Followers

Search Here...

Showing posts with label அஸத். Show all posts
Showing posts with label அஸத். Show all posts

Thursday, 16 April 2020

ஸத்-அஸத் இரண்டுக்கும் அப்பாற்பட்டு இருக்கிறார் பரப்பிரம்மம் என்று சொல்கிறது வேதம்... புரியவில்லையே!! புரிந்து கொள்வோமே!

"ஸத்-அஸத் இரண்டுக்கும் சாட்சியாக, அப்பாற்பட்டு இருக்கிறார், பரப்பிரம்மம்" என்று சொல்கிறது வேதம்
"ஸத்" என்றால் "இருக்கிறது" என்று அர்த்தம்.
"அஸத்" என்றால் "இல்லை" என்று அர்த்தம்.

கேள்வி: உலகம் இருப்பது தெரிகிறதா?
கண் இருப்பவன் "உலகம் தெரிகிறது" (ஸத்) என்று சொல்கிறான்.
கண் இல்லாதவன் "தெரியவில்லை" (அஸத்) என்று சொல்கிறான்.




கேள்வி: இருட்டில் உலகம் தெரிகிறதா?
கண் இருப்பவனும் "உலகம் தெரியவில்லை" (அஸத்) என்று சொல்கிறான்.
கண் இல்லாதவனும் "உலகம் தெரியவில்லை" (அஸத்) என்று சொல்கிறான்.

கேள்வி: தெய்வம் இருப்பது தெரிகிறதா?
சிலர் "தெய்வம் இருக்கிறார்" (ஸத்)  என்று சொல்கிறார்கள்.
சிலர் "தெய்வம் இல்லை" (அஸத்)  என்று சொல்கிறார்கள்.

இப்படி எதை கேட்டாலும்,
சிலர் ஸத் என்றும், 
சிலர் ஸத் என்றும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

"ஸத்-அஸத் இரண்டுக்கும் அப்பாற்பட்டு இருக்கிறார், பரப்பிரம்மம்"
என்று சொல்கிறது வேதம்

வேதம் சொல்லும் இந்த ரகசியத்தை புரிந்து கொள்ள முடியுமா? 
குருநாதர் வழிகாட்டுகிறார்.

கேள்வி: இருட்டில் நீ இருப்பது தெரிகிறதா? 
கண் இருப்பவனும் "நான் இருக்கிறேன்" (ஸத்) என்று சொல்கிறான்.
கண் இல்லாதவனும் "நான் இருக்கிறேன்" (ஸத்) என்று சொல்கிறான்.

"இருக்கிறார் என்றும், இல்லை என்றும் யார் சொல்வது?" என்று கேட்டால்,
"நான் சொல்கிறேன்" என்று பதில் உள்ளுக்குள் இருந்து வருகிறது.

யார் பேசுவது? என்று கேட்டால், "நான் பேசுகிறேன்" என்று உள்ளுக்குள் இருந்து பதில் வருகிறது.

"நான் இருக்கிறேன்" என்று உள்ளுக்குள் இருந்து பேசுவது யார்?
உள்ளிருந்து பேசுவது "பரப்பிரம்மம்" என்று அறிந்து கொள் என்று வேதம் காட்டுகிறது.

இந்த பரப்ரம்மமே எங்கும் இருக்கிறது.
அந்த பரப்ரம்மமே பல ரூபத்தில் இருக்கிறது.
அந்த பரப்ரம்மமே "இது ஸத் என்றும், இது அஸத் என்றும்" சொல்லி லீலை (விளையாடு) செய்து கொண்டு இருக்கிறது.

ஸத்-அஸத் இரண்டுக்கும் அப்பாற்பட்டு சாட்சியாக இருக்கிறார் (ஸத்), பரப்பிரம்மம்.

"நானே பரப்பிரம்மம்" என்று சொல்வது அகம்பாவம். அப்படி ஒருவரும் சொல்லக் கூடாது.
மாறாக,
"பரப்பிரம்மே எங்கும் இருக்கிறார்" என்பதே உண்மை என்பதால்,
"பரப்பிரம்மே  நானாகவும் இருக்கிறார்" என்று சொல் லும் போது, அகம்பாவம் நமக்கு ஏற்படாது. 
"அனைவருமே பரமாத்மா ஸ்வரூபம் தான்" என்ற ஞானம் பிறக்கும் போது நமக்கு சித்த சுத்தி உண்டாகும்.

கடவுள் (பரப்பிரம்மம்) உள்ளே இருப்பதால் தான், மாயையின் காரணத்தால், "ஒருவன் கடவுள் இல்லை" என்றும், கொஞ்சம் உணர்ந்தவன் "கடவுள் இருக்கிறார்" என்று சொல்கிறான்.

கடவுள் இருக்கிறார் (ஸத்) என்று சொல்வதால் தான், பரப்பிரம்மம் இருக்கிறார் என்று நினைக்கக்கூடாது. அவர் என்றுமே இருக்கிறார்.
கடவுள் இல்லை (அஸத்) என்று சொல்வதால், பரப்பிரம்மம் இல்லாமல் போவதும் இல்லை. அவர் என்றுமே இருக்கிறார்.




உண்மையில்,
"கடவுள் இல்லை" என்று சொல்பவன், "நானே இல்லை" என்று சொல்கிறான். 
இதை விட ஒருவன் தன்னை தாழ்த்திக்கொள்ள என்ன இருக்கிறது?

"இருக்கிறார்" என்றாலும், "இல்லை" என்றாலும், 
இரண்டையுமே சாட்சியாக பார்த்து கொண்டு இருக்கிறார் பரப்பிரம்மம்.
இதையே வேதம், 
ஸத்-அஸத், இரண்டுக்கும் அப்பாற்பட்டு இருக்கிறார் பரப்பிரம்மம் என்று சொல்கிறது.

நம் ஆத்மாவே பரப்பிரம்மம் என்று உணர வேண்டும்.

வாழ்க நம் ஹிந்து தர்மம்
வாழ்க நம் ஹிந்துக்கள்

வாழ்க நம் குருநாதர்.