தம்பதிகளுக்கு ஏன் மஞ்சள் குங்குமம், தேங்காய் ஹிந்துக்கள் கொடுக்கிறார்கள்?
Gift கொடுப்பதை விட, இதற்கு ஏன் இப்படி முக்கியத்துவம் கொடுத்தார்கள் ஹிந்துக்கள்?
தம்பதிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால், "அம்பாள் அணுகிரஹம்" வேண்டும்.
ஜாதகத்தில் "சுக்கிரன் இருவருக்கும் பலமாக" இருக்க வேண்டும்.
அப்பொழுது தான், தம்பதிகள் ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பார்கள்.
"அம்பாளின் அணுகிரஹம் தம்பதிகளுக்கு கிடைக்க வேண்டும்" என்று பிரார்த்தனை செய்து கொண்டு, நம் ஹிந்துக்கள், கல்யாணமான பெண்ணுக்கு வெத்தலை பாக்கு, கூடவே மஞ்சள் குங்குமம் புடவை வைத்து கொடுக்கிறார்கள்.
அம்பாளை பூஜிப்பதாக நினைத்து கொடுப்பார்கள்
சுக்கிரன் பலமாக வேண்டுமானால்,
கோ (கறவை பசு) தானம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
பசுவை, அனைவராலும் தானம் செய்ய முடியாது.
பசுவை யார் தானம் கொடுக்கிறானோ, அவனை கண்டு, பசுபதியான சிவபெருமான் திருப்தி கொள்கிறார்.
சிவபெருமானுக்கு மூன்று கண்கள். தேங்காயிலும் மூன்று கண்கள் உண்டு.
கோ தானம், சிவபெருமானையும், சுக்கரனையும் சம்பந்தப்படுத்துகிறது.
சிவபெருமானாக தேங்காயை நினைத்து கொண்டு, கொடுக்கும் போது, கோ தானம் கொடுத்த பலன் கிடைக்கிறது.
இதனால் சுக்கிரனும் திருப்தி அடைகிறார்.
இப்படி அம்பாளை பூஜித்தும், சுக்கிரனை திருப்தி செய்தும், வந்த தம்பதிகள் ஒற்றுமையாகவும், அன்யோன்யமாகவும் வாழ ப்ரார்த்திப்பது ஹிந்துக்களிடம் வழக்கமாக இருந்தது. இருக்கிறது.
Gift கொடுப்பது ஒரு புறம் இருந்தாலும், தம்பதிகள் கடைசி வரை சேர்ந்து வாழ பிரார்த்தனை செய்து, பெண்களுக்கு மஞ்சள் குங்குமமும், ஆண்களுக்கு தேங்காயையும் கொடுப்பது ஹிந்து தர்மமாக உள்ளது.
காரணமில்லாமல் ஹிந்துக்கள் எந்த காரியமும் செய்யப்படவில்லை என்று தெரிகிறது
Listen to the speech..