Followers

Search Here...

Wednesday 19 June 2024

ஜாதிகள்... அனுவிடமிருந்து மிலேச்சர்கள் பிறந்தார்கள், ஆதி பர்வம்

யயாதியின் மூத்த பிள்ளை "யது".  இருந்தாலும், தன்னுடைய கடைசி புத்திரனான "புரு"வுக்கு பட்டாபிஷேகம் செய்ய தீர்மானித்தார்.

யயாதியின் பிள்ளைகள் மூலம் என்னென்ன குலங்கள் உருவாகின? என்பதை யயாதி சொன்னார்.

 

यदोस्तु यादवा जातास्तुर्वसोर्यवनाः स्मृताः।

द्रुह्योः सुतास्तु वै भोजा अनोस्तु म्लेच्छजातयः।।

पूरोस्तु पौरवो वंशो यत्र जातोऽसि पार्थिव।

इदं वर्षसहस्राणि राज्यं कारयितुं वशी।।

- ஆதி பர்வம்

 

என்னுடைய மூத்தவனான யது மூலம், யாதவ வம்சம் உருவானது.

துர்வசுவிடமிருந்து, யவனர்கள் வம்சம் உருவானது.

த்ருஹ்யுவிடமிருந்து போஜர்கள்  வம்சம் உருவானது.

அனுவிடமிருந்து மிலேச்சர்கள் வம்சம் உருவானது.

புருவிடமிருந்து பௌரவர்கள் வம்சம் உருவானது,

என்றார்.


புத்திரன் என்ற பெயருக்கு அர்த்தம் என்ன ? ஏன் யதுவை அரசனாக்கவில்லை? அறிவோம் மஹாபாரதம்

புத்திரன் என்ற பெயருக்கு அர்த்தம் என்ன ? அறிவோம் மஹாபாரதம் 

யயாதியின் மூத்த பிள்ளை "யது".  இருந்தாலும், தன்னுடைய கடைசி புத்திரனான "புரு"வுக்கு பட்டாபிஷேகம் செய்ய தீர்மானித்தார்.

ஏன் யதுவை அரசனாக்கவில்லை? என்று கேட்க, இவ்வாறு யயாதி சொன்னார்.

 

प्रतिकूलः पितुर्यश्च न स पुत्रः सतां मतः।

मातापित्रोर्वचनकृद्धितः पथ्यश्च यः सुतः।

स पुत्रः पुत्रवद्यश्च वर्तते पितृमातृषु।।

पुद् इति नरकस्य आख्या दुःखं च नरकं विदुः।

पुतस्त्राणात्ततः पुत्त्रमिहेच्छन्ति परत्र च।।

- ஆதி பர்வம்


தந்தைக்கு விரோதமாக நடக்கும் பிள்ளையை, சான்றோர்கள் புத்திரனாக ஏற்பதில்லை.

தாயும் தந்தையும் சொல்வதை கேட்பவன், அவர்கள் சொன்னபடி நடப்பவன் எவனோ, அவனே புத்திரன் என்று சொல்லப்படுகிறான்.

புத்திரன் என்ற சொல்லில் உள்ள "புத்" என்ற சொல் "நரகத்தை" குறிக்கிறது. துக்கமயமானது நரகம். அந்த துக்கத்திலிருந்து இக லோகத்திலும், பர லோகத்திலும் பிள்ளை காப்பாற்றுவதால், இவனை "புத்திரன்" என்று சொல்கிறோம்.

இவ்வாறு யயாதி, வந்திருந்த பிராம்மண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்திரர்களிடம் சொல்லி, தன் கடைசி இளைய புத்திரனான புருவுக்கு பட்டாபிஷேகம் செய்ய அழைத்தார்.  

மிலேச்சன் யார்? ஆதி பர்வம் (மஹாபாரதம்)

மிலேச்சன் யார்?

यत्त्वं मे हृदयाज्जातो वयः स्वं न प्रयच्छसि।

तस्मात्प्रजा समुच्छेदं तुर्वसो तव यास्यति।।

संकीर्ण आचारधर्मेषु प्रतिलोमचरेषु च।

पिशिताशिषु चान्त्येषु मूढ राजा भविष्यसि।।

गुरुदारप्रसक्तेषु तिर्यग्योनिगतेषु च।

पशुधर्मेषु पापेषु म्लेच्छेषु त्वं भविष्यसि।।

- ஆதி பர்வம் (மஹாபாரதம்) 

"உனக்கு பிறக்கும் சந்ததிகள், ஆசார தர்மங்களில் விலகியும், வர்ண கலப்பில் ஏற்கப்படாத மணம் புரிந்து கொண்டும், மாமிசம் சாப்பிடுவதில் பெரும் ஆர்வம் கொண்டும், குருவின் மனைவியை அடைய துணிபவனாகவும், திர்யக் ஜாதியின் நடையுள்ளவர்களும், மிருகத்தை போல (சாப்பிடுவதற்காக வாழ்வது) வாழ்பவர்களும், பாபத்தை செய்வதில் தயக்கம் இல்லாதவர்களுமான மிலேச்சர்களுக்கு நீ அரசனாக இருப்பாய்என்று யயாதி தன் மகனான துர்வஸுவை சபித்தார்.  



மக்களை, தர்மத்தில் சரியாக வழிநடத்தி கொண்டு, 2வது இந்திரனை போல யயாதி அரசாட்சி செய்தார்.

இளமையை தன் மகனான புருவிடம் பெற்று கொண்ட யயாதி

தேவர்களை, யாகங்கள் செய்து மகிழ்வித்தார்.

பித்ருக்களை, ஸ்ரார்த்தம் செய்து மகிழ்வித்தார்.

ஏழைகளுக்கு தேவையான கருவிகளை அன்போடு கொடுத்தார். 

ப்ராம்மணர்களுக்கு தேவையானதை கொடுத்தார்.

விருந்தினர்களுக்கு, உணவும், பானமும் கொடுத்தார்.

வைஸ்யர்களின் செல்வத்தை காப்பாற்றினார்.

சூத்திரர்களிடம் இரக்கத்தோடு இருந்தார்.

திருடர்களுக்கு, நியாயமான தண்டனை கொடுத்தார்.

மக்களை, தர்மத்தில் சரியாக வழிநடத்தி கொண்டு, 2வது இந்திரனை போல யயாதி அரசாட்சி செய்தார்.


देवानतर्पयद् यज्ञैः श्राद्धै: तद्वित् पितॄनपि।

दीनान् अनुग्रहै: इष्टैः कामै: च द्विजसत्तमान्।।

अतिथीन् अन्न पानै: च विश: च परिपालनैः।

आनृशंस्येन शूद्रां च दस्यून्सन्निग्रहेण च।।

धर्मेण च प्रजाः सर्वा यथावदनुरञ्जयन्।

ययातिः पालयामास साक्षादिन्द्र इवापरः।।

 - ஆதி பர்வம்