சிவபெருமானை காலையில் பள்ளியெழுச்சி செய்கிறார் மாணிக்கவாசகர்.
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
- திருவெம்பாவை (மாணிக்கவாசக பெருமான்)
ஒரு பக்கம் பக்தர்கள், வீணை கொண்டும், யாழ் கொண்டும் இனிய இசை இசைகிறார்கள்
ஒரு பக்கம் பக்தர்கள், ருக் வேதம் மந்திரங்களை ஓதிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு பக்கம் பக்தர்கள், நிறைய மலர்களை பறித்து, மாலை தொடுத்து கொண்டு காத்து கொண்டு இருக்கிறார்கள்
ஒரு பக்கம் பக்தர்கள், நமஸ்காரம் செய்து கொண்டே இருக்கிறார்கள். மேலும் சிலர் அன்பின் மிகுதியால் உங்களை தரிசிக்க போகும் ஆனந்தத்தில் அழுகிறார்கள்.
ஒரு பக்கம் பக்தர்கள், தலை மேல் கை கூப்பி நமஸ்கரித்து கொண்டே காத்து இருக்கிறார்கள்.
திருப்பெருந்துறையில் உள்ள சிவபெருமானே !
(இவர்களோடு) ஒன்றுமே செய்யாது இருக்கும், மாணிக்கவாசகனான என்னையும் சேர்த்து (ஆண்டு) கொண்டு, இனிய அருள் செய்கின்ற எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்வாய் !
என்று பக்தி சொட்ட பாடுகிறார், மாணிக்கவாசகர்.
Listen to - the explanation: