), அழிவற்றவன் (நர:)


असङ्ख् येयो ऽप्रमे यात्मा विशिष्टः शिष्ट कृच्छुचिः ।

सिद्धार्थः सिद्ध सङ्कल्पः सिद्धिदः सिद्धि साधनः ॥ २७॥

அஸங்க்யேய: ப்ரமேய-த்மா

விசிஷ்ட: ஸிஷ்டக்ரு ‌ஸுசி: |

ஸித்தார்த்த: ஸித்த-ஸங்கல்ப:

ஸித்தித: ஸித்தி-ஸாதன: || 27

Asankh yeyo prame-yaathmaa 

vishishta shishta-kruch suchih |

Sidhdhaarthah siddha-sankalpah 

siddhidha siddhi-saadhanah ||

லக்ஷோப லக்ஷம் எண்ணற்ற ஆத்மாக்களை தன்னுள் வைத்து ரக்ஷிப்பவன் (அஸங்க்யேய:), எண்ணற்ற உயிர்களிலும் பொருள்களிலும் வ்யாபித்திருப்பவன் (அப்ரமேயாத்மா:), தன்னுள் எல்லாம் எல்லாவற்றிலும் தான் என்னும் சிறப்புடையவன் (விசிஷ்ட:), தன் அடியார்களை நல்லோர்களாக தெய்வமாக ஆக்குபவன் (சிஷ்டக்ருத் :), தூய்மையானவன், பவித்ரமானவன் (சுசி :), எல்லா ஐஸ்வர்யமும் உடையவன் (ஸித்தார்த்த:), நினைத்த படி நடத்த வல்லவன் (ஸித்தஸங்கல்ப:), நாம் வேண்டும் வல்லமையை அளிப்பவன் (ஸித்தித:), நாம் வேண்டுவனவற்றைப் பெற ஸாதனமாய் உள்ளவன் (ஸித்தி ஸாதன:)


वृषाही वृषभो विष्णुर् वृषपर्वा वृषोदरः ।

वर्धनो वर्धमानश्च विविक्तः श्रुतिसागरः ॥ २८॥

வ்ருஷாஹீ வ்ருஷப: விஷ்ணு:

வ்ருஷ-பர்வா வ்ருஷோ-தர: |

வர்த்தன: வர்தமான: ச

விவிக்த: ஸ்ருதி-ஸாகர: || 28

Vrushaahee vrushabho vishnuh

vrusha-parvaa vrusho-dharah |

Vardhano vardha-maanas cha

viviktha shruthi-saagarah ||

தன்னை அடையும் நாளை நன் நாளாக்கி நன்மை பொழிபவன் (வ்ருஷாஹீ :), நம் துன்பங்கள் தீரும்படி அருள்பொழிபவன் (வ்ருஷப:), எங்கும் பரந்து அருள்மழை பொழிபவன் (விஷ்ணு:), தர்மமெனும் படிகளும் அவனே, அவற்றால் அடையப்படுபவனும் அவனே (வ்ருஷ பர்வா:), தர்மமே உருவாய் இருப்பவன் தர்மத்தைக் கண்டு வயிறு நிறைபவன் (வ்ருஷோதர:), வளர்ச்சியைத் தருபவன். நாம் முன்னேற அவனே வழியாய் இருப்பவன் (வர்தன:), பக்தர்கள் புகழ் வளர, வளர தன் புகழும் வளரப்பெறுபவன் (வர்தமான:), தனிச் சிறப்புடன் நிகரில்லாது இருப்பவன் (விவிக்த:), கடல் போன்ற வேதமாக இருப்பவன், வேதஸ்வரூபி (ஸ்ருதி ஸாகர:)


सुभुजो दुर्धरो वाग्मी महेन्द्रो वसुदो वसुः ।

नैकरूपो बृहद्रूपः शिपिविष्टः प्रकाशनः ॥ २९॥

ஸுபுஜ: துர்தரோ வாக்மீ

மஹேந்த்ரோ வஸுதோ வஸு: |

நைக-ரூப: ப்ருஹத்-ரூப:

ஸிபிவிஷ்ட: ப்ரகாஸன: || 29

Subhujo durdharo vaagmee

mahendhro-vasudho vasuh |

Naika-roopo bruhadh-roopah

shibi-vishtah prakaa-shanah ||

அழகிய புஜங்களை உடையவன் (ஸுபுஜ :), ப்ரளய ஜலம் போல், யாராலும் தடுக்க முடியாத சக்தியை உடையவன் (துர்தர :), மஹோ உன்னதமான பகவத்கீதையைத் தந்த திரு வாக்கை உடையவன் (வாக்மீ :), எல்லா ஐஸ்வர்யங்களுக்கும் அதிபதி (மஹேந்த்ர :), எல்லையற்ற தன் ஐஸ்வர்யங்களை நமக்கும் அளிக்கும் கொடைவள்ளல் (வஸுத:), வைத்தமாநிதி - தானே நமக்கெல்லாம், செல்வமாய் உள்ளவன் (வஸு:), ஒரு உருவம் தான் என்றில்லாதபடி பற்பல திவ்ய ரூபங்களில் உள்ளவன் (நைகரூப:), சூரியன் முதலிய  ஒளிகளின் கிரணங்கள் தோறும் வ்யாபித்திருப்பவன் (ப்ருஹத் ரூப:), அணு முதல் அண்டங்கள் வரை எல்லாம் தன்னுள் கொண்ட விஸ்வரூபன் (ஸிபிவிஷ்ட:), எல்லா பொருள்களிலும் வ்யாபித்து நமக்கு தன்னை வெளிப்படுத்துபவன் (ப்ரகா:) 


ओजस् तेजो द्युतिधरः प्रकाशात्मा प्रतापनः ।

ऋद्धः स्पष्टाक्षरो मन्त्रश् चन्द्रांशुर् भास्कर द्युतिः ॥

ஓஜஸ்-‌தேஜோ-த்யுதிதர:

ப்ரகாஸாத்மா ப்ரதாபன: |

ருத்த: ஸ்பஷ்டாக்ஷர: மந்த்ர:

சந்த்ராம்ஸு:‌ பாஸ்கர-த்யுதி: || 30

Ojas-thejo dhyuthi-dharah

prakaa shaathmaa prathaapanah |

Rhudhdhah-spash taaksharo manthrah

chandraamshur bhaaskara dhyuthih ||

மலையையும் தூக்கும் பலமும், மிக்க பலம் உள்ளோரையும் வெல்லும் சாமர்த்தியமும், கொண்ட ஜோதிர் மயமானவன் (ஓஜஸ் தேஜோ த்யுதிதர:), தன் திவ்ய திருக்கல்யாண குணங்களை நாம் அறிய செய்பவன் (ப்ரகாஸாத்மா:), தர்மத்தின் எதிரிகளை தன் உக்ரத்தினால் எரித்து விடுபவன் (ப்ரதாபன:), தன் அருளால் நம்மை நிரம்பச் செய்பவன் (ருத்த:), இவனே பரம்பொருள்  என்று வேதங்களால் தெளிவாய் தெரிவிக்கப்படுபவன் (ஸ்பஷ்டாக்ஷர:), தன்னை மனதில் த்யானம் செய்வோரைக் காப்பவன் (மந்த்ர:), வெண்மதியின் குளிர்ந்த ஒளியாய் இருந்து நம் தாபங்களைத் தீர்ப்பவன் (சந்த்ராம்ஸு:), சூரியனின் ஒளியாய்  இருந்து நம் இருள் நீக்குபவன் (பாஸ்கர த்யுதி:)


अमृतां शूद्भवो भानुः शशबिन्दुः सुरेश्वरः ।

औषधं जगतः सेतुः सत्य धर्म पराक्रमः ॥ ३१॥

அம்ருதாம்-ஸூத்பவோ பானு:

ஸஸபிந்து: ஸுரேஸ்வர: |

ஒளஷதம்‌ ஜகத:-ஸேது:

ஸத்ய-தர்ம-பராக்ரம: || 31

Amruthaam-shoodh bhavo bhaanuh 

shasha-bindhu-sureshvarah |

Ausha-dham jagatha sethuh 

sathya-dharma para-kramah ||

குளிர்ந்த சந்திரனை தன் மனதிலிருந்து ஸ்ரு‍ஷ்டித்த குளிர்ந்த மனத்தை உடையவன் (அம்ருதாம் சூத்பவ:), தானே சூரியனாகவும் இருந்து உலகங்களை இருளிலிருந்து காப்பாற்றுபவன் (பாநு:), தீயோர் மனதைத் திருத்தி தன்னுடன் கூடாதோரையும் ஆட்கொள்ளுபவன் (ஸஸிபிந்து:), இமையோர் தலைவனாய், தீமைகளைக் களைந்து, நல்லதை வளர்ப்பவன் (ஸுரேஸ்வர:), மருத்துவனாய் நிற்கும் மாமணிவண்ணன். எந்நோய்க்கும் இவனே மருந்து (ஔஷதம்:), வெவ்வேறு உலகங்களை ஒன்றோடொன்று மோதாமல் காக்கும் அணை (ஜகதஸ்ஸேது:), ஸத்யத்தையும், தர்மத்தையும் காக்கும் தோள்வன்மை உடையவன் (பராக்ரம:)


भूतभव्य भवन्नाथः पवनः पावनो ऽनलः ।

कामहा कामकृत् कान्तः कामः काम प्रदः प्रभुः ॥ ३२॥

பூதபவ்ய-பவந்நாத:

பவன: பாவன: நல: |

காமஹா காமக்ருத்‌ காந்த:

காம: காம-ப்ரத: ப்ரபு: || 32

Bhootha-bhavya bhavan naathah

pavanah paavano-analah |

Kaamahaa-kaama-kruth kaanthah

kaamah kaama-pradhah prabhuh ||

கடந்த, நிகழ், எதிர் என்று முக்காலங்களிலும் ரக்ஷகன் இவனே (பூத பவ்ய பவன் நாத:), எக்காலத்திலும் வீசி நம்மைக் காக்கும் காற்று இவனே (பவன:), தன்னை மனதில் கொண்டு செய்யும் எக்காரியத்தையும் புனிதமாக்குபவன் (பாவன:), பக்தர்களுக்கு எவ்வளவு அருளியும் தான் திருப்தி அடையாதவன் (அநல:), பக்தர்களின்  மனதிலிருந்து  மற்ற காமங்களை, ஆசைகளை அகற்றுபவன் (காமஹா:), பக்தர்கள் மனதினிலே தன்னிடம் ஆசையை வளர்ப்பவன் (காமக்ருத்:), தன் திருமேனி அழகாலும், திரு குணங்களாலும் நம்மை வசீகரிப்பவன் (காந்த:), பக்தர்களை தன் மீது பக்திகொள்ள வைத்து பித்தராக ஆக்குபவன் (காம:), தர்ம, அர்த்த, காம, மோக்ஷங்களெனும் புருஷார்த்தங்களை அளிப்பவன் (காமப்ரத:), நம் மனதைக் கவர்ந்து, ஆக்ரமித்து, நம் ஸ்வாமியாய் இருப்பவன் (ப்ரபு:)


युगादि कृद् युगा वर्तो नैक मायो महाशनः ।

अदृश्यो व्यक्त रूपश्च सहस्र जिद नन्त जित् ॥ ३३॥

யுகாதி-க்ருத‌ யுகா-வர்த:

நைக-மாயோ மஹாஸன: |

அத்ருஸ்ய: வ்யக்த-ரூப: ச

ஸஹஸ்ர-ஜித் நந்த-ஜித் || 33

Yugaadhi-krudh yugaa vartho

naika-maayo mahaa-shanah |

Adhrushyo vyaktha-roopaschha

sahasra jith anantha jith ||

ப்ரளயத்துக்கு பின் மறுபடி ஸ்ருஷ்டியைத் தொடங்குபவன் (யுகாதிக்ருத்), யுகங்களை மறுபடியும் மறுபடியும் ஏற்படுத்தி காலசக்கரத்தை சுழற்றுபவன் (யுகா வர்த்த:), ஒரு மாயம் தான் என்றில்லாமல் அநேக மாயச்செயல்களைச் செய்பவன் (நைகமாய:), ப்ரளய காலத்தில் உலகை தன்னுள் ஏற்ற உலகம் உண்ட பெருவாயன் (மஹாசன:), பக்தி கண்களாலன்றி நம் மாமிச கண்களால் காணமுடியாதவன் (அத்ருச்ய:), பக்தியுள்ள அடியார்க்கு  தன் திவ்ய திருமேனியை நன்கு தரிசிக்க வைப்பவன் (வ்யக்த ரூப:), ஆயிரமாயிரம்  ப்ரளயங்களையும் தாண்டி அழிவில்லாது நிற்பவன் (ஸஹஸ்ர ஜித்:), முடிவில்லா மகிமைகளை உடையவன் (அனந்த ஜித்:).


इष्टोऽ विशिष्टः शिष्टेष्टः शिखण्डी नहुषो वृषः ।

क्रोधहा क्रोध कृत्कर्ता विश्व बाहुर् महीधरः ॥ ३४॥

இஷ்ட: விஷிஸ்ட: (இஷ்டோ விஷிஸ்ட:ஷிஸ்டேஷ்ட:

ஸிகண்டீ நஹுஷோ வ்ருஷ: |

க்ரோதஹா க்ரோத-க்ருத்-கர்தா

விஸ்வபாஹு:‌ மஹீதர: || 34

Ishto-vishishta shishteshtah

shikhandee nahusho vrushah |

Krodhahaa krodha-kruth karthaa

vishva-baahur maheedharah ||

எவ்வித வித்யாஸமுமின்றி எல்லோரையும் தாய் போல நேசிப்பவன் (இஷ்ட, அவிசிஷ்ட:), சிஷ்டர்களான அடியார்களால் பெரிதும் விரும்பப்படுபவன் (சிஷ்டேஷ்ட:), எல்லையற்ற தேஜஸை உடைய கிரீடத்தை புகழை அணிந்தவன் (சிகண்டீ:), இயற்கை என்னும் பல அழகுகளை இவ்வுலகில் தோற்றிவித்திருப்பவன் (நஹுஷ:), மேகமாய் இருந்து நம்மீது அருள் மழை பொழிபவன் (வ்ருஷ:), தர்மத்தை அழிப்பவர்களைத் தான் அழித்து கோபம் தணியப் பெற்றவன் (க்ரோதஹா:), தர்மத்தை, தர்மத்தை காப்பவர்களை அழிக்க நினைப்பவர்களை கண்டு கோபிப்பவன் (க்ரோதக்ருத்:), நாம் செய்த பாப புண்யங்களுக்கேற்ப நம்மை நடத்துபவன் (கர்தா:), உலகங்களையெல்லாம் ஸ்ருஷ்டித்த திருக்கைகளை உடையவன் (விச்வபாஹு:), பூமியின் பாரங்களை அழித்து பூமி தரித்து நிற்கும்படி செய்பவர் (மஹீதர :).


अच्युतः प्रथितः प्राणः प्राणदो वासवानुजः ।

अपां निधिर धिष्ठान मप्रमत्तः प्रतिष्ठितः ॥ ३५॥

அச்யுத: ப்ரதித: ப்ராண:

ப்ராணதோ வாஸவா-நுஜ: |

அபாம்நிதி அதிஷ்டானம்

அப்ரமத்த: ப்ரதிஷ்டித: || 35

Achyutha-prathithah praanah

praanadho vaasavaa nujah |

Apaam nidhira dhishtaana

mapra-maththah prathishtithah ||

பக்தர்களை கை விடாதவன் (அச்சுத:), பக்தர்களைக் கைவிடாதவன் என்று புகழ் பெற்றவன் (ப்ரதித:), அடியார்களுக்கு உயிராய் இருப்பவன் (ப்ராண:), அடியார்களுக்கு உயிரளிப்பவன். தேவர்களுக்கு ஆமையாய் இருந்து அமுதம் ஈந்தவன் (ப்ராணத:), தன் அடியவனான இந்திரனுக்கு தம்பியாய் இருந்தவன் (வாஸவா நுஜ:), திருப்பாற்கடலுக்கு நிதியாய் இருப்பவன் (அபாம் நிதி:), கடலைக் கடைய மந்த்ர மலைக்கு ஆஸனமாய் முதுகை கொடுத்தவன் (அதிஷ்டானம்:), தன்னை சரணடைந்தோரைக் காப்பதில் மிகுந்த ஊக்கமுடையவன் (அப்ரமர்த்த:), மந்த்ர மலைக்கு மட்டுமல்லாமல், எல்லாவற்றிற்கும் ஆதாரமாய் இருப்பவன் (ப்ரதிஷ்டித:).


स्कन्दः स्कन्दधरो धुर्यो वरदो वायुवाहनः ।

वासुदेवो बृहद् भानु रादिदेवः पुरन्दरः ॥ ३६॥

ஸ்கந்த: ஸ்கந்த-தர: துர்யோ

வரதோ வாயு-வாஹன: |

வாஸுதேவோ ப்ருஹத்-பானு:

திதேவ: புரந்தர: || 36

Skandhah skandha-dharo dhuryo

varadho vaayu-vaahanah |

Vaasudhevo bruhadh bhaanuh

aadhi devah purandharah ||

தீயோரை அழிப்பவன். அழிக்கும் கடவுளும் இவனே (ஸ்கந்த:), மற்ற தெய்வங்களையும் தாங்கி நடத்தும் தெய்வ நாயகன் (ஸ்கந்த தர:), அகில புவனத்தையும் தாங்கி நடத்திச்செல்லும் ஒரே பரப்பரம்மம் (துர்ய:), உலகத்தின் அன்றாட வேலைகளை கவனிக்கும் தேவர்களுக்கு அதற்குரிய ஸாமர்த்யத்தைத் தருபவன். (வரத:), ப்ரானவாயுவை நம் வரை நடத்தித் தந்து உலகுக்கு ஓருயிராய் இருப்பவன் (வாயு வாஹன:). எங்கும் வஸிப்பவன். எல்லா ஆத்மாக்களிலும் நிறைந்திருப்பவன் (வாஸுதேவ:), நாம் காணும் சூரியன், இவன் ஒளியில் ஒரு பங்கே  என்னும்படி நினைப்பவன் (ப்ருஹத் பானு:), உலகங்களுக்கெல்லாம் காரணமான ஆதி முதல்வன் (ஆதி தேவ:), நம் இல்லங்களுக்கு ஆதாரமாய் இருந்து நமக்கு நல் வாழ்வு கொடுப்பவன் (புரந்தர:).


अशोकस् तारणस् तारः शूरः शौरिर् जनेश्वरः ।

अनुकूलः शतावर्तः पद्मी पद्म निभेक्षणः ॥ ३७॥

அஸோக:‌ தாரண: தார:

சூர‌ செளரி:‌ ஜனேஸ்வர: |

அனுகூல:‌ ஸதா-வர்த:

பத்மீ பத்ம-நிபேக்ஷண: || 37

Ashokas thaaranas thaarah

soora-shaurir janesh varah |

Anu-koola sadhaa-varthah

padhmee padhma-nibhekshanah ||

நம் துன்பங்களை அழித்து நம்மை சந்தோஷமாக வைப்பவன் (அசோக:), இந்த ஸம்ஸார ஸாகரத்தை தாண்டுவிப்பவன். நமக்கு மோக்ஷம் தருபவன் (தாரண:), நம்மை ரக்ஷிப்பவன். நம் பாபங்களை விலக்குபவன் (தார:), ஸுலபமாக வெற்றி அடைபவன். நமக்கு வெற்றியளிப்பவன் (சூர:), மாவீரனான தசரதனின் குமாரன் (சௌரி:), எல்லா மக்களுக்கும் ஈச்வரனாய் இருப்பவன் (ஜனேஷ்வர:). நல்லோர்க்கு கட்டுபட்டவன். யசோதை கட்ட, தானே கட்டுண்டவன் (அனுகூல:), சுழன்று பெருகி ஓடும் நதிபோல், நற்குணப் பெருக்கை உடையவன் (ஸதா வர்த்த:), நாபியில் தாமரையை உடைவன் (பத்மீ:), நம் பாபங்களை விலக்கும் இனிய பார்வையை உடையவன் (பத்ம நிபேக்ஷண:)





पद्मनाभो ऽरविन्दाक्षः पद्मगर्भः शरीर भृत् ।

महर्द्धि रृद्धो वृद्धात्मा महाक्षो गरुडध्वजः ॥ ३८॥

பத்மநாபோ அரவிந்தாக்ஷ:

பத்ம-கர்ப: ஸரீர-ப்ருத் |

மஹர்தி: ருத்த: வ்ருத்தாத்மா

மஹாக்ஷ: கருடத்வஜ: || 38

Padma-naabho aravindhaakshah

padma-garbha-shareera-bhruth |

Mahardhir rudhdho vrudhdhaathmaa

mahaaksho garuda dhvajah ||

செல்வ மகளான மஹாலக்ஷ்மீயை திருமார்பில் கொண்ட திருச்செல்வன் (மஹர்தி:), அடியார்களின் ஸ்ம்ருத்தியைக் கண்டு ஸந்தோஷிப்பவன் (ருத்த:), ஸகல ஆத்மாக்களையும் படைத்த பரமாத்மா (வ்ருத்தமா:), வேதாத்மாவான கருடனை  ரதமாகக் கொண்டவன் (மஹாக்ஷ:), அந்தக் கருடனை தன் கொடியாகவும் கொண்டவன் (கருடத்வஜ:)


अतुलः शरभो भीमः समयज्ञो हविर्हरिः ।

सर्व लक्षण लक्षण्यो लक्ष्मीवान् समितिञ् जयः ॥ ३९॥

அதுல: சரபோ பீம:

ஸம-யக்ஞ: ஹவிர்-ஹரி: |

ஸர்வ-லக்ஷண-லக்ஷண்யோ

லக்ஷ்மீவான் ஸமிதிஞ்-ஜய: || 39

Athula-sharabho bheemah 

sama-yagyo havir-harih |

Sarva lakshana lakshanyo 

lakshmeevan samithinj jayah ||

ஒப்பற்றவன். தனக்கு நிகராக யாரும் இல்லாதவன் (அதுல :), அழிப்பவன். வரம்புகள் மீறுவோரை அழிப்பவன் (சரப :), தவறு செய்தோர் மனதில் பயமூட்டுபவன் (பீம:), காலமறிந்தவன். காத்திருந்து தக்க காலத்தில் நமக்கு உதவுபவன் (ஸமயக்ஞ:), நாம் செய்யும் ஹோமங்களை ஏற்பவன் (ஹவிர் ஹரி:), எல்லா லக்ஷணங்களும் பொருந்திய பேரழகன் (ஸர்வலக்ஷண லக்ஷண்ய:), திருமகள் நாதன். ஸ்ரீமான் என்ற சொல்லுக்கு பொருத்தமானவன் (லக்ஷ்மீவான்:), நமக்கு நற்புத்தியைக் கொடுத்து நம்மை ஆட்கொள்பவன் (ஸமிதிஞ்ஜய:)


विक्षरो रोहितो मार्गो हेतुर् दामोदरः सहः ।

महीधरो महाभागो वेग वान मिताशनः ॥ ४०॥

விக்ஷர: ரோஹித: மார்க:

ஹேது:‌ தாமோதர: ஸஹ: |

மஹீதர: மஹாபாக:

வேக-வாந மிதாசன: || 40

Viksharo rohitho maargo

heythur-dhaamodhara sahah |

Mahee-dharo mahaa-bhaago

vega vaana-amithaashanah ||

குறையற்றவன். எல்லா செல்வங்களும் உடையவன். மென்மையான திருக் குணங்களை உடைவன். குறை ஏதும் இல்லாதவன். பக்தர்களிடம் குறை காணாதவன். நீங்காத அன்புள்ளவன் (விக்ஷர:),செந்தாமரைக் கண்ணும், சிவந்த  பாதங்களும், பழுத்தகனிப் போன்ற அதரங்களையுடையவன் (ரோஹித:), அவனே நாம் வாழ வேண்டிய வழி காட்டுபவன். வழித் துணைவன் (மார்க:), நாம் வாழ்வதற்கு ஒரே காரணமாய் இருப்பவன் (ஹேது:), யசோதையினால் உரலுடன் சேர்த்துக் கட்டப்பட்டவன். பக்தர்களுக்காக திருக் கோயிலில் கட்டுண்டு கிடப்பவன் (தாமோதர:), பொறுமை உள்ளவன். நாம் செய்யும் அபசாரங்களைப் பொறுப்பவன் (ஸஹ:), பூமியைத் தாங்குபவன். தீயோர்களை அழித்து மன பாரம் நீக்குபவன். (மஹீதர:), மஹாலக்ஷ்மீ விரும்பும் மஹாபாக்யம் உடையவன் (மஹாபாக:), ஆதிமூலமே என்றழைத்து மாத்திரத்தில் வேகமாய் ஓடி வந்து காத்தவன், கோவிந்தா என்று திரௌபதி அழைத்ததும், உடனே காத்தவன் (வேகவான்:), சிறிதேயானாலும், பெரிதேயானாலும் நம் நைவேத்யத்தை ஏற்பவன் (அமிதாசன:).


उद्भवः क्षोभणो देवः श्रीगर्भः परमेश्वरः ।

करणं कारणं कर्ता विकर्ता गहनो गुहः ॥ ४१॥

உத்பவ: க்ஷோபனோ தேவ:

ஸ்ரீகர்ப: பரமேஸ்வர: |

கரணம்‌ காரணம்‌ கர்தா

விகர்தா கஹனோ குஹ: || 41

Udhbhavah shobhano dhevah

shree-garbhah parameshvarah |

Karanam kaaranam karthaa

vikarthaa gahano guhah ||

மெய் ஞானம் கொடுத்து பக்தர்களின் ஸம்ஸார பந்தங்களை நீக்குபவன் (உத்பவ:), பக்தர் அல்லாதோரின் மனதை அஞான இருள் சூழ்ந்து வைத்திருப்பவன் (க்ஷோபன:), லீலைகள் புரிந்து விளையாடுபவன் (தேவ:), திருமகளைப் பிரியாதவன் (ஸ்ரீ கர்ப:), பெரு மேன்மை உடையவன் (பரமேஸ்வர:), நாம் முக்தி அடைய ஸாதனமாகவும், காரணமாகவும் இருப்பவன் (கரணம்:), உலகங்களின் செயல்பாடுகளுக்கு எல்லாம் காரணமாய் இருப்பவன் (காரணம்:), நாம் செய்யும் காரியங்களை  நம் வினைக்கேற்ப செய்விப்பவன் (கர்தா:), மாயைகளில் சிக்கி சீரழியும் ஆத்மாக்களைக் கண்டு துக்கம் அடைபவன் (விகர்தா:), பக்தர்கள் அல்லாதவர்களால் புரிந்து கொள்ள முடியாதவன் (கஹன்:), காக்கும் இயல்பு கொண்டவன். நம் எல்லோருக்கும் ரக்ஷகன் (குஹ :)


व्यवसायो व्यवस्थानः संस्थानः स्थानदो ध्रुवः ।

परर्द्धिः परम स्पष्ट स्तुष्टः पुष्टः शुभेक्षणः ॥ ४२॥

வ்யவ-ஸாயோ வ்யவ-ஸ்தான:

ஸம்-ஸ்தான: ஸ்தானதோ த்ருவ: |

பரர்த்தி: பரம-ஸ்பஷ்ட :‌

துஷ்ட: புஷ்ட: சுபேக்ஷண: || 42

Vyava-saayo vyava sthaanah

sam sthaanah sthaanadho dhruvah |

Parardhdhih parama-spashta

thushtah pushtah-shubhekshanah ||

நக்ஷத்திரங்களுக்கெல்லாம் ஆதாரமாய் ஆகாயமே தன் சரீரமாக உள்ளவன் (வ்யவஸாய:), காலவரையரைகளுக்கும் ஆதாரமாய் எல்லா க்ரஹங்களையும் நடத்துபவன் (வ்யவஸ்தான:), எல்லாவற்றையும்  ப்ரளய காலத்தில் முடிவடையச் செய்பவன்.(ஸம்ஸ்தான:), ப்ரளயத்தில் அழியும் எல்லாவற்றிற்கும் தன்  வயிற்றில் இடம் அளிப்பவள். (ஸ்தாநத:), எல்லாவற்றையும் அழித்து, தானொருவனே நிலையாய் இருப்பவன் (த்ருவ:)மேலான திருக்கல்யாண குண பூர்த்தியுள்ளவன் (பரர்த்தி:), அவனே பரம்பொருள் என்று ஸ்பஷ்டமாய் தெளிவாய் தெரிபவன் (பரம ஸ்பஷ்ட:), ஆனந்தமே உருவானவன். வனவாசத்தையும் களிப்புடன் ஏற்பவன் (துஷ்ட:), எந்நிலையிலும் வாடாதிருப்பவன் குணங்களால் பரிபூர்ணமாவன் (புஷ்ட:), மங்களகரமான திருக்கண்களால் நமக்கு அருள் செய்பவன் (சுபேக்ஷண:)


रामो विरामो विरतो मार्गो नेयो नयोऽनयः ।

वीरः शक्तिमतां श्रेष्ठो धर्मो धर्म विदुत्तमः ॥ ४३॥

ராமோ விராமோ விரதோ

மார்கோ நேயோ நய: நய: |

வீர: ஸக்தி-மதாம்-ஸ்ரேஷ்ட்ட:

தர்ம: தர்ம-விதுத்தம: || 43

Raamo viraamo viradho 

maargo neyo nayo-nayah |

Veera-shakti-mathaam shreshto 

dharmo dharma-vidhuth-thamah ||

தன்னைக் காண்பவர் யாவரையும் மகிழ்விப்பவன், ரமிக்க செய்பவன் (ராம:), தன்னை எதிர்ப்பவர்களை வெற்றிக் கிட்டாமல் ஓய்ந்து போகும்படிச் செய்பவன் (விராம:), பக்தர்களுக்கு எல்லாம் கொடுத்தும் தான் ஏதும் எதிர் பார்க்காதவன் (விரத:), பக்தர்களால் விரும்பித் தேடப்படுபவன் (மார்க்க:), பக்தர்களுக்கு கட்டுப்பட்டவன் (நேய:), அடியார்களை வைகுண்டம்  அழைத்து செல்பவன் (நய:), பக்தர்களல்லாதாரால் அணுக முடியாதவன் (அநய:), எதிரிகளை பயத்தால் நடுங்க செய்பவன் (வீர:), சக்தி படைத்தவர்களுள் மிகச் சிறந்தவன் (சக்தி மதாம் ச்ரேஷ்ட:), தர்மமே வடிவெடுத்தவன் (தர்ம:), தர்மத்தை  நன்கறிந்தவன். தானே முன் உதாரணமாய் நிற்பவன் (தர்ம விதுத்தம:)


वैकुण्ठः पुरुषः प्राणः प्राणदः प्रणवः पृथुः ।

हिरण्य गर्भः शत्रुघ्नो व्याप्तो वायु रधो क्षजः ॥ ४४॥

வைகுண்ட: புருஷ: ப்ராண:

ப்ராணத: ப்ரணவ: ப்ருது: |

ஹிரண்யகர்ப: ஸத்ருக்னோ

வ்யாப்தோ வாயு: அதோக்ஷஜ: || 44

Vaikunta purushah praanah

praanadhah pranavah pruthuh |

Hiranya-garbha shatrughno

vyaaptho vaayu-radho-kshajah ||

தடைகளைப் போக்கி நம்மை தன்னிடம் சேர்த்துக் கொள்பவன் (வைகுண்ட:), காலத்துக்கும், தேசத்துக்கும், பொருளுக்கும் கட்டுப்படாதவன் (புருஷ:), நமக்கு மிகவும் வேண்டியவன் (ப்ராண:), அந்தர்யாமியாய் இருந்து நம்மை உயிருடன் இருக்க செய்பவன் (ப்ராணத:), தன் மேன்மை பொருந்திய திருக்குணங்களால் நம் வணக்கத்துக்கு உரியவன் (ப்ரணவ:), ப்ருது என்ற அவதாரம் செய்தவரும் இவரே. இவராலேயே பூமிக்கு ப்ருத்வீ என்று பெயர் ஏற்பட்டது. ப்ருது என்றால் விசாலம் என்றும் அர்த்தம். மிகவும் விசாலமாக இருந்து நம் அனைவரையும் தரிப்பவர் (ப்ருது:), ஸ்ருஷ்டி கர்தாவாக இருப்பவர். பிரளய காலத்தில் 14 லோகங்களும் பிண்டம் போல ஆகி, தங்கம் போல இருக்க, அதன் மத்தியில் இருப்பவர் (ஹிரண்யகர்ப:), தர்மத்துக்கு விரோதமானவர்களை ஒழிப்பவர் (சத்ருக்ன:), உள்ளும் புறமும் எங்கும் வியாபித்து இருப்பவர் (வ்யாப்த:), பூமியில் உள்ள கந்தமாகவும் (மணம்) நானே இருக்கிறேன் என்று கீதையில் பகவான் சொல்கிறார். கந்தமாகவும் இருப்பவர் (வாயு:), தன்னை சரணாகதி செய்த பிறகு, பக்தனை மேலே மேலே உயர்த்தி கொண்டே செல்பவர் (அதோக்ஷஜ:)


ऋतुः सुदर्शनः कालः परमेष्ठी परिग्रहः ।

उग्रः संवत्सरो दक्षो विश्रामो विश्व दक्षिणः ॥ ४५

ருது : ஸுதர்சன: கால:

பரமேஷ்ட்டீ பரிக்ரஹ: |

உக்ர: ஸம்-வத்ஸரோ தக்ஷ:

விஸ்ராமோ விஸ்வ-தக்ஷிண: || 45

Ruthu sudharshanah kaalah

parameshti pari-grahah |

Ugra samvathsaro dhaksho

vishramo vishva-dakshinah ||

ஆறு ருதுக்களாகவும் பகவானே இருக்கிறார். 'ருதுக்களில் வசந்த காலமாக இருக்கிறேன்' என்று பகவான் சொல்கிறார். வசந்த உத்ஸவம் செய்து கொள்கிறார். அந்தந்த காலங்களில் இலை உதிர்வதும், பிறகு துளிர்பதும், பூப்பதும், பழுப்பதும் இவர் செயலே! (ருது:), சுத்தமான வேதாந்த சித்தாந்தமாக இருப்பவர். எத்தனை நேரம் பார்த்தாலும் 'போதும்' என்று தோன்றாதபடி தரிசனம் கொடுப்பவர் (ஸுதர்சன:), 6 ருதுவுக்கும் மேல், அகண்டமாக இருப்பது காலம். காலமாகவும் இருப்பவர். (கால:), யாரும் இவருக்கு சமம் இல்லை. கை நீட்டி வாங்கும் நிலையில் இல்லாதவர், பிறருக்கு கொடுத்தே பழக்கப்பட்டவர். அப்பாற்பட்ட உச்ச நிலையில் இருப்பவர் (பரமேஷ்ட்டீ), உச்ச நிலையில் இருந்தாலும், யாரும் இவருக்கு சமம் இல்லை என்று இருந்தாலும், பிறருக்கு கொடுத்தே பழக்கம் உள்ள கையாக இருந்தாலும், பக்தன் ஆசையோடு ஒரு இலை, ஒரு பூ, துளி நீர் கொடுக்க வந்தாலும், பக்தனை திருப்தி செய்ய, கை நீட்டி ஏற்று கொள்பவர். (பரிக்ரஹ:), உக்ரமானவர் சூரியன். தன் அக்னி கிரணங்களால் கொளுத்தி விடுவார். அந்த சூரியன் இவருக்கு முன்னால் சிறிய கற்பூரதீபம் போல இருக்கும். சூரியனுக்கும் சூரியனாக இருப்பவர் (உக்ர:), சகல பூதங்களுக்கும், உயிர்களுக்கும் அடைக்கலமாக இருப்பவர்  (ஸம்-வத்ஸரோ), பாண்டவ தூதனாக வந்து, அதற்குள் விதுரனின் வீட்டில் கஞ்சி சாப்பிட்டு, துரியோதனனுக்கு தர்ம உபதேசம் செய்து, விஸ்வரூபம் காட்டி, கர்ணனை பேதபடுத்த முயற்சி செய்து பல காரியங்கள் செய்கிறார். ஒரு காரியத்துக்காக வந்து ஆயிரம் காரியங்களை சாதித்து கொள்ளும் மகா கெட்டிக்காரர் (தக்ஷ:), பசியும், தாகத்தாலும் அலையும் எல்லோருக்கும் தன் சன்னதியிலேயே சாந்தி கொடுப்பவர் (விஸ்ராமோ), இவர் சாமர்த்தியம் யாருக்குமே கிடையாது(விஷ்வ தக்ஷிண:)


विस्तारः स्थावर स्थाणुः प्रमाणं बीज मव्ययम् ।

अर्थो ऽनर्थो महाकोशो महाभोगो महाधनः ॥ ४६॥

விஸ்தார: ஸ்தாவர-ஸ்தாணு:

ப்ரமாணம்‌ பீஜம்-அவ்யயம்‌ |

அர்த: னர்தோ மஹா-கோஸோ

மஹா-போகோ மஹாதன: || 46

Visthaarah sthaavara-sthaanuh

pramaanam beejam-avyayam |

Artha anartho mahaa-kosho

mahaa-bhogo mahaa-dhanah ||

அகிலாண்ட கோடி ப்ரம்மாண்டங்களையும் தன் திரு வயிற்றில் வைத்து இருப்பவர். அகண்டமானவர். விஸ்தாரமாக இருப்பவர் (விஸ்தார:) சகல ஸ்தாவரங்களையும் ஸ்திரமாக வைத்து இருப்பவர் (ஸ்தாவர-ஸ்தாணு:), இறுதி முடிவாக இருப்பவர். தானே ப்ரமாணமாக இருப்பவர் (ப்ரமாணம்‌), ஒரு விதை தன்னை அழித்து கொண்டு தான், மரத்தை ஸ்ருஷ்டி செய்கிறது. மரம் வந்த பிறகு, அதன் விதை இருப்பதில்லை. உலகத்திற்கு பீஜமாக (விதை) பரப்ரம்மம் இருக்கிறார். உலகம் இவரால் படைக்கப்பட்டாலும் பீஜமாகிய இவர் அழியாமலேயே இருக்கிறார். ஒருவன் யானை போன்ற வேஷம் போட்டு கொண்டு யானை போல தெரிந்தாலும், உண்மையில் தான் அழியாமல் தான் இருக்கிறான். அது போல, பீஜம் போல இவர் இருந்து உலகை படைத்தாலும், தான் அழியாமலேயே இருகிறார். (பீஜம்-அவ்யயம்‌), அர்த்தமாகவே இருக்கிறார். இவரால் பிரயோஜனம் இருப்பதால், அனைவராலும் யாசிக்கபடும் அர்த்தமாக இருப்பவர் (அர்த:), யாரிடமும் எந்த அர்த்தத்தையும் யாசிக்க அவசியமில்லாமல் இருப்பவர் (அனர்தோ), இவரே குறையா செல்வம் உள்ள கஜானாவாக இருப்பவர். வைத்த மா நிதியாக இருப்பவர் (மஹா-கோஸோ), ஸ்வயமே ஆனந்தம் மூர்த்தியாக இருப்பவர் (மஹா-போகோ), பரம்பொருளாக இருப்பவர். அழியாத செல்வம் உடையவர். இவரே செல்வமாக இருப்பவர் (மஹா தன:)


अनिर्विण्णः स्थविष्ठो ऽभूर् धर्मयूपो महामखः ।

नक्षत्र नेमिर् नक्षत्री क्षमः क्षामः समीहनः ॥ ४७॥

அநிர்விண்ண: ஸ்தவிஷ்ட: பூ:

தர்ம-யூபோ மஹாமக: |

நக்ஷத்ர-நேமி:‌ நக்ஷத்ரீ

க்ஷம: க்ஷாம: ஸமீஹன: || 47

Anir-vinnah sthavishto bhooh 

dharma-yoopo mahaa-makhah |

Nakshatra-nemir-nakshathree 

kshamah kshaamah-samee-hanah ||

நிர்வேதமே இல்லாதவர். எப்பொழுதும் உற்சாகமாகவே இருப்பதால், அலுத்து கொண்டு எப்பொழுதுமே இருக்க மாட்டார். (அநிர்விண்ண:), 14 உலகங்களும் தன் அங்கமாக இருபெரிய பெருமாளாக ஸ்தூலமாக இருப்பவர் (ஸ்தவிஷ்ட:), பிறப்பே இல்லாதவர். தானே தோன்றியவர் (அபூ:), நாம் அனைவரும் தர்மத்துக்கு கட்டுப்பட்டவர்கள். தர்மம் இவரிடம் கட்டுப்பட்டு இருக்கிறது. தர்மத்தை கட்டி இருக்கும்  யூப ஸ்தம்பமாக இருப்பவர்.  (தர்ம-யூபோ), பெரிய யஞமாகவும் தானே இருப்பவர். யஞ நாராயணன் என்று இருப்பவர் (மஹாமக:), வானில் காணப்படும் கோடிக்கணக்கான நக்ஷத்திரங்கள், விஷ்ணு பதமான துருவ நக்ஷத்திரத்தின் ஆதாரத்தில் சுற்றி கொண்டு உள்ளது. மற்ற நக்ஷத்திரங்களுக்கு அஸ்தமனம் உண்டு. நக்ஷத்திரங்கள் விழுவது உண்டு. மறைவது உண்டு. மற்ற நக்ஷத்திரங்களை தன் ஆதாரத்தை கொண்டு சுழற்றி கொண்டு, தான் மட்டும் துருவ நட்சத்திரமாக அழியாமல் என்றுமே இருப்பவர் (நக்ஷத்ர-நேமி:‌), நக்ஷத்ரானாம் அஹம் சசி (சந்திரன்) என்று கீதையில் சொல்கிறார். நக்ஷத்திரங்களுக்கு அதிபதியாக சந்திரனாக தானே இருப்பவர் (நக்ஷத்ரீ) பூமியை காட்டிலும் பொறுமை உடையவர். எந்த காரியமும் செய்ய சக்தி உள்ளவர். எதையுமே செய்ய கூடியவர் (க்ஷம:) பிரளய காலத்தில் எல்லாம் அழிந்து துர்பிக்ஷமான பிறகு தன்னிடமே அனைத்தையும் சேர்த்து கொள்பவர் (க்ஷாம:) உலகத்தை திரும்ப படைக்கும் போது, மீண்டும் அப்படியே ஒரு தவறு இல்லாமல், மாறாமல் மீண்டும் படைக்கும் திறன் கொண்டவர் (ஸமீஹன:)


यज्ञ इज्यो महेज्यश्च क्रतुः सत्रं सतां गतिः ।

सर्वदर्शी विमुक्तात्मा सर्वज्ञो ज्ञानमुत्तमम् ॥ ४८॥

யஞ இஜ்யோ மஹேஜ்ய: ச

க்ரது: ஸத்ரம்‌ ஸதாம்கதி: |

ஸர்வ-தர்ஸீ விமுக்தாத்மா

ஸர்வஞ: ஞானம்-உத்தமம் || 48

Yagya ijyo mahej yashcha

krathuh-sathram sathaangathih |

Sarva-dharshee vimuk-thaathma

sarvagyo gyaana muththamam ||

யஞமாகவே இருப்பவர் (யஞ) யஞயத்தால் எந்த தெய்வத்தை ஆராதித்தாலும், இவரே ஆராதிக்கப்படுபவராக இருக்கிறார் (இஜ்யோ) யஞயத்தால் இவரையே நேரிடையாக ஆராதனை செய்பவருக்கு மோக்ஷம் என்ற மஹா சௌபாக்கியத்தை கொடுக்கவல்லவர் (மஹேஜ்ய:), யூப ஸ்தம்பத்தோடு செய்யப்படும் யாகத்துக்கு க்ரது என்று பெயர். க்ரதுவாகவும் இருக்கிறார் (க்ரது:) இந்த தர்மம் செய்தால் இந்த பலன் என்று காட்டி, அனைவரையும் தர்மத்தில் இருக்க தூண்டுகோலாக இருப்பவர். அதற்காக செய்யப்படும் ஸத்ரம் என்ற யாகமாகவும் இருப்பவர் (ஸத்ரம்‌), சாதுக்களுக்கு லட்சியமாக இருப்பவர். (ஸதாம்கதி:), அனைத்தும் அறிந்தவர் (ஸர்வ-தர்ஸீ), எப்பொழுதும் சம்சார பந்தத்தில் சிக்காதவர் (விமுக்தாத்மா), எங்கும் இருப்பவர் (ஸர்வஞ:), ஒரு விஷயத்தை பற்றி அறிந்து இருப்பது ஞானம் (அறிவு). ஒரு புத்தகத்தை படிப்பதனால் ஒரு ஞானம் ஏற்படுகிறது. ஒரு கருவியை பற்றி தெரிந்து கொள்வதால் ஒரு ஞானம் ஏற்படுகிறது. ஞானம் பல. ஒரு விஷயத்தை பற்றிய அறிவு (ஞானம்), யாருக்கு ஏற்படுகிறது? நமக்கு ஏற்படுகிறது. ஆத்மா உள்ளே இருப்பதால், இந்த ஞானம் நமக்கு ஏற்படுகிறது. விஷய ஞானம் ஏற்பட செய்வது யார்? ஸ்வயமே ஞான ஸ்வரூபமான ஆத்மா.. அந்த ஆத்மாவாக நமக்குள் இருந்து கொண்டு, விஷய ஞானத்தை அறிய செய்யும், ஸ்வயமே ஞான ரூபமாக இருப்பவர், ஞானத்தில் உத்தமமானவர்  (ஞானம்-உத்தமம்)


सुव्रतः सुमुखः सूक्ष्मः सुघोषः सुखदः सुहृत् ।

मनोहरो जितक्रोधो वीरबाहुर्विदारणः ॥ ४९॥

ஸுவ்ரத: ஸுமுக: ஸூக்ஷ்ம:

ஸுகோஷ: ஸுகத: ஸுஹ்ருத் |

மனோஹர: ஜித-க்ரோத:

வீரபாஹு:‌ விதாரண: || 49

Suvratha-sumukha-sookshmah

sughosha-sukhadha-suhruth |

 Mano-haro jitha-krodho

veerabaahur-vidhaaranah ||

நமக்கு விரதம் உண்டு. பகவானுக்கு விரதம் உண்டோ? பகவானுக்கும் ஒரு விரதம் உண்டு. ராம அவதாரத்தில் தன்னுடைய விரதம் என்ன என்று சொல்கிறார்.. 'என்னை ஆஸ்ரயித்தவர்களை கை விடவே மாட்டேன் இது என் விரதம்' என்று இருப்பவர் (ஸுவ்ரத:) 'நாளை காலை உனக்கு பட்டாபிஷேகம்' என்று சொல்லி விட்டு, விடிகாலையில் "பட்டாபிஷேகம் கிடையாது, ஒரு சொத்தும் கிடையாது, 14 வருடங்கள் வனம் போ" என்று சொல்லியும், ராமபிரானின் முக மலர்ச்சி குறையவே இல்லை. பெரிய துக்கம் வந்தாலும், ஏமாற்றம் வந்தாலும் முகமலர்ச்சியுடன் இருப்பவர் (ஸுமுக:), யாருக்கும் புலப்படாதவர் (ஸூக்ஷ்ம:), அருமையான குரல் கொண்டவர் (7:) அண்டியவர்களுக்கு சுகத்தை கொடுப்பவர் (ஸுகத:), தன்னை அண்டுபவர்களுக்கு நண்பனாக இருப்பவர் (ஸுஹ்ருத்), மனதை கவருபவர் (மனோஹர:), கோபத்தை ஜெயித்தவர் (ஜித-க்ரோத:), மகா சக்தி கொண்ட தேவர்களுக்கும் சில சமயம் அபாயம் வருவதுண்டு. அப்போது, தேவர்கள், இவரின் புஜத்தில் தஞ்சம் அடைந்து விடுகிறார்கள். தன் புஜ பலத்தால் தேவர்களையும் காக்க வல்லவர்  (வீரபாஹு:‌) தர்ம துரோகிகளை கிழித்து எரிந்து விடுபவர் (விதாரண:)


स्वापनः स्ववशो व्यापी नैकात्मा नैक कर्मकृत् ।

वत्सरो वत्सलो वत्सी रत्नगर्भो धनेश्वरः ॥ ५०॥

ஸ்வாபன: ஸ்வ-வஸ: வ்யாபீ

நைகாத்மா நைக-கர்மக்ருத்‌ |

வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ

ரத்ன-கர்போ தனேஸ்வர: || 50

Swaapanah svavasho vyaapee

naikaa-thma naika-karmakruth |

Vathsaro vathsalo vathsee

rathna garbho dhaneshvarah ||

மஹாவிஷ்ணு கிருஷ்ண அவதாரம் செய்த உடனேயே, கம்சனால் 24 மணிநேரமும் கண்காணிக்க அமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான காவலாளிகள் வசுதேவர் கோகுலம் சென்று திரும்பும் வரை தூங்கி கொண்டு இருந்தனர். காவல்காரன் தூங்குவானோ? அதுவும் கம்சன் வைத்த காவலாளிகளுக்கு தூக்கம் வருமோ? ஒருவன் கூட எழுந்தரிக்கவில்லை. அனைவரையும் தூங்க செய்து விட்டார். அதே போல, ராம அவதாரத்தில் வன வாசம் செல்ல ராமபிரான் புறப்பட்ட போது, அயோத்தி மக்கள் அனைவரும் தமஸா நதிக்கரை வரை வந்து விட்டனர். ராமபிரான் காட்டுக்கு சென்று விடுவாரோ என்று துக்கம் அனைவரது மனதிலும் இருந்தது. இந்த நிலையில் அனைவருக்கும் தூக்கம் வருவது சாத்தியமா? ராமபிரான் ஜனங்கள் அயோத்தி செல்லட்டும், நாம் வனம் சென்று விடுவோம் என்று சங்கல்பிக்க, வந்திருந்த அனைத்து மக்களும் தூங்கி கொண்டிருக்க, ராமபிரான் அமைதியாக வனத்திற்குள் சென்று விட்டார். சாஸ்திரமும் நம்மை தன்னிடத்தில் வைத்து தூங்க செய்கிறார் என்று சொல்கிறது. எல்லோரையும் தன்னிடத்தில் வைத்து கொண்டு தூங்க செய்பவர் (ஸ்வாபன:), உலகம் அனைத்தையும் தன் வசத்தில் வைத்து இருப்பவர் (ஸ்வ-வஸ:), எங்கும் நிறைந்த இருப்பவர் (வ்யாபீ), அவரே பல ஆத்மாக்கள் போல காணப்படுகிறார் (நைகாத்மா), அவரே அனைத்து காரியங்களையும் செய்வதில் வல்லவர். தச்சனுக்கு தச்சு வேலை தான் தெரியும், ஓவியனுக்கு சித்திரம் வரைய தான் தெரியும். இவரோ துவாரகை கடல் நடுவே உருவாக்க வேண்டும் என்றாலும் ஒரே நாளில் உருவாக்கி விடுவார். குதிரை ஒட்டி அர்ஜுனனுக்கு சாரத்தியாகவும் இருக்க தெரியும். அலங்காரம் செய்வதில் வல்லவர். 64 கலைகளும் அறிந்தவர். வேதத்தின் சாரத்தை 18 அத்தியாயமாக சொல்ல வல்லவர், எதிரிகளை ஒழிக்க பராக்ரமம் கொண்டவர், கோவர்த்தன மலையை தூக்கும் பலம் கொண்டவர் என்று பல காரியங்களை செய்தாலும், அனைத்தையும் கச்சிதமாக செய்ய கூடியவர். பல காரியங்களை தானே செய்ய வல்லவர். அதே போல, பலரையும் பல காரியங்களில் உள்ளிருந்து கொண்டு செய்ய வைப்பவர்.(நைக-கர்மக்ருத்‌), எங்கு ங்கு இருக்கிறார், அந்த ஊரில் இருக்கிறார் என்று இருப்பவர் (வத்ஸரோ), பக்தர்களுக்கு பிரியமானவர் (வத்ஸலோ), கன்று குட்டியை மேய்ப்பதில் ஆர்வம் கொண்டு இருப்பவர் (வத்ஸீ), கௌஸ்துபன் என்ற மாலையை கழுத்தில் போட்டு கொண்டு இருப்பவர் (ரத்ன-கர்போ), திருக்கோளூர் வைத்த மா நிதி பெருமாளாக அள்ளி அள்ளி கொடுத்தாலும் குறையாத நிதி வைத்து இருப்பவர். குபேரனுக்கு கடன் கொடுக்கவல்லவர் (தனேஸ்வர)


धर्मगुब् धर्मकृद् धर्मी सदसत्क्षर मक्षरम् ।

अविज्ञाता सहस्रांशुर् विधाता कृत लक्षणः ॥ ५१॥

தர்மகுப்‌ தர்மக்ருத்‌ தர்மீ

த் ஸத் க்ஷரம் க்ஷரம்‌ |

அவிஞாதா ஸஹஸ்ராம்ஸு:

விதாதா க்ருதலஷண: || 51

Dharmagub dharmakrut dharmee

sadasat kshara maksharam |

Avigyaathaa sahas raamshur 

vidhaathaa kruta-lakshanah ||

தர்மத்தை ரக்ஷிப்பவர் (தர்மகுப்‌), தர்மத்தில் எப்படி இருப்பது என்று தானே ராமபிரானாக அவதரித்து காட்டினார். தர்மத்தை தானே செய்து காட்டுபவர் (தர்மக்ருத்‌), பறவைக்கு பறப்பது அதன் தர்மம், பறப்பது என்ற தர்மத்துக்கு ஆதாரமாக பறவை இருப்பதால், பறக்கும் தர்மத்துக்கு, தர்மியாக பறவை இருக்கிறது. சந்தனத்திற்கு தர்மமாக இருப்பது சுகந்தம். சந்தனம் சுகந்ததுக்கு தர்மியாக உள்ளது. ஆனால் இவரோ, சகல தர்மத்துக்கும், தானே ஆதாரமாக உள்ளார் (தர்மீ), மூல காரணமான ஸத்தாக இருக்கிறார்(ஸத்), சூக்ஷம ரூபமான பிரபஞ்சமாகவும் இருக்கிறார் (அஸத்), பிரபஞ்சமாகவும் இவர் இருப்பதால், அதற்கு அழிவு இருப்பதால், அழிவாகவும் இருக்கிறார் (க்ஷரம்), ஸத்தாக இருப்பதாலேயே அழியாமல் இருக்கிறார் (அக்ஷரம்‌), குழந்தை ஏதோ ஒரு காரணத்திற்காக துக்கப்பட்டு அழுகிறது. பெற்றவனுக்கு அழுவது புரிகிறது. சமாதானம் செய்கிறான். தேவையான சிகிச்சை செய்கிறான். ஆனால் குழந்தையின் துக்க அனுபவத்தை அறிய முடியாது. அதுபோல,  சம்சாரத்தில் அவதரித்தாலும், சம்சார துக்கம் அனுபவத்தில் இல்லாதவர், சம்சார துக்கம் தெரியாதவர். (அவிஞாதா), கோடி சூரிய ப்ரகாசனாக இருப்பவர் (ஸஹஸ்ராம்ஸு:), சர்வ காரியங்களையும் செய்யக்கூடியவர் (விதாதா), சர்வ சாஸ்திர இலக்கணமும் தருபவர் (க்ருத-லஷண)


गभस्ति नेमिः सत्त्वस्थः सिंहो भूत महेश्वरः ।

आदिदेवो महादेवो देवेशो देवभृद् गुरुः ॥ ५२॥

கபஸ்தி-நேமி: ஸத்வஸ்த:

ஸிம்ஹ: பூத-மஹேஸ்வர: |

ஆதிதேவோ மஹாதேவோ

தேவேஸோ தேவப்ருத்-குரு: || 52

Gabhasthi-nemi sathvasthah

simho bhootha-maheshvarah |

Aadidhevo mahaadhevo

dheyvesho deva-bhrudh guruh ||

சூரிய சக்கரத்தை வைத்து இருப்பவர் (கபஸ்தி-நேமி:), கோபமே இல்லாமல் சாத்வீகனாகவே இருப்பவர் (ஸத்வஸ்த:), கம்பீரமானவர், நரசிம்மமாக இருப்பவர் (ஸிம்ஹ:), ஸ்வயம் இவரே பெரிய ஈஸ்வரனாக இருப்பவர் (பூத-மஹேஸ்வர:), முதன் முதலில் இருந்த தேவன் (ஆதிதேவோ), இவருக்கு பிறகு தான் பிரம்மா, ப்ரம்மாவிடமிருந்து ருத்ரன், ரிஷிகள், முப்பது முக்கோடி தேவர்கள் படைக்கப்பட்டார்கள். அனைத்து தேவர்களுக்கும் தேவனாக இருப்பவர். இவரே பெரிய தேவன் என்று இருப்பவர் (மஹாதேவோ), எல்லா தேவர்களுக்கும் ஈஸ்வரனாக இருப்பவர் (தேவேஸோ), தேவர்களுக்கு குருவாக இருந்து வாழ வைப்பவர் (தேவப்ருத்-குரு:)


उत्तरो गोपतिर् गोप्ता ज्ञानगम्यः पुरातनः ।

शरीर भूतभृद् भोक्ता कपीन्द्रो भूरि दक्षिणः ॥ ५३॥

உத்தரோ கோபதி:‌ கோப்தா

ஞானகம்ய: புராதன: |

ஸரீர-பூதப்ருத்‌ போக்தா

கபீந்த்ரோ பூரி-தஷிண: || 53

Uththaro gopathir-gopthaa

gyaana-gamyah puraa-thanah |

Sareera-bhootha-bhrudh-bhokthaa

kapeendhro phoori-dakshinah ||

எல்லாவற்றுக்கும் மேற்பட்டவர். பரவஸ்து (உத்தரோ), மன்னார்குடி ராஜகோபாலனாக இருப்பவர். பசுவுக்கு தலைவன் (கோபதி:‌), எல்லோரையும் ரக்ஷிப்பவர் (கோப்தா), பகவத் தத்துவ ஞானத்தால் மட்டுமே அறியப்பட கூடியவர் (ஞானகம்ய:), யாராலும் படைக்கப்படாதவராக ஆதியிலிருந்தே இருப்பவர் (புராதன:), நாம் நம் உடலை ஜாக்கிரதையாக பார்த்து கொள்வது போல, இந்த உலகத்தை தன் சரீரமாக பார்த்து கொள்பவர் (ஸரீர-பூதப்ருத்‌), அனுபவிக்காமல், சாட்சி மாத்திரமாக இருந்து உலகத்தை அனுபவிப்பவர் (போக்தா), மன சஞ்சலமுடைய, யாருக்கும் கட்டுப்படாத வானரர்களும் மனம் அடங்கி ஏற்கும் தலைவர் (கபீந்த்ரோ), நந்தகோபன் நிறைய செல்வம் சேர்த்து வைத்து இருக்கிறார் என்றதும், உடனே அவரை யாகம் செய்ய சொல்லி, 'தானே செல்வமாக இருக்கும் போது, காப்பாற்ற இருக்கும் போது, இந்த செல்வம் எதற்கு?" என்று அள்ளி கொடுக்க சொல்லிவிட்டார் ஸ்ரீ கிருஷ்ணர். அள்ளி அள்ளி தானம் கொடுக்க சொல்லி விட்டார். ராம அவதாரத்தில் வன வாசம் செல்ல புறப்படும் முன், '14 வருடம் கழித்து வந்தால் நமக்கு எதாவது வைத்து கொள்வோம்' என்று நினைக்காமல் தன்னிடமுள்ள அனைத்தையும் அள்ளி அள்ளி தானமாக கொடுத்து விட்டு புறப்பட்டார் ராமபிரான். அள்ளி அள்ளி கொடுப்பவர் (பூரி-தஷிண:)


सोमपो ऽमृतपः सोमः पुरुजित् पुरुसत्तमः ।

विनयो जयः सत्यसन्धो दाशार्हः सात्वताम् पतिः ॥ ५४॥

ஸோமப: ம்ருதப: ஸோம:

புருஜித்‌ புருஸத்தம: |

விநயோ ஜய: ஸத்ய-ஸந்தோ

தாஸார்ஹ: ஸாத்வதாம்‌-பதி: || 54

Somapo mruthapa-somah

purujith-puru-saththamah |

Vinayo-jaya-sathya-sandho

dhaashaarhah saathvathaam pathih ||

சோம பானம் யாகத்தில் தேவதைகளுக்கு ஆஹுதியாக கொடுப்பதுண்டு. அந்த சோம பானமாகவும் இருக்கிறார்  (ஸோமப:), தேவர்கள் அருந்தும் அம்ருதமாகவும் இருக்கிறார். தானே அம்ருதம் என்பதால் தான், பிரளய கால சமயத்தில் ஒரு ஆலிலை கண்ணனை போல தன்னை ஆக்கி கொண்டு, தன் கால்கட்டை விரலை தானே வாயில் வைத்து சுவைத்து கொண்டிருந்தார். பார்ப்பவர்களுக்கு அம்ருதம் போல இருந்து, தன்னை ரசிக்க செய்பவர் (அம்ருதப:), சோமன் என்ற தெய்வமாகவும் இருக்கிறார் (ஸோம:), துரியோதனன் 11 அக்ஷௌனி சேனையோடு பாண்டவர்களை எதிர்த்தான் என்பதை பெரிதல்ல, 32 அக்ஷௌனி சேனையோடு ஜராசந்தன் தாக்க வந்தான். தனி ஒருவனாக இருந்து கொண்டே, அத்தனை சேனையையும் ஓழித்து, ஜராசந்தனை புறமுதுகிட்டு ஓட வைத்தார் ஸ்ரீ கிருஷ்ணர். தனி ஒருவனாக இருந்து கொண்டே, பலரை ஜெயித்து காட்டுபவர் (புருஜித்‌), புரு என்ற சப்தத்துக்கு விஸ்வரூபி என்றும், மிகவும் என்று அர்த்தமுண்டு. விஸ்வரூபத்தில் சாதுக்களும் உண்டு, துஷ்டர்களும் உண்டு. அதில் குறிப்பாக விஸ்வத்தில் உள்ள அனைத்து சாதுக்களாகவும் இவரே இருக்கிறார். நல்லவர்களை (ஸத்தம) பார்ப்பதே அரிது. இவரோ மிகவும் நல்லவராக இருக்கிறார் (புருஸத்தம:), சாம தான பேத தண்டம் என்று 4 நீதிகள் சொல்லப்படுகிறது. சாம நீதியாகவே இவர் இருக்கிறார் (விநயோ), அனைவரது வெற்றியாகவும் இருக்கிறார் (ஜய:), "ராக்ஷஸர்கள் ரிஷிகளை நர மாமிசமாக தின்று துப்பிய எலும்பு குவியலை காட்டி, ராமபிரான் தான் ரக்ஷிக்க வேண்டும் என்று ப்ரம்ம ரிஷிகள் பிரார்த்திக்க, 'ஜனஸ்தானத்தில் அலையும் ராக்ஷஸர்களை ஒழிப்பேன்' என்று வாக்கு கொடுத்தார். சீதா தேவி 'வந்த இடத்தில் இந்த வீண் சண்டை எதற்கு. ராக்ஷஸர்களை எதிர்த்து, உங்களுக்கு ஆபத்து வந்து விட்டால்?' என்று அஞ்சினாள். "என்ன நடந்தாலும், நடக்கட்டும். ரிஷிகளுக்கு கொடுத்த வாக்கை மீற மாட்டேன்" என்றார். சத்தியத்தை என்றுமே மீறாதவர் (ஸத்ய-ஸந்தோ), முதலில் பூஜிக்க அருகதை உள்ளவர், குகன் போன்ற வேடுவனால் (தாஸ) பூஜிக்கப்படுபவர் (அர்ஹ), தாசனின் அருகதை தெரிந்து இருப்பவர், தஸார்ஹன் என்பவனின் பரம்பரையில் கிருஷ்ணராக அவதரித்தவர் (தாஸார்ஹ:), ஸாத்வதம்‌ என்பது பாஞ்சராத்ர விதியில் காணப்படும் சாஸ்திரம். ஸாத்வதம்‌ என்ற சாஸ்திரத்துக்கு அதிபதி இவர். ஸாத்வதம்‌ என்றால் யாதவர்கள். யாதவர்களுக்கு அதிபதியாக இருப்பவர் (ஸாத்வதாம்‌-பதி:)


जीवो विनयिता साक्षी मुकुन्दो ऽमितविक्रमः ।

अम्भो निधिरनन् तात्मा महो दधि शयोऽन्तकः ॥ ५५॥

ஜீவோ விநயிதா-ஸாக்ஷீ

முகுந்த மித-விக்ரம: |

அம்போ-நிதி: னந்தாத்மா

மஹோ-ததி-ஸய: ந்தக: || 55

Jeevo vina-yithaa saakshee 

mukundho mitha vikramah |

Ambho-nidhi ranan thaathmaa 

maho-dhadhi-shayonthakah ||

அந்தர்யமியாக தானும் இருந்து கொண்டு, எல்லோரையும் ஜீவிக்கும்படியாக செய்பவர் (ஜீவோ), அந்தர்யமியாக இருந்து ஜீவிக்கமட்டும் செய்வதில்லை. நாம் செய்யும் அனைத்து காரியங்களையும் அமைதியாக பார்த்து கொண்டே இருப்பவர். விநயமாக இருந்தால் ஆபத்து காலத்தில் சாக்ஷியாக வருபவர் (விநயிதா-சாக்ஷி), மோக்ஷத்தை தரக்கூடியவர் (முகுந்த), அளவுகடந்த பராக்கிரமம் உடையவர் (அமித-விக்ரம:), இவரை பார்த்தால் கடல் போன்று இருப்பவர் (அம்போ-நிதி:),  சூரதாஸ் பாடினார் அதே கிருஷ்ணர் வந்து விட்டார். மீரா பாடினாள், அதே கிருஷ்ணர் வந்து விட்டார். இறந்த காலமே இல்லாமல், எக்காலத்திலும், எந்த தேசத்திலும் இருப்பவர். (அனந்தாத்மா), காரனோதகம் என்ற பிரளய ஜலத்தின் மத்தியில் பயமில்லாமல் படுத்துக்கொண்டு இருப்பவர் (மஹோ-ததி-ஸய:), பூதனை 10 நாள் கூட ஆகாத குட்டி கண்ணனை கொலை செய்யும் நோக்கத்துடன் தன் மடியில் வைத்து கொண்டு விட்டாள். இதை கேட்டதும் பரிக்ஷித் "ஐயோ குழந்தையாயிற்றே" என்று கவலைப்பட, சுக ப்ரம்மம் "அந்த குட்டி கண்ணன் அவளுக்கு அந்தகனாக இருந்தார்" என்றார். அழிப்பவனாக அவரே இருக்கிறார். பிரளயமாக இருப்பவர் (அந்தக:)


अजो महार्हः स्वाभाव्यो जितामित्रः प्रमोदनः ।

आनन्दो नन्दनो नन्दः सत्य धर्मा त्रिविक्रमः ॥ ५६॥

அஜோ மஹார்ஹ: ஸ்வாபாவ்யோ

ஜிதாமித்ர: ப்ரமோதன: |

ஆனந்தோ நந்தனோ நந்த:

ஸத்ய-தர்மா த்ரிவிக்ரம: || 56

Ajo mahaarhah svaabhaavyo

jithaa-mitrah pramo-dhanah |

Aanandho nandhano nandhah

sathya-dharmaa trivikramah ||

பிறப்பே இல்லாதவர் (அஜோ), கூடை கூடையாக பூக்கள் கிடைத்தால், பெரிய பூஜைகள் செய்ய இவரே தகுதியானவர் (மஹார்ஹ:), ஸ்வபாவத்திலேயே மிகவும் நல்லவர் (ஸ்வாபாவ்யோ), ராவண, கும்பகர்ண போன்ற சத்ருக்கள் எல்லோரையும் ஜெயிப்பவர் (ஜிதாமித்ர:), தான் காட்டில் இருந்தாலும் முதலில் தனக்கு வசதி செய்து கொள்வோம், பிறகு பிறருக்கு செய்யலாம் என்று நினைக்காமல், மற்றவர்களை ஆனந்தப்படுத்துபவர். தன்னிடம் வந்த சுக்ரீவனை வாழ வைத்தார். விபீஷணனை வாழ வைத்தார். ஆனந்தப்படுத்துபவர், குசேலன் கிருஷ்ணரை பார்க்க வந்து விட்டு வெறும் கையோடு தான் திரும்புகிறார். குறைபட்டு கொண்டு போனாரோ என்றால் இல்லையாம்.. "என்னை போய் மதித்து, துவாரகாதீசன் கிருஷ்ணன் பேசினாரே ! எனக்கு போய் கிருஷ்ண தரிசனமா?" என்று தரிசன ஆனந்தத்திலேயே திரும்புகிறார். அவரை தியானம் செய்தால் கூட ஆனந்தம் கொடுப்பவர்  (ப்ரமோதன:), பக்தர்கள் ஆனந்தம் அடைவதை கண்டு ஆனந்தப்படுபவர் (ஆனந்தோ), பூரணமான ஆனந்தமயமாகவே இருப்பவர் (நந்தனோ), பூரணமாகவே இருப்பவர் (நந்த:), சத்யமே தர்மமாக கொண்டவர் (ஸத்ய-தர்மா), உலகளந்த பெருமாளாக அவதரித்தவர் (த்ரிவிக்ரம:)


महर्षिः कपिला चार्यः कृतज्ञो मेदिनी पतिः ।

त्रिपदस् त्रिदशाध् यक्षो महाश‍ृङ्गः कृतान्त कृत् ॥ ५७॥

மஹா்ஷி:-கபிலாசார்ய:

க்ருதஞோ மேதினீ-பதி: |

த்ரிபத: த்ரிதஸாத்-யக்ஷோ

மஹா-ஸ்ருங்க: க்ருதாந்த-க்ருத் || 57

Maharshi-kapilaa-chaaryah 

kruthagyo medhinee pathih |

Tripadhas tridhashaadh-yaksho 

mahaa-shrunga kruthaantha kruth ||

தானே ஞானியான கபில வாசுதேவனாக அவதரித்து, தன் தாயாருக்கே பாகவத தர்மத்தை ஆச்சர்யனாக இருந்து உபதேசித்தவர் (மஹா்ஷி:-கபிலாசார்ய:), தப்பி தவறி பகவானுக்கு ஒரு சிறு காரியம் செய்தாலும், மறக்கவே மாட்டாராம். திரௌபதி 'கோவிந்தா' என்று என்னை கூப்பிட்டு விட்டாளே என்றதற்காக துவாரகையில் இருந்து கொண்டே காப்பாற்றி விட்டார்.அவள் செய்த சபதத்தை நிறைவேற்றி கொடுத்தார். நன்றி உடையவர் (க்ருதஞோ), பூமாதேவிக்கு பதியாக இருப்பவர் (மேதினீ-பதி:), மூன்றாடியால் உலகை அளப்பவர் (த்ரிபத:), தேவர்களை அவரவர்கள் காரியத்தை செய்யுமாறு ஆணை செய்பவர் (த்ரிதஸாத்-யக்ஷோ), மஹா சுடர்ஒளி உடையவர் (மஹா-ஸ்ருங்க:), மரணத்துக்கும் மரணமாக இருப்பவர் (க்ருதாந்த-க்ருத்)


महा वराहो गोविन्दः सुषेणः कनकाङ्गदी ।

गुह्यो गभीरो गहनो गुप्तश् चक्र गदाधरः ॥ ५८॥

மஹா-வராஹோ கோவிந்த:

ஸுஷேண: கனகாங்கதீ |

குஹ்ய: கபீரோ கஹனோ

குப்த: சக்ர-கதாதர: || 58

Mahaa-varaaho govindhah

sushenah kanakaang gadhee |

Guhyo gabheero gahano

gupthas chakra gadhaadharah ||

சம்சார சாகரத்தில் மூழ்கி கிடக்கும் ஜீவகோடிகளை மீட்டு, மோக்ஷம் அழைத்து கொண்டே போய் விடும், மஹா வராஹர், ஸ்ரீ முஷ்ணத்தில் மஹா வராஹராக இருப்பவர், மஹா வராஹ ரூபம் தரித்து உலகையே காரனோதகம் என்ற பிரளய ஜலத்தில் இருந்து மீட்டவர் (மஹா-வராஹோ), ஸ்ரீ முஷ்ணம் அருகில் தில்லை சிதம்பரம் என்ற சித்ரகூடத்தில் கோவிந்தராஜனாக இருப்பவர், கோ என்ற பூமாதேவியை கண்டுபிடித்து மீட்டவர், கோவர்த்தன மலையை தூக்கியவர் (கோவிந்த:), பிறந்ததிலிருந்து ஸ்ரீ கிருஷ்ணனை கொலை செய்ய பல ராக்ஷஸர்களை அனுப்பி, ஒருவன் கூட மதுரா திரும்பி வரவில்லை. கடைசியாக 11 வயது ஸ்ரீகிருஷ்ணனை மதுராவுக்கு அக்ரூரை அனுப்பி அழைத்து கொலை செய்ய திட்டமிட்டான். மதுராவுக்குள் நுழைந்து கம்ஸனுக்கு மாலை கட்டுபவன், ஆடை நெய்து கொடுப்பவன் எல்லோரையும் அடக்கி, பூ, மாலை, ராஜ ஆடைகள் எல்லாம் வாங்கி கொண்டு விட்டார் ஸ்ரீ கிருஷ்ணர் என்றதும், கம்சன் 'ஸ்ரீ கிருஷ்ணனோடு வந்த சேனை எப்படிப்பட்டது.. எந்த சேனை பலத்தில் வந்துள்ளான்?' என்று கேட்க, ஸ்ரீ கிருஷ்ணன் சேனை அத்தனை கொடியதாக இல்லை. அவனோடு வந்து இருக்கும் சேனை பிருந்தாவன சிறுவர்கள் தான். இப்படி ஒரு சுகமான சேனையை வைத்து கொண்டே தனி ஆளாக வந்து இருக்கிறான் என்றனர். சுலமான நல்ல சேனையை கொண்டவர் (ஸுஷேண:), தங்கத்தால் ஆன அழகான தோள் வலை அணிந்து இருப்பவர் (கனகாங்கதீ), குஹ்யமான (மறையான) வேதம் மூலமே அறியப்படுபவர், ஹ்ருதய குகையில் வசிப்பவர் (குஹ்ய:), சிறு மூர்த்தியாக இருந்தாலும் கோலாஹல உத்ஸவம் என்று வாகனத்தில் ஏறிவிட்டால், மகா கம்பீரமாக இருப்பவர், காட்சி கொடுப்பவர், (கபீரோ), பொதுவாக மற்றவரை தன் இஷ்டத்துக்கு ஆணை இட்டு சிரமப்படுத்தவே மாட்டார். இலங்கை செல்ல வேண்டும் என்கிற நிலையில் சமுத்திரம் வழி விட வேண்டும் என்று சமுத்திர ராஜனிடம் உபவாசம் இருந்தார். சமுத்திரம் சாமானிய மனிதனுக்கு விடுமோ? தன்னை சாமானியன் என்று நினைத்து அமைதி காக்கிறாரோ என்று கோபப்பட்ட ராமபிரான், சமுத்திர ராஜன் தன் முன் இப்பொழுதே வராவிட்டால், சமுத்திரத்தை வற்ற செய்கிறேன்' என்று ஆணையிட, மறுகணம் சமுத்திர ராஜன் மீற முடியாமல் தோன்றி விட்டு மன்னிப்பு கேட்டு விட்டார். ஆணை இட வேண்டும் என்று இவர் நினைத்து விட்டால், யாராலும் இவர் ஆணையை மீற முடியாது என்று இருப்பவர் (கஹனோ), திரை போட்டு கொண்டு யாரும் பார்க்காமல் சாப்பிடுவார்கள். யாருக்கும் தெரியாமல், மறைத்து இருப்பதற்கு ரகசியம் என்று அர்த்தம் கிடையாது. வெளிப்படையாக இருந்தாலும் புரியாத விஷயமாக இருப்பதற்கே ரகசியம் என்று பொருள். தேவர்கள், யக்ஷர்கள், கிண்ணரர்கள், ரிஷிகள் என்று அனைவரும் ஆகாசத்தில் இருந்து பார்க்க, ஆயிரம் கோபிகைகள் சூழ, 8 வயது குட்டி கிருஷ்ணனே ஆயிரம் கிருஷ்ணனாக ஆகி, ஒருவளை கட்டி கொண்டு, ஒருவளுக்கு முத்தம் கொடுத்து. ஒருவளோடு ஓடி விளையாடி, ஒருவளோடு நாட்டியம் ஆடி ராஸலீலை வெளிப்படையாக செய்கிறார்.. ராஸலீலையின் தத்துவத்தை புரிந்து கொள்ள முடியாதபடி இருப்பவர். மிகவும் ரகசியமானவர், புரிந்து கொள்ள முடியாதவர் (குப்த:), சுழன்று கொண்டே இருக்கும் ஸ்வபாவம் கொண்டது மனம், பல விஷயங்களில் செல்வது புத்தி. இந்த சுழலும் மனதையே சக்கரமாக ஒரு கையிலும், புத்தி தத்துவமான கதையை மற்றொரு கையிலும் வைத்து இருப்பவர். சக்கரமும் கதையும் வைத்து இருக்கும் இவரை தரிசிப்பவருக்கே மனம் அடங்கி விடும், புத்தி தெளிந்து விடும் என்று இருப்பவர் (சக்ர-கதாதர)





वेधाः स्वाङ्गो ऽजितः कृष्णो दृढः सङ्कर्षणो ऽच्युतः ।

वरुणो वारुणो वृक्षः पुष्कराक्षो महामनाः ॥ ५९॥

வேதா: ஸ்வாங்க  ஜித: க்ருஷ்ணோ

த்ருட: ஸங்கர்ஷணோச்யுத: |

வருணோ வாருணோ வ்ருக்ஷ:

புஷ்கராக்ஷோ மஹாமனா: || 59

Vedhaah-svaango jitah-krishno 

dhrida shankarshana-achyuthah |

Varuno vaaruno vrukshah 

pushka-raaksho mahaa-manaah ||

ப்ரம்மாவாகவே இவரே இருக்கிறார் (வேதா:), அழகான அங்கம் உடையவர் (ஸ்வாங்க), தோல்வியே அற்றவர் (அஜித:), கிருஷ்ண த்வைபாயனர் என்ற வ்யாஸராக அவதரித்தவர் (க்ருஷ்ணோ), நழுவாதவர், திடமானவர் (த்ருட:), தன்னிடத்தில் இழுப்பவர், திடமானவர் என்பதாலேயே நழுவ விடாதவர் (ஸங்கர்ஷண-அச்யுத:), இமம் மே வருண ஸ்ருதீ ஹவம் என்ற வாக்கியபடி, தன்னுடைய பிரகாசத்தை முழுவதும் வெளிப்படுத்தாமல், ஒடுக்கி (வரணம்) கொண்டு, வேண்டிய அளவுக்கு மட்டும் பிரகாசம் தருபவர் (வருணோ), தம்மை ஸ்வாமியாக வரிக்கும் பக்தர்களிடத்தில் இருப்பவர், வருணனின் புத்ரனாகவும் இருப்பவர் (வாருணோ), ஆயிரக்கணக்கான பக்ஷிகள் நான்கு திசைகளில் எங்கு பறந்தாலும், கடைசியாக மரத்திற்கு வந்தே தீரவேண்டும். அது போல, சம்சார வாழ்க்கையில் ஜீவன் எங்கு அலைந்தாலும், கடைசியில் நாராயணன் திருவடிக்கே வந்து தீர வேண்டும். ஜீவ கோடிக்கு ஆனந்தம் தரும் கற்பக வ்ருக்ஷமாக இருக்கிறார் (வ்ருக்ஷ:), தாமரை போல கண் உடையவர், ஹ்ருதயத்தில் வாசம் செய்பவர் (புஷ்கராக்ஷோ), பெரிய மனம் உடையவர். தன் மனதால் நினைத்ததை நடத்தி கொள்பவர் (மஹாமனா:)

भगवान् भग हाऽऽनन्दी वनमाली हलायुधः ।

आदित्यो ज्योति रादित्यः सहिष्णुर् गति सत्तमः ॥ ६०

பகவான்‌ பகஹா ந்தீ

வநமாலீ ஹலாயுத: |

ஆதித்யோ ஜ்யோதி:-தித்ய:

ஸஹிஷ்ணு: கதி-ஸத்தம: || 60

Bhagavaan bhaga haanandhee

vanamalee halaayudhah |

Adhithyo jyothi-raadhithyah

sahishnur-gathi-saththamah ||

அளவற்ற பூர்ணமான ஐஸ்வர்யத்துடன், அளவற்ற பூர்ணமான தர்மத்தில் இருந்து கொண்டும், அளவற்ற முழுமையான புகழுடன், அளவற்ற முழுமையான வைராக்கியத்துடன்,  பூர்ணமான மோக்ஷத்தை தன்னிடம் வைத்து உள்ளவர் ஸ்ரீ கிருஷ்ணனே (பகவான்‌), உலக ஐஸ்வர்யங்களை சம்பாதித்து தன்னையே "பகவான்" என்று சொல்லி கர்வப்படுபவர்களின் ஐஸ்வர்யங்களை பிடுங்குபவர் (பகஹா), ஆனந்த ஸ்வரூபியாகவே இருப்பவர் (ஆனந்தீ), பஞ்ச வர்ண நிற புஷ்பங்களாலான வைஜயந்தீ என்னும் வனமாலையை எக்காலமும் அணிந்து இருப்பவர் (வநமாலீ), கலப்பையை ஏந்தி பலராமராக இருப்பவர் (ஹலாயுத:), அதிதிக்கும் கச்யபருக்கும் மகனாக ஸ்ரீ வாமனனாகப் பிறந்தவர் (ஆதித்யோ), சூர்ய மண்டலத்தின் மத்தியில் சூர்ய நாராயணனாக பிரகாசிப்பவர் (ஜ்யோதி:-ஆதித்ய:), ப்ருகு முனிவர் தன் காலால் எட்டி உதைத்தும் தண்டிக்காமல் பொறுத்து கொண்டார். அபராதத்தைப் பொறுத்துக் கொள்பவர் (ஸஹிஷ்ணு:), அனைவருக்கும் உயர்ந்த கதியாயும் இருப்பவர் (கதி-ஸத்தம:)

सुधन्वा खण्ड परशुर् दारुणो द्रविण प्रदः ।

दिवस्पृक् सर्वदृग् व्यासो वाचस्पति रयोनिजः ॥ ६१॥

ஸுதன்வா கண்ட-பரசு:

தாருணோ த்ரவிண-ப்ரத: |

திவஸ்ப்ருக்‌ ஸர்வத்ருக்-வ்யாஸோ

வாசஸ்பதி:-அயோ-நிஜ: || 61

Sudhanvaa khanda-parashurh

dhaaruno dhravinah pradhah |

Divaspruk sarva dhrug vyaaso

vaachas-pathi ayo nijah ||

சாரங்கம் என்ற அழகான வில்லை கையில் தரித்து இருக்கிறார் (ஸுதன்வா), பரசுராமராக இவர் கோடாரியை எடுத்தால் 21 தலைமுறைக்கு இவரை எதிர்க்க தென்படவில்லை, அகண்ட பரசுவாக இருப்பவர். ராமராக தானே வந்து பரசுவை அடக்கியவர் (அகண்ட-பரசு: / கண்ட பரசு:), அதர்மம் செய்பவர்களிடம் கடுமையாக இருப்பவர் (தாருணோ), எத்தனை முறை கொடுத்தாலும் சிரித்து கொண்டே கொடுப்பவர் (த்ரவிண-ப்ரத:), சத்ய லோகம் வரை பரந்து விரிந்து இருப்பவர் (திவஸ்ப்ருக்‌), இது தெரியாது என்றபடி இல்லாமல், ப்ரம்ம தேவன் செய்த உலக ஸ்ருஷ்டியையும், நான்கு கைகள் கொண்ட விஷ்ணுவின் அவதாரங்கள் அனைத்தையும் இவர் ஒருவரே வ்யாஸராக இருந்து எழுதி விட்டார். அனைத்தும் தெரிந்த வ்யாஸராக இருக்கிறார். (ஸர்வத்ருக்-வ்யாஸோ), வேதம் கற்று தான் வேதம் ஓத முடியும் என்று இல்லாதபடி, வேதத்துக்கு பதியாக, பிறப்பற்றவராக இருக்கும் இவர், பேசினாலேயே வேதம் இவர் வாக்கில் வெளிப்படும்படியாக இருக்கிறார் (வாசஸ்பதி: அயோ-நிஜ)


त्रिसामा सामगः साम निर्वाणं भेषजं भिषक् ।

संन्यास कृच्छमः शान्तो निष्ठा शान्तिः परायणम् ॥ ६२॥

த்ரிஸாமா ஸாமக: ஸாம

நிர்வாணம்‌ பேஷஜம்‌ பிஷக் |

ஸந்யாஸ-க்ருத்: ச: ஸாந்தோ

நிஷ்டா ஸாந்தி: பராயணம்‌ || 62

Trisaamaa saamaga-saamah

nirvaanam bheshajam bhishak |

Sanyaasa kruchcchama shaantho

nishtaa-shaanthih paraayanam ||

தேவவ்ரதம் என்ற சாமம் மூன்று விதமாக உள்ளது. அந்த மூன்று சாம வேதத்தாலும் கானம் செய்யப்படுபவர் (த்ரிஸாமா), தானே சாம வேதத்தை கானமும் செய்பவர் (ஸாமக:), சமாதானத்தையே பெரிதும் விரும்புபவர் (ஸாம), பேரின்பம் என்ற மோக்ஷமாகவே இருப்பவர் (நிர்வாணம்‌), சர்வ வியாதியும் தீரும் படி தானே மருந்தாக இருப்பவர் (பேஷஜம்‌), வைத்தியனாகவும் இருப்பவர் (பிஷக்), ஸந்யாஸம் என்ற வழியை காட்டி மோக்ஷத்திற்கு வழி சொன்னார். ஸந்யாஸத்தை செய்பவர் (பிற்காலத்தில் தானே கிருஷ்ண சைதன்யராக அவதாரம் செய்து ஸந்யாஸத்தை எடுத்து கொண்டு மோக்ஷ பாதையை காட்டியவர் (ஸந்யாஸ-க்ருத்:), யாரிடமும் எரிச்சல் அடையாமல், கோபமே இல்லாமல் சம நிலையில் இருப்பவர் (சம:), சம நிலையில் இருப்பதாலேயே, எப்பொழுதும் சாந்தமாகவே இருக்கிறார் (ஸாந்தோ), பிரளயத்தில் கூட அழியாதவர் (நிஷ்டா), இவரே சாந்தி ஸ்வரூபமாக இருக்கிறார் (ஸாந்தி:), உயர்ந்த புகலிடமாக இருப்பவர் (பராயணம்‌) 


शुभाङ्गः शान्तिदः स्रष्टा कुमुदः कुवलेशयः ।

गोहितो गोपतिर् गोप्ता वृषभाक्षो वृषप्रियः ॥ ६३॥

ஸுபாங்க: ஸாந்தித: ஸ்ரஷ்டா

குமுத: குவலேஸய: |

கோஹிதோ கோபதிர்‌ கோப்தா

வ்ருஷபாக்ஷோ வ்ருஷப்ரிய: || 63

Shubhaanga-shaanthitha-srashtaa

kumudhah kuvalesayah |

gohitho gopathir-gopthaa

vrusha-bhaaksho vrusha-priyah ||

சுந்தரமான அங்கம் உடையவர் (ஸுபாங்க:), நமக்கு சாந்தியை கொடுப்பவர் (ஸாந்தித:), ஜகத் ஸ்ருஷ்டி செய்பவர் (ஸ்ரஷ்டா), கு என்றால் பூமி தேவி. பூமி தேவிக்கு சந்தோஷம் கொடுப்பவர் (குமுத:), பூமி தேவிக்கு வளையம் போல இருப்பது சாகரம். அந்த சாகரத்தில் படுத்து இருப்பவர் (குவலேஸய:), பசு மாட்டின் தலையில் நான்கு மழை துளி கூட விழுந்து கஷ்டப்பட கூடாது என்று நினைப்பவர். பசுவுக்காக கோவர்த்தன மலையையே தூக்கி காப்பவர். பசுக்களுக்கு இதமாக இருப்பவர் (கோஹிதோ), கோ என்றால் பூமி என்றும் அர்த்தம். பூமி தேவிக்கு பதியாக இருப்பவர் (கோபதி:), பூமியை ரக்ஷிப்பவர் (கோப்தா), வ்ருஷபம் என்றால் தர்மம். வ்ருஷபம் என்றால் காளை என்றும் அர்த்தம். தர்மத்தை கவனிப்பவர். காளையின் கண் அழகாக இருக்கும். அது போல இவரது கண்களும் காளை கண் போல அழகாக இருக்கும்.(வ்ருஷபாக்ஷோ), வ்ருஷபம் என்றால் தர்மம். தர்மத்தில் ப்ரியம் உள்ளவர் (வ்ருஷப்ரிய:) 


अनिवर्ती निवृत्तात्मा सङ्क्षेप्ता क्षेम कृच्छिवः ।

श्रीवत्स वक्षाः श्रीवासः श्रीपतिः श्रीमतां वरः ॥ ६४॥

அநிவர்தீ நிவ்ருத்தாத்மா

ஸம்-க்ஷேப்தா க்ஷேம-க்ருத் சிவ: |

ஸ்ரீவத்ஸ-வஷா: ஸ்ரீவாஸ:

ஸ்ரீபதி: ஸ்ரீமதாம்-வர: || 64

Anivarthee nivru-ththaathmaa

sam kshepthaa kshema-kruth shivah |

Shree-vathsa-vakshaah shree-vaasah

shree-pathih shree-mathaam varah ||

காரியத்தை முடிக்காமல் திரும்பவே திரும்பாதவர் (அநிவர்தீ), அனைவரிடத்திலும் பிரியமாக இருப்பார், அதே சமயம் யாரிடத்திலும் பாசத்தில் அகப்படாமல் இருப்பவர். அனைத்து காரியமும் செய்பவர், ஆனால் ஒரு காரியத்திலும் அகப்படாமல், தான் செய்யாதது போல விலகி இருப்பவர் (நிவ்ருதாத்மா), பிரளய காலத்தில், சர்வ உலகங்களையும் ஸம்-க்ஷேப்தமாக தன் திருவயிற்றில் வைத்து காப்பாற்றி, மீண்டும் அப்படியே உலகங்களை ஸ்ருஷ்டி செய்பவர் (ஸம்-க்ஷேப்தா), கிடைக்கவே கிடைக்காதது கிடைத்து விட்டால், அதற்கு 'யோகம்' என்று பெயர். அது நம்மிடத்திலேயே நிரந்தரமாக தங்கி விட்டால், அதற்கு 'க்ஷேமம்' என்று பெயர். வேறு உலக சிந்தனை இல்லாமல், என்னையே மனதில் தியானிக்கும் பக்தனுக்கு, யாருக்கும் கிடைக்கவே கிடைக்காத தன் திருவடியை கொடுகிறேன். அதுவே யோகம். மேலும் என் திருவடியை விட்டு பிரியாதபடி, நிரந்தரமாக கிடைக்க செய்து க்ஷேமமும் கொடுக்கிறேன், என்று கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார்.  

கீதையில், 'யோக க்ஷேமம் வஹாமி அஹம்'  என்று சொல்லுமிடத்தில் இந்த அர்த்தத்தில் சொல்கிறார். தன்னை விட்டு பிரிய விடாமல் வைத்து கொண்டு, க்ஷேமத்தையே கொடுப்பவர் (க்ஷேம-க்ருத்), நாமத்தை சொன்ன மாத்திரத்தில் சகல பாபங்களையும் போக்குபவர், மங்களமானவர், பிரசன்னமானவர் (சிவ:), ஸ்ரீவத்சம் தன் மார்பில் கொண்டவர் (ஸ்ரீவத்ஸ-வஷா:), மஹாலக்ஷ்மி நிரந்தரமாக இவரோடு மஹாலக்ஷ்மி எப்பொழுதும் வசிப்பதால், இவருக்கு ஸ்ரீவாசன் என்று பெயர் (ஸ்ரீவாஸ:), மஹாலக்ஷ்மி தன் கணவனாக ஏற்கும் படியாக இருப்பவர் (ஸ்ரீபதி:), அழியாத பெரும் வரங்களை தருபவர் (ஸ்ரீமதாம்-வர:)


श्रीदः श्रीशः श्रीनिवासः श्रीनिधिः श्रीविभावनः ।

श्रीधरः श्रीकरः श्रेयः श्रीमाँल्लोक त्रयाश्रयः ॥ ६५॥

ஸ்ரீத: ஸ்ரீஸ: ஸ்ரீநிவாஸ:

ஸ்ரீநிதி: ஸ்ரீவிபாவன: |

ஸ்ரீதர: ஸ்ரீகர: ஸ்ரேய:

ஸ்ரீமான் லோக-த்ரயா-ஸ்ரய: || 65

Shreedha-shreesah shree-nivaasah

shree-nidhi-shree-vibhaavanah |

Shree-dhara-shree-kara-shreyah

shreemaan loka-thraya-aashrayah ||

மஹாலக்ஷ்மியின் (ஸ்ரீ) கடாக்ஷம் நமக்கு முதலில் கிடைக்க செய்து விட்டு, பிறகு தன்னையே கொடுப்பவர் (ஸ்ரீத:), மஹாலக்ஷ்மிக்கு ஈஸ்வரனாக இருப்பவர் (ஸ்ரீஸ:), மஹாலஷ்மி இவருடன் வாசம் செய்வதால், இவருக்கு ஸ்ரீனிவாசன் என்று பெயர் (ஸ்ரீநிவாஸ:), ஸ்ரீ என்ற அழியாத நிதியை கொண்டிருப்பவர் (ஸ்ரீநிதி:), பல விதமான மங்களத்தை தருபவர் (ஸ்ரீவிபாவன:), ஸ்ரீயை தன் மார்பில் தரிப்பவர் (ஸ்ரீதர:), சூர்ப்பனகை சீதையை விலக்கி ராமபிரானை அடைய முயற்சித்தாள். ராவணன் ராமபிரானை விலக்கி, சீதாதேவியை அடைய முயற்சித்தான். இருவருக்கும் தோல்வி. ஹனுமான் ராமபிரானோடு சீதாதேவியை சேர்த்து பார்க்க ஆசைப்பட்டார். உலகமே ஹனுமானை கொண்டாடுகிறது. நமக்கு அப்பா, அம்மாவாக இருக்கும் திவ்ய தம்பதிகளான இவரையும், லக்ஷ்மியையும் சேர்த்து தியானிப்பவர்களுக்கு சர்வ மங்களத்தையும் தருபவர்.  (ஸ்ரீகர:), பிரியப்பட்டவை எல்லாம் கிடைப்பதை, ப்ரேயஸ் என்றும், தனக்கு எது நல்லதோ அது மட்டும் கிடைப்பதை, ஸ்ரேயஸ் என்றும் சொல்வார்கள். அப்படிப்பட்ட ஸ்ரேயஸ் மட்டுமே கொடுப்பவர் (ஸ்ரேய:), எந்த அவதாரம் செய்தாலும், கூடவே லக்ஷ்மிதேவியும் வந்து விடுவாள். லக்ஷ்மியுடன் நித்ய சம்பந்தம் உடையவர் (ஸ்ரீமான்), மூன்று உலகங்களுக்கும் ஆஸ்ரயமாக (அடைக்கலமாக) இருப்பவர் (லோக-த்ரயா-ஸ்ரய:)


स्वक्षः स्वङ्गः शतानन्दो नन्दिर्ज्योतिर्गणेश्वरः ।

विजितात्मा ऽविधेयात्मा सत्कीर्तिश् छिन्न संशयः ॥ ६६॥

ஸ்வக்ஷ: ஸ்வங்க: ஸதானந்தோ

நந்திர் ‌ஜ்யோதிர்-கன-ஈஸ்வர: |

விஜிதாத்மா விதேயாத்மா

ஸத்கீர்தி:‌ சின்ன-ஸம்ஸய : || 66

Svaksha svangah saadhaanandho

nandhir jyothir ganeshvarah |

Viji thaathmaa vidheyaathmaa

sath keerthis chhinna samshayah ||

அழகான கண்கள் உடையவர் (ஸ்வக்ஷ:), இவரை பார்த்து விட்டால், அருகில் வேறு ஒருவரோ வேறு ஒன்றோ இருப்பது கூட மறந்து போகும் படியாக, குறை காணமுடியாதபடி அழகான அங்கம் உடையவர் (ஸ்வங்க:), எல்லையில்லாத ஆனந்தத்தை அனுபவித்து கொண்டிருப்பவர் (ஸதானந்தோ), இவரை பார்த்தாலே பார்ப்பவருக்கு ஆனந்தம் தொற்றிக்கொண்டு விடும். ஆனந்த ரூபமாகவும் இருப்பவர் (நந்தி:), கீதை உபதேசிக்கும் போது "அர்ஜுனா ! ஆகாசத்தில் ஆதித்யன் தகதகவென்று ஜொலிக்கிறாரே ! பார்த்தாயா? அவரிடமிருந்து வெளிப்படும் அந்த ஜோதி என்னிடமிருந்து தான் வருகிறது" என்றார் ஸ்ரீ கிருஷ்ணர். காயத்ரி மந்திரமும் "எந்த ஜோதி என் உள்ளிருந்து கொண்டு என் புத்தியை தூண்டுகிறதோ, அந்த ஜோதிக்கு என் நமஸ்காரம்" என்று பரவாசுதேவனை வணங்குகிறது. 'சூரிய ஜோதிக்கும், சந்திர ஜோதிக்கும், அக்னி ஜோதிக்கும், ஆத்ம ஜோதிக்கும் ஈஸ்வரன் நானே' என்றார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். ஜோதிர் கனங்கள் அனைத்துக்கும் ஈஸ்வரனாக இருப்பவர் (ஜ்யோதிர்கன ஈஸ்வர:), மனதை அதன் போக்குக்கு விடாமல், தன் சங்கல்பத்துக்கு ஏற்றவாறு மனதை செலுத்துபவர். மனதை ஜெயித்தவர் (விஜிதாத்மா), ப்ரம்மாவே வந்தாலும், சிவபெருமானே வந்தாலும், யாராலும் கட்டுப்படுத்த முடியாதவர் (அவிதேயாத்மா), புகழ்ச்சிக்காக ஒருவரை பார்த்து 'கற்பகவ்ருக்ஷமே" என்று சொல்லி விடலாம். அதில் உண்மை இருக்க அவசியமில்லை. ஆனால் இவரை பற்றிய புகழ்ச்சி அனைத்துமே உண்மையாகவே இருக்கும் படி இருப்பவர். குசேலன் சரித்திரத்தை கவனித்தால், பகவான் ஸ்ரீகிருஷ்ணரை 'கற்பகவ்ருக்ஷம்' என்று புகழ்வது உண்மை என்று புரியும். இவரை பற்றி செய்யப்படும் அனைத்து ஸ்துதியும் 'சத்தியமே' என்று தன் சரித்திரத்திலேயே காட்டுபவர் (ஸத்கீர்தி:‌), அர்ஜுனனுக்கு தர்ம விஷயமாக, ஞான விஷயமாக ஏகப்பட்ட சந்தேகங்கள் எழுந்தன. அர்ஜுனனுக்கு ஏற்பட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் தானே விளக்கம் கூறினார். எதிலும் சந்தேகமே இல்லாதவர். வைகுண்டம் புறப்படும் முன், உத்தவன் அடுக்கடுக்காக பல கேள்விகளை கேட்டார். அனைத்து கேள்விக்கும் துளியும் சந்தேகமில்லாமல், அதே வரிசையில் அனைத்து கேள்விக்கும் பதில் சொல்லிவிட்டார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். அனைத்தும் அறிந்தவர். எந்த விஷயத்திலும் துளி கூட சந்தேகமில்லாதவர்.  (சின்ன-ஸம்ஸய:)


उदीर्णः सर्वतश् चक्षु रनीशः शाश्वत स्थिरः ।

भूशयो भूषणो भूतिर् विशोकः शोक नाशनः ॥ ६७॥

உதீர்ண: ஸர்வத:-சக்ஷு:

அனீஸ: சாஸ்வத-ஸ்திர: |

பூஸயோ பூஷணோ பூதிர்‌

விஸோக: சோக-நாஸன: || 67

Udheerna-sarva-tas chakshuh 

raneesa shaashvathah sthirah |

Bhoosayo bhooshano bhoothir 

vishoka soka-naasanah ||

மிகவும் உயர்ந்தவர். இவருக்கு மேல் உயர்ந்ததோ, உயர்ந்தவரோ கிடையாது என்று இருப்பவர் (உதீர்ண), இவருக்கு தெரியாமல் யாரும் ஒரு காரியம் செய்து விட முடியாது. அனைத்தையும் பார்த்து கொண்டே இருப்பவர் (ஸர்வத: சக்ஷு:), இவருக்கு ஆணை இட, யாரும் இல்லை என்று இருப்பவர். இவருக்கு மேல் ஒரு ஈசன் கிடையாது என்று இருப்பவர் (அனீஸ), அன்று இருந்தார், இன்று இல்லை என்று இல்லாமல், த்ரேதா யுகத்தில் தோன்றிய அதே ராமபிரான், சமீபத்தில் தோன்றிய தியாகராஜ ஸ்வாமிக்கும் தரிசனம் கொடுத்தார். சாஸ்வதமாக என்றுமே இருப்பவர் (சாஸ்வத ஸ்திர:), பூமியையே படுக்கையாக போட்டு சயனித்து இருப்பவர். 14 வருடங்கள் ராமபிரானாக அவதரித்து பூமியிலேயே படுத்தவர், ஸ்தல சயன பெருமாளாக மஹாபாலிபுரத்தில் இருப்பவர் (பூசய:), அலங்காரம் (பூஷணம்) செய்து கொள்ள விரும்புபவர், இந்த பூமியில் பல அவதாரம் தானே செய்து செய்து, இந்த பூலோகத்துக்கே பூஷணமாக இருப்பவர் (பூஷண:), சோகமே இல்லாதவர் (விசோக:), இவர் சரித்திரத்தை கேட்பவனுக்கு கூட சோகம் மறைந்து போகும் படி செய்பவர். சோகத்தை நாசம் செய்பவர் (சோக நாசன:)


अर्चिष्मा नर्चितः कुम्भो विशुद्धात्मा विशोधनः ।

अनिरुद्धो ऽप्रतिरथः प्रद्युम्नो ऽमितविक्रमः ॥ ६८॥

அர்சிஷ்மான் ர்சித: கும்போ

விஸுத்தாத்மா விஸோதன: |

நிருத்த ப்ரதி-ரத:

ப்ரத்யும்னோ மித-விக்ரம :|| 68

Archishmaa narchithah kumbho

vishudhdhaathmaa visho-dhanah |

Anirudhdho prathi rathah

pradhyumno mitha-vikramah ||

கோடி சூரிய ப்ரகாசத்தோடு இருப்பவர் (அர்சிஷ்மான்), பிரம்மதேவன் முதல் சாமானியன் வரை பூஜை செய்யப்படுபவர் (அர்சித:), பிரளய காலத்தில் அனைத்தையும் அடக்கி வைத்து இருப்பவர் (கும்ப:), மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டு பரம பவித்திரமாகவே இருப்பவர் (விஸுத்தாத்மா), தான் மட்டும் பவித்ரமாக இல்லாமல், தன்னை சுற்றி இருப்பவரையும் சுத்தமாக ஆக்கி விடுபவர் (விஸோதன:), வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என்ற நான்கு வ்யூஹ மூர்த்தியில் அநிருத்தனாக இருப்பவர் (அநிருத்த), இவரை எதிர்த்து ஒருவரும் நிற்க முடியாது. தனக்கு நிகரான எதிரியே இல்லாதவர் (அப்ரதி-ரத:), நான்கு வ்யூஹ மூர்த்தியில் ப்ரத்யும்னனாக இருப்பவர் (ப்ரத்யும்னோ) அளவு கடந்த வீரம் உடையவர் (அமித-விக்ரம:)


कालनेमि निहा वीरः शौरिः शूर जनेश्वरः ।

त्रिलोकात्मा त्रिलोकेशः केशवः केशिहा हरिः ॥ ६९॥

காலநேமி-நிஹா வீர:

செளரி: ஸூர-ஜனேஸ்வர: |

த்ரிலோகாத்மா த்ரிலோகேஸ:

கேஸவ: கேஸிஹா ஹரி: || 69

Kaala-nemi nihaa veera

shourih shoora janesh varah |

Trilokaathmaa trilokeshah

keshavah kesihaa harih ||

காலநேமி என்ற அசுரனை வதம் செய்தவர் (காலநேமி-நிஹா), இவரே வெற்றி வீரர் (வீர:), சூரன் என்ற அரசன் இருந்தார். அவருடைய வம்சத்தில் தோன்றியவர் (செளரி:), தேவர்களுக்கு சூரர்கள் என்று பெயர். அந்த தேவர்கள் அனைவருக்கும் தலைவன் (சூரஜன-ஈஸ்வர:), மூன்று உலகங்களுக்கும் இவரே அந்தர்யாமியாக இருக்கிறார் (த்ரிலோகாத்மா), அந்தர்யாமியாக இருப்பதால், மூன்று உலகங்களையும் ஆள்கிறார் (த்ரிலோகேஸ:), க: என்றால் கிரணம் (ஒளி) என்று பொருள். அனைத்து கிரணங்களாகவும் தானே இருக்கிறார். க: என்றால் பிரம்மா, ஈச: என்றால் சிவன். இருவரையும் ஆள்பவர், (கேசவ:),கேசி என்ற அசுரன் குதிரை வடிவத்தில் வந்தான். அந்த அசுரனை வதம் செய்தவர் (கேஸிஹா), பாபத்தை போக்குபவர். சம்சார வாசனையை அழித்து மோக்ஷத்தை கொடுப்பவர்  (ஹரி:)


कामदेवः कामपालः कामी कान्तः कृतागमः ।

अनिर् देश्य वपुर् विष्णुर् वीरोऽनन्तो धनञ्जयः ॥ ७०॥

காமதேவ: காமபால:

காமீ காந்த: க்ருதாகம: |

அநிர்தேஸ்ய-வபு:‌ விஷ்ணு:‌

வீர னந்தோ தனஞ்ஜய: || 70

Kaama-dhevah kaama-paalah 

kaamee kaantha kruthaagamah |

Anirdheshya vapur vishnuh 

veero nantho dhananjayah ||

அனைவருக்கும் பிடித்தமானவர்.  (காமதேவ:), தன்னிடம் வருபவர்களை பார்த்து விரக்தியாக இரு, அலங்காரம் செய்து கொள்ளாதே, சந்நியாசி போல இரு என்றெல்லாம் சொல்லமாட்டார். அவர் சந்நிதிக்கு  அலங்காரம் செய்து கொண்டு வந்தால் வரவேற்பவர். அவரவர் ஆசைகளை நீக்காமல் ஏற்று கொள்பவர் (காமபால:), தன் ஆசைப்படியே அனைத்தையும் நடத்திக்கொள்பவர் 

(காமீ), அனைவரையும் கவர்ந்து இழுப்பவர் (காந்த:), ஸ்ருதி ஸ்ம்ருதியின் மரியாதையை ஏற்படுத்தியவர் (க்ருதாகம:), கடல் ஆழம் என்ன என்று கண்டுபிடிக்க ஒரு சக்கரை பொம்மை நினைத்து குதித்தது. அது கரையும் வரை ஆழம் கண்டதே தவிர முழு ஆழம் காண முடியவில்லை. அது போல சாதுக்கள், மகான்கள், ரிஷிகள், ஹனுமான் போன்றவர்கள் தங்கள் க்ரஹித்த அளவுக்கு ரூப அழகை வர்ணனை செய்கிறார்களே தவிர, ரூபத்தை முழுமையாக அப்படியே வர்ணிக்க முடியாதபடி இருப்பவர் (அநிர்தேஸ்ய-வபு:‌), மூன்று உலகங்களிலும் வியாபித்து இருப்பவர் (விஷ்ணு:‌), அழகான வீர நடை உடையவர் (வீர), மகிமையிலும், குணத்திலும், எதிலும் எல்லை காண முடியாத படி இருப்பவர் (அனந்தோ), எங்கு போனாலும் வெற்றி பெற்று செல்வத்தை ஜெயிப்பவர் (தனஞ்ஜய:)


ब्रह्मण्यो ब्रह्मकृद् ब्रह्मा ब्रह्म ब्रह्म विवर्धनः ।

ब्रह्मविद् ब्राह्मणो ब्रह्मी ब्रह्मज्ञो ब्राह्मणप्रियः ॥ ७१॥

ப்ரஹ்மண்யோ ப்ரஹ்ம-க்ருத்‌ ப்ரஹ்மா

ப்ரஹ்ம ப்ரஹ்ம-விவர்தந: |

ப்ரஹ்ம-வித்‌ ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ

ப்ரஹ்மஞோ ப்ராஹ்மண-ப்ரிய: || 71

Brahmanyo brahma-kruth brahmaa 

brahma brahma vivar-dhanah |

Brahma-vith braahmano brahmee 

brahmagyo braahmana-priyah ||

ப்ராம்மணர்களே தனக்கு தெய்வம் என்று நினைப்பவர். வேதம், தபசு, ப்ரம்மஞானம் உடையவர் (ப்ரஹ்மண்யோ), ப்ரஹ்ம என்றால் தபசு என்றும் ஒரு அர்த்தம் உண்டு. பதரி ஆஸ்ரமத்தில் தானே தபசும் செய்பவர், பிரம்மாவை படைத்தவர் (ப்ரஹ்ம-க்ருத்‌), தானே ப்ரஹ்மாவாகவும் இருப்பவர் (ப்ரஹ்மா), பரமாத்மாவாக இருப்பவர் (ப்ரஹ்ம), வேதம் தபசு ஞானம் உடைய ப்ராம்மணர்களை அழிய விடாமல், வளர்ப்பவர் (ப்ரஹ்மஎட்-விவர்தந:), வேதத்தின் அர்த்தத்தை உள்ளது உள்ளபடி உண்மையாகவே அறிந்தவர் (ப்ரஹ்ம-வித்‌), வேத வ்யாஸராக ஸ்வயமே பிராம்மண ரூபத்தில் இருப்பவர் (ப்ராஹ்மணோ), ப்ரம்மாவோடு வேதமாக கூடவே இருப்பவர் (ப்ரஹ்மீ), வேதாந்தத்தை தெரிந்தவர் (ப்ரஹ்மஞோ), தன் பக்தனாகவே இருந்தாலும், ப்ராம்மணர்களான சனத் குமாரர்களிடம் அபசாரம் ஏற்பட்டதும் ஜெய விஜயர்களே ஆனாலும் பரிக்ஷித்து விடுவார்.  ப்ராம்மணர்களிடம் ப்ரியம் உடையவர் (ப்ராஹ்மண-ப்ரிய:)


महाक्रमो महाकर्मा महातेजा महोरगः ।

महाक्रतुर् महायज्वा महायज्ञो महाहविः ॥ ७२॥

மஹாக்ரமோ மஹாகர்மா

மஹாதேஜா மஹோரக: |

மஹாக்ரது:‌ மஹாயஜ்வா

மஹாயஞோ மஹாஹவி: || 72

Mahaa-kramo mahaa-karmaa

mahaa-tejaa mahoragah |

Mahaa-kratur mahaayajvaa

mahaa-yagyo mahaa-havih ||

பெரிய காலடி வைப்பவர் (மஹாக்ரமோ), உலகத்தையே ஸ்ருஷ்டி செய்வது, நிர்வகிப்பது, அழிப்பது, பிரம்மா முதல் அனைவரையும் படைத்து அவரவர்களுக்கு கர்மாவை நியமிப்பது என்று பெரும் காரியங்கள் செய்பவர். பெரிய பெரிய காரியங்கள் செய்பவர் (மஹாகர்மா), இவருக்கு முன்னால் அக்னி, சூரியன் போன்றவர்களின் தேஜஸ் புகை போல இருக்குமாம். பெரிய பொலிவு உடையவர் (மஹாதேஜா), பிரளய காலத்தில் அனைத்தும் அழிக்கப்பட்டு, ப்ராண சக்தி மட்டும் மிச்சப்பட்டு இருக்க, அதையே தன் படுக்கையாக போட்டு படுத்து இருப்பவர். பெரிய ஆதிசேஷன் மேல் படுத்து இருப்பவர் (மஹோரக:), பெரிய பெரிய அஸ்வமேத யாகங்களாகவே இருப்பவர் (மஹாக்ரது:‌), பெரிய பெரிய யாகங்கள் தானே செய்பவர் (மஹாயஜ்வா), ஞானத்தை கொடுக்கும் பெரிய யாகமாகவே இருப்பவர். இந்த ஞானத்தை, தன் நாக்காகிய தருவியால், பகவத் குணம் என்கிற ஹவிசை எடுத்து, நம்முடைய காது என்ற அக்னி குண்டத்தில் ஆஹூதி செய்பவர் (மஹாயஞோ), அவரே அன்னமாகவும் இருக்கிறார்,நெய்யாகவும் இருக்கிறார். அவரை தவிர வேறு அந்நிய பொருள் இல்லை என்பதால், ப்ரம்மமே ப்ரம்மத்தை சாப்பிடுகிறது என்று வேதம் சொல்கிறது. பெரிய ஹவிசாகவும் இருந்து, தன்னையே நெய்வேத்தியமாக ஏற்று கொள்பவர். (மஹாஹவி:)


स्तव्यः स्तवप्रियः स्तोत्रं स्तुतिः स्तोता रणप्रियः ।

पूर्णः पूरयिता पुण्यः पुण्य कीर्ति रनामयः ॥ ७३॥

ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம்‌

ஸ்துதி: ஸ்தோதா அரண-ப்ரிய: |

பூர்ண: பூரயிதா புண்ய:

புண்ய-கீர்தி: அநாமய: || 73

Sthavya sthava-priya sthothram

sthuthi sthothaa arana-priyah |

Poornah poorayitha punyah

punya-keerthi anaamayah ||

நாம் ஸ்தோத்ரம்‌ செய்ய தகுதியானவர் (ஸ்தவ்ய:), ஒரு மணி நேரமாக ஸஹஸ்ர நாமம் சொல்லி வாய்ப்பந்தல் போடுகிறானே தவிர, ஒரு புஷ்பம், ஒரு பழம் நெய்வேத்யம் செய்தானா பார்!' என்று குறைபட்டு கொள்ளாமல், வெறும் ஸ்தோத்ரம்‌ செய்ததால் மட்டுமே சந்தோஷப்படுபவர் (ஸ்தவப்ரிய:), சஹஸ்ர நாமமாகவும் தானே இருப்பவர். பகவந்நாமமாக தானே இருப்பவர். (ஸ்தோத்ரம்), சஹஸ்ர நாமம் சொல்பவராகவும் இவரே இருக்கிறார். (ஸ்துதி:), நம் வாயில் பகவந் நாமத்தை சொல்ல வைத்தவராகவும் இவரே இருக்கிறார் (ஸ்தோதா), தன்னை சரணம் செய்தவர்களை மிகவும் விரும்புபவர் (அரண-ப்ரிய:), ப்ரபாவம், குணம், ஐஸ்வர்யம் என்று அனைத்திலும் குறை இல்லாமல், பூரணமாகவே இருப்பவர் (பூர்ண:), தன்னை ஆச்ரயித்தவர்களை குறைபட்டு கொள்ள விடாதபடி, பூரணமாக வைத்து இருப்பவர் (பூரயிதா), இவரை பற்றி நினைத்தாலே புண்யம் வந்து சேரும்படி இருப்பவர் (புண்ய:), த்ரேதா யுகத்தில் ஒரு முறை ராமனாக வந்து அவதரித்தார். பிறகு துவாபர யுகத்தில் கண்ணனாக வந்து அவதரித்தார். உலகில் எத்தனையோ மலை மலையான அரசர்கள் வந்து போய் விட்டார்கள். அவர்கள் யார் என்று கூட தெரியாத வண்ணம் புகழ் மறைந்து விட்டது. இன்றும் ராம சரித்திரம், ராமர் புகழ், கிருஷ்ணர் புகழ் அழியவில்லை. அழியாத புண்ணியமான புகழுடனேயே இருக்கிறார் (புண்ய-கீர்தி:), திவ்ய சரீரமாக இருப்பதால், வ்யாதியே இல்லாதவர், வியாதியை நீக்குபவர் (அநாமய:)


मनोजवस् तीर्थकरो वसुरेता वसुप्रदः ।

वसुप्रदो वासुदेवो वसुर्वसुमना हविः ॥ ७४॥

மனோஜவ:‌ தீர்த்தகர:

வஸுரேதா வஸுப்ரத: |

வஸுப்ரதோ வாஸுதேவோ

வஸு: வஸுமனா ஹவி: || 74

Mano-javas theertha-karo 

vasu-rethaa vasu-pradhah |

Vasu-pradho vaasu-dhevo 

vasur-vasu-manaa havih ||

உப்பிலியப்பா! கிருஷ்ணா! என்று சொன்ன மாத்திரத்தில், மனதை விட வேகமாக சென்று, பக்தனின் இதயத்தில் காட்சி தருபவர். மனதை விட வேகமானவர். (மனோஜவ:‌),  சாதுக்களாக அவரே இருக்கிறார். அவரே சாது (தீர்த்தகர:), தங்கம் போல அங்க காந்தி உள்ளவர் (வஸுரேதா), செல்வத்தை கொடுப்பவர் (வஸுப்ரத:), தானே உண்மையான செல்வம் என்று உணர்ந்த சாதுக்களுக்கு தன்னையே செல்வமாக கொடுப்பவர் (வஸுப்ரதோ), சர்வ பூதங்களிலும் வசிப்பவர் (வாஸுதேவோ), சர்வ பூதங்களையும் தன்னிடத்தில் வசிக்க செய்பவர் (வஸு:), தன் மனைவியை கடத்தியவன் என்ற நிலையிலும், போரில் ஆயுதங்கள் இழந்து, தேர் உடைந்து போர் களத்தில் அவமானப்பட்டு நிற்கும் ராவணனை கொல்லாமல், இன்று போய் நாளை வா என்று உயிர் பிச்சை அளித்தார். திருந்துவதற்கு ஒரு வாய்ப்பாக இது இருக்கட்டுமே என்று நினைத்தார். தங்கமான மனம் உடையவர் (வஸுமனா), ஹோமத்தில் கொடுக்கப்படும் ஹவிசாகவும் இருப்பவர் (ஹவி:)


सद्गतिः सत्कृतिः सत्ता सद्भूतिः सत्परायणः ।

शूरसेनो यदुश्रेष्ठः सन्निवासः सुयामुनः ॥ ७५॥

ஸத்கதி: ஸத்க்ருதி: ஸத்தா

ஸத்பூதி: ஸத்-பராயண: |

ஸூரஸேனோ யது-ஸ்ரேஷ்ட:

ஸந்நிவாஸ: ஸுயாமுன: || 75

Sadhgathi sathkruti saththaa 

sadhbhoothi sath paraayanah |

Sooraseno yadhu-shreshtah 

sannivaasa suyaa-munah ||

ஸத்துகளுக்கு (ஆஸ்தீகர்களுக்கு) அடைக்கலமாக இருப்பவர். (ஸத்கதி:), உலக காரியத்தை நடத்துகிறார். நம்மை வாழ வைக்கிறார். நல்ல காரியங்களை செய்பவர் (ஸத்க்ருதி:), உயிருள்ள பொருளாகவும், உயிரற்ற பொருளாகவும் அவரே இருக்கிறார். பிரம்மா கோப பாலகர்களை ப்ரம்ம லோகம் எடுத்துக்கொண்டு சென்று விட, ஸ்ரீ கிருஷ்ணரே பல இடைய சிறுவனாகவும், கையில் வைத்து கொண்டிருந்த தடி, பானை முதற்கொண்டு தானே ஆகி ஒரு வருட காலம் ப்ரம்மாவையே மோஹிக்க செய்து விட்டார். தோடு, மூக்குத்தி, செயின் என்று பல ரூபங்கள், பல பெயர்களோடு தெரிந்தாலும், அனைத்திலும் தங்கம் தான் உள்ளது. அது போல, எங்கும் எதிலும் அவரே இருக்கிறார் (ஸத்தா), அவரை விட பிரகாசமான வஸ்து இல்லை என்று ஸ்வயம் பிரகாசமாக இருப்பவர் (ஸத்பூதி:), சொர்க்க லோகம் சென்றாலேயே பெரிய ஸ்தானம் கிடைத்தது என்று சிலர் நினைத்து கொள்வார்கள். ப்ரம்ம லோகமே சென்றாலும், புண்ணியம் தீர்ந்ததும் மீண்டும் பூலோகத்திற்கு வந்தே ஆக வேண்டும். திரும்பி பிறக்கவே அவசியமில்லாதபடி உண்மையான பராகதி (பரமபதம்) கொடுப்பவர் (ஸத்-பராயண:), தன் பக்கம் நிறைய ஆள் சேர்த்து கொள்ளவேண்டும் என்பதற்காக பலமில்லாதவன், திறமையில்லாதவன், பேச தெரியாதவன், படிக்க தெரியாதவனை எல்லாம் சேர்த்து கொண்டு, அதற்கு தலைவன் என்று இல்லாதவர். ஒவ்வொரு வீரனும் தோற்கடிக்க முடியாத சூரர்களாகவே தன் சேனையில் வைத்து இருப்பவர். பொதுவாக பலம் குறைந்தவர்களையே தூதுக்கு அனுப்புவார்கள். மலையையே ஒரு கையால் தூக்கும், சாதிக்க முடியாத (அஸாத்ய) காரியங்கள் அனைத்தையும் சாதிக்க கூடியவரான ஹனுமானை தூது அனுப்புகிறார் ராமபிரான். இலங்கைக்குள் ராவணன் அனுமதி இல்லாமல் கால் வைக்க இந்திரனும், சூரியனும் பயந்து கொண்டு எல்லையில் நிற்க, ஹனுமான் சீதாதேவியை அசோகவனம் சென்று பார்த்து விட்டார். சீதாதேவியிடம் "ராமபிரான் வைத்திருக்கும் கோடிக்கணக்கான வானர சேனையில் கடைசி வரிசையில் நிற்கும் ஒரு சாதாரண வானரன் நான். என்னை விட பலசாலிகளான வானரர்களை கோடிக்கணக்கில் அழைத்து கொண்டு பிரபு ஸ்ரீராமர் உங்களை மீட்க வந்து கொண்டு இருக்கிறார் என்று சொல்கிறார். யாராலும் தோற்கடிக்க முடியாத சூரர்களை தன் சேனையில் வைத்து கொண்டு இருப்பவர் (ஸூரஸேன:), ராம அவதாரத்தில் தான் அப்படி ஒரு சேனை வைத்து இருந்தார் என்று இல்லை. கிருஷ்ண அவதாரத்தில் இவருடைய யாதவ சேனை அழிக்கவே முடியாத சேனையாக இருந்தது. பாரத போர் முடிந்தும் இவர்கள் இருந்தனர். இப்படிப்பட்ட யாதவ சேனை கிருஷ்ணருக்கு கட்டுப்பட்டு இருந்தார்கள் என்றால், கிருஷ்ணனின் பலம் எப்படி இருந்திருக்கும் என்று அறியலாம். இவர்களை மற்றவர்களால் அழிக்க முடியாது என்பதால், தான் வைகுண்டம் செல்ல ஆயத்தமான போது, இவர்களே தங்களுக்குள் அடித்து கொண்டு அழிந்து போகும் படியாக சங்கல்பித்து, தன் கையாலேயே மிச்சமிருந்த யாதவ சேனையையும் அழித்தார். சூரர்களான யாதவர்களை அடக்கி தனக்கு கீழ் வைத்து கொண்டு ஆண்டவர். யாதவர்களில் சிறந்தவர் (யது-ஸ்ரேஷ்ட:), கள்ளழக பெருமாள் வீதியில் புறப்பட்டு வரும்போது, எப்படி தேன் நிரம்பிய பூக்களை ஈக்கள் மொய்க்குமோ, அது போல சாதாரண மக்கள் பெருமாளை பார்த்து விட்டால், ஈக்கள் போல சூழ்ந்து கொண்டு விடுவார்கள். ஞானிகளோ, அதற்கும் ஒரு படிமேல் போய், தன்னையே பெருமாளிடத்தில் கரைத்து கலந்து விடுகிறார்கள். மீரா ஸ்ரீநாத்ஜீயை கண்டதும் சரீரத்தோடு மறைந்து விட்டாள். சைதன்ய மஹாபிரபு புரி ஜகன்னாதரிடம் சரீரத்தோடு மறைந்து விட்டார். ஆண்டாள் ஸ்ரீ ரங்கநாதரோடு மறைந்து விட்டாள். திருபாணாழ்வார் பெருமாளோடு சரீரத்தோடு மறைந்து விட்டார்.  ஞானிகள் தன்னையே ஒப்படைத்து விடும்படி, அடைக்கலமாக இருப்பவர் (ஸந்நிவாஸ:), யமுனைத்துறைவன். யமுனா நதி தீரத்தில் மாடு மேய்க்கும் வேஷத்தோடு நிற்கும் இடையர்களிலேயே சிறந்தவனாக இருப்பவர்  (ஸுயாமுன:),


भूतावासो वासुदेवः सर्वासु निलयो ऽनलः ।

दर्पहा दर्पदो दृप्तो दुर्धरो ऽथा पराजितः ॥ ७६॥

பூதாவாஸோ வாஸுதேவ:

ஸர்வாஸு-நிலய: னல: |

தர்பஹா தர்பதோ த்ருப்தோ

துர்தரோ பராஜித: || 76

Bhoothaa-vaaso vaasu-devah 

sarvaasu nilayo nalah |

Dharpahaa dharpadho dhruptho 

dhurdharo tha paraajithah ||


विश्व मूर्तिर् महामूर्ति र्दीप्त मूर्ति रमूर्तिमान् ।

अनेक मूर्ति रव्यक्तः शतमूर्तिः शताननः ॥ ७७॥

விஸ்வ-மூர்தி: மஹா-மூர்தி:

தீப்த-மூர்தி: அமூர்திமான்‌ |

அநேகமூர்தி: வ்யக்த:

ஸதமூர்தி: சதானன: || 77

Vishva-moorthir-mahaa-moorthih

deeptha-moorthi ramoorthiman |

Aneka-moorthi-ravyakthah

shatha-moorthi sathaa-nanah ||





एको नैकः सवः कः किं यत् तत्पद मनुत्तमम् ।

लोक बन्धुर् लोकनाथो माधवो भक्त वत्सलः ॥ ७८॥

ஏகோ நைக: ஸவ: க: கிம்‌

யத் தத்‌ பதம்-னுத்தமம் |

லோகபந்து:‌ லோகநாதோ

மாதவோ பக்த-வத்ஸல: || 78

Eko-naika savah kah kim

yaththath-padha manu-ththamam |

Loka-bandhur lokanaatho

maadhavo bhaktha-vathsalah ||


सुवर्ण वर्णो हेमाङ्गो वराङ्गश् चन्दनाङ्गदी ।

वीरहा विषमः शून्यो घृता शीर चलश्चलः ॥ ७९॥

ஸுவர்ண-வர்ணோ ஹேமாங்கோ

வராங்கஸ் சந்தனாங்-கதீ |

வீரஹா விஷம: சூன்ய:

க்ருதாசீ: சல:‌ சல: || 79

Suvarna varno hemaango 

varangas chandhanaang gadhee |

Veerahaa vishama shoonyo 

kruthaa sheera chalas chalah ||


अमानी मानदो मान्यो लोकस्वामी त्रिलोक धृक् ।

सुमेधा मेधजो धन्यः सत्यमेधा धराधरः ॥ ८०॥

அமானீ மானதோ மான்யோ

லோகஸ்வாமீ த்ரிலோக-த்ருக்

ஸுமேதா மேதஜோ தன்ய:

ஸத்ய-மேதா தராதர: || 80

Amaanee maanadho maanyo

loka-swamee triloka dhruk |

Sumeydhaa medhajo dhanyah

sathya-medhaa dharaa-dharah ||


तेजो वृषो द्युतिधरः सर्व शस्त्र भृतां वरः ।

प्रग्रहो निग्रहो व्यग्रो नैक श‍ृङ्गो गदाग्रजः ॥ ८१॥

தேஜோ-வ்ருஷோ த்யுதிதர:

ஸர்வ-ஸஸ்த்ர-ப்ருதாம்-வர: |

ப்ரக்ரஹோ நிக்ரஹோ வ்யக்ரோ

நைக-ஸ்ருங்கோ கதாக்ரஜ: || 81

Thejo vrusho dyuthi-dharah 

sarva-shastra-bhruthaam varah |

Pragraho nigraho vyagro 

naika-shrungo gadhaa-grajah ||


चतुर् मूर्तिश् चतुर्बाहुश् चतुर्व्यूहश् चतुर्गतिः ।

चतुरात्मा चतुर्भावश् चतुर्वेद विदेकपात् ॥ ८२॥

சதுர்-மூர்த்தி:‌ சதுர்-பாஹு:

சதுர்-வ்யூஹ: சதுர்கதி: |

சதுராத்மா சதுர்பாவ:‌

சதுர்-வேதவித் கபாத்‌ || 82

Chathur-moorthi chathur-bhahu

chathur-vyoohas chathur-gathih |

Chathu-raathma chathur-bhaavah

chathur-vedha-vidhekapaath ||


समा वर्तो ऽनिवृत्तात्मा दुर्जयो दुरति क्रमः ।

दुर्लभो दुर्गमो दुर्गो दुरावासो दुरारिहा ॥ ८३॥

ஸமா-வர்த நிவ்ருத்தாத்மா

துர்ஜயோ துரதி-க்ரம: |

துர்லபோ துர்கமோ துர்கோ

துரா-வாஸோ துராரிஹா || 83

Samaa-vartho nivruththaathmaa 

dhurjayo dhurathi-kramah |

Dhurlabho dhurgamo dhurgo 

dhuraa-vaaso dhuraa-rihaa ||


शुभाङ्गो लोकसारङ्गः सुतन्तुस् तन्तु वर्धनः ।

इन्द्रकर्मा महाकर्मा कृतकर्मा कृतागमः ॥ ८४॥

சுபாங்கோ லோகஸாரங்க:

ஸுதந்து: தந்து-வர்தன: |

இந்த்ரகர்மா மஹாகர்மா

க்ருதகர்மா க்ருதாகம: || 84

Shubhaango loka-saarangah

suthanthus thanthu-vardhanah|

Indhra-karmaa mahaa-karmaa

krutha-karmaa kruthaa-gamah ||


उद्भवः सुन्दरः सुन्दो रत्ननाभः सुलोचनः ।

अर्को वाजसनः श‍ृङ्गी जयन्तः सर्व विज्जयी ॥ ८५॥

உத்பவ: ஸுந்தர: ஸுந்தோ

ரத்ந-நாப: ஸுலோசன: |

அர்கோ வாஜஸன ஸ்ருங்கீ

ஜயந்த: ஸர்வ-விஜ்ஜயீ || 85

Udhbhava sundhara sundho

rathna-naabha sulo-chanah |

Arko vaajasana shrungee

jayanthah sarva-vijjayee ||



सुवर्ण बिन्दु रक्षोभ्यः सर्व वागीश् वरेश्वरः ।

महाह्रदो महागर्तो महाभूतो महानिधिः ॥ ८६॥

ஸுவர்ண-பிந்து: அக்ஷோப்ய:

ஸர்வ-வாகீஸ்-வரேஸ்-வர: |

மஹாஹ்ரதோ மஹாகர்தோ

மஹாபூதோ மஹாநிதி: || 86

Suvarna bindhu-rakshobhyah

sarva-vaageesh varesh varah |

Mahaa-hradho mahaa-gartho

mahaa-bhootho mahaa-nidhih |


कुमुदः कुन्दरः कुन्दः पर्जन्यः पावनोऽ निलः ।

अमृताशो ऽमृतवपुः सर्वज्ञः सर्वतो मुखः ॥ ८७॥

குமுத: குந்தர: குந்த:

பர்ஜன்ய: பாவன நில: |

அம்ருதாச ம்ருதவபு:

ஸர்வஞ: ஸர்வதோ-முக: || 87

Kumudhah kundharah kundhah 

parjanyah paavano nilah |

Amruthaasho mrutha-vapuh 

sarvagya sarvatho mukhah ||


सुलभः सुव्रतः सिद्धः शत्रुजिच् छत्रु तापनः ।

न्यग्रो धोऽदुम् बरो ऽश्वत्थश् चाणूरान्ध्र निषूदनः ॥ ८८॥

ஸுலப: ஸுவ்ரத: ஸித்த:

த்ரு-ஜித் சத்ரு-தாபன: |

ந்யக்ரோத: தும்பர அஸ்வத்த:

சாணூ-ராந்த்ர-நிஷூதன: || 88

Sulabha suvrathah sidhdhah

shathrujich chathru-thaapanah |

Nyagro-dhodum baro shvaththah

chanoo-raandhra nishoo-dhanah ||


सहस्रार्चिः सप्तजिह्वः सप्तैधाः सप्तवाहनः ।

अमूर्ति रनघो ऽचिन्त्यो भयकृद् भय नाशनः ॥ ८९॥

ஸஹஸ்ரார்சி: ஸப்த-ஜிஹ்வ:

ஸப்தை-தா: ஸப்த-வாஹன: |

அமூர்த்தி: அனக: அசிந்த்யோ

பயக்‌ருத்‌ பய-நாசன: || 89

Sahas raarchi saptha-jihvah

sapthai-dhaa saptha-vaahanah |

Amoorthirana gho chinthyo

bhayakrudh bhaya-naasanah ||


अणुर् बृहत्कृशः स्थूलो गुण भृन्निर् गुणो महान् ।

अधृतः स्वधृतः स्वास्यः प्राग् वंशो वंश वर्धनः ॥ ९०॥

அணு:‌ ப்ருஹத்‌ க்ருஸ: ஸ்தூல:

குணப்ருத் ‌நிர்குணோ மஹான்‌ |

அத்ருத: ஸ்வத்ருத: ஸ்வாஸ்ய:

ப்ராக்-வம்சோ வம்ச-வர்தன: || 90

Anur bruhath krushasth thoolo

guna-bhrunnir-guno-mahaan |

Adhrutha svathrutha svaasyah

praag vamsho vamsa vardhanah ||


भारभृत् कथितो योगी योगीशः सर्वकामदः ।

आश्रमः श्रमणः क्षामः सुपर्णो वायुवाहनः ॥ ९१॥

பாரப்ருத்‌ கதிதோ யோகீ

யோகீஸ: ஸர்வ-காமத: |

ஆஸ்ரம: ஸ்ரமண: க்ஷாம:

ஸுபர்ணோ வாயு-வாஹன: || 91

Bhaara-bhruth kathitho yogee

yogeeshah sarvakaa madha |

Aashrama shramanah kshaamah

suparno vaayu-vaahanah ||


धनुर्धरो धनुर्वेदो दण्डो दमयिता दमः ।

अपराजितः सर्वसहो नियन्ता नियमो यमः ॥ ९२॥

தனுர்-தரோ தனுர்வேதோ

தண்ட தமயிதா தம: |

அபராஜித: ஸர்வ-ஸஹ:

நியந்தா நியமோ யம: || 92

Dhanur-dharo dhanur-vedho

dhando dhamayithaa dhamah |

Aparaa-jitha sarva-saho

niyanthaa niyamo yamah ||

சாதுக்களை ரக்ஷிக்க வில் தரித்து இருப்பவர் (தனுர் தரோ), பானம், அஸ்திரம் (atom bomb), சஸ்திரம் (nuclear) என்று பல வித போர் பயிற்சிகளை அறிந்தவர், தனுர் வேதம் அறிந்தவர் (தனுர்வேதோ), சாம, தானம், பேதம் மட்டும் தெரிந்தவர் அல்ல.. தேவைப்பட்டால் சாதுக்களை கொலை செய்யும் 14000 ராக்ஷஸர்களை அடியோடு ஒழிக்க தண்ட நீதியையும் எடுப்பவர் (தண்டோ), அதர்மம் செய்பவராகள் தண்டிப்பதாலேயே, அனைவரையும் அடக்கி ஆள்பவர் (தமயிதா), தர்மமே உருவாக இருப்பதால், தர்மத்தில் இருப்பவர்களை காப்பவர் (தம:), அநியாயம் செய்பவர்களால், ஜெயிக்கவே முடியாதவர் (அபராஜித:), அம்மா காட்டுக்கு போ என்று சொல்ல, தாய் தந்தையை மீரா கூடாது என்ற தர்மத்தை காக்க, பொறுத்து கொண்டார். நியாயமாக இருந்தால் அனைத்தையும் பொறுத்து கொள்வார் (ஸர்வ ஸஹ:), தான் மட்டுமல்ல, அனைவரையும் அவரவர் நியமத்தில் இருக்கும் படி செய்பவர் (நியந்தா), ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்வயம் பரமாத்மா. அவருக்கு ஆணையிட மேலே ஒரு தெய்வம் இல்லை. அவருக்கு எந்த நியமும் கிடையாது. இருந்தும், சந்தியா வந்தனம் உட்பட தனக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை செய்தார். பகவானாக இருந்தும் ஏன் நியமத்தில் இருக்கிறார்? என்று கேட்டால், ஸ்ரீ கிருஷ்ணர் 'தனக்கு எந்த நியமும் கிடையாது என்றாலும்.. தான் செய்யாமல் இருந்தால், மற்றவர்களும் செய்யாமல் இருந்து விடுவார்கள்!' என்று தானே நியமத்தில் இருக்கிறார் (நியமோ). அஷ்டாங்க யோகத்தில் யமம், நியமம், ஆசனம் என்ற சாதனங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது. யமம் நியமம் இரண்டையும் கடைபிடிப்பவர் (யம:அல்லது அவதார சமயத்தில் யம, நியமம் கடைபிடித்தால், பகவான் என்று ஸ்வரூபத்தை பார்க்கும் போது, உண்மையில் தனக்கென்று எந்த நியமும் அற்றவர் (அநியமோ), மரணம் இல்லாதவர். எம பயம் இல்லாதவர் (யம:)


सत्त्ववान् सात्त्विकः सत्यः सत्य धर्म परायणः ।

अभिप्रायः प्रियार्होऽर्हः प्रियकृत् प्रीति वर्धनः ॥ ९३॥

ஸத்வவான் ஸாத்விக: ஸத்ய:

ஸத்யதர்ம-பராயண: |

அபிப்ராய: ப்ரியார்ஹ அர்ஹ:

ப்ரியக்ருத்‌ ப்ரீதி-வர்தன: || 93

Sathvavaan saathvika sathyah

sathya-dharma paraa-yanah |

Abhi-praayah priyaarho rhah

priyakruth preethi-vardhanah ||

12 வயது பாலகனாக வந்த கிருஷ்ணன், கம்சனால் நிறுத்தி வைக்கப்பட்ட குவலயாபீடம் என்ற பெரிய யானையை ஒரே குத்தில் குத்தி, வாயை பிளந்து தந்தத்தை பிடுங்கி விட்டான் என்றால், கிருஷ்ண பலத்தை என்ன என்று சொல்வது? பயமே இல்லாத மகா பலசாலியானவர் (ஸத்வவான்), இத்தனை பலம் இருந்தும், அனைவரையும் மிரட்டல், பலம் தேவைப்படாத நேரங்களில் எப்பொழுதும் சாதுவாகவே இருப்பவர் (ஸாத்விக:), மஹாபலம் கொண்டவன் அதை காட்டி கொள்ளாமல் சாதுவாக இருக்க முடியுமா? இவர் நடிக்கிறாரோ? என்றால்.. இல்லையாம்.  மஹா பலம் இருந்தும், சத்யமாகவே எப்பொழுதும் சாதுவாகவே இருப்பவர் (ஸத்ய:), சத்தியம் (மனம், வாக்கு இரண்டிலும் உண்மை), தர்மம் (அவரவர் எல்லையை மீறாமல் இருப்பது) இரண்டுக்கும் ஆதாரமானவர் (ஸத்யதர்ம பராயண:), எல்லோருக்கும் சம்மதமாகவே இருப்பவர் (அபிப்ராய:), நாம் அனைவரும் நம்முடைய ஆசையை, அன்பை வைக்க தகுதியானவர் (ப்ரியார்ஹ), நாம் அனைவரும் வழிபட வேண்டியவர் (அர்ஹ:), நாம் எந்த அளவுக்கு பிரியமாக இருக்கிறோமோ, அந்த அளவுக்கு பதிலுக்கு தன் பிரியத்தை காட்டுபவர் (ப்ரியக்ருத்)‌, ஸ்ரீகிருஷ்ணரிடம் 1 சதவீதம் தான் பிரியம் உள்ளது.. நம் பக்தியின் அளவுக்கு ஏற்றபடி அவர் நம்மிடம் பழகுகிறார். இப்படியே நம்மை விட்டுவிடுவாரா? என்றால்.. இல்லையாம்.. 1 சதவீத பக்தி செய்தாலும், தானே நம் பக்தியை வளர்த்து, தன் மீது உள்ள ஆசையை வளர செய்து, பக்தியை தானே வளர்த்து, இன்னும் நெருக்கமாக பழகுவாராம். நம்மிடம் அதிக பிரியம் காட்ட, நமக்கு உள்ள பக்தியை (அன்பை) மேலும் மேலும் வளர செய்பவர் (ப்ரீதி வர்தன:


विहायस गतिर् ज्योतिः सुरुचिर् हुतभुग् विभुः ।

रविर्विरोचनः सूर्यः सविता रविलोचनः ॥ ९४

விஹாயஸ-கதி: ஜ்யோதி:

ஸூருசி: ஹுதபுக்‌ விபு: |

ரவி: விரோன: ஸூர்ய:

ஸவிதா ரவி-லோசன: || 94

Vihaayasa gathir jyothih

suruchir huthabhug vibhuh |

Ravir virochana sooryah

savithaa ravi lochanah ||

ஜராசந்தன் ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணரை போருக்கு அழைக்க, பல முறை தாக்க வரும் இவனிடம் போர் செய்ய மனமில்லாமல், இவர் சோலையாக இருக்கும் மலையில் ஏறிவிட, மலையையே கொளுத்து என்று தன் சென்னைக்கு உத்தரவு இட, ஸ்ரீ கிருஷ்ணரும், பலராமரும் பகவானாகவே இருந்து, ஆகாய மார்க்கமாக நடந்து துவாரகைக்கு சென்று விட்டனர். ஆகாய மார்க்கமாக சஞ்சரிப்பவர் (விஹாயஸ கதி:), சூரிய நாராயணனாக இருப்பவர் (ஜ்யோதி:), மகா பிரகாசமாக இருப்பவர் (ஸூருசி:), அக்னியாக இருந்து தனக்கு அர்பணித்ததை ஏற்பவர் (ஹுதபுக்‌), எங்கும் வியாபித்து இருப்பவர் (விபு:), ரசத்தை எடுத்து கொள்பவர் (ரவி:), பிரகாசமாக இருப்பவர் (விரோ:) உலகத்தை பிரகாசம் செய்யும் சூரியனாக இருப்பவர் (ஸூர்ய:), சூரியனுக்கும் பரமாத்மாவாக இருப்பவர் (ஸவிதா), சூரியனே கண்ணாக கொண்டவர் (ரவி லோசன:)


अनन्तो हुतभुग् भोक्ता सुखदो नैकजो ग्रजः ।

अनिर्विण्णः सदामर्षी लोका धिष्ठान मद्भुतः ॥ ९५॥

அனந்த: ஹுதபுக்‌ போக்தா

ஸுகத: நைகஜ க்ரஜ: |

அநிர்விண்ண: ஸதாமர்ஷீ

லோகாதிஷ்டானம் அத்புத: || 95

Anantho hutha-bhug bhokthaa

sukhadho naikajo grajah |

Anirvinna sadhaa-marshee

lokaa dhishtaana madh bhuthah |

முடிவே இல்லாதவர் (அனந்த:), சகல தேவைதைகளின் சார்பாக, அக்னியாக இருந்து, அர்பணித்ததை ஏற்பவர் (ஹுதபுக்),‌ எல்லாவற்றையும் அனுபவிப்பவர் (போக்தா), மோக்ஷ லக்ஷணமான சுகத்தை தருபவர் (ஸுகத:), தர்மத்தை காக்க பல தடவை அவதரிப்பவர் (நைகஜ:), திருவெள்ளக் குளம் என்ற திவ்ய தேசத்தில் இருக்கும் பெருமாளை திருமங்கை ஆழ்வார் "அண்ணா" என்று அழைக்கிறார். அனைவருக்கும் அண்ணாவாக இருப்பவர் (அக்ரஜ:), எப்பொழுதும் கவலையே இல்லாமல் இருப்பவர் (அநிர்விண்ண:), எப்பொழுதும் சகிப்பு தன்மையோடு இருப்பவர் (ஸதாமர்ஷீ), தங்க கட்டியிலிருந்து நகை செய்தால், தங்க கட்டி இல்லாமல் போகும். இவரிடமிருந்து தான் உலகமே தோன்றி இருந்தாலும், இவர் குலையாமல் அத்புதமாக அப்படியே இருக்கிறார் (லோகாதிஷ்டானம் அத்புத:


सनात् सनातन तमः कपिलः कपिरव्ययः ।

स्वस्तिदः स्वस्ति कृत् स्वस्ति स्वस्तिभुक् स्वस्ति दक्षिणः ॥ ९६॥

சனாத்‌ சனாதனதம:

கபில: கபி: அவ்யய: |

ஸ்வஸ்தித: ஸ்வஸ்தி-க்ருத்‌ ஸ்வஸ்தி

ஸ்வஸ்திபுக்‌ ஸ்வஸ்தி-தக்ஷிண: || 96

Sanaath sanaathana-thamah

kapilah kapiravyayah |

Svasthidha svasthi-kruth svasthi

svasthibhuk svasthi-dakshinah ||

எப்பொழுதும் சாஸ்வதமாக இருந்து கொண்டே இருப்பவர் (சனாத்‌), எறும்புக்கு மனித ஆயுள் பெரிதாக இருக்கும். மனிதனுக்கு தேவர்களின் ஆயுள் பெரிதாக இருக்கும். தேவர்களுக்கு ப்ரம்மாவின் ஆயுசு பெரிதாக இருக்கும். மனிதனை பொறுத்தவரை தேவர்களையே 'அமரர்கள்' என்று சொல்வதுண்டு. நம்மை போல மரணம் இல்லாமல் போனாலும், இவர்கள் ஆயுசு முடிந்தவுடன் தேவ சரீரத்தை விட்டு மறைந்து விடுவார்கள். இப்படி சாஸ்வதமாக இருக்கும் தேவர்கள் இருக்கிறார்கள். அவர்களை விட சாஸ்வத-தரர்களாக ப்ரம்ம லோகத்தில் இருப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் விட சாஸ்வத-தமமாக இவர் இருந்து கொண்டே இருக்கிறார் (சனாதனதம:), கபிலவாசுதேவராக அவதரித்தவர், கருமை நிறமாக (கண்ணனாக) அவதரித்தவர் (கபில:), சூரியனாகவே இருப்பவர் (கபி:), அழியவே அழியாதவர் (அவ்யய:), மங்களத்தை தருபவர் (ஸ்வஸ்தித:), நமக்கு மங்களத்தை செய்பவர் (ஸ்வஸ்தி க்ருத்‌) மங்களமாகவே இருப்பவர் (ஸ்வஸ்தி), மங்களமான அனுபவத்தை கொடுத்தான், அனுபவிக்கவும் செய்பவர் (ஸ்வஸ்திபுக்),‌ பாண்டவர்கள் ஒழிய வேண்டும் என்று 100 கௌரவர்களும் நினைத்தார்கள். பாண்டவர்களை மங்களமாக வைக்க வேண்டும் என்று முடிவு செய்த பகவான், சாமர்த்தியமாக மஹாபாரத போரை நடத்தி, மங்களத்தை கொடுத்து விட்டார். பலர் சேர்ந்து கெடுக்க நினைத்தாலும், தான் காக்க வேண்டும் என்று ஒருவனை நினைத்து விட்டால், மங்களமாகவே வைத்து இருக்க செய்யும் சாமர்த்தியம் உடையவர் (ஸ்வஸ்தி தக்ஷிண:)





अरौद्रः कुण्डली चक्री विक्रम्यूर्जित शासनः ।

शब्दातिगः शब्दसहः शिशिरः शर्वरी करः ॥ ९७॥

அரெளத்ர: குண்டலீ சக்ரீ

விக்ரமீ ஊர்ஜித-சாஸன: |

ஸப்தாதிக: ஸப்தஸஹ:

சிசிர: ஸர்வரீ-கர: || 97

Aroudhrah kundalee chakree

vikram yoorjitha shaasanah |

Shabdhaathiga shabdha-sahah

shishira sharvaree karah ||

நாம் ஒரு காரியத்தை எடுத்து செய்யும் போதே அதீத கோபம் வரும். பிடிக்காதவர்களை கண்டாலும் அதீத கோபம் வரும், ஆசை இருந்தால் கூட அந்த உரிமையின் காரணமாக அதீத கோபம் வரும். பகவானோ ! தான் காரியமே செய்தாலும், கோபித்தாலும், ஆசைப்பட்டாலும் கூட, அதீத கோபமே இல்லாமல் இருப்பார் (அரெளத்ர:), சாங்க்யம், யோகம் என்ற இரண்டையும் குண்டலமாக காதில் அணிந்து இருப்பவர். ஆதி சேஷனாக இருப்பவர் (குண்டலீ), போர்க்களத்தில், பீஷ்மருக்கு சக்ரபாணியாக வந்து மனதை கவர்ந்த அழகர். சகல லோகத்தையும் காக்க சக்கரத்தை தரிப்பவர் (சக்ரீ), பராக்ரமம் உடையவர் (விக்ரமீ) திருடியவனை திருட்டு கொடுத்தவன் பார்த்து விட்டால், தன் வரையில் ஏதோ நாலு அடி கொடுத்து தண்டிப்பான். இவனிடமிருந்து தப்பித்து விட்டால், அரசாங்கம் இவனை பிடித்து பல வருடங்கள் சிறை வைத்து அடித்து தண்டிக்கும். அரசாங்கத்தையும் ஏமாற்றி விட்டால் கூட, ஒரு தேச சட்டம் இன்னொரு தேசத்தில் கிடையாது என்று தேசம் தேசம் விட்டு தேசம் குடிபெயர்ந்து தப்பித்தால் கூட, தெய்வ தண்டனையிலிருந்து தப்ப முடியாது. மறு ஜென்மத்திலோ, அல்லது அதே ஜென்மத்திலோ கண்ணை குருடாக்கியோ, வியாதியை கொடுத்தோ தண்டிக்கிறார். தெய்வ தண்டனை ராஜ தண்டனையை விட பெரிதாக இருக்கும். பகவான் ஏற்படுத்திய சட்டத்திலிருந்து யாராலும் தப்பிக்க முடியாதபடி சாஸனம் செய்தவர் (ஊர்ஜித சாஸன:), 'யதோ வாசோ நிவர்தந்தே' என்று வேதம் சொல்லும் போது, 'வாக்குக்கும் அப்பாற்பட்டவர் பரமாத்மா' என்று சொல்கிறது. எந்த விதமான சப்தங்களாலும் (பெயராலும்) நிரூபணம் செய்ய முடியாதபடி தனித்து இருப்பவர். இவரை பற்றி ஆயிரம் முறை பேசினாலும், இவரை பற்றி முழுவதும் அறிந்து கொண்டேன் என்று இல்லாமல், பேச்சுக்கு அடங்காதவராகவே இருப்பவர் (ஸப்தாதிக:), நமக்கு வாக்கு என்று ஒன்று இருந்தால், வாழ்க்கையை வீண்பேச்சில் கழிக்காமல் இருக்க, நாம் பேச தக்கவரும் இவர் ஒருவரே (ஸப்த-ஸஹ:), எந்த விஷயத்தை பற்றி பேசினாலும் மனஸ்தாபம் ஏற்பட்டு விடும். ஒரு சில நிமிடங்கள், இவரை தரிசிக்கும் பாக்கியமோ, இவரை பற்றி கேட்டால் கூட, குளிர்ச்சியானவராக இருப்பவர் (சிசிர:), திருமலைக்கு வந்தும், தன்னை தரிசிக்க விடாமல் செய்பவர். எங்கோ செல்ல இருந்தவனை கூப்பிட்டு திருமலைக்கு அழைத்து தன் தரிசனத்தை கொடுத்து விடுபவர். டில்லி சென்றால் தாஜ் மஹால் பார்க்க சிலரை செய்து விட்டு, கிருஷ்ண பக்தி உள்ளவனை பிருந்தாவனம் அழைத்து தரிசனம் கொடுப்பவர். சிலருக்கு ராத்திரியை (தூங்க) கொடுப்பவர், சிலருக்கு பகலாக இருப்பவர். கண் கட்டு வித்தை தெரிந்தவர் (ஸர்வரீ கர:)


अक्रूरः पेशलो दक्षो दक्षिणः क्षमिणांवरः ।

विद्वत्तमो वीतभयः पुण्यश्रवण कीर्तनः ॥ ९८॥

அக்ரூர: பேசலோ தக்ஷோ

தக்ஷிண: க்ஷமிணாம்-வர: |

வித்வத்தமோ வீதபய:

புண்ய-ஸ்ரவண-கீர்தன: || 98

Akroorah peshalo daksho 

dakshinah kshaminaam varah |

Vidhvaththamo veetha-bhayah 

punya-shravana keerthanah ||

பிறரை கெடுக்கும் எண்ணமே இல்லாதவர். க்ரூர புத்தியே இல்லாதவர் (அக்ரூர:), யதார்த்தமாக இருப்பவர். உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசாதவர், மனிதன் "தெய்வம்" என்று சொல்வது கபடம்.. தெய்வம் மனிதனாக அவதரித்த போது, "நான் தசரதனின் மைந்தன். மனிதன் என்று தான் நினைக்கிறன்" என்று யதார்தமாகவே பேசுபவர் (பேசலோ), எந்த காரியம் செய்தாலும் வேகமாக செய்யும் மஹா கெட்டிக்காரர் (தக்ஷோ), திசையாக இருப்பவர் (தக்ஷிண:), வாலி வாய்க்கு வந்தபடி ராமபிரானை பேசுகிறான். அவனை கண்டு கோபப்படாமல் வாலியை பார்த்து கொண்டு நிற்கிறார். ராமபிரானின் அழகான சிரிப்பை கண்ட வாலிக்கு தானாக அஞானம் அழிந்து விட, உடனே மன்னிப்பு கேட்டு, தன் பிள்ளையை ராமபிரானை சரணத்தில் சமர்ப்பிக்கிறேன். தன்னை இகழ்பவனை கண்டு கூட கோபப்படாதவர். ஏதோ அசட்டு தனமாக பேசுகிறான் என்று மன்னிக்கும் ஸ்வபாவம் உடையவர்  (க்ஷமிணாம் வர:), இவர் பேசினால், இவருக்கு மேல் பேச ஆள் இல்லை என்று இருப்பவர். ரிஷிகள் சாஸ்திரங்களை பேசுவார்கள். சாஸ்திரமாகவே பேசுபவராக இருப்பவர். இவர் பேசிய பேச்சு பகவத் கீதை என்று சாஸ்திரமாக ஆகி விட்டது. பகவத் கீதைக்கு மேல் உயர்ந்த சாஸ்திரம் ஏதும் இல்லை என்றபடி, மஹா அறிவாளியாக பேசுபவர் (வித்வத்தமோ), தேசத்தை ஒட்டியோ, காலத்தை ஒட்டியோ, மனிதனை ஒட்டியோ மாற்றி மாற்றி பேசாமல், சத்தியத்தை பயமில்லாமல் தைரியமாக பேசுபவர் (வீதபய:), விரதம் அனுஷ்டிக்க முடியாவிட்டாலும், ஞானத்தை சம்பாதிக்க முடியாவிட்டாலும், செய்யும் காரியத்தை கூட கர்ம யோகமாக செய்ய முடியாவிட்டாலும் கூட பரவாயில்லை.. புண்யமான கிருஷ்ணனின் நாமதத்தை சொல்வதாலோ, கேட்பதாலோ கூட மோக்ஷம் வரை கொடுக்க கூடியவர் (புண்ய ஸ்ரவண கீர்தன:)


उत्तारणो दुष्कृतिहा पुण्यो दुःस्वप्न नाशनः ।

वीरहा रक्षणः सन्तो जीवनः पर्यवस्थितः ॥ ९९

உத்தாரண: துஷ்க்ருதிஹா

புண்யோ து:ஸ்வப்ன-நாசன: |

வீரஹா ரக்ஷண: ஸந்த:

ஜீவன: பர்ய-வஸ்தித: || 99

Uththaarano dushkruthihaa 

punyo dhu swapna naashanah |

Veerahaa rakshana santho 

jeevanah parya-vasthitah ||

எல்லோரையும் சம்சாரத்திலிருந்து எழுப்பி கரையேற்றுபவர் (உத்தாரண:), பாபங்கள் அனைத்தையும் இவர் பெயரை உச்சரித்தாலே அடியோடு நீக்குபவர் (துஷ்க்ருதிஹா), 24 மணி நேரமும் அன்னதானம், வந்தவரே மீண்டும் மீண்டும் வந்தாலும் அன்னதானம் செய்தால் கிடைக்கும் புண்ணியத்தை காட்டிலும், 100 யாகம் செய்தால் கிடைக்கும் புண்ணியத்தை காட்டிலும், "ஹரி" என்று பகவானின் புனிதமான பெயரை ஒருவன் ஒரு முறை சொல்லிவிட்டால் கூட, மீண்டும் பிறக்க நேராத படி, வைகுண்டம் வரை செல்லும் புண்ணியம் கிடைக்கும் படி இருப்பவர், புனிதனாக இருப்பவர் (புண்யோ), ஆண்டாள் கனவில் பெருமாள் தன்னை மணப்பதாக காண்கிறாள். இது போன்ற நல்ல கனவுகள் கோடியில் ஒரு சிலருக்கு ஏற்படும். பலருக்கு பெரும் ஆபத்துகள் வரப்போவதை கனவில் காண்பதுண்டு. அப்படிப்பட்ட கெட்ட கனவுகள் கூட தன் பக்தனுக்கு ஏற்படாதவாறு நாசம் செய்பவர் (து: ஸ்வப்ன நாசன:), பாண்டவர்களை விட அதிக சேனை வைத்து இருந்தும், மஹா வீரர்களை கொண்டு இருந்தும், கௌரவர்களை வீழ்த்திய மஹா வீரன் (வீரஹா), தர்மத்தில் இருந்த பாண்டவர்களை கடைசி வரை ரக்ஷித்து காட்டியவர் (ரக்ஷண:), பிரகலாதன், நாரதர், பராசரர், புண்டரீகன், வ்யாஸர், அம்பரீஷன், சுகர், சௌனகர், பீஷ்மர், ருக்மாங்கத, அர்ஜுனன், வசிஷ்ட, பலி சக்கரவர்த்தி, விபீஷணன் என்று தொடர்ந்து. இன்று இருக்கும், இனி வரப்போகும் அனைத்து சாதுக்களாகவும் இவரே இருக்கிறார். பல சாதுக்களாக வந்து நம்மை நாமம் சொல்ல வைப்பவர் (ஸந்த:), நமக்கு உயர்ந்த ஜீவனம் (வாழ்க்கை) கிடைக்க செய்பவர் (ஜீவன:), இடம், வலம், மேல், கீழ், நடு, முன், பின் என்று எங்குமே இருப்பவர் (பர்ய வஸ்தித:)


अनन्त रूपोऽनन्त श्रीर् जितमन्युर् भयापहः ।

चतुरश्रो गभीरात्मा विदिशो व्यादिशो दिशः ॥ १००॥

அனந்தரூப: அனந்தஸ்ரீ:‌

ஜிதமன்யு:‌ பயாபஹ: |

சதுரஸ்ரோ கபீராத்மா

விதி: வ்யாதி: திஸ: || 100

Anantha roopo nantha shreeh

jitha manyur-bhayaapahah |

Chathu-rasro gabhee-rathmaa 

vidhisho vyaadhisho dhishah ||

எந்த ரூபத்தில் வருவார் என்று சொல்ல முடியாதபடி, ராமனாக, கண்ணனாக மட்டுமின்றி, தேவைப்பட்டால், பன்றியாகவும், நாயாகவும் கூட வருபவர். அணைத்து ரூபங்களை தரித்து கொள்ளும் சக்தி உள்ளவர். பல வித ரூபங்களாக இருப்பவர் (அனந்தரூப:), பல வித ரூபங்களில் இவர் வந்தாலும், கூடவே அவருக்கு ஏற்ற துணையாக லக்ஷ்மியும் அவதரித்து விடுவதால், அனந்த லக்ஷ்மியை உடையவர் (அனந்தஸ்ரீ:), தாயார் கூட இருப்பதாலேயே, நம் குற்றத்தை கண்டும், கோபத்தை ஜெயித்து, பொறுத்துக்கொண்டு இருப்பவர், கோபத்தை ஜெயித்தவர். (ஜித மன்யு:‌), இவரிடம் மனதை கொடுத்த பக்தனுக்கு, எதை கண்டும் பயமே இருக்காதபடி செய்பவர். பயத்தை போக்குபவர் (பயாபஹ:), சாம (சமாதானம்), தான, பேத, தண்டம் போன்ற நான்கை, யாருக்கு, எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அறிந்தவர். ஹிரண்யகசிபு, ராவணன் போன்ற தீயவர்கள், எப்படி சாமர்த்தியமாக வரம் கேட்டாலும், அதிலும் ஒரு வழியை கண்டுபிடித்து தண்டிக்கும் சாதுர்யம் கொண்டவர் (சதுரஸ்ரோ), பரந்து விரிந்த கடலை எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாது. ஆனால் அதன் அருகில் சென்றால் அதன் கம்பீரம் நம்மை மலைக்க செய்து விடும். அது போல, பார்க்க பார்க்க தெவிட்டாது இருக்கும் ராமபிரான், அதே சமயம் கம்பீர புருஷனாக இருப்பார்.(கபீராத்மா), வித விதமான வரங்களை தருபவர். (விதி:), வித விதமான உத்தரவுகளை அவரவர்களுக்கு கொடுப்பவர் (வ்யாதி:), சர்வ பலனையும் கொடுப்பவர் (திஸ:)


अनादिर् भुवोभुव लक्ष्मीः सुवीरो रुचिराङ्गदः ।

जननो जन जन्मादिर् भीमो भीम पराक्रमः ॥ १०१॥

அநாதி:‌ புவோபுவ லக்ஷ்மீ:

ஸுவீர: ருசிராங்கத: |

ஜனன ஜன-ஜன்மாதி:

பீமோ பீம-பராக்ரம: || 101

Anaadhir bhoor bhuvo lakshmeeh

suveero ruchi-raangadhah |

Janano jana janmaadhir

bheemo bheema paraakramah ||

உலகத்தில் உள்ள அனைத்து செடி, கொடிகள், பசு, பக்ஷிகள், மனிதர்கள், ஈ, கொசு உட்பட அனைத்துக்கும் மூல (ஆதி) காரணமாக இருப்பது மண். உற்பத்தியான இவை அனைத்துமே ஒரு நாள் மீண்டும் மண்ணாகி விடுகிறது. இந்த மண்ணுக்கு மூல காரணம் நீர். நீருக்கு மூல காரணம் அக்னி. அக்னிக்கு மூல காரணம் காற்று. காற்றுக்கு மூல காரணம் ஆகாயம். ஆகாயத்துக்கு மூல காரணம் அவ்யக்தம். அவ்யக்திக்கும் மூல காரணம் ப்ரம்மம் (பகவான்). மூல காரணம் இல்லாமல் அநாதி காலமாக இருந்துகொண்டே இருப்பவர் (அநாதி:)‌, சத்துக்கு சத்தாக இருப்பவர். பூமி நமக்கு ஆதாரமாக இருக்கிறது. இந்த பூமிக்கும் ஆதாரமாக இருப்பவர் (புவோபுவ), ஆகாயத்தில் முத்து கொட்டியது போல இருக்கும் நக்ஷத்திரங்களை பார்க்கும் போதும், குளிர்ந்த சந்திரனை பார்க்கும் போதும், முத்து கொட்டி கிடைக்கும் சமுத்திரத்தை  பார்க்கும் போதும், தாமரையின் அழகை  பார்க்கும் போதும், குழந்தையின் மழலை பேச்சு கேட்கும் போதும், பசுக்களை  பார்க்கும் போதும், நகைகளை பார்க்கும் போதும், சுமங்கலியான பெண்களை பார்க்கும் போதும், நெல் கதிர் வளர்ந்து குலுங்குவதை  பார்க்கும் போதும், ஆயிரம் பேருக்கு உணவு கொடுக்கும் போது அனைவரையும் பார்க்கும் போதும், ஞானிகளை பார்க்கும் போதும், லட்சுமிகரமாக (மங்களமாக) தெரிவதற்கு காரணம் இவரே! அந்த மங்களத்திற்கு காரணமான லட்சுமியே, லக்ஷ்மீகரமான இவரின் இதயத்தில் ஒரு ஓரத்தில் குடிகொண்டு இருக்கிறாள். இவரே மங்களகரமாக இருக்கிறார். ஆத்ம வித்யை என்ற லக்ஷ்மியாக  (ஸ்ரீயாக) இவரே இருக்கிறார் (லக்ஷ்மீ:), ஈடு இல்லாத வீரராக இருக்கிறார் (ஸுவீரோ), அழகான தோள் வலயம் போட்டு ரசிக்கும்படியாக இருப்பவர் (ருசிராங்கத:), சர்வ ஜீவனையும் பிறக்க செய்பவர் (ஜனன:), அனைவரது பிறந்த நாளாகவும் தானே இருப்பவர் (ஜன ஜன்மாதி:‌), கும்பகர்ணன், இந்திரஜித் உட்பட ராவணன் படைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட, இனி ராவணன் மட்டுமே மிச்சம் என்று நினைத்த நேரத்தில், இது வரை வந்த படை பலத்தை விட, பாதாள லோகத்திலிருந்து கோடிக்கணக்கான ராக்ஷஸ சேனையோடு ராவணன் போருக்கு வந்தான். பரதன் காத்து கொண்டு இருக்கிறான். 14 வருடம் முடிய போகிறது. போர் முடியுமா? என்ற கவலை அனைவரையும் தோற்ற, யார் உதவியும் கேட்காமல், தானே வில்லை எடுத்து கொண்டு, படு பயங்கரமான போர் செய்து, ராவணன் சேனையை அடியோடு ஒழித்து, ராவணனையும் கொன்று விட்டு, அமைதியாக அமர்ந்தார் ராமபிரான். பயங்கரமான பராக்ரமம் உடையவர் (பீமோ பீம பராக்ரம:)


आधार निलयो धाता पुष्पहासः प्रजागरः ।

ऊर्ध्वगः सत् पथाचारः प्राणदः प्रणवः पणः ॥ १०२॥

ஆதார-நிலய: தாதா

புஷ்ப-ஹாஸ: ப்ரஜாகர: |

ஊர்த்வக: ஸத்-பதாசார:

ப்ராணத: ப்ரணவ: பண: || 102

Aadhaara nilayo dhaathaa

pushpa-haasah prajaa-garah |

oordhvaga sath pathaachaarah

praanadha pranavah panah ||

ப்ரம்மதேவன் பகவான் எங்கே என்று 14 லோகங்களும் தேடி வர, 14 லோகத்தையும் தன் முதுகில் தாங்கி கொண்டு ஆதி கூர்மமாக இருக்கும் பகவானை தரிசித்தார் என்று வேதம் சொல்கிறது. அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பவர். (ஆதார நிலய:) தானே சர்வ ப்ரம்மா உட்பட, 14 லோகங்களும் அழியும் பிரளய காலத்தில், சர்வ லோகத்தையும் தண்ணீர் குடிப்பது போல குடித்து விடுபவர். மற்றொரு அர்த்தம், அனைத்தையும் தானே தரிப்பவர் (தாதா), பெரும்  செய்தாலும், மலர்ந்த புஷ்பம் போல சிரிப்பவர் (புஷ்ப ஹாஸ:), பாண்டவர்களை காப்பேன் என்று வாக்கு கொடுத்த பிறகு, 18 நாள் போரிலும் தூங்காமல் பார்த்து கொண்டார் ஸ்ரீ கிருஷ்ணர். யோக நித்திரையில் இருந்தாலும், தூங்கவே தூங்காமல், மக்களை காப்பவர் (ப்ரஜாகர:), எல்லாவற்றிற்கும் உயரே இருப்பவர். அவருக்கு மேல் யாரும் இல்லை என்று மிக மிக உயிரத்தில் இருப்பவர் (ஊர்த்வக:), ஸ்ரீ கிருஷ்ணர் உபப்லவ்யம் என்ற தேசத்தில் இருந்து, ஹஸ்தினாபுரம் நோக்கி 'பாண்டவ தூதனாக' கிளம்பி வருகிறார். போர் நடக்குமோ என்ற பெரும் நெருக்கடியான நிலை.. அப்போது, வரும் வழியில், சாயங்கால வேளை வந்து விட்டது. அப்போது, ஒரு அழகான ஓடை தென்பட, 'சந்தியா வந்தனம் செய்து விட்டு போவோம்' என்று ரதத்தை விட்டு இறங்கினார் ஸ்ரீ கிருஷ்ணர். தனக்கு விதிக்கப்பட்ட கர்மாவை எந்த நிலையிலும் விடாதவராக இருந்தார். நெருக்கடியான நிலையிலும், தன் தர்மத்தை என்றுமே விடாதவர் (ஸத் பதாசார:), உத்திரையின் பிள்ளை பரீக்ஷித் பிறந்தும் கண் திறக்காமல் சவம் போல கிடந்தது. அப்போது "ஜென்ம ஜென்மமாக பிரம்மச்சாரியாக இருக்கும் ஒருவன் தொடும் போது இந்த குழந்தை கண் திறப்பான்" என்று அசரீரி வாக்கு கேட்டது. உடனே போர் களத்தில் உயிரை பிடித்துக்கொண்டு இருக்கும் பீஷ்மரை பார்க்க ஓடினார்கள் பாண்டவர்கள். பீஷ்மர் 'உன் கூடவே இருக்கும் 14108 மனைவிகளை உடைய ஸ்ரீ கிருஷ்ணர் தான் நிஜத்தில் பிரம்மச்சாரி.. அவர் கையில் குழந்தையை கொடு" என்று சொல்ல, ஸ்ரீ கிருஷ்ணர் வந்து குழந்தையை தொட, உடனேயே பரீக்ஷித் கண் திறந்து பார்த்தான். உயிரை கொடுப்பவர் (ப்ராணத:) தியானம் செய்யும் போது ஓம் என்ற ஓங்காரமாக இருப்பவன் (ப்ரணவ:), பரதன் "ராமபிரானை அயோத்தி வாருங்கள்" என்று கதறுகிறான். பெருமாள் பக்தனுக்கு அடிமை. அதனால் தன்னை கேட்கும் பரதனுக்கு 'தன்னை கொடுக்க முடியாது' என்று சொல்ல முடியவில்லை ராமபிரானுக்கு. ராவண வதம் என்ற பெரும் காரியம் செய்ய இந்த மனித உடல் தேவைப்பட்டதால், ராமபிரான் அது வரைக்கும் பணயமாக தன் பாதுகையை கொடுத்தார். தன் பாதுகையே தான் என்று கொடுத்து, அந்த பாதுகையே 14 வருடங்கள் ஆட்சி செய்யும் என்று ஆக்கினார். அது போல, ஒரு சமயம் சத்யபாமா நாரதரிடம் ஸ்ரீகிருஷ்ணரை பணயமாக வைத்து விட, ருக்மிணி ஒரே ஒரு துளசி இலையை தராசில் வைத்து மீட்டு விட்டாள். பக்தன் ஒரு துளசி கொடுத்தாலும், அதற்கு பணயமாக தன்னையே கொடுப்பவர், தன் பாதுகையை பந்தயமாக வைத்து தன்னை மீட்டுக்கொள்பவர் (பண:)|


प्रमाणं प्राणनिलयः प्राणभृत् प्राण जीवनः ।

तत्त्वं तत्त्व विदे कात्मा जन्म मृत्यु जरातिगः ॥ १०३॥

ப்ரமாணம்‌ ப்ராண-நிலய:

ப்ராணப்ருத்‌ ப்ராண-ஜீவன: |

தத்வம்‌ தத்வவித் ஏகாத்மா

ஜன்ம-ம்ருத்யு-ஐராதிக: || 103

Pramaanam praana nilayah 

praana-bhruth praana jeevanah |

Thathvam thathva vidhe kaathmaa 

janma mruthyu jaraathigah ||

அனைத்துக்கும் காரணமாக இருப்பவர் (ப்ரமாணம்)‌ பிராணனுக்கு நிலையமாக இருப்பவர் (ப்ராண நிலய), பிராணனை நிறுத்தி வைத்து இருப்பவர் (ப்ராணப்ருத்‌) பிராணனுக்கு பிராணனாக இருப்பவர் (ப்ராண ஜீவன:), அவரே அறிந்து கொள்ளக்கூடிய தத்துவமாக இருப்பவர் (தத்வம்)‌ அனைத்தையும் உள்ளது உள்ளபடி தெரிந்து கொண்டு இருப்பவர் (தத்வவித்), ஒரே சூரியன், எப்படி ஒவ்வொரு குளத்திலும் ப்ரதிபிம்பமாக தெரிந்தாலும், ஒரே சூரியன் தான் இருக்கிறதோ, அது போல, பல ஆத்மாக்களாக ஒவ்வொரு உடலிலும் ப்ரதிபிம்பித்தாலும், இவர் ஒருவரே இருக்கிறார் (ஏகாத்மா), தேவர்களுக்கு முதுமை கிடையாது. மனிதர்களுக்கு பிறப்பு, மூப்பு, இறப்பு உண்டு. மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் அப்பாற்பட்டு, பிறப்போ, இறப்போ, முதுமையோ இல்லாதவர் (ஜன்ம ம்ருத்யு ஐராதிக:)


भूर्भुवःस्वस्तरुस् तारः सविता प्रपितामहः ।

यज्ञो यज्ञपतिर्यज्वा यज्ञाङ्गो यज्ञवाहनः ॥ १०४

பூ:புவ:ஸ்வ:தரு:தார:

ஸவிதா ப்ரபிதாமஹ: |

யஞோ யஞபதி:‌ யஜ்வா

யஞ்யாங்க: யஞ-வாஹன: || 104

Bhoorbhuva svastharus thaarah

savithaa prapithaamahah |

Yagyo yagya-pathir-yajvaa

yagyaango yagya-vaahanah ||

பூமிக்கு கீழ் உள்ள லோகங்களாக, பூலோகமாக, பூமிக்கு மேல் உள்ள சுவர்க்கம் முதலான லோகங்களாக ஒரு பெரிய வ்ருக்ஷம் (மரம்) போல இருப்பவர் (பூர்புவ: ஸ்வ: தரு:), ஓம் என்றும், ராம என்றும் பல தடவை சொல்லும் போதே ஒரு நாதம் கேட்கும். பிரம்மமே நாத வடிவில் "ஓம்" என்றும், "ராம" என்றும் இருக்கிறார். பகவான் நாத ப்ரம்மமாகவே இருக்கிறார் (தார:), எந்த பரஞ்சோதி இருப்பதால் நமது புத்தி தூண்டப்படுகிறதோ, நமக்கு நாம் இருப்பதும், உலகம் இருப்பதும் தெரிகிறதோ, அந்த பரஞ்சோதியாக இருக்கிறார் (ஸவிதா), ப்ரம்மா நாம் எல்லோரையும் படைத்தால், பிரம்மாவை நம்முடைய தாத்தா 'பிதாமக' என்று உறவு காட்டி சொல்கிறது வேதம். அவருக்கே பகவான் அப்பாவாக இருப்பதால், அவரை ஆழ்வார்கள் பெரிய அப்பன், பெரும் ஆள் (பெருமாள்), பெரிய பெருமாள் என்றும் உறவு கொள்கிறார்கள். நாம் எல்லோருடைய உறவாக, கொள்ளு தாத்தாவாக இருப்பவர் (ப்ரபிதாமஹ:), வேதத்தில் செய்யப்படும் யாகமாகவே இருப்பவர் (யஞோ), எந்த யாகம் எந்த தெய்வத்துக்கு செய்தாலும், யாகத்திற்கு தலைவனாக 'பதி' இருந்து பலன் கொடுப்பவர், கொடுக்க செய்பவர் (யஞ பதி:), யாகத்தை உள்ளிருந்து செய்விப்பவனாகவும், செய்பவனாகவும் இருக்கிறார் (யஜ்வா), ஆதிவராக மூர்த்தியின் ரூபமே யஞ ரூபமாக இருந்தது என்று வராஹ புராணம் வர்ணிக்கிறது. இவரே யஞ ரூபமாக இருக்கிறார் (யஞ்யாங்கோ), யாகம் செய்த பலனாக தானே வருகிறார் (யஞ வாஹன:)


यज्ञभृद् यज्ञकृद् यज्ञी यज्ञभुग् यज्ञसाधनः ।

यज्ञान्तकृद् यज्ञगुह्य मन्नमन्नाद एव च ॥ १०५॥

யஞ-ப்ருத்‌ யஞ-க்ருத்‌ யஞீ

யஞபுக்‌ யஞ-ஸாதன: |

யஞாந்த-க்ருத்‌ யஞ-குஹ்யம்

ன்னம் ன்னாத ஏவ ச || 105

Yagya-bruth yagya kruth yagyee

yagyabhuk yagya-saadhanah |

Yagyaantha-kruth yagya guhyam

annam annaadha eva-cha ||

யாகத்தை இவரே நடத்தி வைக்கிறார் (யஞ ப்ருத்), இவரே யாகத்தை செய்கிறார் (யஞ க்ருத்),‌ யாகம் என்ற தர்மத்தை செய்தால், தர்மியாக இவரே இருக்கிறார் (யஞீ), யாகத்தில் ஆஹுதி செய்யப்படும் அனைத்தையும், தானே அக்னி ரூபமாக இருந்து ஏற்கிறார் (யஞபுக்), யாகத்திற்கு தேவையான தர்ப்பையோ, நெய்யோ, அனைத்துமாக இவரே இருக்கிறார் (யஞ ஸாதன:), யாகத்தின் முடிவில் கிடைக்கும் பலனாகவும் இவரே இருக்கிறார் (யஞ அந்த க்ருத்‌), எந்த தேவதையை குறித்து யாகம் செய்தாலும், அந்த தேவதைகளுக்கும் உள்ளிருக்கும் ப்ரம்மம் இவரே (யஞ குஹ்யம்), அனைத்து உணவாகவும் இவரே இருக்கிறார். நமக்கு வாய்க்கு உணவாக மட்டுமில்லாது.. கண்ணால் விழுங்கப்படும் உணவாகவும் இருக்கிறார். வைகுண்டத்தில், பசி தாகம் இல்லாத மோக்ஷம் அடைந்த ஜீவன்கள், இவரை பார்த்து பார்த்து கண்ணாலேயே அன்னம் போல விழுங்கி கொண்டு இருப்பார்களாம். அனைவருக்கும் அன்னமாக இருப்பவர் (அன்னம்),  தன் தரிசனத்தாலேயே மனதை பறித்து, கடைசியில் அந்த ஜீவனை விழுங்கியே விடும் சாமர்த்தியம் கொண்டவர். பிரளய காலத்தில் உலகையே அன்னம் போல விழுங்கி விடுபவர். அனைவரையும் அன்னமாக தானே சாப்பிடுபவராகவும் இவரே இருக்கிறார் (அன்னாத ஏவ ச)


आत्मयोनिः स्वयञ्जातो वैखानः सामगायनः ।

देवकीनन्दनः स्रष्टा क्षितीशः पापनाशनः ॥ १०६॥

ஆத்மயோனி: ஸ்வயம்-ஜாத:

வைகாந: ஸாம-காயன: |

தேவகீ-நந்தன: ஸ்ரஷ்டா

க்ஷிதீஸ: பாப-நாஸன: || 106

Aathma-yoni svayam jaatho

vaikhaana saama-gaayanah |

Devakee nandhana srashtaa

kshitheeshah paapa-naashanah ||

யாராலும் உற்பத்தி ஆகாதவர். தானே உருவானவர். ப்ரம்மமாகிய நாராயணன் மட்டும் தான், தானே உருவானவர் என்று நினைக்க வேண்டியதில்லை என்பது போல, யாராலும் செதுக்கப்படாமல், தானே உற்பத்தியான மூர்த்தியாக இன்றும், பண்டரீபுரத்தில் பாண்டுரங்க மூர்த்தியாகவும், திருமலையில் ஸ்ரீனிவாச மூர்த்தியாகவும், ஸ்ரீமுஷ்ணத்தில் வராஹ மூர்த்தியாகவும், க்ஷீராப்தியில் தானே உருவாகி இன்று ஸ்ரீரங்கத்தில் ரங்கநாத மூர்த்தியாகவும், காஞ்சியில் ஹஸ்தி 'அத்தி' வரதராகவும் தானே தோன்றியவராக இருக்கிறார் (ஆத்மயோனி:), உலகம் இருப்பதற்கு காரணமாகவும் இவரே இருக்கிறார் (ஸ்வயம் ஜாத:), தன்னை எப்படி ஆராதனை செய்ய வேண்டும் என்ற காட்ட, தானே வைகானச ரிஷியாக வந்து வைகானச முறையை காட்டியவர் (வைகாந:), சாம கானம் செய்பவர்களை கண்டு ரசிப்பவர் (ஸாம காயன:), யாருக்கும் பிறக்காதவராக இருந்தும், நம் கிருஷ்ணன் என்று நாமும் சுலபமாக பழக, தேவகீயின் செல்ல பிள்ளையாக அவதரித்தவர் (தேவகீ நந்தன:), சர்வ லோகத்தையும் நிர்மாணம் செய்பவர் (ஸ்ரஷ்டா), அயோத்தியில் தசரத மைந்தனாக அவதரித்து இன்றும் என்றும் தானே அரசன் என்று இருப்பவர், இவரே அனைவருக்கும் ராஜா (க்ஷிதீஸ:), சர்வ பாபங்களையும் நாசம் செய்பவர் (பாப நாஸன:)


शङ्ख भृन् नन्दकी चक्री शार्ङ्ग धन्वा गदाधरः ।

रथाङ्ग पाणि रक्षोभ्यः सर्व प्रहरणायुधः ॥ १०७॥

ஸங்கப்ருந் நந்தகீ சக்ரீ

சார்ங்க-தன்வா கதாதர: |

ரதாங்க-பாணி: அக்ஷோப்ய:

ஸர்வ-ப்ரஹரணாயுத: || 107

Shankha-bhrun nandhakee chakree

shaarnga dhanvaa gadhaa-dharah |

Rathaanga-paani rakshobhyah

sarva praha-ranaa-yudhah ||

துருவன் நாராயணனை தரிசித்த போது, அவரை துதிக்க ஆசைப்பட்டான். ஆனால் என்ன சொல்வது? எப்படி பாடுவது என்று திகைக்க, ஞானத்தை தரும் சங்கத்தினால், பாலகன் துருவனின் கன்னத்தை வருடினார் பெருமாள். உடனேயே துருவன் ஸ்துதி செய்கிறான். நம் அனைவர்க்கும் ஞானத்தை தரும், ஞானத்தின் தத்துவமான சங்கை தன் கையில் வைத்து இருப்பவர் (ஸங்கப்ருந்), நந்தகம் என்ற கத்தியை இடுப்பில் சொருகி வைத்து இருப்பவர் (நந்தகீ), சுழன்று கொண்டே இருக்கும் மனதை, வசந்த குளிர் மழை வெயில் என்று சுழன்று சுழன்று வந்து கொண்டே இருக்கும் காலத்தை, பிறப்பு மரணம் என்று மீண்டும் மீண்டும் சுழலும் சம்சார சுழலை அடக்கும் சக்தி கொண்டவர் என்பதை உணர்த்தும் படியாக சுழலும் சக்கரத்தை தன் கையில் வைத்து இருப்பவர் (சக்ரீ), ஒரே வில்லிலிருந்து பல அம்புகள் பாய்வது போல, கண் என்ற ஒரு வில் நமக்கு கட்டுப்படாமல், பற்பல விஷயங்களில் விழுகிறது. 5 இந்திரியங்களும் (கண், காது, மூக்கு, தோல், நாக்கு) 5 வில்லாக நம்மிடமே இருந்து கொண்டு, அது அதற்கு இஷ்டபட்டப்படி ஆயிரக்கணக்கான வில்லை விட்டு நம்மை அலைய செய்கிறது. இதை எதிர் கொண்டு அடக்கும் சார்ங்கம் என்ற வில்லை தரித்து இருக்கிறார்.  நம் இந்திரியங்களை இஷ்டப்பட்ட படி போக விடாமல் அடக்கி வைத்து இருக்க செய்பவர். அதன் தத்துவமான சார்ங்கம் என்ற வில்லை தன் கையில் வைத்து இருப்பவர் (சார்ங்க தன்வா), நம் புத்தியை ஸ்திரமாக வைத்து இருக்க செய்பவர். புத்தி தத்துவமான கதையை தன் கையில் பிடித்து இருப்பவர் (கதாதர:), கையில் சக்கரத்தை தரித்து இருப்பவர் (ரதாங்க பாணி:), இப்படி பஞ்ச ஆயுதங்களை வைத்து இருக்கும் இவர் யாராலும் அசைக்க முடியாதபடி இருக்கிறார் (அக்ஷோப்ய:), இந்திரனின் மகன் காகம் வடிவெடுத்து சீதா தேவியை கொத்தி விட, அருகில் இருந்த புல்லை ப்ரம்மாஸ்திரமாக செலுத்தி விட்டார் ராமபிரான். இந்த பஞ்ச ஆயுதங்கள் மட்டும் தான் இவருக்கு பயன்படுத்த தெரியும் என்று இல்லை. எதையும் ஆயுதமாக பயன்படுத்த தெரிந்தவர் (ஸர்வ ப்ரஹரணாயுத:)


सर्व प्रहरणायुध ॐ नम इति । 

ஸர்வ ப்ரஹரணாயுத ஒம்‌ நம இதி

Sree sarva-praha-rana-yudha om naman ithi


वनमाली गदी शार्ङ्गी शङ्खी चक्री च नन्दकी ।

श्रीमान् नारायणो विष्णुर्वासुदेवो भिरक्षतु ॥ १०८

வனமாலீ கதீ சார்ங்கீ

ஸங்கீ சக்ரீ ச நந்தகீ |

ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர்‌

வாஸுதேவோ பிரக்ஷது || 108

(என்று 3 தடவை சொல்லவும்‌) 

Vanamalee gadhee shaarngi 

shankhee chakree cha nandhakee |

Shree-maan naaraayano vishnuh 

vaasu-dhevo bhirakshatu ||

(repeat the above two lines)

ஐந்து பூக்களை கொண்டு வைஜெயந்தி மாலையாக அணிந்து (வனமாலீ), கௌமோதகி என்னும் கதை (கதீ), சார்ங்கம் என்னும் வில் (சார்ங்கீ), பாஞ்சசன்னியம் என்னும் சங்கு (ஸங்கீ), சுதர்சன என்னும் சக்கரத்தோடு (சக்ரீ ச), நந்தகம் (நந்தகீ) என்னும் வாள் ஆகியவற்றுடன் காட்சி கொடுக்கும், நாராயண, விஷ்ணு, வாசுதேவன் என்ற நாமங்களைக் கொண்ட பகவான் என்னைக் காக்க வேண்டும் (ரக்ஷது).


इतीदं कीर्त नीयस्य केशवस्य महात्मनः ।

नाम्नां सहस्रं दिव्यानाम शेषेण प्रकीर्तितम् ॥ १॥

இதீதம்‌ கீர்த னீயஸ்ய

கேஸவஸ்ய மஹாத்மன: |

நாம்னாம் ‌ஸஹஸ்ரம்‌ திவ்யானாம்‌

அசேஷேண ப்ரகீர்த்திதம் ‌|| 1

Itheedham keertha-neeyasya 

kesha-vasya mahaathmanah |

Naamnaam sahasram divyaanaam 

ashe-kshena pra keerthitham ||

அழியாத புகழுடைய கேசவனை இவ்வாறு ஆயிரம் பெயர்களால் கீர்த்தனை செய்து பாடப்பட்டது


य इदं श‍ृणुयान् नित्यं यश्चापि परिकीर्तयेत् ।

नाशुभं प्राप्नुयात् किञ्चित्सो मुत्रेह च मानवः ॥ २॥

ய இதம்‌ ஸ்ருணுயாந் ‌நித்யம்‌

யஸ்சாபி பரி கீர்தயேத்‌ |

நாசுபம் ப்ராப்னுயாத் ‌கிஞ்சித்‌

ஸோ முத்ரேஹ ச மானவ: || 2

Ya idham shrunuyaan nithyam

yaschaapi pari keerthayet |

Naashubham-praapnuyaath-kinchith

so muthreha-cha-maanavah ||

கேசவனின் இந்த ஆயிரம் நாமங்களை வருடத்தின் எல்லா நாட்களிலும் கேட்பவர்களுக்கு அல்லது தானே கீர்த்தனை செய்பவர்களுக்கு, ஒருபோதும் கெட்டது இக-பர வாழ்க்கை இரண்டிலும் நடக்காது


वेदान्तगो ब्राह्मणः स्यात् क्षत्रियो विजयी भवेत् ।

वैश्यो धन समृद्धः स्याच् छूद्रः सुख मवाप्नुयात् ॥ ३॥

வேதாந்தகோ ப்ராஹ்மண: ஸ்யாத்‌

க்ஷத்ரியோ விஜயீ பவேத்‌|

வைஸ்யோ தன-ஸம்ருத்த ஸ்யாச்

சூத்ர: ஸுகம் அவாப்னுயாத்‌ || 3

Vedhaanthago braahmana-syaath 

kshathriyo vijayee baveth |

Vaisyo dhana-samrudh dhasyaath 

soodhra sukha mavaap-nuyaath ||

கேசவனின் இந்த ஆயிரம் நாமங்களை படிப்பதன் மூலம், பிராமணருக்கு ஞானம் உண்டாகும், க்ஷத்திரியருக்கு வெற்றி உண்டாகும், வைஸ்யருக்கு செல்வம் கிடைக்கும், சூத்ரனுக்கு இன்பம் கிடைக்கும்,


धर्मार्थी प्राप्नुयाद् धर्मम् अर्थार्थी चार्थ माप्नुयात् ।

कामान वाप्नुयात् कामी प्रजार्थी प्राप्नुयात् प्रजाम् ॥ ४॥

தர்மார்தீ ப்ராப்னுயாத் ‌தர்ம

அர்தார்தீ ச ர்தம் ஆப்னுயாத்‌|

காமான் அவாப்னுயாத் ‌காமீ

ப்ரஜார்தீ ச ப்னுயாத்‌ ப்ரஜாம்‌ || 4

Dharmaarthee praapnu-yaath dharma

arthaarthee chaartha maapnuyath|

Kaamaana-vaapnuyath-kamee 

prajaarthee chaapnu-yaath-prajaam ||

தர்மத்தில் வாழ நினைப்பவர்களுக்கு தர்மமான வாழ்க்கையும், செல்வத்தைத் தேடுபவர்களுக்கு செல்வமும், இன்பங்களைத் தேடுபவர்களுக்கு இன்பமும், குழந்தை வேண்டுபவர்களுக்கு குழந்தையும், கிடைக்க பெறுவர்.


भक्तिमान् यः सदोत्थाय शुचि स्तद् गतमानसः ।

सहस्रं वासुदेवस्य नाम्ना मेतत् प्रकीर्तयेत् ॥ ५॥

பக்திமான் ய: ஸதோத்தாய

ஸுசி: தத் கத மானஸ: |

ஸஹஸ்ரம்‌ வாஸுதேவஸ்ய

நாம்னாம் ஏதத்‌ ப்ரகீர்தயேத் ‌|| 5

Bhakthimaan ya sadhoththaaya 

shuchi-sthadhgatha maanasah |

Sahasram vaasu-devasya 

naamnaa methath prakeer thayeth ||

காலையில் எழுந்த பிறகு, அவரையே மனதுடன் நினைத்து கொண்டு, பக்தியுடன் வாசுதேவனின் ஆயிரம் பெயர்களைப் பாடுபவர்களுக்கு





यशः प्राप्नोति विपुलं ज्ञाति प्राधान्य मेव च ।

अचलां श्रिय माप्नोति श्रेयः प्राप्नोत्य नुत्तमम् ॥ ६॥

யஸ: ப்ராப்னோதி விபுலம்‌

ஞாதி ப்ராதான்யம் ஏவ ச|

அசலாம்‌ ஸ்ரீயம் ஆப்னோதி

ஸ்ரேய: ப்ராப்னோதி அனுத்தமம் || 6

Yashah praapnothi vipulam 

yaathi praadhanya meva-cha |

Achalaam sriya maapnothi 

shreyah praapnothya-nuththamam ||

தோல்வி இல்லாத புகழ் கிடைக்கும், செய்யும் செயல்களில் முதலிடம் பெறுவார்கள், நீடித்திருக்கும் செல்வத்தைப் பெறுவார்கள், சம்சார பந்தத்தில் இருந்தும் விடுபட்டு, மோக்ஷம் பெறுவார்கள்


न भयं क्वचिदाप् नोति वीर्यं तेजश्च विन्दति ।

भवत्य रोगो द्युतिमान् बलरूप गुणान्वितः ॥ ७॥

ந பயம்‌ க்வசித் ஆப்னோதி

வீர்யம் ‌தேஜஸ் ச விந்ததி |

பவத்ய ரோகோ த்யுதிமான்

பலரூப குணான் வித: || 7

Na bhayam kvachidhaap nothi 

veeryam thejas cha vindhathi |

Bhavathya rogo dhyuthimaan 

bala-roopa gunaan-vitha ||

சிறிதளவும் பயம் இவர்களை அண்டாது, வீரமும் பொலிவும் பிரகாசிக்கும் படியாக இருப்பார்கள், எந்த விதமான தீமைகளையும் பெறமாட்டார்கள், என்றென்றும் அழகாக இருப்பார்கள், நற்பண்புகளுடனும் இருப்பார்கள்.


रोगार्तो मुच्यते रोगाद् बद्धो मुच्येत बन्धनात् ।

भयान्मुच्येत भीतस्तु मुच्ये तापन्न आपदः ॥ ८॥

ரோகார்தோ முச்யதே ரோகாத்‌

பத்தோ முச்யேத பந்தனாத்‌|

பயான் முச்யேத பீதஸ்து

முச்யேத் ஆபன்ன ஆபத: || 8

Rogaartho muchyathe rogaath 

badhdho muchyetha bandhanaath |

Bhayaan muchyetha bheethasthu 

muchye thapanna apadha ||

நோய்வாய்ப்பட்டவன் குணமடைவான், கட்டுப்பட்டவன் சுதந்திரமாக பெறுவான், பயப்படுபவன் பயத்திலிருந்து விடுபடுவான், ஆபத்தில் இருப்பவன் பாதுகாப்பாக இருப்பான்.


दुर्गाण् यतितर त्याशु पुरुषः पुरुषोत्तमम् ।

स्तुवन् नाम सहस्रेण नित्यं भक्ति समन्वितः ॥ ९॥

துர்காண்யதிதர த்‌யாசு

புருஷ: புருஷோத்தமம்‌|

ஸ்துவந்‌ நாம ஸஹஸ்ரேண

நித்யம் ‌பக்தி ஸமன்வித: || 9

Durganyathithara thyaashu 

purushah purusho-ththamam |

Sthuvan naama-sahasrena 

nithyam bhakti saman-vithah ||

புருஷோத்தமனை பக்தியுடன் தியானித்து கொண்டு, தினமும் இந்த மங்களமான ஆயிரம் பெயர்களை உச்சரிப்பவருக்கு, யாராலும் கரையேற முடியாத சோக கடலான சம்சாரத்தில் இருந்து கரையேற இயலும்.


वासुदेवा श्रयो मर्त्यो वासुदेव परायणः ।

सर्वपाप विशुद्धात्मा याति ब्रह्म सनातनम् ॥ १०॥

வாஸுதேவா ஸ்ரயோ மர்த்யோ

வாஸுதேவ பராயண: |

ஸர்வபாப விஸுத்தாத்மா

யாதி ப்ரஹ்ம ஸநாதனம்‌ || 10

Vaasu-dheva-shrayo marthyo 

vaasu-dheva paraayanah |

Sarva-paapa vishudhdhaathmaa 

yaathi brahma sanaathanam ||

வாசுதேவனை நெருங்கி பக்தி செய்பவர்கள், வாசுதேவனிடம்  அடைக்கலம் அடைந்தவர்கள், எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு, தூய்மையானவர்களை விட தூய்மையாகி, கடைசியில், இவர்கள் பிரம்மத்தோடு சேர்ந்து விடுவார்கள்.


न वासुदेव भक्तानाम् अशुभं विद्यते क्वचित् ।

जन्म मृत्यु जरा व्याधि भयं नैवो पजायते ॥ ११॥

ந வாஸு தேவ பக்தானாம்‌

அசுபம்‌ வித்யதே க்வசித்‌|

ஜன்ம ம்ருத்யு ஜரா வ்யாதி

பயம்‌ நைவோ பஜாயதே || 11

Na vaasu-deva bhakthaanaam

ashubham vidhyathe kvachith |

Janma mrithyu jaraa vyaadhi

bhayam naivo pajaayathey ||

வாசுதேவனின் பக்தர்கள், ஒருநாளும், கஷ்டப்பட மாட்டார்கள், ஒரு போதும் பிறப்பு, இறப்பு, முதுமை, பயத்தை கண்டு கலங்க மாட்டார்கள்.


इमं स्तव मधीयानः श्रद्धा भक्ति समन्वितः ।

युज्येतात्म सुख क्षान्ति श्रीधृति स्मृति कीर्तिभिः ॥ १२॥

இமம்‌ ஸ்தவ மதீயான:

ஸ்ரத்தா பக்தி ஸமன்வித: |

யுஜ்யேத் த்ம ஸுக சாந்தி

ஶ்ரீத்ருதி: ஸ்ம்ருதி கீர்த்திபி: || 12

imam sthava madhee-yaanah 

shradhdha-bhakthi samanvithah |

Yujye thaathma sukha-kshaanthih 

shree-dhruthi smruthi keerthibhih ||

இந்த ஆயிரம் நாமங்களை பக்தியுடன் பாடுபவர்களுக்கு, பக்தியுடன், ஆத்ம சுகம் கிடைக்க பெறுவார்கள். பெரும் சாந்தி மனதில் உண்டாகும், தைரியமும், சிறந்த நினைவாற்றலும், புகழும் உண்டாகும்.


न क्रोधो न च मात्सर्यं न लोभो नाशुभा मतिः ।

भवन्ति कृत पुण्यानां भक्तानां पुरुषोत्तमे ॥ १३॥

ந க்ரோதோ ந ச மாத்ஸர்யம்‌

ந லோபோ நாசுபா மதி: |

பவந்தி க்ருத புண்யானாம்‌

பக்தானாம்‌ புருஷோத்தமே || 13

Na krodho na cha maathsaryam 

na lobho naashubhaa mathih |

Bhavanthi krutha punyaanaam 

bhakthaanaam purushoththame ||

புருஷோத்தமனான வாசுதேவனின் பக்தர்களுக்கு, கோபமோ, பொறாமையோ, பேராசையோ, மோசமான எண்ணங்களோ ஏற்படாது.


द्यौः सचन्द्रार्क नक्षत्रा खं दिशो भूर्महो दधिः ।

वासुदेवस्य वीर्येण विधृतानि महात्मनः ॥ १४

த்யெள: ஸ சந்த்ரார்க நக்ஷத்ரா

கம் திசோ பூர்‌மஹோ ததி: |

வாஸுதேவஸ்ய வீர்யேண

வித்ருதானி மஹாத்மன: || 14

Dhyau sa chandhraarka nakshathraa

kham dhisho bhoormaho dhadhih |

Vaasu-dhevasya veeryena

vidhruthaani mahaath-manah ||

உலகத்தில் காணப்படும் சூரியன், நட்சத்திரங்கள், சந்திரன், வானம், கடல் மற்றும் திசைகள் ஆகிய அனைத்தும் பகவான்  வாசுதேவனால் படைக்கப்பட்டவையே


ससुरा सुर गन्धर्वं सयक्षोरग राक्षसम् ।

जगद्वशे वर्त तेदं कृष्णस्य सचराचरम् ॥ १५

ஸஸுரா ஸுர கந்தர்வம்‌

ஸயக்ஷோரக ராக்ஷஸம்‌|

ஜகத்வசே வர்த தேதம்‌

க்ருஷ்ணஸ்ய ஸ சராசரம் ‌|| 15

Sa-suraa-sura gandharvam 

sayakshoraga raakshasam |

Jagadhvashe vartha-thedham 

krishnasya sa charaacharam ||

இந்த உலகத்தில் உள்ள உயிருள்ளவையும், உயிரற்றவையும்,தேவர்களும், ராக்ஷஸர்களும், கந்தர்வர்களும், அசுரர்களும் மற்றும் நாகர்களும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரில் அடக்கம்.


इन्द्रियाणि मनो बुद्धिः सत्त्वं तेजो बलं धृतिः ।

वासुदेवात्म कान्याहुः क्षेत्रं क्षेत्रज्ञ एव च ॥ १६॥

இந்த்ரியாணி மனோ புத்தி:

ஸத்வம்‌ தேஜோ பலம்‌ த்ருதி: |

வாஸுதேவ ஆத்ம கான்யாஹூ:

க்ஷேத்ரம்‌ க்ஷேத்ரஞ்ஞ ஏவ ச || 16

Indri-yaani mano-budhdhih 

sathvam thejo-balam dhruthih |

Vaasu-devaathma kaanyaahuh 

kshethram-kshetragya eva cha ||

நம்முடைய பஞ்ச இந்திரியங்களும், மனமும், ஞானமும், சிந்தனையும், வலிமையும், துணிச்சலும், உடலும் ஆன்மாவும்  வாசுதேவனே!


सर्वागमाना माचारः प्रथमं परिकल्प्यते ।

आचार प्रभवो धर्मो धर्मस्य प्रभु रच्युतः ॥ १७॥

ஸர்வ கமானாம் சார:

ப்ரதமம் ‌பரிகல்பதே |

ஆசார ப்ரபவோ தர்மோ

தர்மஸ்ய ப்ரபு ரச்யுத: || 17

Sarva aagamaanaam aachaarah 

prathamam pari-kalpathe |

Aachaara prabhavo dharmo 

dharmasya prabhu: achyuthah ||

அனைத்து சாஸ்திர (ஆகமவிதிகளும் அவரவர் ஆசாரத்தை காட்டுகிறது. ஆசாரமான வாழ்க்கை முறை அவரவர் தர்மத்தை காட்டுகிறது. தர்மமான வாழ்க்கையே அந்த பிரபுவான அச்சுதனை காட்டி விடும்.


ऋषयः पितरो देवा महाभूतानि धातवः ।

जङ्गमा जङ्गमं चेदं जगन् नारायणोद् भवम् ॥ १८॥

ருஷய: பிதரோ தேவா:

மஹா பூதானி தாதவ: |

ஜங்கமா ஜங்கமம்‌ சேதம்‌

ஜகந் ‌நாராயணோத் பவம் || 18

Rushayah pitharo dhevaah 

mahaa-bhoothani dhaathavah |

Jangamaa-jangamam chedham 

jagan naarayanodh bhavam ||

நாராயணரிடமிருந்தே அனைத்து முனிவர்களும், அனைத்து மூதாதையர்களும், அனைத்து தேவர்களும், பஞ்ச பூதங்களும், அனைத்து இன்பங்களும், அனைத்து அதிர்ஷ்டங்களும், அசையும் வஸ்துக்களும், அசையாத வஸ்துக்களும் உற்பத்தியாயின


योगो ज्ञानं तथा साङ्ख्यं विद्याः शिल्पादि कर्म च ।

वेदाः शास्त्राणि विज्ञानम् येतत्सर्वं जनार्दनात् ॥ १

யோகோ ஞானம்‌ ததா ஸாங்க்யம்‌

வித்யா: சில்பாதி கர்மச|

வேதா: சாஸ்த்ராணி விஞ்ஞானம்‌

ஏதத் ‌ஸர்வம் ‌ஜனார்தனாத் ‌|| 19

Yogo gyaanam thathaa saankhyam 

vidhyaa shilpaadhi karma-cha |

Vedhaa shasthraani vigyaanaam 

yethath-sarvam janaardhanaath ||

யோகமும், சாங்க்ய (ஞானமும்), பேரறிவும், சிற்ப கலையும், மற்றும் அனைத்து வேதங்களும், அறிவியலும், இவை அனைத்தும் ஜனார்த்தனன் மூலமாக வந்தவையே !


एको विष्णुर्महद् भूतं पृथग्भूतान् यनेकशः ।

त्रींल्लोकान् व्याप्य भूतात्मा भुङ्क्ते विश्व भुगव्ययः ॥ २०॥

ஏகோ விஷ்ணு: மஹத் பூதம்‌

ப்ருதக் ‌பூதான் யநேகஸ: |

த்ரீல்-லோகான் வ்யாப்ய பூதாத்மா

புங்க்தே விஸ்வ புகவ்யய: || 20

Eko-vishnur mahadh bhootham 

pruthag bhoothaan yanekasah |

Threen-lokaan-vyaapya-bhoothaathmaa 

bhungthe vishva-bhugav yayah ||

விஷ்ணு ஒருவரே பரமாத்மா! அதே சமயம், அவரே பலவாக பிரிந்து, அனைத்து தேகத்திலும் இருக்கிறார், மூன்று உலகங்களையும் இவரே ஆளுகிறார், இவருக்கு மரணமும் இல்லை, சிதைவும் இல்லை.


इमं स्तवं भगवतो विष्णोर्व्यासेन कीर्तितम् ।

पठेद्य इच्छेत्पुरुषः श्रेयः प्राप्तुं सुखानि च ॥ २१॥

இமம் ‌ஸ்தவம்‌ பகவதோ

விஷ்ணோ: ‌வ்யாஸேன கீர்திதம்‌ |

படேத்ய இச்சேத் ‌புருஷ:

ஸ்ரேய: ப்ராப்தும் ‌ஸுகானி ச || 21

imam sthavam bhagavatho 

vishnor-vyaasena keerthitham |

Pateydhya ichheyth purusha 

shreya praapthum sukhaani-cha ||

புகழ் மற்றும் இன்பத்தை விரும்புபவர்கள், வியாசரால் பாடப்பட்ட விஷ்ணுவின் இந்த 1000 நாமங்கள் கொண்ட இந்த கீர்த்தனையை  தவறாமல் பாட வேண்டும்


विश्वेश्वर मजं देवं जगतः प्रभुमव्ययम् ।

भजन्ति ये पुष्कराक्षं न ते यान्ति पराभवम् ॥ २२॥

விஸ்வேஸ்வரம் அஜம்‌ தேவம்‌

ஜகத: ப்ரபும் அவ்யயம்‌|

பஜந்தி யே புஷ்கராக்ஷம்‌

ந தே யாந்தி பராபவம்‌ || 22

Vishveshvaram ajam dheyvam 

jagatha prabhum avyayam |

Bhajanthi ye pushka-raaksham 

na they yaanthi paraa-bhavam ||

பிறப்பற்றவராக, என்றும் நிலையாக இருக்கும், கோடி சூர்ய ப்ரகாசத்தோடு ஜொலிக்கும், தாமரை போன்ற கண்களுடைய அகிலாண்ட கோடி பிரம்மாண்டத்தை ஆளும் நாதனை புகழ்ந்து யார் பாடுவார்களோ அவர்கள் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார்கள்.


न ते यान्ति पराभवम् ॐ नम इति ।

ந தே யாந்தி பராபவம் ஓம் நம இதி

Na they yaanthi paraa-bhavam om nama iti

அவர்கள் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார்கள்


अर्जुन उवाच --- அர்ஜுன உவாச 

ARJUNA UVACHA


पद्मपत्र विशालाक्ष पद्मनाभ सुरोत्तम ।

भक्ताना मनुरक्तानां त्राता भव जनार्दन ॥ २३॥

பத்மபத்ர விசாலாக்ஷ

பத்மநாப ஸுரோத்தம |

பக்தானா அனு ரக்தானாம்‌

த்ராதா பவ ஜநார்தன || 23

Padma-pathra vishaa-laaksha 

padma-naabha suro-ththama |

Bhakthaanaa anu-rakthaanaam 

thraathaa bhava janaardhana ||

தாமரை பூவின் இதழ் போல கண்கள் உடைய, நாபியில் ப்ரம்ம தேவன் அமர்ந்திருக்கும் தாமரை பூவை உடைய, தன் கண்களால் அனைத்தையும் பார்க்கவல்ல, தேவர்களுக்கெல்லாம் தேவனான, ஜனார்தனா! உங்களிடம் ஆசையோடு வந்திருக்கும் என் மீது கருணையை காட்டுங்கள். எனக்கு அடைக்கலம் தாருங்கள்.


श्रीभगवानुवाच ---ஸ்ரீ பகவானுவாச-

SHREE BHAGAVAN UVACHA


यो मां नाम सहस्रेण स्तोतुमिच्छति पाण्डव ।

सोह मेकेन श्लोकेन स्तुत एव न संशयः ॥ २४॥

स्तुत एव न संशय ॐ नम इति ।

யோ மாம்‌ நாம ஸஹஸ்ரேண

ஸ்தோதும் இச்சதி பாண்டவ |

ஸோஹம் ஏகேன ஸ்லோகேன

ஸ்துத ஏவ ந ஸம்ஸய: || 24

ஸ்துத ஏவ ந ஸம்ஸய ஓம்‌ நம இதி

Yo-maam naama sahasrena 

sthothu michchathi paandava |

Sohamekena slokena 

sthutha eva na samshayah ||

Sthutha eva na samshaya om nama iti

அர்ஜுனா! என்னிடம் விருப்பம் கொண்டு, என் புகழ் பாட ஆசைப்பட்டு, இந்த ஆயிரம் நாமங்களையும் கீர்த்தனை செய்ய என் பக்தன் ஆசைப்படுவான். அர்ஜுனா ! இருந்தாலும் சொல்கிறேன் கேள். என் மீது பிரியமுள்ள அப்படிப்பட்ட பக்தன் இந்த சஹஸ்ரநாமத்தில் ஒரு ஸ்லோகத்தை படித்தால் கூட, சந்தேகமில்லாமல், நான் அவனை கண்டு ப்ரீதி அடைகிறேன்..

சந்தேகமில்லாமல், நான் அவனை கண்டு ப்ரீதி அடைகிறேன்.


व्यास उवाच --- வ்யாஸ உவாச-

VYASA UVACHA


वासनाद् वासुदेवस्य वासितं भुवनत्रयम् ।

सर्वभूत निवासोऽसि वासुदेव नमोऽस्तु ते ॥ २५॥

श्री वासुदेव नमोऽस्तुत ॐ नम इति ।

வாஸனாத்‌ வாஸுதேவஸ்ய

வாஸிதம்‌ புவனத்ரயம்‌ |

ஸர்வபூத நிவாஸோஸி

வாஸுதேவ நமோஸ்துதே || 25

வாஸுதேவ நமோஸ்துத ஒம்‌ நம இதி


Vaasanaadh vaasu dhevasya 

vaasitham bhuvanathrayam |

Sarva-bootha nivaasosi 

vaasudheva namosthuthey ||

Vaasu-deva namosthutha om nama iti

வாசுதேவனே உலகம் முழுவதுமாக மறைந்து இருக்கிறார். அவரால் தான் உலகம், வாழ தகுதியான இடமாக இருக்கிறது. வாசுதேவனே அனைத்து உயிராகவும் (ஆத்மாவாகவும்) இருக்கிறார். அந்த வாசுதேவனுக்கு என் நமஸ்காரம்.

வாசுதேவனுக்கு என் நமஸ்காரம்.




पार्वत्युवाच --- ஸ்ரீ பார்வத்யுவாச-

PARVATI UYVACHV


केनोपायेन लघुना विष्णोर्नाम सहस्रकम् ।

पठ्यते पण्डितैर् नित्यं श्रोतुमिच्छाम् यहं प्रभो ॥ २६॥

கேன: உபாயேன லகுனா

விஷ்ணோ: நாம ஸஹஸ்ரகம்‌ |

பட்யதே பண்டிதை: நித்யம்

ஸ்ரோதும் இச்சாமி அஹம்‌ ப்ரபோ || 26

Keno-paayena laghunaa 

vishnor-naama sahasrakam |

Patyathey pandithair nithyam 

srothu michhaam yaham prabho ||

ப்ரபோ! இந்த ஆயிரம் நாமங்களையும் தினமும் தவறாமல் பண்டிதர்கள் படிக்க, சுலபமாகவும் சுருக்கமாகவும் சொல்ல வழி இருக்கிறதா? என்று அறிய ஆசைப்படுகிறேன்



ईश्वर उवाच ---ஸ்ரீ ஈஸ்வர உவாச

ESHWARA UVACHA


श्रीराम राम रामेति रमे रामे मनोरमे ।

सहस्रनाम तत्तुल्यं राम नाम वरानने ॥ २७॥

ஸ்ரீ ராம ராம ராமேதி

ரமே ராமே மனோரமே |

ஸஹஸ்ர நாம தத்துல்யம்‌

ராம நாம வரானனே || 27

(என்று 3 தடவை சொல்லவும்)

Shree-raama raam raameti 

ramey raamey mano-ramey |

Sahasra naama thath thulyam 

raama-naama varaa-nane ||

(The above 2 lines read 3  times)

ரமிக்க செய்பவளே (ரமே)!  "ராம ராம ராம" என்று தாரக (கரையேற்றும்) மந்திரத்தை அந்த ஸ்ரீராமபிரானை மனதில் நினைத்து கொண்டு மூன்றே மூன்று முறை மட்டும் சொன்னால், அது இந்த ஆயிரம் நாமங்களையும் சொன்னதற்கு சமம்.


श्रीरामनाम वरानन ॐ नम इति ।

ராம நாம வரானன ஓம்‌ நம இதி

Raama-naama varaa-nana om nama iti


     ब्रह्मोवाच --- ப்ரஹ்மோவா

BRAMHO UVACHA


नमो स्त्व नन्ताय सहस्र मूर्तये

सहस्र पादाक्षि शिरोरु बाहवे ।

सहस्र नाम्ने पुरुषाय शाश्वते

सहस्र कोटि युग धारिणे नमः ॥ २८

நமோஸ்து அனந்தாய ஸஹஸ்ர மூர்த்தயே

ஸஹஸ்ர பாதாக்ஷி சிர உரு பாஹவே |

ஸஹஸ்ர நாம்னே புருஷாய சாஸ்வதே

ஸஹஸ்ர கோடி யுகதாரிணே நம: || 28

Namosthva nanthaaya sahasra moorthaye

Sahasra paadhaakshi shiroru-baahave |

Sahasra naamne purushaaya shaashvate

Sahasra koti-yugadharine namah ||

எல்லையற்ற, ஆயிரக்கணக்கான வடிவங்கள், ஆயிரக்கணக்கான தலைகள், ஆயிரக்கணக்கான கால்கள், ஆயிரக்கணக்கான கைகள் கொண்ட, ஆயிரக்கணக்கான பெயர்கள் கொண்ட, ஆயிரக்கணக்கான கோடி யுகங்களாக என்றுமே இருந்து கொண்டிருக்கும் புருஷரை வணங்குகிறேன்


सहस्र कोटि युगधारिणे ॐ नम इति ।

ஸஹஸ்ர கோடி யுக தாரிணே ஒம்‌ நம இதி

Sahasra koti yuga-dhaarine om nama iti


सञ्जय उवाच --- ஸஞ்ஜய உவாச

SANJAYA UVACHA


यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः ।

तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम ॥ २९॥

யத்ர யோகேஸ்வர: க்ருஷ்ணோ

யத்ர பார்தோ தனுர்தர: |

தத்ர ஸ்ரீ: விஜயோ பூதி:

த்ருவா நீதி: மதி: மம || 29

Yathra yogeshvara krushno 

yathra paartho dhanur-dharah |

Thathra-shreer vijayo bhoothir 

dhruvaa neethir mathir mama ||

எங்கு யோகேஸ்வரனான ஸ்ரீ கிருஷ்ணர் இருக்கிறாரோ, எங்கு வில்லாளன் அர்ஜுனன் இருக்கிறாரோ, அங்கு அனைத்து செல்வமும் வெற்றியும், தர்மமும் இருக்கும். இது என் தீர்மானம்.


श्रीभगवानुवाच ---ஸ்ரீ பகவானுவாச

SHREE BHAGAVAANU-VACHA


अनन्याश् चिन्तयन्तो मां ये जनाः पर्युपासते ।

तेषां नित्याभि युक्तानां योगक्षेमं वहाम्यहम् ॥ ३०॥

அனன்யாஸ் சிந்தயந்தோ மாம்

யே ஜனா: பர்யு பாஸதே |

தேஷாம் நித்யாபி யுக்தாநாம்

யோகக்ஷேமம் வஹாம் யஹம் || 30

Ananyaas chintha-yantho maam 

ye janaah paryu-paasathey |

Theshaam nithyaabhi yukthanaam 

yoga-kshemam vahaam yaham ||

யார் என்னையே நினைத்து கொண்டு இருக்கிறார்களோ! அவர்களுடைய யோக-க்ஷேமத்தை நானே கவனித்து கொள்கிறேன். இதில் துளியும் சந்தேகமில்லை.


परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् ।

धर्म संस्थाप नार्थाय सम्भवामि युगे युगे ॥ ३१॥

பரித்ராணாய ஸாதூனாம்‌

விநாசாய ச துஷ்க்ருதாம்‌ |

தர்ம ஸம்ஸ்தாபன ர்த்தாய

ஸம்பவாமி யுகே யுகே || 31

Parith raanaaya saadhoonaam 

vinaasaaya chadhush kruthaam |

Dharma samsthaapa naardhaaya 

sambha-vaami yuge yuge ||

தர்மத்தில் இருக்கும் சாதுக்களை ரக்ஷிக்க, இவர்களை வாழ விடாமல் கெடுக்கும் துர் புத்தி கொண்டவர்களை ஒடுக்க, தர்மத்தை காக்க, நான் அவதரித்து கொண்டே இருக்கிறேன்.


आर्ताः विषण्णाः शिथिलाश्च भीताः घोरेषु च व्याधिषु वर्तमानाः ।

सङ्कीर्त्य नारायण शब्द मात्रं विमुक्त दुःखाः सुखिनो भवन्तु ॥

ஆர்தா விஷண்ணா: சிதிலாஸ்ச பீதா:

கோரேஷுச வ்யாதிஷு வர்த்தமானா: |

ஸங்கீர்த்ய நாராயண ஸப்த மாத்ரம்‌

விமுக்த து:கா: ஸுகினோ பவந்து || 32

Aarthaa-vishanna-shithilaascha bheethaah 

ghoreshu cha-vyaadhishu-varthamaanaah |

Sankeerthya-naaraayana-shabdha-maathram 

vimuktha-dukhaah-sukhino-bhavanthi ||

கவலைப்படுபவர்கள், சோகத்தால் சூழப்பட்டவர்கள், தோல்வியுற்று உடைந்து போனவர்கள், பயப்படுபவர்கள், கொடுமையான  நோய்க்கு உட்பட்டவர்கள், எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் அபாயத்தை நினைப்பவர்கள் "நாராயணா!|" என்ற நாமத்தை மட்டும் பாடினால் கூட, அவனுடைய அனைத்தும் துக்கமும் அழிந்து, அனைத்து சுகமும் ஏற்படும்.


कायेन वाचा मनसेन्द्रियैर्वा बुद्ध्यात्मना वा प्रकृतेः स्वभावात् ।

करोमि यद्यत् सकलं परस्मै नारायणा येति समर्पयामि ॥ ३३॥

காயேன வாசா மனஸே ந்த்ரியை: வா

புத்யாத் மனாவா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்‌ |

கரோமி யத் யத்‌ ஸகலம்‌ பரஸ்மை

நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||

Kaayena vaachaa manasendhri yairvaa

Buddhyaath manaavaa prakruthe-svabhaavaath

Karomi yadhyath sakalam parasmai

Naaraayanaa yeti samarpayami

சரீரத்தாலோ, வாக்கினாலோ, மனதாலோ, பஞ்ச  கர்ம இந்திரியங்களாலோ, பஞ்ச  ஞான இந்திரியங்களாலோ, புத்தியாலோ, இயற்கையின் தூண்டுதளாலோ, எது எதையெல்லாம் செய்தேனோ! அதையெல்லாம் பரமபுருஷனான நாராயணனுக்கே சமர்ப்பணம் செய்கிறேன்.

 

ॐ तत् सत् ।