Followers

Search Here...

Thursday, 4 June 2020

சந்தியா வந்தனம் எப்படி அமைந்துள்ளது? எத்தனை அழகு!! தெரிந்து கொள்ள வேண்டும்...

சந்தியா வந்தனம் எப்படி அமைந்துள்ளது?
என்று பாருங்கள்..
எத்தனை அழகான அமைப்பு!! என்று பாருங்கள்.
1.
பகவானின் நாமத்தை சொல்லி சொல்லி ஆனந்தமாக கொஞ்சம் தீர்த்தம் எடுத்து குடி - ஆசமனம்
அச்சுதா (நிலையானவனே)
அனந்தா (எல்லையற்றவனே)
கோவிந்தா (ஜீவனுக்கெல்லாம் தலைவனே)
என்று பொதுவான பரத்துவத்தை சொல்ல கசக்குமா?





2.
பகவானின் நாமத்தை சொல்லி சொல்லி உன் அங்கங்களை தொடு. - அங்க ந்யாஸம்

3.
மந்திரம் சொல்லி சொல்லி, கொஞ்சம் தீர்த்தம் எடுத்து உன் மீதே தெளித்து கொள்.
மந்திர ஸ்நானம் செய்து கொள் (குளி)

4.
நீ செய்த பாபங்களுக்கு மருந்தாக பகவானை நினைத்து கொண்டே, பகவத் பிரசாதமாக கொஞ்சம் தீர்த்தம் குடி.

5.
மீண்டும் மந்திரம் சொல்லி சொல்லி, கொஞ்சம் தீர்த்தம் எடுத்து உன் மீதே தெளித்து கொள். மந்திர ஸ்நானம் செய்து கொள் (இரண்டாவது குளியல்)

6.
"எங்கும் இருக்கும் பரப்ரம்மமே எனக்குள்ளும் இருக்கிறார்" என்று சத்தியத்தை அறிந்து கொள். இதுவே "ஞான யோகம்"

7.
சுத்தமாக இருக்கும் நீ, ப்ரம்மமாகவே ஆகிவிட்ட நீ, இப்போது நவ கிரகத்துக்கும், அதிபதியான பரப்ரம்மாவான நாராயணனின் 11 வ்யூஹ அவதாரத்தை நினைத்து, உன் கையில் இருக்கும் தீர்த்தத்தாலேயே பூஜை செய்.

பத்ரம் (இலையோ), புஷ்பமோ (பூவோ) கூட தேவையில்லை. கொஞ்சம் தீர்த்தை (தோயம்) எடுத்து உன் கையால் பகவானுக்கு பூஜை செய். நீ இன்றுவரை உயிருடன் இருக்கிறாயே. உன் நன்றியை காட்டு.

8.
தூக்கத்தில் கிடக்கும் உன்னை எழுப்பி காரியங்களில் ஈடுபட வைத்த பகவானை நன்றியுடன் உன் மனதால் தியானம் (காயத்ரி ஜபம்) செய்.

9.
பகவானை கையை உயர்த்தி பாடு (பஜனை செய்)

10.
100 வயது காலம் ஆரோக்கியம் குறையாமல், அனைவரோடும் சேர்ந்து வாழ, பகவானை நினைத்து கொண்டிருக்க, பகவானிடமே பிரார்த்தனை செய்.

11.
பகவானுக்கு நீ செய்த அனைத்து பாவ புண்ணியங்களை சமர்ப்பணம் செய். (கர்ம யோகம்)
பாவ புண்ணியம் இல்லாமல் மோக்ஷத்துக்கு தகுதி ஆக்கி கொள்.

சந்தியா வந்தனம் முடிந்தது.

இந்த அற்புதமான பிரார்த்தனை செய்ய ஒருவனுக்கு கசக்குமா?...
இன்று வரை உயிர் இந்த உடம்பில் தங்க வைத்திருக்கும் பகவானுக்கு இந்த நன்றியை கூடவா ஒருவன் செய்ய கூடாது?
ப்ராம்மணனுக்கு விதிக்கப்பட்ட கடமை அல்லவா இது.. நன்றி உள்ளவர்கள், சிந்திக்க வேண்டும்.





காயத்ரி மந்திர அர்த்தம் :
1.
காயத்ரி மந்திரத்தின் வெளி அர்த்தத்தை மட்டும் புரிந்து கொண்டு,,
ஜோதி ஸ்வரூபமாக இருக்கும் சூரிய தேவனுக்கு நம்முடைய நன்றியை சொல்லும் போது, சூரிய தேவன் நமக்கு ஆரோக்கியம் கொடுக்கிறார்.

வெளி அர்த்தம்:
இருட்டில் இருந்த என்னை எழுப்பி, தன் ஜோதியால் இருட்டை விலக்கி, என்னை உலக காரியங்களில் ஈடுபட வைக்கும்,
சவிதா என்ற கதிரவனுக்கு என் நன்றி. அந்த சூரிய பகவானை நான் நன்றியோடு தியானம் செய்கிறேன்.

2.
காயத்ரி மந்திரத்தின் உள் அர்த்தத்தை புரிந்து கொண்டு,
பரமாத்மா நாராயணனுக்கு தன்னுடைய நன்றியை சொல்லும் போது, ஆரோக்கியம் மட்டுமல்லாது, உலக சௌக்கியங்கள் அனைத்தும் கிடைக்க செய்து, கடைசியில் மோக்ஷமும் கொடுத்து விடுகிறார் பரவாசுதேவன்.
உள் அர்த்தம்:
சூரியன் தன் ஜோதி ப்ரகாசத்தால் உலகின் இருட்டை விரட்டுகிறார் என்பது ஒரு புறம் உண்மையென்றாலும்,
அந்த சூரிய ஜோதியை பார்க்க ஆதாரமாக இருப்பது நம்முடைய கண்.

ஆத்மா வெளியேறிய பின், இறந்த உடலில் உள்ள கண் பார்ப்பதில்லை.
ஆத்மா உள்ளே இருக்கும் போது, அந்த ஆத்ம ஜோதி, ஜடமான கண்ணை பார்க்க செய்கிறது.
அந்த கண்ணுக்கு பார்க்கும் சக்தியை கொடுத்தது, நம் உள்ளிருக்கும் ஆத்ம ஜோதியே.
சூரிய ஜோதியை அறிந்து கொள்வதும், நம் உள்ளேயே இருக்கும் ஆத்ம ஜோதியே என்று தெரிகிறது.
சூரியனுக்கு ஜோதியாக இருக்கும் பரவாசுதேவன நாராயணனே,
ஆத்மாவாகிய நமக்கு ஜோதியாக இருக்கிறார்.
அந்த நாராயணனே, நம்மை தமஸ் என்ற இருட்டில் இருந்து எழுப்பி, மோக்ஷத்துக்கான காரியங்களில் ஈடுபட செய்து பரம உபகாரம் செய்கிறார்.
என் உள்ளிருக்கும்,  பரஞ்ஜோதியான நாராயணனை நான் நன்றியோடு தியானம் செய்கிறேன்.
இதன் படி காயத்ரீ ஜபம் செய்யும் போது, மோக்ஷமும் ஸித்தியாகி விடுகிறது.

காயத்ரி ஜபம் குறைந்தது 108வது இந்த நன்றி உணர்ச்சியோடு சொல்ல வேண்டும். 

No comments: