ராவணனை "திராவிடன்" என்று சொல்லி, சிலர் கொண்டாடுகிறார்கள்.
'ராவணன் என்று ஒருவன் இருந்தான்' என்று காட்டியதே, ஆரிய புத்தகம் என்று இவர்களால் சொல்லப்படும் வால்மீகி ராமயணத்தால் தான்.
ஆரிய புத்தகம் தான் திராவிடனை காட்டி கொடுத்தது என்று ஒத்து கொள்கிறார்களா இந்த மடையர்கள்?
ராவணன் "திராவிடன்" என்று சொல்கிறார்கள்.
சிலர் தனக்கே ராவணன் என்று பெயர் வைத்து கொள்கிறார்கள்.
ராவணன் ஒரு ராக்ஷஸன், நர மாமிசம் சாப்பிடுவான் என்கிறது வால்மீகி ராமாயணம்.
அப்படியென்றால்,
திராவிடன் எல்லோரும் ராக்ஷஸன் என்று ஒத்து கொள்வார்களா? இந்த மடையர்கள் !
ராவணன் "திராவிடன்" என்று சொல்கிறார்கள்.
வால்மீகி ராமாயணத்தில், ராவணன் போர்க்களத்தில் கொல்லப்பட்டு கிடக்க, மண்டோதரி அலறி அடித்து கொண்டு "ஆர்ய புத்ரா !.." என்று ராவணனை அழைக்கிறாள். "திராவிட புத்ரா" என்று அழைக்கவில்லை.
आर्यपुत्रेति वादिन्यो हा नाथेति च सर्वशः |
ஆர்ய புத்ர இதி வாதின்யோ
ஹா நாதேதி ச சர்வஸ: |
- வால்மீகி ராமாயணம்
அடிப்படையிலேயே ராவணன் திராவிடன் இல்லை என்று மண்டோதரி கூப்பிடுவதிலேயே தெரிகிறது.
ராவணன் என்று பெயர் வைத்து கொண்டு அலைபவர்கள்,/ராவணன் யார் என்று கூட தெரியாத மடையர்கள் என்று புரிந்து கொள்வார்களா?
தமிழ் பழமையா? சமஸ்கரிதம் பழமையா?
மற்ற அனைத்து மொழிகளையும் விட. இந்த இரண்டு மொழிகளும் மிகவும் பழமையான மொழி என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த இரண்டில் எது பழமை?
தமிழுக்கு ஆதாரமாக 5 பெரும் காப்பியங்கள் சொல்லப்படுகிறது.
தொல்காப்பியம் 5:
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- வளையாபதி
- குண்டலகேசி
- சீவக சிந்தாமணி
தொல்காப்பியத்தில் உள்ள காப்பியம் என்ற சொல்லே "காவியம்" என்ற சமஸ்கரித சொல்லில் இருந்து வந்தது தான்.
சிலப்பதிகாரம் என்ற் பெயரில் உள்ள "அதிகாரம்" என்ற சொல்லே சமஸ்க்ரித சொல் தான்.
வளையாபதி என்பதே சமஸ்க்ரித சொல் தான். "பதி" என்ற சமஸ்கரித சொல்லையே அப்படியே பயன்படுத்தி இருக்கிறது.
குண்டலகேசி என்பதே சமஸ்க்ரித சொல் தான். கேசி, குண்டலம் என்ற சமஸ்கரித சொல்லை அப்படியே பயன்படுத்தி இருக்கிறது.
சிலப்பதிகாரத்தில் கூறப்படும் கோவலன் என்ற பெயரே "கோபாலன்' என்ற சமஸ்கரித பெயர் தான்.
"கண்ணகி' என்ற சொல்லே கிருஷ்ணன் என்ற பெயர் தான்.
மேலும் சிலப்பதிகாரத்தில் இவர்கள் தங்களை ஆயர் குடி என்று சொல்லிக்கொள்கிறாகள். மேலும் இந்திர விழா கொண்டாடுவதாக சொல்கிறது சிலப்பதிகாரம்.
இது யாதவர்கள் பழக்கம்.
சீவக சிந்தாமணி என்ற பெயரே சமஸ்கரித சொல் தான். ஜீவகன் என்பதையே சீவகன் என்று தமிழ் சொல்கிறது. சிந்தாமணி என்ற சொல்லே சமஸ்கரித சொல் தான்.
சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று "பரிபாடல்" என்ற பெயரில் உள்ள "பரி' என்ற சொல்லே "பரிஷ்காரம்" என்ற சமஸ்கரித்தில் இருந்து தான் வந்துள்ளது.
சமஸ்கரிதம் இல்லாமல் தமிழுக்கு ஆதாரமாக சொல்லப்படும் காப்பியங்கள் கூட இல்லை என்று பார்க்கிறோம்.
தமிழே தெரியாத வடநாட்டு மக்களிடம், "சிந்தாமணி, கோபால், கேசி, குண்டல, இந்திர பூஜா, காவிய" என்று சொன்னால் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
இதுவே போதுமான அடிப்படை ஆதாரம்.
தமிழுக்கும் ஆதாரமாக சமஸ்கரிதம் உள்ளது என்று தமிழ் காப்பியங்களே காட்டி விடுகிறது.
சமஸ்கரித மொழியில் எழுதப்பட்ட ராமாயணம் தான், ராவணனை காட்டுகிறது.
இன்று வரை தமிழர்கள் பேச்சில், பெயரில் தமிழோடு கலந்து இருப்பது சமஸ்கரித மொழி மட்டுமே.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று தமிழனாக சொல்லிக்கொள்ள பெருமை பட்டாலும்,
திராவிட என்ற சொல்லிலும் சமஸ்க்ரிதம், நாத்தீகம் என்ற சொல்லிலும் சமஸ்க்ரிதம், பிரார்த்தனை, சூரியன், நிதி என்று எங்கும் சமஸ்க்ரிதம், எதிலும் சமஸ்க்ரிதமே இருக்கிறது என்று தெரிகிறது.
தமிழுக்கும் ஆதாரமாக இருக்கும் சமஸ்க்ரிதம் பழமையான மொழி என்று தெரிகிறது.
தமிழ் தமிழ் என்று நெஞ்சில் அடித்து கொண்டாலும், தன் பெயரையே கருணா, நிதி, உதய, சூரிய, கிரி, ராஜா என்று தான் வைத்து கொண்டு அலைய வேண்டும் என்பதிலேயே, சமஸ்கரிதம் தமிழுக்கும் மேல் பழமையானது என்று தெரிகிறது.
வாழ்க தமிழ்.
வாழ்க தமிழுக்கும் ஆதியான சமஸ்கரிதம்.
ஏன் தமிழ் மொழி தேசிய மொழியாக ஆகவே முடியாது? காரணங்கள் உள்ளது. தெரிந்து கொள்ளே இங்கே படிக்கவும்.
1 comment:
The so called davidians will not accept these words as Samskrit words. They will argue that these are Tamil words. The only proof is we can trace the root word in sanskrit and explain as compound word for all the words. But it cannot be done in Tamil
Post a Comment