ஏகாதசி விரதம் தசமி கலந்த தினத்தில் அனுஷ்டிக்க கூடாது.
ப்ரம்ம தேவன் சொன்னார்.
मान्धाता चक्रवर्त्यासीदुपोष्यैकादशीं नृपः ॥
एकदश्यां न भुञ्जीत पक्षयोरुभयारपि ॥
- கருட புராணம் (அத்யாயம்: 125)
மாந்தாதா (Click Here to know more) என்ற மன்னன், ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்ததன் காரணத்தால், மூன்று உலகங்களுக்கும் எதிரிகள் இல்லாத அதிபதியாக இருந்தார். எனவே 11வது நாளில் (ஏகாதசி) இரவு பகல் சேர்த்து, விரதத்தில் இருக்க வேண்டும்.
दशमि एकादशी मिश्रा गान्धार्य समुपोषिता ॥
तस्याः पुत्रशतं नष्टं तस्मात्तां परिवर्जयेत् ॥
- கருட புராணம் (அத்யாயம்: 125)
ராணி காந்தாரி சந்திரனின் பத்தாம் நாள் (தசமி) கலந்த ஏகாதேசியில் விரதம் இருந்தாள், அதன் விளைவாக தனது நூறு மகன்களை இழந்தாள்.
द्वादश एकादश यत्र तत्र सन्निहितां हरिः ॥
दशम् एकादशी यत्र तत्र सन्निहितो असुरः ॥
बहुवाक्य विरोधेन सन्देहो जायते यदा ॥
द्वादशी तु तदा ग्राह्या त्रयोदश्यान्तु पारणम्॥
एकादशी कलापि स्यादुपोष्या द्वादशी तथा ॥
- கருட புராணம் (அத்யாயம்: 125)
ஏகாதசி கலந்த துவாதசி தினங்கள் ஹரிக்கு உகந்த தினங்கள். தசமி கலந்த ஏகாதசி தினங்கள் அசுரர்களுக்கு உகந்த தினங்கள். ஆதலால், தசமி பிட்சமாக இருக்கும் தினத்தில் ஏகாதசி வந்தால், அன்று விரதம் அனுஷ்டிக்க கூடாது. அடுத்த நாளில் ஏகாதசி பிட்சமாக இருக்கும் தினத்தில் தான் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். த்ரயோதசி கலந்த அடுத்த நாளையே துவாதசியாக கொண்டு, விரதத்தை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
एकादशी द्वादशी च विशेषेण त्रयोदशी ॥
त्रिमिश्रा सा तिथिग्रह्या सर्वपापहरा शुभा ॥
एकादशीमुपोष्यैव द्वादशीम थवा द्विज ॥
त्रिमिश्रां चैव कुर्वीत न दशम्या युतां क्वचित्॥
- கருட புராணம் (அத்யாயம்: 125)
ஏகாதசியில் விரதம் இருப்பது விஷேசம். பிட்சமாக வரும் ஏகாதசி காலத்தில், ஏகாதசி, துவாதசி ஒரே நாளில் வரும். அடுத்த நாளில் த்ரயோதசி துவாதசியோடு கலக்கும். இந்த ஏகாதசியில் விரதம் இருப்பது சர்வ-பாபத்தையும் நாசம் செய்யும். தசமியில் விரதம் இருக்கவே கூடாது.
रात्रौ जागरणं कुर्वन्पुराणश्रवणं नृपः ॥
गदाधरं पूजयंश्च उपोष्यैका दशीद्वयम ॥
रुक्माङ्गदो ययौ मोक्षमन्ये चैकादशीव्रतम् ॥
- கருட புராணம் (அத்யாயம்: 125)
மன்னன் ருக்மாங்கதன் இரண்டு ஏகாதசிகளின் இரவுகளில் விழித்திருந்து, புராணங்களை கேட்டார், கதாதரனான விஷ்ணுவை பூஜித்தார். அதன் பலனாக, அவர் வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து விடுபட்டு, மரணத்திற்குப் பிறகு மோக்ஷத்துக்கு சென்றார்.