Followers

Search Here...

Monday, 19 September 2022

சூத்திரன் என்றால் "விபச்சாரி மகன்" என்று மனு ஸ்ம்ருதி சொல்கிறதா? எந்த சமஸ்க்ரித வார்த்தையை இப்படி உருட்டுகிறார்கள் என்று பார்ப்போமே!

சூத்திரன் என்றால் "விபச்சாரி மகன்" என்று மனு ஸ்ம்ருதி சொல்கிறதா? 

எந்த சமஸ்க்ரித வார்த்தையை இப்படி உருட்டுகிறார்கள் என்று பார்ப்போமே!

ध्वज-आहृतो भक्त-दासो

गृहजः क्रीतदत् त्रिमौ  ।

पैत्रिको दण्डदासश्च

सप्तैते दासयोनयः ॥

- manu-smruti

த்வஜ ஆஹ்ருதா பக்த-தாஸ

க்ருஹஜ:  கீர்ததத் த்ரிமௌ |

பைத்ரிகோ தண்ட-தாஸ: ச 

ஸப்தைதே தாஸயோநய: ||

- மனு ஸ்ம்ருதி


அர்த்தம் :

1. போரில் கைது செய்யப்பட்டவன் தாஸனாக, சூத்திர வர்ணத்தில் இருந்து காரியங்கள் செய்ய வேண்டும் (த்வஜ ஆஹ்ருதா).


2. அன்பினால் (பக்தியால்) கைங்கர்யம் செய்ய வருபவன் தாஸனாக, சூத்திர வர்ணத்தில் இருந்து காரியங்கள் செய்ய வேண்டும் (பக்த தாஸ).


3. வீட்டில் வேலை செய்பவனின் பிள்ளை, தாஸனாக, சூத்திர வர்ணத்தில் இருந்து காரியங்கள் செய்ய வேண்டும் (க்ருஹஜ).

(சமஸ்க்ரித "க்ருஹஜ" என்ற சொல்லை தவறான அர்த்தம் புரிந்து கொண்டு எழுதப்பட்ட புத்தகத்தை காட்டி, சூத்திரனை "விபச்சாரியின் மகன்" என்று காட்டுகிறார்கள் இப்படி காட்டி, வேலைக்கு போகும் மக்களை (employee / சூத்திர) "விபச்சாரி" என்று சொல்லி அவமானப்படுத்த நினைக்கின்றனர்.  "க்ருஹ" என்றால் வீடு என்று அர்த்தம். 

எப்படி வீடு (க்ருஹ), விபச்சாரி என்று அர்த்தம் செய்ய முடியும்? 

ஹஸ்தினாபுர அரண்மனையில் வேலை பார்த்தாள் ஒருவள். அவளுக்கு பிறந்தார் விதுரன்

இவர் என்ன விபச்சாரியின் மகனா? வேலைக்காரியின் மகனை விபச்சாரி மகன் என்று சொல்லி, ஹிந்துகளாக வேலைக்கு செல்பவர்களை கேவலப்படுத்துகின்றனர்.

விபச்சாரியின் மகனை அந்த காலத்தில் மதிக்கவே மாட்டாராகள். 

தன் அரண்மனையில் வேலை பார்த்த இவளின் பிள்ளைக்கு முதல் அமைச்சராக (chief minister) பணி கொடுத்து (employee) பீஷ்மர் த்ருதராஷ்டிரனுக்கு துணையாக இருக்க வைத்தார்.  வேலைக்காரியின் மகன் என்று சொன்னதை, விபச்சாரியின் மகன் என்று சொல்லி ஹிந்துக்களை கீழ்த்தரமாக பேசியவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்


4. விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள், தாஸனாக, சூத்திர வர்ணத்தில் இருந்து காரியங்கள் செய்ய வேண்டும் (கீர்ததத்).


5. பிறரால் வேலை செய்ய நியமிக்கப்பட்டவன், தாஸனாக, சூத்திர வர்ணத்தில் இருந்து காரியங்கள் செய்ய வேண்டும் (த்ரிமௌ).


6. பரம்பரையாக பணி செய்பவன், தாஸனாக, சூத்திர வர்ணத்தில் இருந்து காரியங்கள் செய்ய வேண்டும் (பைத்ரிக:) .


7. அபராதத்தை கட்ட முடியாமல், வேலை செய்து சரி கட்ட நினைப்பவன், தாஸனாக, சூத்திர வர்ணத்தில் இருந்து காரியங்கள் செய்ய வேண்டும் (தண்ட தாஸ).

No comments: