Followers

Search Here...

Sunday, 20 June 2021

ராம கீதை.. கிருஷ்ணர் பகவத் கீதை உபதேசித்தார். ராமபிரான் செய்த உபதேசமும் தெரிந்து கொள்வோம். ராமரின் தர்ம உபதேசம்.. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது... வால்மீகி ராமாயணம்

பரதன் தகப்பனார் பரலோகம் சென்றதால், ராமபிரான் வனவாசம் சென்றதால் பெரும் துயரில் வாடினார்.



तस्य साधु इति अमन्यन्त 

नागरा विविधा जनाः।

भरतस्य वच: श्रुत्वा 

रामं प्रति अनुयाचतः।।

- वाल्मीकि रामायण

தஸ்ய ஸாது இதி அமன்யந்த

நாகரா விவிதா ஜனா: |

பரதஸ்ய வச: ஸ்ருத்வா

ராமம் ப்ரதி அனுயாசத: ||

- வால்மீகி ராமாயணம்

Hearing the words of Bharata requesting Rama to return Ayodhya, various classes of people of the city of Ayodhya, in acceptance exclaimed "well said".

'அயோத்திக்கு ராமபிரான் திரும்பி வரவேண்டும்' என்று பரதன் கூறியதை கேட்டு, அயோத்தி நகரத்தின் பல தரப்பட்ட மக்கள் ஆரவாரத்துடன் ஜெயகோஷம் செய்து, அவர்களும் ராமபிரானை அயோத்திக்கு அழைத்தனர்.





तमेवं दुःखितं प्रेक्ष्य 

विलपन्तं यशस्विनम् ।

रामः कृतात्मा भरतं 

सम आश्वास यद् आत्मवान् ।।

- वाल्मीकि रामायण

தமேவம் துஹ்கிதம் ப்ரேக்ஷ்ய

விலபந்தம் யஷஸ்வினம் |

ராம: க்ருத் ஆத்மா பரதம்

ஸம ஆஷ்வாஸ யத் ஆத்மவான் ||

- வால்மீகி ராமாயணம்

But rama, the cultured and realized soul, consoled the lamenting bharata as follows

தர்மமும், ஒழுக்கமும் உடைய ராமபிரான், புலம்பி அழும் பரதனை ஆறுதல்படுத்தலானார்.


न आत्मनः कामकार: 

अस्ति पुरुष: अयम् अनीश्वरः।

इतश्च इतरतश्च एनं 

कृतान्तः परिकर्षति।।

- वाल्मीकि रामायण

ந ஆத்மன: காமகார:

அஸ்தி புருஷ: அயம் அனீஸ்வர: |

இத: ச இதரத: ச ஏனம்

க்ருதாந்த: பரிகர்ஷதி ||

- வால்மீகி ராமாயணம்

A being cannot live completely by his free-will without the super power. The super power pulls the being here and there.

எந்த உயிரும் 'தனக்கு ஈசன் இல்லை' என்று தன்னிச்சையாக, சுதந்திரமாக வாழ முடியாது. தெய்வ சக்தியே ஒருவனை எதிலும் இழுக்கிறது, விலக்குகிறது.


सर्वे क्षयान्ताः निचयाः 

पतनान्ता समुच्छ्रयाः।

संयोगा विप्र योगान्ता 

मरणान्तं च जीवितम्।।

- वाल्मीकि रामायण

சர்வே க்ஷயாந்தா: நிசயா:

பதநாந்தா ஸமுச்ச்ரயா: |

ஸம்யோகா விப்ர யோகாந்தா

மரணாந்தம் ச ஜீவிதம் ||

- வால்மீகி ராமாயணம்

All that are earned shall end in spending. All that ascend end in falling. All that are unified shall end in departure. All that are born have to end in death

சம்பாதித்தது எல்லாம், ஒரு நாள் செலவழிந்தே போகும். உயரத்துக்கு சென்றால், ஒரு நாள் கீழே இறங்கி தான் ஆக வேண்டும். இன்று சேர்ந்து இருப்பவர்கள் எல்லாம், ஒரு நாள் பிரிந்து தான் ஆக வேண்டும். பிறந்தவர்கள் எல்லாம், ஒரு நாள் இறந்து தான் ஆக வேண்டும்


यथा फलानां पक्वानां 

न अन्यत्र पतनाद् भयम्।

एवं नरस्य जातस्य 

न अन्यत्र मरणाद् भयम् ।।

- वाल्मीकि रामायण

யதா பலானாம் பக்வானாம்

ந அந்யத்ர பதநாத் பயம் |

ஏவம் நரஸ்ய ஜாதஸ்ய

ந அந்யத்ர மரணாத் பயம் ||

- வால்மீகி ராமாயணம்

The only fear of a ripened fruit is the fear of falling down (from the tree). In the same way every man who is born has no other fear except the fear of death.

மரத்தில் பழுத்த பழம் 'தான் விழ போகிறோம்' என்ற பயத்தில் இருக்கிறது. அது போல, இந்த உலகில் பிறந்தவர்கள் மரணத்தில் நிச்சயம் விழ போகிறோம் என்ற பயத்தில் இருக்கின்றனர்.


यथा आगारं दृढ स्थूणं 

जीर्णं भूत्वा अवसीदति।

तथैव सीदन्ति नरा 

जरा मृत्यु वशं गताः।।

- वाल्मीकि रामायण

யதா ஆகாரம் த்ருட ஸ்தூணம்

ஜீர்ணம் பூத்வா அவஸீததி |

ததைவ ஸீதந்தி நரா

ஜரா ம்ருத்யு வஸம் கதா: ||

- வால்மீகி ராமாயணம்

The construction with strong pillars also gets shaken when it grows old. In the same way, people under the sway of old age and death finally gets destroyed.

உறுதியான தூண்கள் வைத்து கட்டப்பட்ட மாளிகைகள் கூட, வயது ஆக ஆக இடிந்து தரைமட்டமாகி விடும். அது போல, நரர்களும் வயதாகி மரணத்தில் விழுகின்றனர்.





अत्येति रजनी या तु 

सा न प्रतिनि वर्तते।

य अत्येव यमुना पूर्णा 

समुद्रम् उदका कुलम् ।।

- वाल्मीकि रामायण

அத்யேதி ரஜனீ யா து

ஸா ந ப்ரதிநி வர்ததே |

ய அத்யேவ யமுனா பூர்ணா

சமுத்ரம் உதகா குளம் ||

- வால்மீகி ராமாயணம்

The river yamuna that mingle with the sea does not return back. One night which has gone is not going to return back)

கடலுக்கு சென்று கலந்து விட்ட யமுனா நதி எப்படி திரும்பி வர போவதில்லையோ, அதுபோல, கடந்து சென்று விட்ட இரவு பொழுது மீண்டும் வர போவதில்லை.


अहो रात्राणि गच्छन्ति 

सर्वेषां प्राणिनाम् इह।

अायूंषि क्षपयन्ति आशु 

ग्रीष्मे जलमिव अंशवः।।

- वाल्मीकि रामायण

அஹோ ராத்ராணி கச்சந்தி

சர்வேஷாம் ப்ராணினாம் இஹ |

ஆயூம்ஷி க்ஷபயந்தி ஆஸு

க்ரீஷ்மே ஜலமிவ அம்சவ: ||

- வால்மீகி ராமாயணம்

Days and nights are going on. They drink the life like the rays of sun drink the water in summer

பகலும் இரவும் போய் கொண்டே இருக்கிறது. சூரிய கதிர்கள் தண்ணீரை உரிஞ்சுவது போல, கழிந்து போன ஒவ்வொரு பகலும், இரவும் ஒவ்வொருவரின் ஆயுளையும் உறிஞ்சி கொண்டு இருக்கிறது.


आत्मानम् अनुशोच त्वं 

किम् अन्यम्.अनुशोचसि।

आयु: ते हीयते यस्य 

स्थितस्य च गतस्य च।।

- वाल्मीकि रामायण

ஆத்மானம் அனுஸோச த்வம்

கிம் அன்யம் அனுஸோசதி |

ஆயு: தே ஹீயதே யஸ்ய

ஸ்திதஸ்ய ச கதஸ்ய ச ||

- வால்மீகி ராமாயணம்

1st of all bother about you. Why do you lament for others? Your life is diminishing every seconds

பரதா! நீ உன்னை நினைத்து கவலை கொள். பிறரை நினைத்து இப்படி ஏன் சோகப்படுகிறாய்? உன்னுடைய வாழ்க்கையே ஒவ்வொரு நொடியும் கரைந்து கொண்டு இருக்கிறது என்று உணர்ந்து பார்.


सहैव मृत्यु: व्रजति

सह मृत्यु: निषीदति।

गत्वा सुदीर्घम् अध्वानं 

सह मृत्यु: निवर्तते ।।

- वाल्मीकि रामायण

ஸஹைவ ம்ருத்யு: வ்ரஜதி

சஹ ம்ருத்யு: நிஷீததி |

கத்வா சு-தீர்கம் அத்வானம்

சஹ ம்ருத்யு: நிவர்ததே ||

- வால்மீகி ராமாயணம்

Death follows a man wherever he goes. When he sits, death sits with him. Even after travelling a very long distance, the man returns along with death

மரணம் அனைவரையும் எப்பொழுதுமே தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உட்கார்ந்து இருந்தால் கூட கூடவே மரணம் உட்கார்ந்து இருக்கிறது. எத்தனை தூரம் ஒருவன் பயணித்தாலும், கூடவே மரணம் வருகிறது.


गात्रेषु वलयः प्राप्ता  

श्वेताश्चैव शिरो रुहाः।

जरया पुरुषो जीर्णः 

किं हि कृत्वा प्रभावयेत्।।

- वाल्मीकि रामायण

காத்ரேஷு வலய: ப்ராப்தா

ஸ்வேதாஸ்சைவ சிரோ ருஹா |

ஜரயா புருஷோ ஜீரண:

கிம் ஹி க்ருத்வா ப்ரபாவயேத் ||

- வால்மீகி ராமாயணம்

Wrinkles form on the body and hair turns grey in old age. In this way, decayed with age, what can a man do to have control over death.

தோலில் சுருக்கங்கள் ஏற்படுகிறது. வயதாக வயதாக கேசங்கள் நரைக்கிறது. இதை கூட தடுக்க முடியாத ஜீவனால் எந்த சக்தியை கொண்டு மரணத்தை தடுத்து விட முடியும்?





नन्दन्ति उदित आदित्ये 

नन्दन्ति अस्तमिते अहनि।

आत्मनो नाव बुध्यन्ते 

मनुष्या जीवित क्षयम्।।

- वाल्मीकि रामायण

நந்தந்தி உதித ஆதித்யே

நந்தந்தி அஸ்தமிதே அஹநி |

ஆத்மனோ நாவ புத்யந்தே

மனுஷ்யா ஜீவித  க்ஷயம் ||

- வால்மீகி ராமாயணம்

People rejoice when the Sun rises and rejoice when the Sun sets. They do not know the gradual diminution of their life day by day

ஜீவாத்மாக்கள், சூரியன் உதிப்பதை கண்டு குதூகலம் அடைகிறார்கள். சூரியன் மறைவதை கண்டு குதூகலம் அடைகிறார்கள். ஆனால், கழிந்து போகும் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை கரைக்கிறது என்று உணராமல் இருக்கின்றனர்.


हृष्यन्ति ऋतु मुखम् दृष्ट्वा 

नवं नवम् इह आगतम् ।

ऋतूनां परिवर्तेन 

प्राणिनां प्राण सङ्क्षयः।।

- वाल्मीकि रामायण

ஹ்ருஷ்யந்தி ருது முகம் த்ருஷ்டவா

நவம் நவம் இஹ ஆகதம் |

ருதூநாம் பரிவர்தேன

ப்ராணினாம் ப்ராண சங்க்ஷய: ||

- வால்மீகி ராமாயணம்

At the advent of each new season men feel delighted to see the newly blossomed flowers and fruits. But with the change of the seasons the life span also diminishes.

பருவ கால மாற்றத்தால் புதிதாக பூத்து குலுங்கும் பூக்களையும் பழங்களையும் கண்டு ஜீவாத்மாக்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள். இந்த மாற்றத்தோடு தன்னுடைய ஆயுளும் கரைந்து கொண்டு இருக்கிறது என்று இவர்கள் உணர்வதில்லை.


यथा काष्ठं च काष्ठं च 

समेयातां महार्णवे।

समेत्य च व्यपेयातां 

कालम् आसाद्य कञ्चन।।

एवं भार्या: च पुत्रा: च 

ज्ञातयश्च धनानि च।

समेत्य व्यवधा वन्ति 

ध्रुवो हि एषां विनाभवः।।

- वाल्मीकि रामायण

யதா காஷ்டம் ச காஷ்டம் ச

சமேயாதாம் மஹார்ணவே |

ஸமேத்ய ச வ்யபே-யாதாம்

காலம் ஆஸாத்ய கஞ்சன ||

ஏவம் பார்யா: ச புத்ரா: ச

ஞாதய: ச தனானி ச |

சமேத்ய வ்யவதா வந்தி

த்ருவோ ஹி ஏஷாம் வினாபவ: ||

- வால்மீகி ராமாயணம்

In a mighty ocean, two pieces of woods meet one another, float together and in due course get separated. In the same way wives, sons, relatives and riches remain together for some time and thereafter get separated. Their separation is certain.

பெருங்கடலில், விழுந்த இரு மர துண்டுகள் மிதந்து மிதந்து ஒரு சமயம் ஒன்றோடு ஒன்று சந்திக்கின்றன, சில நேரம் சேர்ந்தே பயணிக்கின்றன, கடைசியில் அதனதன் பாதையில் பிரிந்து சென்று விடுகின்றன. அது போல வாழ்க்கையில் மனைவியும், பிள்ளையும், சொந்தமும், செல்வமும் சில காலங்கள் இருந்து விட்டு பிரிந்து செல்கிறது. பிரிவு என்பது தவிர்க்க முடியாதது.


न अत्र कश्चिद् यथाभावं 

प्राणी समभि वर्तते।

तेन तस्मिन् न सामर्थ्यं 

प्रेतस्या अनुशोचतः।।

- वाल्मीकि रामायण

ந அத்ர கஸ்சித் யதாபாவம்

ப்ராணீ ஸமபி வர்ததே |

தேன தஸ்மின் ந சாமர்த்யம்

ப்ரேதஸ்யா அனுஸோசத: ||

- வால்மீகி ராமாயணம்

Here, no being an escape it's destiny. Therefore, no one should grieve for the dead

யாராலும் தெய்வம் நிர்ணயித்த முடிவிலிருந்து தப்பிக்க இயலாது. ஆகையால், யாரும் மரணத்தை கண்டு சோகத்தில் மூழ்கி விட கூடாது. 


यथा हि सार्थं गच्छन्तं 

ब्रूयात् कश्चित् पथि स्थितः।

अहमप्य आगमिष्यामि 

पृष्ठतो भवता म ति ।।

एवं पूर्वै: गतो मार्गः 

पितृ पैतामहो ध्रुवः।

तम् आपन्नः कथं शोचेद् 

यस्य नास्ति व्यति क्रमः।।

-  वाल्मीकि रामायण

யதா ஹி சார்தம் கச்சந்தம்

ப்ரூயாத் கஸ்சித் பதி ஸ்தித: |

அஹமப்ய ஆகமிஷ்யாமி

ப்ருஷ்டதோ பவதோ ம தி ||

ஏவம் பூர்வை: கதோ மார்க:

பித்ரு பைதாமஹோ த்ருவ: |

தம் ஆபன்ன: கதம் ஸோசேத்

யஸ்ய நாஸ்தி வ்யதி க்ரம: ||

- வால்மீகி ராமாயணம்

A passerby says to another passerby, "May you go 1st. I shall also follow you"

This is how all our predecessor have gone. We are going to follow their course. Why should one worry for that which is inevitable?

ஒரு வழிப்போக்கன், மற்றொரு வழிப்போக்கனை பார்த்து, "நீ முதலில் செல். நானும் உன்னை தொடர்ந்து வருகிறேன்" என்று சொல்வது போல, நமக்கு முன்னால் நமது மூதாதையர்கள் சென்றுள்ளனர். நாமும் அவர்களை பின் தொடர்ந்து செல்ல தான் போகிறோம். தடுக்க முடியாத விஷயங்களை கண்டு வருத்தப்பட்டு என்ன பயன்?





वयसः पतमानस्य

स्रोतसो वा अनिवर्तिनः।

आत्मा सुखे नियोक्तव्य: 

सुखभाजः प्रजाः स्मृताः।।

- वाल्मीकि रामायण

வயஸ: பதமானஸ்ய

ஸ்ரோதஸோ வா அநிவர்தின: |

ஆத்மா சுகே நியோக்த்வய:

சுகபாஜ: ப்ரஜா ஸ்ம்ருதா: ||

- வால்மீகி ராமாயணம்

Like the flow of water which never reverts to its source, age passes. Therefore, a man must employ his self in righteous acts that bring him happiness. By doing so, it is said, people will always be happy.

ஓடும் நதி எப்படி திரும்புவதில்லையோ, அது போல போன வயதும் திரும்பப்போவதில்லை. ஆதலால், ஜீவாத்மாக்கள் நல்ல ஒழுக்கமான காரியங்களில் மட்டுமே தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். அதன் மூலமாகவே ஆத்மசுகம் கிடைக்கும். மக்கள் எப்பொழுதும் ஆத்ம சுகத்தோடு இருக்க வேண்டும்.


धर्मात्मा स शुभैः कृत्स्नैः 

क्रतुभि: च आप्त दक्षिणैः।

स्वर्गं दशरथः प्राप्तः 

पिता नः पृथिवी पतिः।।

- वाल्मीकि रामायण

தர்மாத்மா ஸ ஸுபை: க்ருத்ஸ்நை:

க்ரதுபி: ச ஆப்த தக்ஷிணை: |ஸ்வர்கம் தசரத: ப்ராப்த:

பிதா ந: ப்ருதிவீ பதி: ||

- வால்மீகி ராமாயணம்

Our righteous father and lord of the earth, Dasaratha, attained heaven by giving abundant charities and performing several sacrifices in accordance with tradition.

பூலோகத்தை ஆண்ட நம்முடைய தகப்பனார் தசரதர், அள்ளி அள்ளி தானம் செய்தார், சாஸ்திர விதிப்படி யாகங்கள் செய்தார். அதன் பலனாக சுவர்க்கம் சென்று விட்டார்.


भृत्यानां भरणात् सम्यक् 

प्रजानां परि-पालनात्।

अर्थानाम् च धर्मेण 

पिता न: त्रिदिवम् गतः।।

- वाल्मीकि रामायण

ப்ருத்யானாம் பரணாத் ஸம்யக்

ப்ராஜானாம் பரி பாலநாத் |

அர்தாநாம் ச தர்மேன

பிதா: ந: த்ரிதிவம் கத: ||

- வால்மீகி ராமாயணம்

He took care of his employees well. He ruled the subjects well. He managed the finance well. As a result he has gone to heavens

தகப்பனார் தன்னை நம்பி இருப்பவர்களை ஒரு குறையின்றி பார்த்து கொண்டார். தன் மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தார். அரசாங்க நிதியை நன்கு மேற்பார்வை செய்து திரண்பட கையாண்டார். அதன் பலனாக அவர் சுவர்க்கம் சென்று இருக்கிறார்.





कर्मभि: तु शुभै: इष्टैः 

क्रतुभि: च आप्त दक्षिणैः।

स्वर्गं दशरथः प्राप्तः 

पिता नः पृथिवी पतिः।।

- वाल्मीकि रामायण

கர்மபி: து ஸுபை: இஷ்டை:

க்ரதுபி: ச ஆப்த தக்ஷிணை: |

ஸ்வர்கம் தசரத: ப்ராப்த

பிதா ந: ப்ருதிவீ பதி: ||

- வால்மீகி ராமாயணம்

Dasaratha, our father and lord of the earth, reached heaven by performing auspicious acts and offering abundant charities in sacrifices.

பரதா! நம்முடைய தகப்பனார், இந்த பூமியை ஆண்டவர், தன்னுடைய நன்னடத்தையாலும், அதிகமாக தானம் செய்ததாலும் சுவர்க்கம் சென்றுள்ளார்.


इष्ट्वा बहुविधै: यज्ञै:

भोगां च अवाप्य पुष्कलान्।

उत्तमं च आयु: आसाद्य 

स्वर्गतः पृथिवी पतिः।।

- वाल्मीकि रामायण

இஷ்ட்வா பஹுவிதை: யஞை: 

போகாம் ச அவாப்ய புஸ்கலான் |

உத்தமம் ச ஆயு: ஆஸாத்ய

ஸ்வர்கத: ப்ருதிவீ பதி: ||

- வால்மீகி ராமாயணம்

King Dasaratha, lord of the earth, having performed various kinds of  rituals. He enjoyed long life. He led a good life. He has gone to heavens

பரதா! நம்முடைய தகப்பனார், இந்த பூமியை ஆண்டவர், பல விதமான யாகங்கள் செய்துள்ளார். நீண்ட ஆயுளுடன் வாழ்க்கையை சுகமாக அனுபவித்தார்.  நல்ல வாழ்க்கை வாழ்ந்தார்.  இப்பொழுது சுவர்க்கம் சென்று இருக்கிறார்.


आयु: उत्तमम् आसाद्य 

भोगानपि च राघवः।

स न शोच्यः पिता तात 

स्वर्गत: सत्कृत: सताम् ।।

- वाल्मीकि रामायण

ஆயு: உத்தமம் ஆஸாத்ய

போகாநபி ச ராகவ: |

ஸ ந ஸோச்ய: பிதா தாத

ஸ்வர்கத: ஸத்க்ருத: சதாம் ||

- வால்மீகி ராமாயணம்

O dear Barata! our father, king Dasaratha, who was honoured by the virtuous and enjoyed a long life. He enjoyed all pleasure. He has attained heavens. Cry not much for him

பரதா! நம்முடைய தகப்பனார், இந்த பூமியை ஆண்டவர்,  வாழ்க்கையை சுகமாக நீண்ட காலம் அனுபவித்தார்.  பூலோக சுகங்கள் அனுபவித்தார். இப்பொழுது சுவர்க்கம் சென்று இருக்கிறார். அவரை நினைத்து கொண்டு இத்தனை துயர் கொள்ளாதே!


स जीर्णं मानुषं देहं 

परित्यज्य पिता हि नः।

दैवीम् ऋद्धिम्  अनुप्राप्तो 

ब्रह्म लोक विहारिणीम् ||

- वाल्मीकि रामायण

ஸ ஜீர்ணம் மானுஷம் தேஹம்

பரித்யஜ்ய பிதா ஹி ந: |

தைவீம் ருத்திம் அனு ப்ராப்தோ

ப்ரஹ்ம லோக விஹாரிணீம் ||

- வால்மீகி ராமாயணம்

Our father, king Dasaratha, abandoned the wornout mortal body, and attained a celestial form that sports in the world of brahma

பரதா! நம்முடைய தகப்பனார் தசரதர் தன்னுடைய வயதான உடலை விட்டு விட்டு, திவ்ய தேகத்துடன் ப்ரம்ம லோகத்தில் சுகமாக சஞ்சரித்து கொண்டு இருக்கிறார்.


तं तु न एवं विधः कश्चित् 

प्राज्ञ: शोचितुम् अर्हति।

तत्विधो मद् विध: च 

अपि श्रुतवान् बुद्धिमत्तरः ||

- वाल्मीकि रामायण

தம் து ந ஏவம் வித: கஸ்சித்

ப்ராஞ: ஸோசிதும் அர்ஹதி |

தத்விதோ மத் வித: ச

அபி ஸ்ருதவான் புத்திம் உத்தர: ||

- வால்மீகி ராமாயணம்

Wise men like you who knows the transitory nature of life should not worry much about the bitter realities like death

உன்னை போன்ற அறிவாளிகள், உலக வாழ்க்கை நிலையற்றது என்று தெரிந்தும், மரணத்தை நினைத்து இத்தனை துக்கம் கொள்ள கூடாது.





एते बहुविधा शोका 

विलाप रुदिते तथा।

वर्जनीया हि धीरेण 

सर्व अवस्थासु धीमता ||

- वाल्मीकि रामायण

ஏதே பஹுவிதா ஸோகா

விலாப ருதிதே ததா |

வர்ஜநீயா ஹி தீரேண

ஸர்வ அவஸ்தாசு தீமதா ||

- வால்மீகி ராமாயணம்

A wise man, holding on to his fortitude in all circumstances, should avoid such occasions of grief, these words of lamentation and this crying.

உன்னை போன்ற தீரர்கள், உலக வாழ்க்கை நிலையற்றது என்று தெரிந்தும், மரணத்தை நினைத்து இத்தனை புலம்பல், அழுகை கூடாது.


स स्वस्थो भव मा शोचे: 

यात्वा च आवस तां पुरीम्।

तथा पित्रा नियुक्त असि 

वशिना वदतां वर।।

- वाल्मीकि रामायण

ஸ ஸ்வஸ்தோ பவ மா ஸோசே:

பாத்வா ச ஆவஸ தாம் புரிம் |

ததா பித்ரா நியுக்த அஸி

வஸினா வததாம் வர ||

- வால்மீகி ராமாயணம்

O foremost of the eloquent! compose yourself. Lament not. Go back to the city and rule as you are instructed by our father.

பரதா! உன்னை நிதானப்படுத்தி கொள். புலம்பி துக்கப்படாதே. உடனேயே அயோத்தி நகருக்கு செல். தகப்பனார் உனக்கு சொன்னபடி ஆட்சி பொறுப்பை ஏற்று நல்லாட்சி செய்.


यत्र अहमपि तेनैव 

नियुक्तः पुण्यकर्मणा।

तत्रैव अहं करिष्यामि 

पितु: आर्यस्य शासनम्।।

- वाल्मीकि रामायण

யத்ர அஹம் அபி தேநைவ

நியுக்த: புண்ய கர்மனா: |

தத்ரைவ அஹம் கரிஷ்யாமி

பிது: ஆர்யஸ்ய ஸாசனம் ||

- வால்மீகி ராமாயணம்

I shall also stick to the command of our noble father who was a man of sacred deeds

நானும், ஒழுக்கம் மீறாத நம் தகப்பனார் சொல் படி இணங்கி இருப்பேன்


न मया शासनं तस्य

त्यक्तुं न्याय्यम् अरिन्दम।

स त्वया अपि सदा मान्यं 

स वै बन्धु स नः पिता।|

- वाल्मीकि रामायण

ந மயா சாசனம் தஸ்ய

த்யக்தும் ந்யாய்யம் அரிந்தம் |

ஸ த்வயா அபி சதா மான்யம்

ஸ வை பந்து ஸ ந: பிதா ||

- வால்மீகி ராமாயணம்

O subduer of enemies! I cannot give up his instruction neither you can. He is our sire and well wisher

எதிரியை ஒழிப்பவனே! பரதா! அவருடைய வாக்கை நீயோ அல்லது நானோ மீறவே முடியாது. அவர் தான் நமக்கு குரு. அவர் மட்டும் தான் நம் நலனை பற்றியே நினைப்பவர். 


तद् वचः पितु: एव 

अहं सम्मतं धर्मचारिणः।

कर्मणा पालयिष्यामि 

वनवासेन राघव।।

- वाल्मीकि रामायण

தத் வச: பிது: ஏவ

அஹம் சம்மதம் தர்மசாரிண: |

கர்மணா பாலயிஷ்யாமி

வன வாஸேன ராகவ ||

- வால்மீகி ராமாயணம்

O Bharata! I will, therefore, guard the oath of our father through my forest life

பரதா! தகப்பனாரின் வாக்கை காப்பாற்றியே ஆக வேண்டும். ஆதலால் நான் வனத்திலேயே தங்குகிறேன்.


धार्मिकेण नृशंसेन 

नरेण गुरुवर्तिना।

भवितव्यं नरव्याघ्र 

परलोकं जिगीषता।।

- वाल्मीकि रामायण

தார்மிகேந ந சம்ஸேன

நரேந குரு வர்தினா |

பவிதவ்யம் நர வ்யாக்ர

பரலோகம் ஜிகிஷதா ||

- வால்மீகி ராமாயணம்

O best of men! if a man aspires to conquer the higher world, One should be noble, cultured, virtuous, disciplined, follow the parents to win the heavens

பரதா! மேலுலகங்களை ஆள ஆசைப்படுபவன், தர்மத்தில் இருந்து கொண்டு, இரக்கம் உள்ளவனாக, ஒழுக்கம் உள்ளவனாக, பெற்றோர் சொல்படி வாழ வேண்டும்.


आत्मानम् अनुतिष्ठत्वं 

स्वभावेन नरर्षभ।

निशाम्यतु शुभं वृत्तं 

पितु: दशरथस्य नः।

- वाल्मीकि रामायण

ஆத்மாநம் அனுதிஷ்டத்வம்

ஸ்வபாவேந நரர்ஷப |

நிஸாம்யது சுபம் வ்ருத்தம்

பிது: தசரதஸ்ய ந: ||

- வால்மீகி ராமாயணம்

O best of men! having seen the auspicious life of our father Dasaratha and his conduct, you also stick to your own duty.

(Be in your self nature knowing our father's virtuous conduct)

பரதா! நம்முடைய தகப்பனாரின் புண்யமான வாழ்க்கையையும், அவரது நடத்தையையும் நீ பார்த்து இருக்கிறாய். நீ அவருக்கு பிள்ளை என்ற கடமையை விலகாமல் செய். 

इत्येवम् उक्त्वा वचनं महात्मा 

पितु: निदेश प्रति-पालनार्थम्।

यवीयसं भ्रातरम् अर्थ् च 

प्रभु: मुहूर्ताद् विरराम रामः।।

- वाल्मीकि रामायण

இத்யேவம் உக்த்வா வசனம் மஹாத்மா

பிது: நிதேச ப்ரதி பாலநார்தம் |

யவீயஸம் ப்ராதரம் அர்தவத் ச

ப்ரபு: முஹர்தாத் விரராம ராம: ||

- வால்மீகி ராமாயணம்

Rama, the magnanimous lord, After telling these to guard his father's vow, the great soul Rama rests for a moment

மஹாத்மாவான ஸ்ரீராமர், தன் இளைய சகோதரன் பரதனுக்கு தர்ம உபதேசம் இவ்வாறு செய்த பிறகு, சில நொடிகள் அமைதியாக இருந்தார்.



No comments: