Followers

Search Here...

Showing posts with label கிருஷ்ணகிரி. Show all posts
Showing posts with label கிருஷ்ணகிரி. Show all posts

Thursday, 27 August 2020

கிருஷ்ணகிரி என்ற ஊர் எத்தனை பழமை வாய்ந்தது? வால்மீகி ராமாயணம் காட்டுகிறது.. மூன்று விதமான மனிதர்கள் இருந்தார்கள் என்றும் வால்மீகி ராமாயண சொல்கிறது. தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?..

ராமாயணம் நடந்த காலம் த்ரேதா யுகம்.. 
சுமார் 8 லட்சம் வருடம் முன்பு நடந்த அவதாரம்.
கலியுகம் ஆரம்பித்து (3102BCE) 5000 வருடங்கள் ஆகிறது.
கலியுகம் முன் துவாபர யுகம். இந்த யுகம் 8,64,000 வருடங்கள்.
துவாபர யுகத்திற்கு முன் த்ரேதா யுகம்.
ராமாயணம் த்ரேதா யுகத்தில் நடந்த சரித்திரம்.

அன்று த்ரேதா யுகத்தில், 'மூன்று விதமான மனிதர்கள்' இருந்ததாக சொல்கிறது - 'மனிதர்கள், வானரர்கள், ராக்ஷஸர்கள்'.

மனிதர்களை விட பலசாலிகளாகவும், மாயம் தெரிந்தவர்களாகவும், படித்தவர்களாகவும் இவர்கள் இருந்ததாக சொல்கிறது. 
ஆனால் குரங்கு போன்ற நிலையில்லா புத்தி 'வானரர்களுக்கும்', 
மனித மாமிசம் பச்சையாக உண்ணும் பழக்கம் 'ராக்ஷஸர்களுக்கும்' இருந்ததாக சொல்லப்படுகிறது.



ஹோமோசபியன் (home Sapien) என்ற நம்மை போன்ற உருவமைப்பு உள்ள மனிதர்களாக அகத்தியர், ராமபிரான், அயோத்தி மக்கள், மிதிலை மக்கள் என்று பலர் ராமாயணத்தில் காட்டப்படுகிறார்கள்.

இதை எழுதிய 'தமிழன் வால்மீகி' உட்பட மனித வர்க்கமாக காட்டப்படுகிறார்கள்.

ஹோமோ எரக்டஸ் (homo Erectus) என்ற மனித உருவம் கொண்டவர்கள் பல லட்சம் வருடம் முன்பு இருந்தார்கள் என்று ஆராய்ச்சிகள் சொல்கிறது.
ஹோமோ எரக்டஸ் (homo Erectus) என்ற மனித உருவம் கொண்ட, தாவும் திறன் உள்ள ஹனுமான், சுக்ரீவன், அங்கதன் போன்ற வான்-நரர்கள் (வானரர்கள்) எப்படி இருந்தார்கள்? என்று ராமாயணம் காட்டுகிறது. 

ஹோமோ நைன்டெர்தல் (homo naenderthal) என்ற மனித உருவம் கொண்ட, பலசாலியான, மனித மாமிசம் உண்பவர்கள், பல லட்சம் வருடம் முன்பு இருந்தார்கள் என்று ஆராய்ச்சிகள் சொல்கிறது.
ஹோமோ நைன்டெர்தல் (homo naenderthal) என்ற மனித உருவம் கொண்ட, மனித மாமிசம் உண்ணும் சூர்பனகா, கும்பகர்ணன், ராவணன், மாரீசன் போன்ற ராக்ஷஸர்கள் எப்படி இருந்தார்கள்? என்று ராமாயணம் காட்டுகிறது.

ராமாயணம் நடந்ததற்கு இலங்கை சாட்சி, ராம சேது (அணை) சாட்சி, கிருஷ்ணகிரி சாட்சி, அயோத்தி சாட்சி, மிதிலை சாட்சி..

இடம் மட்டுமல்ல, அறிவியல் காட்டும் 3 வகை மனிதர்களை பற்றி, அவர்கள் எப்படி இருந்தார்கள்? என்பதற்கும் ராமாயணம் சாட்சி.






அயோத்தி என்ற நகரம் மட்டும் பழமையானதல்ல, 'அயோத்தி' என்ற பெயர் கூட பழமையானது. 
இந்த நகரம்' ராமபிரான் காலத்துக்கும் முன்பேயே இருந்து இருக்கிறது.
குறைந்தபட்சம் 8 லக்ஷம் வருடம் ஆகியும், நகரத்தின் பெயர் நிலைத்து இருக்கிறது என்பதே 'அயோத்திக்கு' பெருமை.
இன்று வரை, அயோத்தி என்ற பெயரிலேயே இருக்கிறது.

அது போல 
'கிருஷ்ணகிரி' என்ற பெயரும் வால்மீகி எழுதிய ராமாயணத்தில் வருகிறது. 
8 லக்ஷம் வருடம் ஆகியும், நகரத்தின் பெயர் நிலைத்து இருக்கிறது. 

8 லட்ச வருடங்களுக்கும் மேல் இந்த பெயரை தனக்கே உரிமையாக கொண்டுள்ளது இந்த ஊர்.

வால்மீகி ராமாயணத்தில் 'யுத்த காண்டத்தில்' கிருஷ்ணகிரி என்ற இந்த ஊரின் பெயரும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது...

தாமரை போன்ற கண்களையுடைய ராமபிரான் மஹேந்திர மலையின் உச்சிக்கு சென்றார்.
அங்கிருந்து ஆமைகளும், மீன்களும் நிரம்பி இருக்கும் சமுத்திரத்தை கண்டார்.

பிறகு, வானர சேனையுடன், சஹ்ய மலை, மலய மலையை கடந்து, பிறகு வேலாவனம் என்ற காட்டை கடந்து கடற்கரையை அடைந்தார்கள். (இன்று ராமேஸ்வரம் என்று பெயர்)

(தே சஹ்யம் சமதிக்ரம்ய மலயஸ்ச மஹா கிரிம்! ஆசேதுரானுபூர்வ்யேன சமுத்ரம் பீமநிஸ்வனம்!
அவருஹ்ய ஜகாமாஸு வேலாவனம் அனுத்தமம் - வால்மீகி ராமாயணம்)

இதற்கு பிறகு விபீஷணன் ராமபிரானை சரண் அடைகிறார்.
சமுத்திர தேவன் ராமபிரான் முன் காட்சி கொடுத்து, 'நலன்' இந்த பாலத்தை கட்ட ஆரம்பிக்கட்டும், நான் அதை காக்கிறேன் என்று உறுதி அளித்தார்.

அப்பொழுது ராவணனின் ஒற்றன் 'சார்தூளா' என்பவன் ராமபிரான் கடற்கரை வரை வந்து விட்டதை தெரிவித்தான்.
ராவணன்  'சுகா' என்ற ராக்ஷஸ ஒற்றனை என்ன நடக்கிறது என்று பார்த்து வர உத்தரவு இட்டான். 

மாயாவியான இவன் பறவை ரூபம் எடுத்து பறந்து வர, அவனை வானரர்கள் பிடித்து இறக்கைகளை வெட்டி, சிறை பிடித்தனர்.

'தூதுவனை கொல்ல கூடாது' என்று இவன் கதற, ராமபிரான் அனைவரையும் தடுத்து விட்டார்.

'வெறும் 5 நாட்களில் பாலம் அமைத்து விட்டார்' நலன்
ராம சேது அமைக்கப்பட்டு, படைகளுடன் இலங்கையை வந்து அடைந்தார்.
இலங்கை வந்ததும் ராமபிரான் 'சுகா' என்ற ஒற்றனை விடுவிக்க சொல்லி விட்டார்.

'உயிர் போய் விடுமோ' என்ற பயந்து இருந்த சுகா, ராவணனிடம் ஓடி சென்று, 'ராமபிரான் படைகளோடு வந்து இலங்கைக்கே வந்து விட்டார்' என்று சொன்னான்.

அப்பொழுது ராவணன் சிரித்த கொண்டே,
"என்ன இது? ஏன் இப்படி இரண்டு கைகளும் ஒடிந்து இருக்கிறாய்? அந்த நிலையான புத்தி இல்லாத வானரர்களிடமா (homo erectus) மாட்டி கொண்டு விட்டாய்?" 
என்று சிரித்தான்.
(கச்சின்ன அநேக சித்தானாம் தேஷாம் த்வம் வசமாகத? - வால்மீகி ராமாயணம்)

"இலங்கைக்கே வந்து விட்டார்கள்" என்றதும், ராவணன், சுகா மற்றும் சாரண என்ற இருவரை அழைத்து மீண்டும் படைகளின் பலத்தை அறிந்து வர அனுப்பினான்.

வானரர்கள் போல உருவத்தை மாற்றி இவர்கள் வானர கூட்டத்தின் பலத்தை வேவு பார்க்க ஆரம்பித்தனர்.

விபீஷணன் இவர்களை கண்டுபிடித்து, ராமபிரானிடம் சொல்ல, இருவரையும் வானரர்கள் பிடித்து நிறுத்தினர்.




'ராவணன் தான் தங்களை அனுப்பினார்' என்று சொல்ல, ராமபிரான் சிரித்து கொண்டே, 
"உன் அரசன் சொன்ன வேலையை செய்து விட்டீர்களா? முழு படை பலத்தையும் பார்த்து விட்டீர்களா? இன்னும் பார்க்க வேண்டுமா? பார்த்து விட்டால் கிளம்புங்கள். 
இன்னும் பார்க்கவில்லை என்றால், விபீஷணனே உங்களுக்கு எங்கள் படைபலத்தை காட்டுவார்". 

இப்படி ராமபிரான் அனுமதியோடு அனைத்தும் விஷயங்களும் அறிந்து கொண்ட பின், ராவணன் இருக்குமிடம் சென்றனர்.

நடந்த விஷயங்களை கூறி, பல வானர வீரர்கள் பற்றியும், அவர்கள் எந்த தேசத்தில் இருந்து வந்துள்ளார்கள் என்றும் சொல்கின்றனர்.

சாரணன் ராவணனிடம், ஒரு வானரனை காண்பித்து சொல்கிறான், 

"இதோ, சிங்கம் போல பிடரி மயிருடன் இருக்கிறானே! 
மனதில் என்ன நினைக்கிறான் என்று முக பாவனை கொண்டு அறிய முடியாதபடி இருக்கிறானே! 
கொளுத்தும் நெருப்பை போல இலங்கையை பார்க்கிறானே! 
அந்த வானர வீரனின் பெயர் தான் 'ரம்போ'. 
இவன் விந்திய மலை, கிருஷ்ண கிரி, சஹ்ய மலை, சுதர்சன மலை பகுதிகளை ஆட்சி செய்கிறான்" 
என்று ராவணனிடம் சொன்னான்.

(விந்த்யம் க்ருஷ்ணகிரிம் சஹ்யம் பர்வதம் ச சுதர்சனம்! ராஜன் சததம் அத்யாஸ்தே ரம்போ நாமைஷ யூதப:!! - வால்மீகி ராமாயணம்)

'கிருஷ்ணகிரி' என்ற பெயர் 8 லட்சம் பழமை வாய்ந்தது என்று தெரிகிறது.

'அன்பில்' என்ற பிரதேசத்தில் அவதரித்த 'தமிழன் வால்மீகி' கொடுத்த ராமாயணத்தை, தமிழன் அனைவரும் படிக்க வேண்டும்.