பாண்டவர்களுக்கு எத்தனை மகன்கள் பிறந்தார்கள்? அறிவோம் மஹாபாரதம்
ततः पाञ्चाल विषयं गत्वा
स्वयंवरे द्रौपदीं लब्ध्वा अर्ध राज्यं
प्राप्य इन्द्रप्रस्थ निवासिन: तस्यां
पुत्रान् उत्पादयाम् आसु द्रौपद्याम्।।
प्रतिविन्ध्यां युधिष्ठिरः |
सुतसोमं वृकोदरः |
श्रुतकीर्तिमर्जुनः |
शतानीकं नकुलः |
श्रुतसेनं सहदेव इति।।
- மஹாபாரதம் (வ்யாஸர்)
பாஞ்சால தேசம் (punjab) சென்று, திரௌபதியை சுயம்வரத்தில் வென்று, கிடைத்த பாதி ராஜ்யமான இந்திரப்ரஸ்தத்தில் பாண்டவர்கள் வசித்தனர். அங்கு திரௌபதி மூலம் பாண்டவர்கள் 5 புத்திரர்களை பெற்றனர்.
யுதிஷ்டிரன் ப்ரதிவிந்த்யன் (1) என்ற புத்திரனை பெற்றார்.
பீமன் ஸுதஸோமன் (2) என்ற புத்திரனை பெற்றார்.
அர்ஜுனன் ஸ்ருதகீர்த்தீ (3) என்ற புத்திரனை பெற்றார்
நகுலன் ஸதாநீகன் (4) என்ற புத்திரனை பெற்றார்.
சஹதேவன் ஸ்ருதசேனன் (5) என்ற புத்திரனை பெற்றார்.
शैव्यस्य कन्यां देवकीं नामोपयेमे युधिष्ठिरः।
तस्यां पुत्रं जनयामास यौधेयं नाम।।
யுதிஷ்டிரன் ஸைப்யனின் பெண்ணான தேவகீயை மணந்தார். அவர்களுக்கு யௌதேயன் (6) என்ற புத்திரன் பிறந்தான்.
भीमसेनस्तु वाराणस्यां काशिराज कन्यां जलन्धरां नामोपयेमे स्वयंवरस्थां।
तस्यामस्य जज्ञे शर्वत्रातः।।
பீமன் காசி ராஜனின் பெண்ணான ஜலந்தராவை மணந்தார். அவர்களுக்கு ஸர்வத்ராதன் (7) என்ற புத்திரன் பிறந்தான்
अर्जुनस्तु खलु द्वारवतीं गत्वा
भगवतो वासुदेवस्य भगिनीं सुभद्रां
नामोदवहद् भार्यां |
तस्याम् अभिमन्युं नाम पुत्रं जनयामास ||
அர்ஜுனன் துவாரகை சென்ற போது, பகவான் வாசுதேவ கிருஷ்ணரின் தங்கை சுபத்ராவை மணந்தார். அவர்களுக்கு அபிமன்யு (8) என்ற புத்திரன் பிறந்தான்
नकुलस्तु खलु चैद्यां रेणुमतीं नामोदवहत् |
तस्यां पुत्रं जनयामास निरमित्रं नाम ||
நகுலன் சேதி நாட்டு அரசன் பெண்ணான ரேணுமதீயை, மணந்தார். அவர்களுக்கு நிரமித்ரன் (9) என்ற புத்திரன் பிறந்தான்
सहदेवस्तु खलु माद्रीमेव स्वयंवरे विजयां नामोदवहद्भार्याम् |
तस्यां पुत्रं जनयामास सुहोत्रं नाम ||
சஹதேவன் மத்திர நாட்டு அரசன் பெண்ணான விஜயாவை சுயம்வரத்தில் மணந்தார். அவர்களுக்கு ஸுஹோத்ரன் (10) என்ற புத்திரன் பிறந்தான்
भीमसेनश्च पूर्वमेव हिडिम्बायां राक्षस्यां पुत्रमुत्पादयामास
घटोत्कचं नाम |
பீமன் இதற்கு முன்பேயே ராக்ஷஸ பெண்ணான ஹிடிம்பியை மணந்தார். அவர்களுக்கு கடோத்கஜன் (11) என்ற புத்திரன் பிறந்தான்.
अर्जुनस्तु नागकन्यायाम् उलूप्याम्
इरावन्तं नाम पुत्रं जनयामास ||
அர்ஜுனன் மேலும் நாக கன்னியான உலூபியை மணந்தார். அவர்களுக்கு இராவந்தன் (12) என்ற புத்திரன் பிறந்தான்.
ततो मणलूरुपति कन्यायां चित्राङ्गदायाम् अर्जुनः पुत्रम् उत्पादयामास
बभ्रुवाहनं नाम |
பிறகு, அர்ஜுனன் மதுரைக்கு எல்லையாக இருந்த மணலூர் (பாண்டிய தேசம்) அரசனின் (சித்ரவாஹனன்) பெண்ணான சித்ராங்கதாவை மணந்தார். அவர்களுக்கு பப்ருவாஹனன் (பாண்டிய மன்னன்) (13) என்ற புத்திரன் பிறந்தான்.
एते त्रयोदश पुत्राः पाण्डवानाम्
இவ்வாறு பாண்டவர்களுக்கு 13 புத்திரர்கள் பிறந்தார்கள்.
பாண்டிய தேச அரசி சித்ராங்கதா, அர்ஜுனனின் மூத்த மனைவியும், பாஞ்சாலியுமான (punjab) திரௌபதிக்கு பெரு மதிப்பு கொடுத்து இருக்கிறாள்.
அவள் மகனும், பாண்டிய அரசனுமான பப்ருவாஹனன் முதல் பிறகு 5000 வருடங்கள் வந்த பாண்டிய அரசர்கள் யாவரும் திரௌபதிக்கு பெரு மதிப்பு கொடுத்து வழிபாடு செய்து, அக்னியில் இருந்து தோன்றியவள் என்பதால், அவளுக்கு முன் தீ மிதித்து வழிபாடு செய்து இருக்கின்றனர் என்று தெரிகிறது.
இன்றைய பஞ்சாபில் கூட திரௌபதிக்கு வழிபாட்டு கோவில்கள் அதிகம் இல்லை. ஆனால் திரௌபதிக்கு தெற்கு பாரதமான தமிழ்நாட்டில் திரௌபதிக்கு கோவில்கள், வழிபாடுகள் அதிகம் காணப்படுகிறது.
No comments:
Post a Comment