"வேதத்தின் சாரம் என்ன?" என்பதை, பகவானின் பரத்துவத்தை எடுத்து நிர்ணயம் செய்த பின்,
அனைவரும் பார்க்க, மேலே கட்டி இருந்த பொற்கிழி தானாகவே அவிழ்ந்து, விஷ்ணுசித்தர் அமர்ந்து இருக்கும் இடம் நோக்கி வளைந்து கொண்டு, அவர் மடியில் தானாகவே வந்து விழுந்தது.
அரசரும், இவரையே ஆஸ்ரயித்து, விஷ்ணுசித்தரை பட்டத்து யானையில் ஏற்றி, ஊர்வலமாக தானே அழைத்து கொண்டு வருகிறார்.
மற்ற பண்டிதர்கள் எல்லோரும், ஆசையோடு கூடவே வந்தனர்.
சிலர் சத்ர-சாமரம் போட்டுக்கொண்டே அழைத்து வந்தனர்.
தன் குழந்தைக்கு விழாவில் மரியாதை செய்வதை பார்க்க தாயும் தந்தையும் பார்க்க ஆசைப்படுவது போல,
கூடலழகர் பெருமாள் இருப்பு கொள்ளாமல், தானும் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன், கருடவாகனத்தில் வர,
கூடலழகர் பெருமாள் இருப்பு கொள்ளாமல், தானும் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன், கருடவாகனத்தில் வர,
எம்பெருமானை ஆகாசத்தில் கருடவாகனத்தில் பார்த்த பெரியாழ்வார்,
"தன்னுடன் கூட வந்திருக்கும் பண்டிதர்களில்,
"தன்னுடன் கூட வந்திருக்கும் பண்டிதர்களில்,
சிலர் 'பரமாத்மா என்று ஒருவர் இல்லவே இல்லை' என்றும்,
சிலர் 'அணுக்கள் தான் உலகம்' என்றும்,
சிலர் 'இயற்கையே தான் உண்மை' என்றும்,
சிலர் 'கர்மா (action-reaction ) தான்' என்றும்
சிலர் 'காலம் தான்' என்றும்,
சிலர் 'வேதத்திலேயே சொன்ன உபதெய்வங்களையே பரமாத்மா' என்றும்,
சிலர் 'தெய்வம் உண்டு, ஆனால் தெய்வத்துக்கு நாமம் இல்லை, ரூபம் இல்லை, குணம் இல்லை என்றும்' அரச சபையில் வாதிட்டார்கள்.
இவர்கள் மத்தியில், இப்படி அப்பட்டமாக நாம, ரூப, குண, சௌந்தர்யத்துடன் "தானே பரமாத்மா" என்று வந்து விட்டாரே?!!
இவர்கள் மத்தியில், இப்படி அப்பட்டமாக நாம, ரூப, குண, சௌந்தர்யத்துடன் "தானே பரமாத்மா" என்று வந்து விட்டாரே?!!
இவர்களால் பெருமாளுக்கு கண் திருஷ்டி பட்டு விடுமோ!!"
என்று நினைத்தார் பெரியாழ்வார்.
என்று நினைத்தார் பெரியாழ்வார்.
"குழுமி இருக்கும் அத்தனை பேரும் பெருமாளின் அருமை தெரிந்து இருப்பார்களா?
பக்தர்கள் நடுவில், பெருமாள் இப்படி திவ்ய காட்சி கொடுத்தால், பக்தர்கள் ஆசை தீர ஆடுவார்கள், பஜிப்பார்கள்.
இவர்களோ! இத்தனை காலமும், குதர்க்கம் செய்து கொண்டிருந்தார்கள். பெருமாளின் மகிமையை உணராது இருந்தார்கள்.
இவர்களும் பார்க்கும் படியாக, கொஞ்சம் அவசரப்பட்டு தரிசனம் தந்துவிட்டாரோ?"
என்று பெரியாழவார் மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.
"பெருமாளுக்கு திருஷ்டி பட்டு இருக்குமோ?!!" என்று தோன்ற,
"பெருமாளுக்கு பல்லாண்டு பாடி திருஷ்டி கழிக்க வேண்டும்"
என்று பெரியாழ்வார் ஆசைப்பட்டார்.
"பெருமாளுக்கு பல்லாண்டு பாடி திருஷ்டி கழிக்க வேண்டும்"
என்று பெரியாழ்வார் ஆசைப்பட்டார்.
பெரியாழ்வார் அழகாக இசையோடு பாடுவார்.
"வித்வத் சபைக்கு வருகிறோமே" என்பதால், பஜனை செய்ய விடமாட்டார்கள் என்பதால் தாளம் எடுத்துக்கொண்டு வரவில்லையாம் பெரியாழ்வார்.
பெருமாள் கருடனில் அமர்ந்து காட்சி கொடுக்க, இப்போது பஜனைக்கு அவசியம் வந்ததும், பெரியாழ்வாருக்கு தாளம் தேவைப்பட்டது.
யானையின் இருபக்கமும் தொங்கி கொண்டிருந்த மணிகளையே தாளமாக எடுத்துக்கொண்டு, ஒன்றோடு ஒன்று மொத்திக்கொண்டு, பகவானுக்கு மங்களாசாஸனம் செய்கிறார் பெரியாழ்வார்.
"தன்னை பெருமாள் பார்த்து கொள்ள வேண்டுமே!" என்று சாமானியன் நினைக்கிறான்.
"தான் பல்லாண்டு பாட, பெருமாள் தனக்கு வேண்டுமே ! அவர் நன்றாக இருக்க வேண்டுமே" என்று பக்தன் நினைக்கிறான்.
"தான் செய்யும் பஜனையை பார்க்க, பெருமாள் ரூபத்துடன் வேண்டுமே" என்று பக்தன் கேட்க,
ரூபம் கடந்த, குணங்கள் கடந்த, நாமங்கள் கடந்த பரமாத்மா,
"பக்தன் செய்யும் பஜனைக்காக, நாம, ரூப, குணங்களை எடுத்துக்கொண்டு" பாரத தேசம் முழுவதும் விபவ அவதாரமும், அரச்ச அவதாரமும் செய்து தோன்றி விட்டார்.
பக்தனான பெரியாழ்வாருக்கு "பெருமாள் பல்லாண்டு சுகமாக இருக்க வேண்டும்" என்று தோன்ற,
"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் ஆண்டு"
என்று மங்களாசாசனம் செய்கிறார்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வி திருக்காப்பு
-- பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு
பெருமாள் கருடவாகனத்தில் அமர்ந்து காட்சி கொடுக்கும் போது, பெருமாளின் திருவடி இருபக்கமும் தொங்கிக்கொண்டு இருக்க, பெரியாழ்வார் அந்த சிவந்த திருவடியை, அனைவருக்கும் சரணமாக இருக்கக்கூடிய திருவடியை (சேவடி) பார்த்துவிட்டார்.
பெருமாள் "மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்று "என்னை ஒருவனையே சரணடைந்து விடு" என்று தான், தன் திருவடியை அனைவருக்கும் காட்டினார்.
முத்தும்மணியும் வைரமும் நன்பொன்னும்
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்துவிரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
-- பெரியாழ்வார் அருளிச்செய்த திருமொழி
"சங்கு சக்ர யவ வஜ்ர ரேகைகள் உடையதாக,
முத்தும் மணியும், வைரமும், நன் பொன்னும் (தங்கமும்), தத்திப் பதித்து தலைபெய்தார் போல, எங்கும் பத்து விரலும், மணிவண்ணன் பாதம்" என்று பெருமாளின் திருவடியை கொஞ்சும் பெரியாழ்வார்,
கூடல் நகரில், பெருமாள் பலரும் பார்க்க தன் திருவடியை காட்ட, பெரியாழ்வாருக்கு அற்புதமான இந்த திருவடியை பார்த்து இவர்கள் கண் பட்டு விடுமே!! என்று திருவடியை பாதுகாக்க நினைத்து, அந்த திருவடிக்கு ஒரு திருக்காப்பு (பாதுகை) போட்டு மறைத்தாராம்.
அதையே
'உன் சேவடி செவ்வி திருக்காப்பு'
என்கிறார்.
பெருமாளின் அங்கங்கள் ஜொலிஜொலிப்புடன் காந்தியுடன் இருப்பதை, மணிவண்ணா என்று அழைக்கிறார்.
முஷ்டிகன் சாணுரன் என்ற இரு மல்லர்களோடு சண்டையிடும் திண் (உறுதியான) தோளை கொண்ட பெருமாள் இவர் என்றதும், திண்தோள் என்று அழைக்கிறார்.
1 comment:
பாசுரம் (அர்த்தம்) - பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு -
பெரியாழ்வார் (மதுரை) கூடலழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம்.
தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?
https://www.proudhindudharma.com/2020/03/periyalwar-pallandu.html
Post a Comment