சரபம் என்ற விலங்கு எப்படி இருந்தது? சரபங்களை யார் படைத்தார்?
पुलहस्य सुता राजञ्शरभाश्च प्रकीर्तिताः।
सिंहाः किपुरुषा व्याघ्रा ऋक्षा ईहा मृगास्तथा।।
- ஆதி பர்வம் (மஹாபாரதம் வியாசர்)
ப்ரம்மாவின் 6 மானஸ புத்ரர்களில் ஒருவர் புலஹர்.
இந்த மகரிஷி, தன் தபோ பலத்தால்,
சரபங்கள், சிங்கங்கள், (குதிரை உடம்பும், மனித முகமும் கொண்ட) கிம்புருஷர்கள், புலிகள், கரடிகள், ஓநாய்கள் போன்றவற்றை ஸ்ருஷ்டி செய்தார்.
இந்த சரபம் என்ற விலங்கு எப்படி இருந்தது? என்பதை, தமிழ்நாட்டில் உள்ள பல கோவில்களில் காண முடிகிறது.
இந்த சரபம் என்ற விலங்கு, இறக்கைகளுடன், எட்டு கால்களுடன், சிங்கம் மற்றும் யானையையும் கொல்லக்கூடிய வலுவுள்ள மிருகமாக சித்தரிக்கப்படுகிறது.