Followers

Search Here...

Showing posts with label Rama Rajya. Show all posts
Showing posts with label Rama Rajya. Show all posts

Friday, 28 May 2021

Rama Rajya - How people lived under the Rule of Ram? ராம ராஜ்யம் - ராமபிரான் அரசாட்சியில் மக்கள் எப்படி வாழ்ந்தனர்? தெரிந்து கொள்வோம் - வால்மீகி ராமாயணம்

Rama Rajya - How people lived under the Rule of Ram? 

ராம ராஜ்யம் - ராமபிரான் அரசாட்சியில் மக்கள் எப்படி வாழ்ந்தனர்? தெரிந்து கொள்வோம் - வால்மீகி ராமாயணம் 

राज्यन् दशसहस्राणि प्राप्य वर्षाणि राघवः |

शताश्वमेधानाजह्रे सदश्वान्भूरिदक्षिणान् ||

-  वाल्मीकि रामायण

ராஜ்யன் தச சஹஸ்த்ராணி 

ப்ராப்ய வர்ஷாணி ராகவ: |

சத அஸ்வமேதான் ஆஜஹ்னே 

சத அஸ்வான்  பூரிதக்ஷிணம் ||

- வால்மீகி ராமாயணம் 

பத்தாயிரம் வருடங்களுக்கு மேல் ராமபிரான் ஆட்சி செய்து, நிறைய தக்ஷிணைகள் கொடுத்து, நூறு அஸ்வமேத யாகங்கள் செய்து புகழ் பெற்றார்.

Ram ruled kingdom for ten thousand years, Rama performed a hundred of aswamedha yagya and numerous gifts bestowed





न पर्यदेवन् विधवा न च व्यालकृतं भयम् |

न व्याधिजं भयन् वापि रामे राज्यं प्रशासति ||

-  वाल्मीकि रामायण

ந பர்யதேவன் விதவா 

ந ச வ்யாலக்ருதம் பயம் |

ந வ்யாதிஜம் பயன் வாபி 

ராமே ராஜ்யம் ப்ரஸாசதி ||

- வால்மீகி ராமாயணம்

ராமராஜ்யத்தில், கணவனை இழந்து யாரும் விதவை ஆகவில்லை. விஷ ஜந்துக்கள் கடிக்குமே! என்ற பயமோ, வியாதி வருமே! என்ற கவலையோ யாருக்கும் இருக்கவில்லை. 

While Rama was ruling the kingdom, there were no widows to lament, nor there was no danger from wild animals, nor any fear born of diseases.


निर्दस्युरभवल्लोको नानर्थः कन् चिदस्पृशत् |

न च स्म वृद्धा बालानां प्रेतकार्याणि कुर्वते || 

-  वाल्मीकि रामायण

நிர்தஸ்யு பவத் லோகே

ந அனர்த: கஸ்சித் அஸ்ப்ருஷத் |

ந ச ஸ்ம வ்ருத்தா பாலானா

 ப்ரேத காரியாணி குர்வதே ||

- வால்மீகி ராமாயணம் 

ராமபிரான் ராஜ்யத்தை ஆளும் பொழுது ஜனங்கள் நிம்மதியாக கஷ்டங்கள் எதுவும் இன்றி வாழ்ந்தனர். திருடர்கள் இல்லாமல் உலகம் கவலையின்றி இருந்தது. மற்றவர்கள் பொருளை யாரும் தொடக் கூட மாட்டார்கள் என்ற நிலை இருந்தது. முதியவர்கள் பாலர்களுக்கு அந்திம சம்ஸ்காரங்கள் செய்யும்படியாக ஒரு சம்பவம் கூட நிகழவில்லை.

The world was bereft of thieves and robberies. No one felt worthless nor did old people perform obsequies concerning youngsters.


सर्वं मुदितमेवासीत्सर्वो धर्मपरोअभवत् |

राममेव अनुपश्यन्तो न अभ्यहिन्सन् परस्परम् ||

-  वाल्मीकि रामायण

ஸர்வம் முதிதமேவ அஸீத் 

சர்வா தர்மோபரோ அபவத் |

ராமமேவ அனுபஸ்யந்தோ 

ந அப்ய-ஹின்ஸன் பரஸ்பரம் ||

- வால்மீகி ராமாயணம் 

எங்கும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. எங்கும் தர்மமே தலை தூக்கி நின்றது. ராமனையே அனுசரித்து அனைவரும் இருந்தனர். யாரும், தங்களுக்குள் சண்டையிடுவதில்லை.  அடித்துக் கொள்வதில்லை. 

Every living beings felt pleased. Every one was intent on virtue. Everyone's eye fixed towards Rama alone. No one killed one another.


आसन्वर्षसहस्राणि तथा पुत्रसहस्रिणः |

निरामया विशोकाश्च रामे राज्यं प्रशासति ||

-  वाल्मीकि रामायण

ஆஸன் வர்ஷ சஹஸ்ராணி 

ததா புத்ர சஹஸ்ரிண: |

நிராமயா விசோகா: ச 

ராமே ராஜ்யம் ப்ரசாஸதி || 

- வால்மீகி ராமாயணம்

அனைவரும் ஆயிரம் வருஷங்கள் ஆயிரக் கணக்கான புத்திரர்களோடு வாழ்ந்தனர். ராமபிரான் ராஜ்யத்தை ஆளும் பொழுது ஜனங்கள் வியாதியின்றி, வருத்தம் இன்றி, சுகமாக இருந்தனர். 

While Rama was ruling the kingdom, people survived for thousands of years, with thousands of their progeny, all free of illness and grief.

रामो रामो राम इति प्रजानाम् अभवन् कथाः |

रामभूतं जगाभूद् रामे राज्यं प्रशासति ||

-  वाल्मीकि रामायण

ராமோ ராமோ ராம இதி

ப்ரஜாநாம் அபவன் கதா: |

ராமபூதம் ஜகாபூத்

ராமே ராஜ்யம் ப்ரஸாசதி || 

- வால்மீகி ராமாயணம்

ராமா, ராமா, ராமா' என்றே ப்ரஜைகள் எப்பொழுதும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.  கதைகள் பேசினாலும், ராமனைச் சுற்றியே, ராமனைப் பற்றியே பேசினர்.  ராம மயமாகவே உலகம் விளங்கியது. ராமபிரான் ராஜ்யத்தை ஆளும் பொழுது ஜனங்களின் மனதில் ராமரே நிறைந்திருந்தார். 

While Rama ruled the kingdom, the talks of the people centered round Rama, Rama and Rama. The world became Rama's world.





नित्यपुष्पा नित्यफला: तरवः स्कन्धविस्तृताः |

कालवर्षी च पर्जन्यः सुखस्पर्शश्च मारुतः ||

-  वाल्मीकि रामायण

நித்ய-புஷ்பா நித்ய-பலா:

தரவ: ஸ்கந்த-விஸ்த்ருதா: |

காலவர்ஷீ ச பர்ஜன்ய:

சுக-ஸ்பர்ச: ச மாருத: || 

- வால்மீகி ராமாயணம்

மரங்கள் நித்யம் பூத்துக் குலுங்கின. அனைத்து காலங்களிலும் அனைத்து விதமானபழங்கள் பழுத்துத் தொங்கின. கிளைகள் படர்ந்து விஸ்தாரமாக நின்றன.  பருவ காலங்களில் விடாது மழை பெய்தது.  காற்று இதமாக வீசியது. 

The trees there were bearing flowers and fruits regularly, without any injury by pests and insects. The clouds were raining in time and the wind was delightful to the touch.


ब्राह्मणाः क्षत्रिया वैश्याः शूद्रा लोभविवर्जिताः |

स्वकर्मसु प्रवर्तन्ते तुष्ठाः स्वैरेव कर्मभिः ||

-  वाल्मीकि रामायण

ப்ராஹ்மணா: க்ஷத்ரியா வைஸ்யா: 

சூத்ரா லோப விவர்ஜிதா: |

ஸ்வ-கர்மசு ப்ரவர்தந்தே 

துஷ்டா: ஸ்வை: ஏவ கர்மபி: || 

- வால்மீகி ராமாயணம்

ப்ராம்மணர்களோ, க்ஷத்திரியர்களோ, வைஸ்யர்களோ, சூத்ரர்களோ, யாராக இருந்தாலும் பேராசை இன்றி, அவரவர் வேலைகளை நியாயமாக செய்து கொண்டிருந்தனர்.  தங்கள் தங்கள் கடமைகளை ஈடுபாட்டுடன் செய்தனர். தங்கள் செயல்களிலேயே திருப்தியுடன் இருந்தனர். 

Brahmins (the priest-class), Kshatriyas (the warrior-class), Vaishyas (the class of employers, merchants and agriculturists), Shudras (the employee-class) were performing their own duties, satisfied with their own work and bereft of any greed.


आसन् प्रजा धर्मपरा रामे शासति नानृताः |

सर्वे लक्षण-सम्पन्नाः सर्वे धर्म-परायणाः ||

दश-वर्ष सहस्राणि रामो राज्यम् अकारयत् |

वाल्मीकि रामायण

ஆஸன் ப்ரஜா தர்மபரா

ராமே சாஸதி ந அன்ருதா: |

சர்வே லக்ஷண சம்பண்ணா:

சர்வே தர்ம-பராயணா: || 

தச-வர்ஷ சஹஸ்ராணி

ராமோ ராஜ்யம் அகாரயத் |

- வால்மீகி ராமாயணம்

ப்ரஜைகள் தர்மத்தில் நம்பிக்கையுடன் அனுசரித்தும் வந்தனர். அனைத்து மக்களும் சிறந்த குணாதிசயங்களைக் கொண்டிருந்தனர். அனைவரும் நல்லொழுக்கத்திலேயே இருந்தனர். ராமபிரான் இவ்வாறு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் அரசாட்சி புரிந்தார்.

While Rama was ruling, the people were intent on virtue and lived without telling lies. All the people were endowed with excellent characteristics. All were engaged in virtue. Rama was engaged in the kingship thus for one thousand years.

Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram

Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram

Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram

Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram