Followers

Search Here...

Showing posts with label பழங்குடி. Show all posts
Showing posts with label பழங்குடி. Show all posts

Saturday, 5 March 2022

பழங்குடி தமிழன் பற்றி தெரிந்து கொள்வோம். அந்தணன் யார்? அவன் கடமை என்ன? என்ன சாப்பிடுவான்? சங்க இலக்கியம் என்ன சொல்கிறது? யார் தமிழன்?

வேதத்தில் "வேள்விகள் சொல்லப்பட்டு இருக்கிறது" என்று புறநானூறு சொல்கிறது.

"வேத வேள்வி தொழில் முடித்ததுவும்" (வேதத்தில் சொல்லப்பட்ட விதிப்படி வேள்வியை செய்யவும்) என்று புறநானூறு சொல்கிறது.

அதே போல, 

சங்க இலக்கியமான மதுரை காஞ்சி.. "வேதத்தை எப்படி ஓதுவார்கள் அந்தணர்கள்?" என்று சொல்கிறது.


"தாதுண் தும்பி போது முரன்றாங்கு ஒதல் அந்தணர் வேதம் பாட" (வண்டு ரீங்காரம் செய்வது போல (in resonance), அந்தணராகள் வேதம் ஓதுவார்கள்) என்று சொல்கிறது.

சங்க இலக்கியமான மதுரை காஞ்சி சொல்வதை போல, பல ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகியும், இன்றும் தமிழ் அந்தணர்கள் வேதத்தை ஓதுகிறார்கள் என்று பார்க்கும் போது, இந்த அந்தணர்கள் சங்க இலக்கியத்தின் சத்தியத்தை நிரூபிப்பது தெரிகிறது. 


வாழ்க தமிழ் பழங்குடி அந்தணர்கள்.


'உலக வாழ்க்கை, சம்பாத்தியம் போன்றவற்றில் ஈடுபடாமல், வேதத்தை ஓதும் பெரும் பொறுப்பை அந்தண சமூகம் ஏற்று இருந்தது' என்ற தொடர்பை சங்க இலக்கியம் 'அந்தணர் அருமறை', 'அந்தணர் வேதம்' போன்ற சங்க இலக்கியங்கள் நமக்கு வாக்கு மூலம் கொடுக்கிறது.


வேதத்தை ஓதும் இந்த அந்தணர்கள் யார்? 

அந்தணர்கள் பண்பாடு எப்படி இருந்தது? 

என்று சங்க இலக்கியமே சொல்கிறது.

சங்க இலக்கியமான, திருமுருகாற்றுப்படையில் இதற்கான பதில் வருகிறது…

"இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது…" 

என்று தொடங்கும் பாடலில், 'அந்தணர்களுக்கு 6 கடமைகள் உண்டு' என்று சொல்கிறது.


வேதத்தில் உள்ள தர்ம சாஸ்திரம் அந்தணர்களுக்கு (ப்ராம்மணர்களுக்கு) சொல்லும் 6 கடமைகளை, சங்க இலக்கியமான, திருமுருகாற்றுப்படையும் சொல்கிறது.

அந்தணர்களின் 6 கடமைகள் என்ன?

ஓதல் (அத்யயனம் - வேதத்தை கற்பது), 

ஓதுவித்தல் (அத்யாபனம் - வேதத்தை கற்று வைத்தல்) , 

வேட்டல் (யஜனம் - வேள்வியை நடத்துதல்) , 

வேட்பித்தல் (யாஜனம் -வேள்வியை மற்றவருக்கு நடப்பித்தல்), 

ஏற்றல் (ப்ரதிகிரஹம் - தானத்தை ஏற்றுக்கொள்ளுதல்), 

ஈதல் (தானம் - தானம் கொடுத்தல்), 

ஆகிய 6ம் அந்தணர்கள் விடக்கூடாத கடமைகள் என்று சங்க இலக்கியம், வேத தர்ம சாஸ்திரம் சொன்னபடியே சொல்கிறது.

சங்க இலக்கியமான, திருமுருகாற்றுப்படையில் 

'6 கடமைகள் (இரு மூன்று எய்திய) என்று தானே சொல்லி உள்ளது? அது வேத தர்ம சாஸ்திரம் சொன்ன அதே 6 கடமையை தான் சொல்கிறது என்று எப்படி சொல்ல முடியும்?' என்ற கேள்விக்கு பதிலை, மற்றொரு சங்க இலக்கியமான, பதிற்றுபத்து சொல்கிறது.

"ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல், ஈதல், எற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம் புரி அந்தணர்..' 

என்று தெளிவாக 'அந்தணர்களின் 6 கடமைகள் என்னென்ன?' என்று பதிற்றுபத்து பதில் சொல்கிறது.

மேலும், 

"இருவர் சுட்டிய" என்ற பதம் மூலம், 'இந்த அந்தணனை, பெற்ற தாய்-தந்தையர்கள் தூய்மையான நடத்தை உடையவர்களாக இருந்தார்கள்' என்று கொண்டாடுகிறது.


பழங்குடியினருக்கு சலுகைகள் அரசாங்கம் கொடுக்கிறது... 

ஆனால், உண்மையான பழங்குடி யார்? என்று அரசாங்கம் சங்க இலக்கியங்களை படித்து முடிவு செய்ததாக தெரியவில்லை.


சங்க இலக்கியமான "திருமுருகாற்றுப்படை", அந்தணர்களே தமிழகத்தில் இருந்த "பழங்குடியினர்" (தொல்குடி) என்று தெளிவாக சொல்கிறது.

அதிலும், 

அந்தணர்கள் பல ரகங்களில் இருக்கிறார்கள் என்று சொல்கிறது. (சாம வேதம் அறிந்தவர், ரிக் வேதம் அறிந்தவர், யஜுர் வேதம் அறிந்தவர், அதர்வண வேதம் அறிந்தவர், இரண்டு வேதங்கள் (த்விவேதி) அறிந்தவர், மூன்று வேதங்கள் ஒரு சேர அறிந்தவர் (த்ரிவேதி), நான்கு வேதமும் அறிந்தவர் (சதுர்வேதி))

சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை,  “பலவேறு தொல்குடி அந்தணர்கள் இருந்தார்” என்று தெளிவாக சொல்கிறது. 


"இருமூன்று எய்திய இயல்பினில் வழாஅது இருவர் சுட்டிய பல்வேறு தொல்குடி

என்ற பாடலில், 

பழங்குடியான அந்தணர்களுக்கு 6 கடமைகள் உண்டு. 

அவர்கள் பெற்றோர்கள் உயர்ந்த பண்புகள் கொண்டு இருந்தார்கள். 

ஆதியில் இருந்தே அந்தணர்கள் தான் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் தொல்குடியினர் 

என்று சான்றிதழ் கொடுக்கிறது. 


வாழ்க திருமுருகாற்றுப்படை..

மேலும், 

"முத்தீ" என்று சொல்லுமிடத்தில், இந்த அந்தணர்கள், 'மூன்று விதமான தீயை வளர்ப்பவர்கள்' என்றும் சொல்கிறது.

யாகம் செய்ய 'நாற்சதுரம், முக்கோணம், வில் வடிவம்' என்ற அமைப்பில் அமைத்து, கார்ஹ-பத்தியம், ஆகவனீயம், தக்ஷிணாக்னியம் என்ற 'மூன்று வேள்வி தீ' அக்னிஹோத்ரியான  பிராம்மணர்கள் வீட்டில் எப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்கும். 

இதையே 'முத்தீ' என்று திருமுருகாற்றுப்படையில் சொல்லப்படுகிறது.


இதே சொல்லை, "மூத்தீ மறையாவான்" என்று இரண்டாம் திருவந்தாதியில், பூதத்தாழ்வார் பயன்படுத்துகிறார் என்று பார்க்கலாம்.


மேலும், சங்க இலக்கியமான "திருமுருகாற்றுப்படை", 

"இருபிறப்பாளர்" என்று சொல்லுமிடத்தில், 'அந்தணர்கள், இரு முறை பிறக்கிறார்கள்' என்றும் சொல்கிறது.


பிராம்மண குழந்தைகள், "காயத்ரி மந்த்ர" உபதேசம் பெறும் போது, இரண்டாவது பிறவி கொள்கிறார்கள் என்று சொல்வதுண்டு. 

இதையே சங்க இலக்கியமும் நமக்கு ஊர்ஜித படுத்திக்கிறது.


இது மட்டுமல்ல, 

சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை

"மூன்று புரி நுண்ஞாண்" என்று சொல்லும் போது, "இந்த அந்தணர்கள், மூன்று நூல்கள் சேர்ந்த பூணூலை அணிந்து உள்ளார்கள்" என்று அந்தணர்களின் அடையாளத்தை காட்டுகிறது.


மேலும், சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை

"உச்சிக்கூப்பிய கையினர்" என்று சொல்லுமிடத்தில், "இந்த அந்தணர்கள், முருகப்பெருமான் சந்நிதியில் கையை தலைக்கு மேல் உயர்த்தி நமஸ்கரித்து நிற்கின்றனர்" என்று அவர்களின் முருக பக்தியை காட்டுகிறது.


கையை தலைக்கு மேலே உயர்த்தி, முருகப்பெருமானை நமஸ்கரித்து கொண்டு மட்டும் இருக்கவில்லையாம் இந்த அந்தணர்கள்.

இந்த அந்தணர்கள், அருமறைக் கேள்வி என்ற வேத மந்திரங்களை மிகவும் சத்தமாக சொல்லாமல், நாக்கும் வாயும் அசைய, ஜபம் போல அழகாக முருகப்பெருமானை நோக்கி பாடினார்கள், என்று "அருமறைக் கேள்வி நாஇயல் மருங்கில் நவிலப் பாடி" என்று பாடுகிறது.


மேலும், 

அந்தணர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? 

அவர்கள் வீடு எப்படி  இருந்தது? 

என்று மற்றொரு சங்க இலக்கியமான "பெரும்பாணாற்றுப்படை" நமக்கு சொல்கிறது.


செழுங் கன்று யாத்த சிறுதாட் பந்தர் (இந்த அந்தணர்கள் வீட்டில் புஷ்டியான கன்றுகள் வீட்டின் வாசலில் சிறு பந்தல் போட்டு நின்று கொண்டிருக்குமாம்)

பைஞ்சேறு மெழுகிய (மேலும், அந்தணர்கள் வீடே, பசுஞ்சாணியால் தரை மெழுகப்பட்டு இருக்குமாம்.) 

படிவ நல்நகர் (மேலும் தெய்வத்துக்கு பூஜைகள் செய்ய ஒரு அறை வைத்து இருப்பார்களாம்)

மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது (மேலும், அந்தணர்கள், கோழி, நாய் வளர்க்க மாட்டார்கள்)

வளைவாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும் (மேலும், அந்த வீட்டில் உள்ள அந்தணர்கள் வேதம் சொல்லி சொல்லி, அந்த வீட்டில் உள்ள கிளிகள் திரும்ப சொல்லுமாம்)

மறை காப்பாளர் உறைபதிச் சேப்பின் (இப்படிப்பட்ட, வேதத்தை காப்பாற்றி வரும் இந்த அந்தணர்களின் வீட்டுக்கு சென்றால்)

பெருநல் வானத்து வடவயின் விளங்கும்

சிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல்

வளைக்கை மகடூஉ வயின்அறிந்து அட்ட 

சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம்

(மிக பெரிய வானத்தில் ஜொலிக்கும் அருந்ததி நக்ஷத்திரம் போன்ற கற்புக்கரசியான அந்தண பெண், கைகள் வலைகள் குலுங்க, ராஜ ஹம்சம் என்ற அன்னபறவை பெயர் கொண்ட ராசான்னம் என்ற ஆஹுதிக்கு ஏற்றதான அரிசியை மட்டுமே, பதம் அறிந்து சோறு சமைத்து வைத்து இருக்கிறாள்

சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து

உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து 

கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர் (கருவேப்பிலை, மிளகு கலந்து சமைக்கப்பட்ட காய்கறியோடு, மாவடு ஊறுகாய் தொட்டு கொண்டு, மாதுளம் பழம் சேர்த்த மோர் சாதத்தை அந்தணர்கள் சாப்பிடுகிறார்கள்)

இவ்வாறு, 

அந்தணர் வீடும், அந்தணர் உணவு முறையும் எப்படி இருந்தது? என்று சங்க இலக்கியமான "பெரும்பாணாற்றுப்படை" நமக்கு தெளிவாக  சொல்கிறது.  


சங்க இலக்கியத்தில் காணப்படும் பழக்கம் இன்றும் பிராம்மணர்களிடம் உள்ளது. 


சங்க இலக்கியம் தெரியாமல் போனாலும், ஆதி தமிழர்களான பிராம்மணர்களின் பழக்கத்தை பார்த்து, "தயிர்சாதம்' என்று கிண்டல் செய்யும் கூட்டமும் இன்று இருக்கிறார்கள். 


"ஆதி தமிழ் குடிமகன் பிராம்மணன் தான்" என்று சொல்கிறோம் என்று புரியாமலேயே, ப்ராம்மணனை கேலி செய்வதாக நினைத்து, பெரும்பாணாற்றுப்படை சொல்லும் அந்தணர் பழக்கம் இன்றும் உள்ள பிராம்மண சமுதாயத்துக்கு சான்றிதழ் கொடுத்து வலு சேர்க்கிறார்கள்.


Deep Dive.. Must Listen Speech of Sri Ranganji -  வேதம் நிறைந்த தமிழ்நாடு....

https://www.youtube.com/watch?v=FCEFIuYpews&t=960s

Sunday, 19 September 2021

தமிழா! பழங்குடி தமிழன் யாரை முதலில் வணங்கினான்? வேதத்தை பற்றி ஆதிகுடி தமிழன் என்ன சொல்கிறான்? தமிழா! நீ தெரிந்து கொள்ள வேண்டாமா? சங்க இலக்கியம் பரிபாடல் சொல்கிறது...

தமிழா! "பழங்குடி தமிழன்" யாரை முதலில் வணங்கினான்? 

வேதத்தை பற்றி ஆதிகுடி தமிழன் என்ன சொல்கிறான்?

எழுத்து வடிவில் இல்லாமல், காதால் கேட்டு கேட்டு, வாயால் சொல்லி சொல்லியே மனனம் செய்வதால், பரமாத்மாவின் அறிவு என்று அழைக்கப்படும், ஆகாசத்தில் என்றுமே இருக்கும் வேத ஒலிகளை, சமஸ்க்ரித மொழி "ஸ்ருதி" என்றும், தமிழ் மொழி "மாயா வாய்மொழி" என்றும் அழைக்கிறது.

'உண்மையான தமிழன் யாரை வணங்கினான்?" என்று சங்க இலக்கியங்கள் நமக்கு காட்டுகிறது.

1.

மாயா வாய்மொழி

உரைதர வலந்து

வாய்மொழி ஓடை மலர்ந்த

தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீ என மொழியுமால் அந்தணர் அருமறை

- பரிபாடல் (சங்கத்தமிழ்)

அர்த்தம்:

வேதத்தை தந்தவன் திருமால். 

வேதம் என்னும் வாய்மொழி ஓடையில் மலர்ந்தது தாமரை. 

தாமரையில் வெளிப்பட்டார் ப்ரம்ம தேவன்

அந்த ப்ரம்ம தேவனின் தந்தை நீங்கள்! என்று அந்தணர் வாய்மொழியாக வரும் வேதம் சொல்கிறது





இப்படி சங்க இலக்கியமான பரிபாடல், வேதத்தை பற்றி சொல்லி, ப்ரம்ம தேவனை பற்றி, நாராயணன் பற்றி பேசுகிறது.

2.

பரிபாடல், "கெடு இல் கேள்வி" (தோஷமற்ற நூல் வேதம்) என்று வேதத்துக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறது.

வடு இல் கொள்கையின்

உயர்ந்தோர் ஆய்ந்த

கெடு இல் கேள்வியுள்

நடு ஆகுதலும்

- பரிபாடல் (சங்கத்தமிழ்)

அர்த்தம்

மாசு இல்லாத (வடு இல்) கொள்கையுடைய உயர்ந்தோர், நன்கு ஆராய்ந்த பிறகு, "ஒரு குறையும் இல்லாதது வேதம். இந்த குறைவில்லாத வேதத்தில் (கெடு இல் கேள்வி) நடுவாக, உட்பொருளாக (நடு ஆகுதலும்) திருமால் இருக்கிறார்" என்கிறார்கள்.


ஆகாசத்தில் என்றுமே இருக்கும் அழியாத வேத ஒலிகள், வெளியோட்டமாக யாகம், ஜபம், பூஜை போன்ற கர்மாவை செய்ய சொல்வது போல தோன்றினாலும், பரமாத்மாவையே விராட் புருஷனாக பல விதத்தில் துதிக்கிறது.

நேரடியாக பரமாத்மாவை பற்றி சொல்ல தயங்கி, மறைத்து பேசுகிறது வேதம்

தமிழ்மொழி, வேதத்தை "மறை" என்றும் அழகாக சொல்கிறது.

தத்துவங்களை, உட்கருத்தை மறைத்து பேசுவதால், வேதத்துக்கு "மறை" என்று பெயர் கொடுக்கிறது நம் தமிழ் மொழி.




3.

பரிபாடல், 'வேதம்' என்ற சொல்லுக்கு ஈடாக "மறை" என்றும் சொல்கிறது. 

வேதத்து மறை நீ!

பூதத்து முதலும் நீ!

வெஞ்சுடர் ஒளியும் நீ!

திங்களுள் அளியும் நீ!

அனைத்தும் நீ!

அனைத்தின் உட்பொருளும் நீ! 

- பரிபாடல்

அர்த்தம்

பரிபாடல் திருமாலை பற்றி சொல்லும் போது, 

"வேதம் முழுவதின் உட்கருத்தாக, தத்துவமாக (மறை) நீயே இருக்கிறாய்" என்று "வேதத்தின் மறை நீ" என்கிறது.

மேலும்,

"உலக படைப்பிற்கும் முன் இருந்த ஆதி புருஷன் நீ !

ஒளிக்கு ஒளியானவன் நீ!

சந்திரனுக்கும் குளிர் தருபவன் நீ!

மொத்தத்தில் நீ தான் அனைத்துமாக இருக்கிறாய்.

அனைத்துக்கும் உள்ளிருந்து கொண்டு நீயே செயல்படுகிறாய்"

என்று பரிபாடல் நாராயணனை பற்றி சொல்லும் போது, "வேதத்தின் உட்கருத்து நீ" என்று சொல்கிறது.

Thursday, 2 September 2021

ஆதி தமிழன் யார்? யார் பழங்குடி? Who is Native Tamilan?

ஆதி தமிழன் யார்? யார் பழங்குடி? யார் தமிழன்?

தமிழ் சங்க இலக்கியம் என்ன சொல்கிறது?



"தொல்குடி தமிழன்" என்று சங்க இலக்கியம் யாரை சொல்கிறது??


சங்க இலக்கியங்களில் ஒன்றான "திருமுருகாற்றுப்படை" நமக்கு பதில்" சொல்கிறது.


பழங்குடியினருக்கு என்று சலுகைகள் அரசாங்கம் கொடுக்கிறது... 

ஆனால், "உண்மையான பழங்குடி யார்?" என்று அரசாங்கம் சங்க இலக்கியங்களை படித்து முடிவு செய்ததாக தெரியவில்லை.


சங்க இலக்கியமான "திருமுருகாற்றுப்படை", அந்தணர்களே தமிழகத்தில் இருந்த "பழங்குடியினர்" (தொல்குடி) என்று தெளிவாக சொல்கிறது.  


அதிலும், 

இந்த அந்தணர்கள் பல ரகங்களில் இருக்கிறார்கள். 

(சாம வேதம் அறிந்தவர், ரிக் வேதம் அறிந்தவர், யஜுர் வேதம் அறிந்தவர், அதர்வண வேதம் அறிந்தவர், இரண்டு வேதங்கள் (த்விவேதி) அறிந்தவர், மூன்று வேதங்கள் ஒரு சேர அறிந்தவர் (த்ரிவேதி), நான்கு வேதமும் அறிந்தவர் (சதுர்வேதி)) 

என்று சொல்கிறது.


சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை,  “பலவேறு தொல்குடி அந்தணர்கள் இருந்தார்கள்” என்று தெளிவாக சொல்கிறது. 


இருமூன்று எய்திய இயல்பினில் வழாஅது 

இருவர் சுட்டிய பல்வேறு தொல்குடி

என்ற பாடலில், 

"அந்தணர்களுக்கு (2+3) 6 கடமைகள் உண்டு. 

அவர்கள் பெற்றோர்கள் உயர்ந்த பண்புகள் கொண்டு இருந்தார்கள். 

இந்த அந்தணர்களே, ஆதியில் இருந்தே வாழ்ந்து வரும் தொல்குடியினர் '

என்று சான்றிதழ் கொடுக்கிறது. 


வாழ்க திருமுருகாற்றுப்படை..


உண்மையான தமிழன்..  அந்தணனே!

ஆதி பழங்குடி தமிழன்.. அந்தணனே!