Followers

Search Here...

Thursday, 9 September 2021

ஓம் என்றால் என்ன? காயத்ரீ மந்திரத்தோடு ஓம் பூ: புவ: ஸுவ: என்று சேர்த்து சொல்வதன் அர்த்தம் என்ன? வேதம், பிரணவத்துடன், ப்ரம்மத்துடன் எப்படி தொடர்பு கொண்டுள்ளது?...

பகவானின் இதயத்திலிருந்து வந்த சங்கல்பமே "வேதம்".

நமக்கு சிவனும், முருகனும், பெருமாளும், பராசக்தியும் தெரிந்ததற்கு காரணமே "வேதம்" தான்.

நம்முடைய பல கேள்விகளுக்கு பதில் கொடுத்ததும் "வேதமே". 

வேதத்தை கிண்டல் செய்பவன், வேதம் நமக்கு காட்டிய சிவனையும், விஷ்ணுவையும், ஓங்காரத்தையும், முருகனையும், கணேசனையும், சக்தியையும் சேர்த்து கிண்டல் செய்கிறான் என்று ஹிந்துக்கள் உணர வேண்டும்.

வேதம் ஓத கூடாது என்று சொல்பவன், உண்மையில் நாம் வணங்கும் தெய்வத்தை அவமானப்படுத்த நினைக்கிறான் என்றே ஹிந்துக்கள் அறிய வேண்டும். 

வேதம் மட்டும் நமக்கு இல்லாமல் போயிருந்தால், அதிகபட்சம் 

"பரமாத்மா இருக்கிறார். எங்கோ இருக்கிறார். நமக்கு தெரிய மாட்டார். அவர் வரமாட்டார்

என்று அரைகுறையாக உருட்டிக்கொண்டு, 'தெய்வத்தின் பெயரால்' தங்கள் இஷ்டத்துக்கு பாவங்கள் செய்து கொண்டு இருப்போம். 




  • பரமாத்மா யார்?
  • அவருக்கும் ப்ரணவத்துக்கும் என்ன சம்பந்தம்?
  • அவர் விஷ்ணுவாகவும், சிவனாகவும், பிரம்மாவாகவும் ஏன் ரூபம் தரித்தார்? 
  • ஏன் உலகை படைத்தார்? 
  • எப்படி உலகை படைத்தார்?
  • நம்மை ஏன் படைத்தார்? 
  • உலகில் ஏன் இவ்வளவு வேறுபாடுகள்?
  • மனிதனின் குறிக்கோள் என்ன?
  • மனிதர்கள் துன்பத்தில் இருந்து விடுபட்டு விடுதலை அடைய வழி என்ன?

என்ற பல கேள்விகளுக்கு, பதில் தெரியாமலேயே போயிருக்கும்.

பகவான் மட்டுமே பதில் சொல்லக்கூடிய இந்த கேள்விகளுக்கு, பகவானின் இதயத்திலிருந்து வெளிவந்த வேதம், அனைத்து கேள்விக்கும் பதில் சொல்கிறது. 

பகவான் என்ன நினைக்கிறார்? என்று தெரிந்து கொண்டு விட்டால், இந்த கேள்விகள் அனைத்துக்கும் விடை கிடைத்து விடுகிறது.

"வேதம் என்ன சொல்கிறது?" என்று அறிவதன் மூலம், நமக்கு விடை கிடைக்கிறது.


அந்த வேதம், பகவானோடு எப்படி சம்பந்தப்பட்டு இருக்கிறது? என்று அறிவோம்.  


* வேதங்கள் நான்கு : ரிக், யஜுர், சாம, அதர்வண

* நான்கு வேதமும், அதனதன் வேத ஆதியில் (முதல் மந்திரம்) அடக்கம்.


வேத ஆதி (முதல் மந்திரம்) என்ன?

1. ரிக் வேத ஆரம்ப மந்திரம்: 

அக்நிமீளே புரோஹிதம் யக்ஞஸ்ய தேவம் ருத்விஜம் ஹோதாரம் ரத்ந தாதமம்

அர்த்தம்

யக்ஞத்தின் தேவனும், 

யக்ஞத்தில் வரிக்கப்பட்டவரும், 

முதன்மையாக இருப்பவரும், 

எல்லா தேவர்களையும் கூப்பிடுபவரும், 

செல்வத்தை தருபவரும், 

ஸ்ரேஷ்டமாக இருப்பவருமான 

அக்னி பகவானே ! 

பூ: புவ: ஸுவ: என்று விராட் ரூபத்தையே நாராயணனாக பார்க்கும் போது, அவருடைய கண்களாக இருக்கும் அக்னியே உன்னை துதிக்கிறேன்.




2. யஜுர் வேத ஆரம்ப மந்திரம்: 

இஷேத்வா - ஊர்ஜேத்வா - வாயவஸ்த - உபாயவஸ்த - தேவோவ: ஸவிதா - ப்ரார்ப்யது - ஸ்ரேஷ்டதம் ஆய கர்மணே

அர்த்தம்:

இஷ்டமான அதே சமயம் புஷ்டியான அன்னம் உண்டாவதற்காகவும்,

நல்ல பசும்பால் உண்டாவதற்காகவும்,

செய்யப்படும் சிறந்த யாகமாகிய கர்மத்தில், ஸவிதாவான ஈஸ்வரன் உன்னை தூண்டட்டும்.


3. சாம வேத ஆரம்ப மந்திரம்: 

அக்ந ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்ய தாதயே  நிஹோதா ஸத்ஸி ப'ர்ஹிஷி

அர்த்தம்:

அக்னி தேவனே ! வருக.. வருக.. ஹவிசை பெறுவதற்காக கூப்பிடப்பட்ட தாங்கள், இந்த தர்ப்ப ஆஸனத்தில் அமருவீராக 


4. அதர்வண வேத ஆரம்ப மந்திரம்: 

ஸந்நோ தேவீ: அபிஷ்டய

ஆபோ பவந்து பீதயே

ஸம்யோ: அபி ஸர வந்து ந : 

அர்த்தம் :

நமக்கு நல்ல திவ்யமான குடி தண்ணீர் கிடைக்கட்டும். நல்ல மழை பொழியட்டும்.

* வேத ஆதியாக இருக்கும் இந்த நான்கு மந்திரமும், காயத்ரீ மந்திரத்தில் அடக்கம்.

தத் ச வி துர் வ ரே ணி யம்

பர் கோ தே வஸ் ய தீ ம ஹி

தி யோ யோ நஹ் ப்ர சோ த யாத்


காயத்ரீக்குள் வேத மந்திரங்கள் அனைத்தும் அடங்கி இருக்கிறது என்பதால் தான், வேதம் கற்கும் முன், காயத்ரீ மந்திரத்தை முதலில் குரு ப்ரம்ம உபதேசமாக செய்கிறார்.


* காயத்ரீ வ்யாஹ்ருதியில் அடக்கம்.

(பூ: புவ: ஸுவ: என்ற கீழ், நடு, மேல் உலகங்களை, வ்யாஹ்ருதி என்று சொல்கிறோம். 

இந்த உலகங்களுக்குள் காயத்ரீ மந்திரம் அடங்கி உள்ளது என்று நினைத்து விட கூடாது.

மூன்று உலகங்கள் விராட் புருஷனான நாராயணனின் அங்கம் என்று ரூபமாக தியானித்து, அந்த விராட் புருஷனாக இருக்கும் நாராயணனின் அங்கத்தில் காயத்ரீ என்று அடங்கி இருக்கிறாள் என்று தியானிக்க வேண்டும்.

அதனால் தான், 

காயத்ரீ மந்திரம் சொன்னாலும், பிராணாயாமம் செய்தாலும், ப்ராயசித்த ஹோமங்கள், ப்ரோக்ஷணம், சமர்ப்பணம் செய்தாலும், பூ: புவ: ஸுவ: என்ற வ்யாஹ்ருதியை சேர்த்தே சொல்கிறோம். 





காயத்ரீ மந்திரம் மட்டும் அர்த்தம் தெரிந்து சொன்னால், பகவானின் நாமத்தை பூஜித்ததாகும். 

பூ: புவ: ஸுவ: என்ற வ்யாஹ்ருதியை சேர்த்து காயத்ரீயை சொல்லும் போது, பகவானின் ரூபத்தை தியானிக்க முடிவதால் பகவானின் ரூபத்தை பூஜித்ததாகவும் ஆகும்.

* வ்யாஹ்ருதி ப்ரணவத்தில் (ஓம்) அடக்கம்.

என்ற ஒலியும், என்ற ஒலியும், என்ற ஒலியும் சேரும் போது, "ஓம்" என்ற பிரணவம் கேட்கிறது.


மொழியின் அடிப்படையில்

"" என்பது உயிர் எழுத்து என்று அறிகிறோம்.

'உயிர்' என்றால் ஆத்மா என்று சொல்கிறோம்.


"ம்' என்பது மெய் எழுத்து என்கிறோம். 

'மெய்' என்றால் உடல் சொல்வோம்.


உயிர் ('ஆத்மா') மெய்யோடு (உடலில்) புகும் பொழுது, உயிர்மெய் என்று சொல்கிறோம்.

அதாவது,

+ம் = என்ற உயிர்மெய் வருகிறது.

ஓம் என்ற பிரணவம் இந்த ரகசியத்தை தான் நமக்கு சொல்கிறது.

என்ற உயிரே "பரமாத்மா".

அவரே ஆயிரக்கணக்கான உடல்களில் பிரவேசித்து, "" போல தெரிகிறார். அவரே என்று தனித்தும் இருக்கிறார். 

இந்த உறவை தெரிந்து கொள்ளவே "" என்ற உறவு காட்டுகிறது. 


* ப்ரணவம் (ஓம் - அஉம) ப்ரம்மத்தில் () அடக்கம்.


ப்ரம்மமே "பரமாத்மா". 

ப்ரம்மமே "பகவான்".

ப்ரம்மமே "கிருஷ்ணராக" வந்தார்.

"நான் ப்ரணவத்தில் '' என்ற அகாரமாக இருக்கிறேன்" என்று கீதையில் சொல்கிறார்.

ப்ரம்மமே ஒலி ரூபத்தில் 'ப்ரணவமாக' இருக்கிறார்.

ப்ரம்மமே பார்க்கும்படியாக ரூபத்துடன், '' என்ற விஷ்ணுவாக இருக்கிறார், மூன்று உலகங்களே அங்கமாக கொண்ட விராட் புருஷனாகவும் இருக்கிறார்.


இப்படி பரமாத்மாவிலிருந்து ஓம்

பிறகு பூ புவ ஸுவ

பிறகு காயத்ரீ

பிறகு 4 வேதத்தின் முதல் மந்திரங்கள்

பிறகு வேதங்கள்

வேதத்தை கொண்டு ப்ரம்ம தேவன், உலகங்களை படைக்கப்பட்ட வரிசை காட்டப்படுகிறது.


இந்த வரிசையை தியானிக்கவே, காயத்ரீயை மட்டும் சொல்லாமல்,

ஓம்

பூ: புவ: ஸுவ:

என்று சொல்லி, பிறகு 

தத் ச வி துர் வ ரே ணி யம்

பர் கோ தே வஸ் ய தீ ம ஹி

தி யோ யோ நஹ் ப்ர சோ த யாத்

என்று காயத்ரீ மந்திரம் சொல்கிறோம்.


குருநாதர் துணை...

 

No comments: