யார் சந்நியாசி?
சித்த சுத்தி யாருக்கு உள்ளதோ, அவனே சந்நியாசி.
சித்த சுத்தி யாருக்கு உள்ளதோ, குடும்பத்தில் இருந்தாலும், அவனும் சந்யாசியே.
சித்தம் என்றால் "எண்ணம்" என்று அர்த்தம்.
"சித்த சுத்தி" என்றால் என்ன? "சித்த விகாரம்" என்றால் என்ன?
நம்முடைய சித்தம் இரட்டை குணங்களில் சிக்கி கொள்ளாதவரை, "சித்த சுத்தியுடன்" தான் இருக்கிறோம்.
இதை நாம் அனுபவித்தும் இருக்கிறோம்.
"சித்த சுத்தி" இருக்கும் வரை நாமும் 'சந்நியாசி தான்.
"சித்த சுத்தி" உள்ளவனே 'சந்நியாசி.
நம்முடைய சித்தம் இரட்டை குணங்களில் சிக்கி கொள்ளும் போது, "சித்த சுத்தி" கறைப்பட்டு, "சித்த விகாரம்" ஏற்பட்டு விடுகிறது. க்ருஹஸ்தன் ஆகி விடுகிறோம்.
இரட்டை குணங்கள் என்றால் என்ன?
சுகம்-துக்கம், லாபம்-நஷ்டம்,
வெற்றி-தோல்வி, மானம்-அவமானம்,
இளமை-மூப்பு, ஆரோக்கியம்-ரோகம்,
ஆண்-பெண், வாழ்வு-சாவு.
இதை தான் இரட்டைக குணங்கள் என்று சொல்கிறோம்.
நாம் அனைவருமே குறைந்தபட்சம் சித்த சுத்தியோடு தான் பிறக்கிறோம்.
குழந்தையாக இருக்கும் போது, ஆண்-பெண் என்ற இரட்டைக பேதங்கள் இருப்பதில்லை.
பிறகு,
சித்த விகாரம் படிப்படியாக ஏற்பட்டு, உலகில் மாட்டிக்கொண்டு விடுகிறோம்.
ஒரு இளம் பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இளம் பெண்ணான இவள், அந்த ஆண் குழந்தையை தூக்கி கொஞ்சுகிறாள்..
ஆண் என்று தெரிந்தும், கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறாள்.
அங்கமெல்லாம் பார்த்து பார்த்து, தொட்டு தொட்டு, குளிப்பாட்டி விடுகிறாள்.
அந்த ஆண் குழந்தை, தன்னை தொட்டாலும் ரசிக்கிறாள். காமம் அடைவதில்லை
பெண் தானே இவள்? இந்த குழந்தையோ ஆண் ஆயிற்றே?
ஆனால்,
இவளுக்கு ஆணை தொடுகிறோமே!! கொஞ்சுகிறோமே!! பார்க்கிறோமே!!
என்று மனம் விகாரம் அடையவில்லையே?..
இவளுக்கு ஆணை தோடுகிறோமே என்ற கூச்சமோ, காமமோ ஏற்படவில்லையே?
இதன் காரணம் என்ன?
குழந்தை "சித்த சுத்தியுடன்" இருக்கிறது. இதுவே காரணம்.
இதன் காரணத்தால், அந்த குழந்தையை பார்க்கும் பெண்ணான தாய்க்கு, இவன் ஆண் என்ற வேற்றுமை தெரியவில்லை.
அதே ஆண் குழந்தை, 24 வயது ஆகி இளைஞனாக நிற்கும் போது,
தன் குழந்தை தானே என்று குளிப்பாட்டி விடுவாளா? குழந்தையை அன்று தொட்டது போல தொடுவாளா? மாட்டாளே..
அவள் குழந்தை தான். மறுப்பு இல்லை.
ஆனாலும், அந்த குழந்தைக்கு இப்போது சித்த விகாரம் ஏற்பட்டு விட்டது. இரட்டைகள் இருப்பது புரிகிறது.
ஆண்-பெண் வித்யாசம் தெரிகிறது.
குழந்தையாக இருந்த போது, இரட்டைகள் தெரியவில்லை. இவன் சித்தம் சுத்தமாக இருந்தது.
சித்தம் சுத்தமாக இருக்கும் போது, பேதம் தெரியவில்லை.
சித்தம் சுத்தமாக இருக்கும் குழந்தையை, பெண்கள் எல்லோரும் எடுத்து கொஞ்சினார்கள். காமம் ஏற்படவில்லை.
சித்த விகாரம் அடைந்த பின், பேதங்கள் தெரிந்து விடுகிறது.
பெற்ற தாயானாலும், தன் மகனிடமிருந்து ஒதுங்கி நிற்கிறாள்.
உண்மையில், உடலால் காமம் ஏற்படுவதில்லை.
யாருக்கு சித்தம் விகார பட்டு, இரட்டைகள் தெரிகிறதோ!
அவர்களுக்கே காமம், கோபம், பேராசை, பொறாமை உண்டாகிறது.
சித்த சுத்தி அடைந்தவனே சந்நியாசி.
அப்படிப்பட்ட மகான்களை தரிசிப்பதே பாக்கியம்.
இந்த நிலையில் இருந்தவரே, ஸ்ரீ சுகர்.
16 வயது பாலகனாக, சிவபெருமானே வ்யாசருக்கு அக்னியில் இருந்து தோன்றினார்.
வியாசர் "சாக்ஷாத் நாராயணன்".
பிராம்மண ரூபத்தில் பராசர ரிஷிக்கு மகனாக தோன்றினார்.
மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள் கொடுத்தவர்.
சேர்ந்து இருந்த வேதத்தை நான்காக பிரித்து கொடுத்தார்.
"வேத வியாசர்" என்ற புகழப்படுகிறார்.
ஒரு சமயம் ப்ரம்மத்தையே தியானித்து கொண்டு இருக்கும், 16 வயது ரூபத்தில் இருக்கும் ஸ்ரீ சுகர், காட்டில் எங்கு போகிறோம் என்று தெரியாமலேயே நடந்து கொண்டிருந்தார்.
தன் பிள்ளை "சுகரை" கூப்பிட்டு கொண்டே வியாச பகவான் வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஒரு குளத்தில், சில இளம் பெண்கள் குளித்து கொண்டு இருந்தனர்.
ஸ்ரீசுகர் அந்த வழியாக போவதை பார்த்தும், சாதாரணமாக குளித்து கொண்டு இருந்தனர்.
பின் தொடர்ந்து வந்த வ்யாஸரை கண்டதும், "யாரோ ஆண் வருகிறாரே!" என்று பயப்பட, வியாச பகவான் "நானோ முதியவன். என் பிள்ளையோ இளைஞன். அவனை கண்டு வித்யாசம் காட்டாத நீங்கள், என்னை கண்டு பயம் கொள்கிறீர்களே?"
என்று கேட்டார்.
அதற்கு, அந்த பெண்கள்,
"நாங்கள் பெண்கள் என்றே அவருக்கு தெரியாததால், அவரை பார்த்து எங்கள் எண்ணத்திலும் பேதம் தோன்றவில்லை.
நீங்கள் கேட்பதிலேயே உங்களுக்கு நீங்கள் ஆண், நாங்கள் பெண் என்று தெரிவதாலேயே, எங்களுக்கு பேதம் தெரிகிறது. அதனால் எங்களை அறியாமலேயே பயம் ஏற்பட்டது.. கூச்சம் ஏற்பட்டது."
என்று பதில் சொன்னார்கள்.
வ்யாஸரே சந்நியாசி தான். ரிஷி தான்.
இருந்தாலும் "தன் பிள்ளையின் பெருமையை தான் ரசிக்க, தனக்கு பேதம் உள்ளது போல காட்டிக்கொண்டு, ஸ்ரீ சுகரின் சித்த சுத்தி நிலையை பிறர் சொல்லி கேட்க ஆசைப்பட்டதால்", இப்படி ஒரு லீலை செய்தார்.
பகவத் கீதையை படிக்கும் போது, பல இடங்களில் இந்த சித்த சுத்தி ஏற்பட என்ன வழி? என்று பேசுகிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.
"சுகம்-துக்கம், மானம்-அவமானம், வெற்றி-தோல்வி
என்ற இரட்டை குணங்களை மதிக்காதே!!
தர்மம் எங்கு உள்ளதோ அங்கே தோல்வி ஏற்படுமாம் என்றாலும், தர்மத்தின் பக்கமே நில்"
என்று சொல்கிறார்.
சித்த சுத்தி ஏற்படும் போது, சந்யாஸ நிலை நமக்கு ஏற்படுகிறது.
இந்த நிலை,
நமக்கு மன அமைதியை தருகிறது.
திருப்தியை தருகிறது.
ஸத் சங்கத்தை நாட வேண்டும் என்ற புத்தியை தருகிறது.
மகான்களை தரிசிக்க, தெய்வங்களை தரிசிக்க தூண்டுகிறது.
கடைசியில் மோக்ஷம் வரை நம்மை கூட்டி செல்கிறது.
வாழ்க பகவத் கீதை.
வாழ்க நம் ஆத்ம குரு.
வாழ்க ஹிந்துக்கள்.