Followers

Search Here...

Showing posts with label சங்கர். Show all posts
Showing posts with label சங்கர். Show all posts

Saturday, 7 May 2022

Advice for Today's MLA and MPs. சட்டமன்றத்தில், பாராளுமன்றத்தில், இன்று இந்தியசட்டத்தின் (சாஸ்திரம்) படி ஆட்சியை வழிநடத்தும் MLA, MPக்களுக்கு (இன்று பிராம்மண வர்ணத்தில் இருப்பவர்கள்) சொல்லப்பட்ட அறிவுரை, ஒழுக்கம். அன்று பிராம்மண வர்ணத்தார் எப்படி வாழ்ந்தார்கள்? தெரிந்து கொள்வோம், மஹாபாரதம்.

சட்டமன்றத்தில், பாராளுமன்றத்தில், இன்று இந்தியசட்டத்தின் (சாஸ்திரம்) படி ஆட்சியை வழிநடத்தும் MLA, MPக்கள் என்ற இன்றைய பிராம்மண வர்ணத்தார் (லௌகீக மற்றும் வைதீக பிராம்மண ஜாதியை இங்கு சொல்லவில்லை) சொல்லப்பட்ட அறிவுரை, ஒழுக்கம். அன்று பிராம்மண வர்ணத்தார் எப்படி வாழ்ந்தார்கள்? தெரிந்து கொள்வோம், மஹாபாரதம்.

பாரத போர் முடிந்த பிறகு, கௌரவர்கள் பக்கம் இருந்த அனைவரும் மடிந்தார்கள்.

பாண்டவர்கள் பக்கமும் அபிமன்யு, மற்றும் திரௌபதியின் 5 பிள்ளைகள் உட்பட அனைவரும் மடிந்து விட்டார்கள்.

அனைவருக்கும் தகனம் செய்து, கங்கையில் தீர்த்த தர்ப்பணம் தானே செய்தார் யுதிஷ்டிரர். 

அந்த சமயத்தில், கர்ணன் தனது மூத்த சகோதரன் என்ற செய்தியையும் குந்திதேவி மூலமாக கேட்ட யுதிஷ்டிரர், மீள முடியாத சோகத்தில் மூழ்கினார்.

நிலத்திற்காக குலத்தை அழித்தோமே! உலகத்தில் இருந்த க்ஷத்ரிய அரசர்கள் எல்லோரும் அழிந்து விட்டனரே! பிள்ளைகளும் போய் விட்டனரே! என்றதும், 

'இனி ராஜ்யம் எனக்கு தேவையில்லை. ஒரு மரத்தடியில் போய் அமர்ந்து, உடல் சம்பந்தமாகவோ, மனம் சம்பந்தமாகவோ இனி எந்த ஒரு முயற்சியும் செய்யாமல், விருப்பும் இல்லாமல், வெறுப்பும் இல்லாமல், வனம் சென்று வாழ போகிறேன்

என்று சொல்லி விட்டார்.

'யுதிஷ்டிரர் சந்நியாசியாக செல்ல கூடாது' என்று, அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன் போன்றோர் கர்மாவே சிறந்த தர்மம், க்ருஹஸ்த தர்மமே சிறந்தது என்று சொல்லி சமாதானம் செய்ய முயற்சித்தனர்.

அந்த சமயம், 

திரௌபதியும், பிறகு மீண்டும் அர்ஜுனனும், வ்யாசரும் "தண்ட நீதியே' சிறந்தது என்று பேசினார்கள்.

அப்பொழுது, 

அரசனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட தண்ட நீதியை, எப்படி இரண்டு ப்ராம்மணர்கள் மதித்தார்கள்? 

அவர்களுடைய தவவாழ்க்கை எப்படி தூய்மையாக இருந்தது? என்று சொல்லதொடங்கினார்..


अत्राप्य उदाहरन्तीमम् इतिहासं पुरातनम् |

शङ्खः च लिखितः चास्तां भ्रातरौ संयत व्रतौ ||

- vyasa mahabharata

புராண காலத்தில் (ஒரு சமயம்), கடுமையான தவசீலர்களான சங்கர் மற்றும் லிகிதர் என்ற  சகோதரர்கள் வாழ்ந்தார்கள்.

तयॊः आवसथाव् आस्तां रमणीयौ पृथक् पृथक् |

नित्यपुष्पफलैः वृक्षैरः उपेतौ बाहुदाम् अनु ||

- vyasa mahabharata

அவர்களுக்கு பாஹுதா என்ற நதிக்கரையில் பூக்களும், பழங்களும் நிறைந்து இருக்கும் இரு ஆஸ்ரமங்கள் தனித்தனியே இருந்தன.

ततः तदाचिल् लिखितः शङ्खस्याश्रमम् आगमत् |

यदृच्छयापि शङ्खॊ ऽथ निष्क्रान्तॊ ऽभवद् आश्रमात् ||

- vyasa mahabharata

ஒரு சமயம் லிகிதர், தன்னுடைய சகோதரர்  சங்கர் ஆஸ்ரமத்துக்கு வந்தார். அப்பொழுது சங்கர் ஆஸ்ரமத்தை விட்டு வெளியே சென்று இருந்தார்.

सॊ ऽभिगम्याश्रमं भ्रातुः शङ्खस्य लिखितः तदा |

फलानि शातयाम् आस सम्यक् परिणतान्य उत ||

- vyasa mahabharata

தன்னுடைய சகோதரர்  சங்கர் ஆஸ்ரமத்துக்குள் உலவி கொண்டிருந்த லிகிதர், அங்கு நன்றாக பழுத்திருந்த ஒரு பழத்தை பறித்தார்.

तान्य उपादाय विस्रब्धॊ भक्षयाम् आस स द्विजः  |

तस्मिंश् च भक्षयत्य एव शङ्खॊ ऽपय् आश्रमम्  आगमत् ||

- vyasa mahabharata

அருகில் யாரும் இல்லாத நிலையில், அந்த பழத்தை சாப்பிட்டார். அவர் சாப்பிட்டு கொண்டிருக்கும் சமயத்தில், சங்கர்  வந்து விட்டார்.

भक्षयन्तं तु तं दृष्ट्वा शङ्खॊ भ्रातरम अब्रवीत् |

कुतः फलान्य अवाप्तानि हेतुना केन खादसि ||

- vyasa mahabharata

சங்கர், லிகிதரை பார்த்து, "இந்த பழங்கள் எங்கிருந்து கிடைத்தது? ஏன் இதை சாப்பிட்டாய்?" என்று கேட்டார்.

सॊ ऽब्रवीद् भ्रातरं ज्येष्ठम् उपस्पृश्याभिवाद्य च |

इत एव गृहीतानि मयेति प्रहसन्न इव ||

- vyasa mahabharata

தனது சகோதரர் வந்ததை பார்த்த லிகிதர் அருகில் சென்று நமஸ்காரம் செய்தார். "அண்ணா! இங்கிருந்து தான் இந்த பழங்களை எடுத்துக்கொண்டேன்" என்று சகஜமாக சிரித்து கொண்டே சொன்னார்.

तम् अब्रवीत् तदा शङ्खः तीव्रकॊप समन्वितः |

स्तेयं त्वया कृतम् इदं फलान्य आददता स्वयम् |

गच्छ राजानम् आसाद्य स्वकर्म प्रथयस्व वै |

अदत्तादानम् एवेदं कृतं पार्थिव सत्तम |

स्तेनं मां त्वं विदित्वा च स्वधर्मम अनुपालय |

शीघ्रं धारय चौरस्य मम दण्डं नराधिप ||

- vyasa mahabharata

கடுமையான கோபத்துடன் சங்கர் "நீயாகவே பழங்களை எடுத்த காரணத்தால், இந்த காரியம் திருட்டாகும். ஆகையால் நீ அரசனிடம் சென்று 'அரசே! கொடுக்காத பழத்தை எடுத்ததால், நான் திருடனாகிறேன். என்னை திருடன் என்ற ரீதியில் பார்த்து, எனக்கு தகுந்த தண்டனையை வழங்கி, உன் தண்ட நீதியை காப்பாற்று' என்று தெரிவித்து கொள்" என்றார்.

इत्य उक्तस् तस्य वचनात् सुद्युम्नं वसुधाधिपम् |

अभ्यगच्छन् महाबाहॊ लिखितः संशितव्रतः ||

- vyasa mahabharata

வாழ்க்கையை நெறியோடு வாழ விரும்பும் லிகிதர், சகோதரர் சொன்னது தர்மமே என்று ஏற்று, அப்பொழுது தர்மப்படி அரசாட்சி செய்து கொண்டிருந்த ஸுத்யும்னரிடம் சென்றார்.

सुद्युम्नः त्वान्त पालैभ्यः श्रुत्वा लिखितम् आगतम् |

अभ्यगच्छत् सहामात्यः पद्भ्याम एव नरेश्वरः ||

- vyasa mahabharata

காவலாளி மூலமாக லிகிதர் வந்திருப்பதை அறிந்த அரசர், தானே நடந்து வந்து எதிர்கொண்டு வரவேற்றார்.

तम् अब्रवीत् समागत्य स राजा ब्रह्म वित्तमम् |

किम् आगमनम् आचक्ष्व भगवन् कृतम् एव तत्  ||

- vyasa mahabharata

லிகிதரை பார்த்து, "பகவன்! நீங்கள் எதற்காக வந்தீர்கள் என்று சொல்ல வேண்டும். உடனே மறுக்காமல் செய்கிறேன்" என்று அரசர் சொன்னார்.

एवम् उक्तः स विप्रर्षिः सुद्युम्नम् इदम् अब्रवीत् |

प्रतिश्रौषि करिष्येति श्रुत्वा तत कर्तुम् अर्हसि |

अनिसृष्टानि गुरुणा फलानि पुरुषर्षभ |

भक्षितानि मया राजं तत्र मां शाधि माचिरम् ||

- vyasa mahabharata

உடனே ஸுத்யும்னரை பார்த்து, "மகாராஜன்! சகோதரர் கொடுக்காத பழத்தை, நானே எடுத்து சாப்பிட்டு விட்டேன். அந்த குற்றத்துக்காக என்னை தாமதமின்றி தண்டிக்க வேண்டும்" என்றார்.

प्रमाणं चेन मतॊ राजा भवतॊ दण्डधारणे |

अनुज्ञायाम् अपि तथा हेतुः स्याद् ब्राह्मणर्षभ |

स भवान् अभ्यनुज्ञातः शुचि कर्मा महाव्रतः |

ब्रूहि कामान् अतॊ ऽन्यांस तवं करिष्यामि हि ते वचः ||

- vyasa mahabharata

இதை கேட்ட அரசர் ஸுத்யும்னர், "ப்ராம்மணர்களில் உத்தமரே! ஒருவனுக்கு 'தண்டனை விதிப்பது அரசன்  கடமை' என்பது உண்மையே என்றாலும்,  'அனுமதி கொடுப்பதும்' அரசனுக்கு உரியதே! ஆகையால், கடுமையான விரதத்தை அனுஷ்டிக்கும் நீங்கள் குற்றமற்றவர் என்று அனுமதி அளிக்கிறேன். ஆகையால், நீங்கள் வேண்டியதை கேளுங்கள். நான் உங்கள் இஷ்டம் போல செய்கிறேன்" என்றார்.

छन्द्यमानॊ ऽपि ब्रह्मर्षिः पार्थिवेन महात्मना |

नान्यं वै वरयाम् आस तस्माद् दण्डाद् ऋते वरम्  |

ततः स पृथिवीपालॊ लिखितस्य महात्मनः |

करौ प्रच्छेदयाम् आस धृतदण्डॊ जगाम सः ||

- vyasa mahabharata

இப்படி மஹாத்மாவான அரசர் சொல்லியும், தனக்கு 'தண்டனையை தவிர வேறு ஏதும் வேண்டாம்' என்று சொல்லிவிட்டார் லிகிதர்.

இப்படி சொன்னதால், உலகில் தர்மத்தை நிலைநாட்ட வேண்டிய அரசனாக இருந்து, திருட்டுத்தனத்துக்கு உரிய தண்டனையாக லிகிதரின் இரு கையையும் வெட்டி தண்டனை கொடுத்து விட்டார்.

स गत्वा भ्रातरं शङ्खम् आर्तरूपॊ ऽब्रवीद् इदम् |

धृतदण्डस्य दुर्भुद्धे: भगवन् क्षन्तुम अर्हसि ||

- vyasa mahabharata

கை அறுபட்ட நிலையில், தன் சகோதரரான சங்கரை பார்க்க சென்றார். அவரிடம் 'எனது குற்றத்துக்காக தண்டனை பெற்றேன். என் புத்தி குறைவை நீங்கள் மன்னிக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தார்.

न कुप्ये तव धर्मज्ञ न च दूषयसे मम |

धर्मॊ तु ते व्यतिक्रान्तः ततः ते निष्कृतिः कृता |

स गत्वा बाहुदां शीघ्रं तर्पयस्व यथाविधि |

देवान् पितॄन ऋषींश् चैव मा चाधर्मे मनॊ कृथाः ||

- vyasa mahabharata

சங்கர் "தர்மம் தெரிந்தவனே! உன்னிடத்தில் எனக்கு ஒரு கோபமும் இல்லை. நீ ஒரு குற்றமும் இப்பொழுது செய்யவில்லை. நீ தர்மத்தை மீறியதால், அந்த குற்றத்துக்கு ப்ராயச்சித்தம் தேவைப்பட்டது. நீ உடனேயே பாஹுதை என்ற நதிக்கரைக்கு சென்று, தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் ரிஷிகளுக்கும் தர்மப்படி தர்ப்பணம் செய். இனி அதர்மத்தில் மனதை செலுத்தாதே!" என்றார்.

तस्य तद् वचनं श्रुत्वा शङ्खस्य लिखितः तदा |

अवगाह्यापगां पुण्याम् उदकार्धं प्रचक्रमे |

प्रादुरास्तां ततः तस्य करौ जलज संनिभौ |

ततः स विस्मितॊ भ्रातुः दर्शयाम आस तौ करौ ||

- vyasa mahabharata

இவ்வாறு சங்கர் சொன்னதும், அவர் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, லிகிதர் அந்த நதியில் சென்று நீராடி, தர்ப்பணம் செய்ய இறங்கினார்.

அப்பொழுது, தண்ணீரில் தாமரை மலர்வது போல, அவரின் இரு கைகளும் உண்டாகி விட்டன.

ततः तम् अब्रवीच छङ्खः तपसेदं कृतं मया |

मा च ते ऽत्र वि शङ्का भूद् दैवम् एव विधीयते ||

- vyasa mahabharata

உடனே சங்கர், "இது என் தபோ பலத்தால் செய்யப்பட்டது. உனக்கு சந்தேகம் வேண்டாம். அதிருஷ்டம் (விதி) இப்படியாக உள்ளது" என்றார்.

किं नु नाहं त्वया पूतः पूर्वम् एव महाद्युते |

यस्य ते तपसॊ वीर्यम् ईदृशं द्विजसत्तम ||

- vyasa mahabharata

உடனே லிகிதர், "மஹா தேஜஸ்வியே ! உமது தவத்துக்கு இப்படி ஒரு சக்தி இருக்குமானால், என்னை அப்பொழுதே பரிசுத்தமாக ஆக்கி இருக்கலாமே?" என்று கேட்டார்.

एवम् एतन् मया कार्यं नाहं दण्डधरस तव |

स च पूतॊ नरपतिः त्वं चापि पितृभिः सह ||

- vyasa mahabharata

சங்கர், "என்னால் உன்னை சுத்தனாக ஆக்கி இருக்கமுடியும் என்றாலும்,  தண்டனை தரும் அதிகாரம் எனக்கு இல்லையே. மக்களின்  அரசனுக்கு  தானே பாவத்திற்கு தண்டனை அளிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தண்டனை கொடுத்ததால், அந்த அரசரும் தன்னுடைய தண்ட நீதியை காப்பாற்றினார். செய்த தவறுக்கு தண்டனையை ஏற்றதால், நீயும் பரிசுத்தமானாய்." என்று சொன்னார்.

स राजा पाण्डवश्रेष्ठ श्रेष्ठॊ वै तेन कर्मणा |

प्राप्तवान परमां सिद्धिं दक्षः प्राचेतसॊ यथा ||

- vyasa mahabharata

பாண்டவர்களில் உத்தமனே! அந்த உத்தம அரசரான ஸுத்யும்னர் தண்ட நீதியை பரிபாலனம் செய்ததால், ப்ராசேதஸ், தக்ஷனை போல  உயர்வான ஸித்தி பெற்றார்.

एष धर्मः क्षत्रियाणां प्रजानां परिपालनम् |

उत्पथे ऽस्मिन् महाराज मा च शॊके मनॊ कृथाः ||

- vyasa mahabharata

"மக்கள் தீய வழியில் செல்லாமல் பாதுகாப்பது" அரசனின் பெரிய தர்மமாகும்.

மகாராஜன்! சோகத்தை மனதில் அனுமதிக்காதீர்.

भ्रातुः अस्य हितं वाक्यं शृणु धर्मज्ञ सत्तम |

दण्ड एव हि राजेन्द्र क्षत्रधर्मॊ न मुण्डन ||

- vyasa mahabharata

தர்மம் தெரிந்த உத்தமனே!  உனது தம்பியான அர்ஜுனன் சொன்ன "தண்டநீதியை" கேள். தர்மத்தை காக்க அரசாட்சி செலுத்துவதே, க்ஷத்ரிய அரசனின் தர்மம் (கடமை). சந்யாசிகளுக்கு உரியது சந்நியாச தர்மம். சந்நியாச தர்மம் க்ஷத்ரியனான உனது தர்மம் அன்று" என்று கூறினார்.