கூடலழகர் பெருமாள் கோவில் - மதுரை (பாண்டிய தேசம்)
எப்படி ஸ்ரீரங்கத்தில் பெரியபெருமாளை வளைத்துக்கொண்டு, ஒரு பக்கம் "காவிரி"யும், மறுபக்கம் "கொள்ளிடம்" என்ற பெயருடன் நதி ஓடுகிறதோ!!
அதுபோல,
மதுரையை தென் பக்கத்தின் வழியாக "க்ருதமாலா" என்ற நதியும், வடபக்கத்தின் வழியாக "வைகை" என்ற நதியும் ஓடிக்கொண்டிருந்தது.
(இன்று, க்ருதமாலா வற்றி விட்டது).
"சத்யவ்ரதன்" என்ற அரசன், ஆண்டு கொண்டிருந்தார்.
இவர் இப்போது நடக்கும் "வைவஸ்வத மனு"வுக்கும் முன்னர் இருந்த சாக்ஷுச என்ற மனுவின் காலத்தில் இருந்தவர்.
"மதுரை" என்ற இந்த நகரம் எத்தனை காலங்களாக இருந்துள்ளது? என்பது மனுவின் காலத்தை கணக்கிட்டாலேயே நாம் புரிந்து கொள்ளலாம்.
இந்த சத்யவ்ரதனே 'சாக்ஷுச மனு'வின் ஆட்சி காலம் முடிந்தபின், வைவஸ்வத மனுவாக அவதரித்தார்.
மதுரைக்கு சம்பந்தப்பட்ட ஒரு அரசன், இன்று பூலோகத்தை வைவஸ்வத மனுவாக ஆட்சி செய்கிறார் என்பது நமக்கு பெருமை.
சத்யவ்ரதனாக ராஜ்யத்தை கவனித்து கொண்டிருந்த இவர், தர்மத்தில் மக்களை வைத்து இருப்பதிலும், தர்மம் மீறாமல் ஆட்சி செய்வதிலும் கவனமாக இருந்தார்.
அரசனாக இருந்தும், போகங்களை விரும்பாதவர்.
"தர்மத்தில் இருக்க வேண்டும், மக்களை இருக்க செய்ய வேண்டும்" என்று "கர்ம யோகியாக" ஆட்சி செய்து வந்தார் சத்யவ்ரதன்.
ராஜனாக இல்லாமல், ராஜரிஷியாக இருந்தார் சத்யவ்ரதன்.
சத்யவ்ரதன், "க்ருதமாலா என்று அழைக்கப்பட்ட வைகை" ஆற்றங்கரையில், பகவத் தியானம் செய்து கொண்டிருந்தார்.
திடமான சித்தம் கொண்டவர், சத்யவ்ரதன்.
புலன்களை அடக்கியவர், சத்யவ்ரதன்.
வைராக்கியம் உடையவர், சத்யவ்ரதன்.
தபஸ்வியாக இருப்பவர், சத்யவ்ரதன்.
எந்த காரியத்தை செய்தாலும் சிரத்தையாக செய்பவர் சத்யவ்ரதன்.
ராஜரிஷியான சத்யவ்ரதன், பகவானை தியானித்து கொண்டே, சந்தியா வந்தனம் செய்து, ஜலத்தை எடுத்து அர்க்யம் விட்டு கொண்டிருந்தார்.
அப்போது, ஜலத்தை கையில் எடுக்கும் போது, இவர் கையில் ஒரு சிறிய "மீன்" தானாக அகப்பட்டது.
கையில் மீன் (மத்ஸ்ய) இருப்பதை பார்த்த சத்யவ்ரதன், அதை மீண்டும் ஆற்றிலேயே கீழே போட்டார்.
இவர் கையில் தானாக வந்து விழுந்த அந்த மீன், அரசனை பார்த்து தேவ பாஷையில் பேசஆரம்பித்தது..
"உம்மை நான் சரண் அடைகிறேன். என்னை காப்பாற்றும். என்னை மீண்டும் ஆற்றிலேயே போட்டு விட்டீர்களே ?!
என்னை விட பெரிய மத்ஸ்யங்கள் உள்ள இந்த ஆற்றில் என்னை நீங்கள் விட்டு விட்டால், என்னை இவைகள் சாப்பிட்டு விடுமே !!"
என்று சொல்ல,
மீன் பேசியதை கண்டு ஆச்சர்யப்பட்ட சத்யவ்ரதன், இது சாதாரண மீன் அல்ல, தேவதை என்று உணர்ந்து, உடனே அந்த மீனை தன் தீர்த்தபாத்திரத்திலேயே போட்டு கொண்டு, தன் ஆஸ்ரமத்துக்கு வந்து சேர்ந்தார்.
அன்று ராத்திரியே அந்த மீன், பெரிய மீனாக வளர்ந்து, "இங்கு எனக்கு போதுமான தண்ணீர் இல்லையே!" என்று சொல்ல,
அரசர், தன் தீர்த்த பாத்திரத்தில் இருந்து அந்த மீனை எடுத்து, பெரிய தீர்த்த குடத்தில் மாற்றினார்.
சற்று நேரத்துக்கெல்லாம், அந்த மீனுக்கு அந்த இடமும் போதாதபடி குடம் முழுவதும் வளர்ந்து கிடக்க, அந்த மீனை எடுத்து தன் மாளிகையின் பின்புறம் உள்ள பெரிய கிணற்றில் விட்டு விட்டார்.
பொழுது விடிந்து பார்த்தால், அந்த கிணறு முழுவதையும் அடைத்துக்கொண்டு அந்த மீன் பெரிதாக ஆகி, "இந்த தண்ணீரும் எனக்கு போதவில்லையே!!" என்றது.
அரசர், தன்னுடைய சிஷ்யர்களோடு கூட அந்த மீனை எடுத்துக்கொண்டு போய், தக்ஷிண சமுத்திரத்தில் (indian ocean ) கொண்டு விட்டார்.
சமுத்திரத்தில் விடப்பட்ட மீன் உடனே சத்யவ்ரதனை பார்த்து சொல்கிறது,
"மீன் ஜாதியான எங்களுக்குள் பங்காளி பொறாமைகள் மிக அதிகம்.
ஒரு மீன், இன்னொரு மீனை சாப்பிட்டுவிடுவார்கள்.
மற்ற மீன்கள் என்னை பொறாமைப்பட்டு சாப்பிட்டுவிடுமே !
உங்களை சரணம் அடைந்தால், ஒரு தோஷமும் (குற்றமும்) இல்லாத என்னை போய் சமுத்திரத்தில் தள்ளிவிட்டீர்களே?
தோஷம் இருந்தால் கூட அபயம் (பாதுகாப்பு) கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கேள்விப்பட்டது இல்லையா?
என்னிடம் ஏதாவது தோஷம் இருந்தாலும், இப்படி நீங்கள் என்னை தள்ளலாமா?"
என்று அந்த மீன் கேள்வி கேட்டது.
"மீன் பேசுமா? அதிலும் தேவபாஷையில் பேசுகிறதே இந்த மீன்!
இது ஏதோ தேவலீலை, வந்திருப்பது ஒரு தேவன்" என்று புரிந்துகொண்ட சத்யவ்ரதன், அந்த மீனை பார்த்து,
அனைவரும் கூடலழகரை தரிசிப்போம். பல்லாண்டு பாடுவோம்.

"நீ ஒரு சாதாரண மீன் அல்ல. நீ யாரோ ஒரு மஹாபுருஷன், இப்படி ஒரு மீன் ரூபத்தில் வந்து, என்னிடத்தில் இப்படி விளையாடுகிறாய் என்று நினைக்கிறன்.
பரவாசுதேவனுக்கு தான் செய்யும் அவதாரங்கள் மட்டுமே லீலை (விளையாட்டு) அல்ல.. தான் செய்யும் உலக படைப்புகளும், உலகை காப்பதும், உலகை அழிப்பதும் கூட லீலை தான் என்று வேதம் சொல்கிறது.
உலக நிர்வாகத்தையே விளையாட்டாக செய்து கொண்டு போகிறார் பரமாத்மா நாராயணன் என்று வேதம் சொல்கிறது.
அப்படி இருக்க, இப்போது எனக்கு காட்சி தருவது மாய மீன் என்று அறிகிறேன்.
மீனை போல காட்சி தருகிறாயே தவிர, நீ மீன் அல்ல என்று அறிகிறேன்.
நீ சாக்ஷத் பரமாத்மா என்று நினைக்கிறேன்"
என்று சத்யவ்ரதன் சொன்னதுமே, மத்ஸ்ய (மீன்) ரூபத்தில் இருந்த பகவான் பேசலானார்,
"ஹே சத்யவ்ரதா ! ராஜன்.. உன் பகவத் பக்திக்கு நான் ப்ரசன்னமானேன். நீ சொல்வது சத்யம்.
நான் மத்ஸ்ய ரூபத்தில் வந்திருக்கும் பரமாத்மா தான்.
சரணாகதி செய்தவனை ரக்ஷிப்பதின் பெருமையை உனக்கு தெரிவிக்கவே இப்படி விளையாடினேன்.
ஒரு மீனாக இருந்தாலும், சரண் அடைந்து விட்டால், அதை காப்பாற்ற வேண்டும்.
ஒரு பிராணி நம் வீட்டில் நம்பி இருந்தாலும், அதை நாம் காப்பாற்ற வேண்டும்.
ஜீவகாருண்யம் உயர்ந்த கர்மம்!
அதை உனக்கு காட்டவேண்டும் என்பதற்காக நான் இந்த விளையாட்டு விளையாடினேன்.
இந்த மத்ஸ்ய ரூபம் உனக்காக மட்டும் எடுத்துக்கொண்டது அல்ல.
முன்பு பிரளய காலத்தில் இந்த மத்ஸ்ய ரூபம் எடுத்துக்கொண்டேன்.
யோகநித்ரையில் நான் இருக்கும் பொழுது, என் நாபிகமலத்தில் இருந்து "ப்ரம்ம தேவனை" படைத்தேன்.
ப்ரம்ம தேவன் 'வேத ஸ்வரூபன்'.
அவர் நான்கு தலைகளும் நான்கு வேதங்கள்.
வேதத்தை கொண்டுள்ளதால், ப்ரம்ம தேவனுக்கு "வேத கர்பன்"என்று பெயர்.
ஒரு சமயம் "மது கைடபர்"கள் இந்த நான்கு வேதத்தையும் எடுத்துக்கொண்டு ப்ரளயஜாலத்துக்குள் ஓடி ஒளிந்துகொண்டு விட்டார்கள்.
அந்த வேதத்தையும் மீட்க வேண்டும், இவர்களையும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக, பிரளய ஜலத்தில் நீந்தி வேதத்தை மீட்க அதற்கு ஏற்ற மத்ஸ்ய ரூபத்தை அன்று தரித்துக்கொண்டேன்.
பிரளய காலமாக இருந்ததால், என் அவதாரத்தை பார்த்து ரசிக்க அப்போது ஒரு பக்தன் இல்லை.
நான் எந்த அவதாரம் செய்தாலும், அந்த அவதாரத்தை பார்த்து ரசிக்க ஒரு பக்தன் தேவை. அதனால், உம்மிடத்தில் வந்து மத்ஸ்ய அவதாரம் செய்து விளையாடினோம்.
இன்றிலிருந்து 7வது நாள், ஒரு பெரிய பிரளயம் வரப்போகிறது.
அந்த சமயத்தில் நீ என்னை தியானிக்கும் போது, நான் உன்னை ரக்ஷிப்பேன்."
என்று சொல்லிவிட்டு, பகவான் மறைந்து விட்டார்.
ப்ரம்மாவின் 100 ஆயுசு முடியும் போது, மஹா பிரளயம் ஏற்பட்டு, 14 லோகங்களும் (சத்ய லோகம் முதல் பாதாளம் வரை) அழிந்து விடும்.
ப்ரம்மாவின் ஒரு பகல் முடிந்து, அவர் தூங்கும் காலத்தில் 'நைமித்திய பிரளயம்' ஏற்படும்.
இந்த நைமித்திய பிரளய காலத்தில்,
14 லோகங்களுக்கும் கீழே இருக்கும் பிரளய ஜலம் எழும்பி, பாதாளம் தாண்டி, பூலோகம், புவர்லோகம் தாண்டி, சொர்க்க லோகம் வரை பொங்கி, பிரளய ஜலத்தில் அழித்து விடும்,
பூலோகத்திற்கு மேல் உள்ள புவர்லோகம், சொர்க்க லோகம் உள்ளது.
பூலோகத்திற்கு கீழ் உள்ள 7 லோகங்கள் (அதள, விதள, சுதள, தலாதள,மஹாதள, பாதாள,ரஸாதல) உள்ளது.
இவை அனைத்தும் நைமித்திய பிரளய ஜலத்தில் அழிந்து விடும்.
சொர்க்க லோகம் வரை உயர்ந்து கிடைக்கும் பிரளய ஜலத்தில், அந்த பிரளய ஜலத்துக்கு ஏற்ற பெரிய ரூபத்துடன் மத்ஸ்ய அவதாரம் லீலையாக (விளையாட்டாக) செய்தார் பெருமாள்.
இப்படி பிரளய ஜலத்தில் "மீனாக அவதாரம்" செய்த பெருமாள், தன் வாலை சுழற்றி பிரளய ஜலத்தில் ஒரு அடி அடிக்க,
அதனால் தெறித்த தண்ணீர், சொர்க்க லோகத்துக்கும் மேல் உள்ள மகர லோகம், ஜன லோகம், தப லோகம் தாண்டி, ப்ரம்ம லோகம் வரை சென்று விழுந்து, ஈரமாக்கியதாம்.
அதனால் தெறித்த தண்ணீர், சொர்க்க லோகத்துக்கும் மேல் உள்ள மகர லோகம், ஜன லோகம், தப லோகம் தாண்டி, ப்ரம்ம லோகம் வரை சென்று விழுந்து, ஈரமாக்கியதாம்.
அப்படியென்றால், எத்தனை பெரிய அவதாரம் மத்ஸ்ய அவதாரம் என்று தெரிகிறது.
பகவான் சொன்னபடியே, 7வது நாளில் பிரளயம் ஏற்பட்டு, பூலோகம் தண்ணீரில் மூழ்கி விட, சத்யவ்ரதன் பகவானை தியானிக்க,
ஒரு பக்கம் ஸ்ரீதேவியுடன், மறுபக்கம் பூதேவியுடன் ஆதிசேஷன் மேல், உட்கார்ந்து இருந்த திருக்கோலத்தில் பகவான் ஒரு கையால் சத்யவ்ரதனை தன் அருகில் கூப்பிட்டு, மறுகையால் அபய முத்திரையுடன் காட்சி கொடுத்தார்.
சத்யவ்ரதனை காக்க, பகவான் மத்ஸ்ய ரூபத்தை எடுத்துக்கொள்ள, சத்யவ்ரதன் கூடவே சப்த ரிஷிகளும் பெருமாளின் மேல் ஏறிக்கொள்ள,
பிரளய ஜலத்தில் நீந்தி கொண்டே பகவான், தன் மீது அமர்ந்து இருக்கும் சத்யவ்ரதனுக்கு தர்ம உபதேசங்கள் செய்தார்.
சத்யவ்ரதன் அமைத்த கோவில் இந்த தான், மதுரையில் உள்ள "கூடலழகர் திருக்கோவில்".
'மதுரை' என்ற சமஸ்க்ரித சொல்லுக்கு "கூடல்" என்று தமிழில் பொருள்.
திருமாலிருஞ்சோலையில் உள்ள கள்ளலழகரும் அழகர் தான்.
கூடல் மாநகரில் உள்ள பெருமாளும் அழகர் தான்.
கள்ளழகர் பெருமாள் (திருமாலிருஞ்சோலை), வட மதுரையில் இருக்கிறார்.
கூடலழகர் பெருமாள், தென் மதுரையில் இருக்கிறார்.
கள்ளழகர் பெருமாள் (திருமாலிருஞ்சோலை), வட மதுரையில் இருக்கிறார்.
கூடலழகர் பெருமாள், தென் மதுரையில் இருக்கிறார்.
கூடலழகர் பெருமாள் ஒரு பக்கம் ஸ்ரீதேவியுடன், மறுபக்கம் பூதேவியுடன் ஆதிசேஷன் மேல், உட்கார்ந்து இருந்த திருக்கோலத்தில், பரமபதத்தில் இருப்பது போல கம்பீரமாக இருக்கிறார்.
திருமாலிருஞ்சோலையில், பெருமாள் நின்ற திருக்கோலத்தில் இருக்கிறார்.
கூடலழகர் விமானமும், திருக்கோஷ்டியூர் போல, அஷ்டாங்க விமானத்துடன் உள்ளது.
பெருமாளும் ஸ்ரீதேவியும், பூதேவியும் அமர்ந்து இருக்கும் அழகை பார்த்தால், வாசலில் இருக்கும் நம்மை கூப்பிடுவது போல இருக்கும்.
பெருமாளின் முத்திரையும் அதற்கு ஏற்றார் போல இருக்கிறது.
அர்ச்சா (பூஜிக்கத்தக்க) திருமேனியுடன் இருக்கும் பகவான், ஒவ்வொரு இடத்திலும் ஒரு வித முத்திரையுடன் நமக்கு காட்சி தருகிறார்.
கூடல் நகரில் இருக்கும் இந்த அழகர்,
ஒரு கையால் நம்மை கூப்பிடுவது போல முத்திரையுடன்,
அருகில் வந்த தன் பக்தனுக்கு, மற்றொரு கையால் அபயம் (பயப்படாதே!) என்ற முத்திரையுடன் இன்றும் காட்சி தருகிறார்.
எப்படி சத்யவ்ரதனுக்கு காட்சி கொடுத்த்தாரோ! அதேபோல,
நம்மையும் கூப்பிட்டு, உன் பயத்தை போக்க, "நான் இருக்கிறேன்" என்று அபயம் தருகிறார்.
இப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாளுக்கு, சத்யவ்ரதன் என்ற வைவஸ்வத மனு, வைகானச முறைப்படி பூஜைகள் நடக்குமாறு ஏற்பாடு செய்தார் கூடலழகர்.
இந்த பெருமாளுக்காக பிரத்யேகமாக பாடப்பட்டது தான்
"பல்லாண்டு..." என்ற பிரசித்தி பெற்ற "பெரியாழ்வார் பாசுரம்".
பெரியாழ்வார் காலத்தில், வல்லபதேவன் என்ற பாண்டிய ராஜன், "அனைத்து சமயங்களிலும் சாரதமமான (மிகவும் உயர்ந்த) சமயம் எதுவோ, அதை தான் ஆச்ரயிக்க வேண்டும்"
என்று ஆசைப்பட்டார்.
அதற்காக கூடல்நகர் என்ற மதுரையில் "பெரிய வித்வத் மேளா" ஒன்றை ஏற்பாடு செய்தார்.
இந்த மேளாவில், பல வித வைதீக வித்வான்களும், வைதீகம் அறியாத மற்ற சமய வித்வான்களும் கலந்து கொண்டு, அவரவர் சமயத்துக்கு சார்பாக பேச ஆரம்பித்தனர்.
எந்த சமயம் தெய்வ சம்மதமோ, அந்த சமயத்தை தான் ஏற்க ஆசைப்பட்ட அரசர், ஒரு பொற்கிழியை உயரே கட்டி விட்டு,
"எந்த சமயம் தெய்வத்துக்கு சம்மதமோ, அந்த சமயத்தை தெய்வமே இந்த பொற்கிழி தானாக கீழே விழ செய்து பதில் சொல்லட்டும்"
என்று சொல்லிவிட்டார்.
விஷ்ணுசித்தர், ஸ்ரீவில்லிபுத்தூரில், பெருமாளுக்கே தொண்டு செய்து கொண்டு, பெருமாள் ப்ரஸாதத்தையே பெற்றுக்கொண்டு, எளிமையான வாழ்க்கை நடத்திக்கொண்டு இருந்தார்.
இப்படி அரசன் பரிக்ஷை வைக்க, கூடலழகர் பெருமாளே, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் விஷ்ணுசித்தர் கனவில் தோன்றி, கூடல் நகருக்கு வர சொல்லி, "தன்னை பற்றி அந்த சபையில் நிர்ணயம் செய்யவும்"
என்று சொல்ல,
"எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, பெரிய சபையில், அனைவரும் ஏற்கும் விதமாக பேசும் சாமர்த்தியம் உண்டோ" என்று விஷ்ணுசித்தர் கேட்க,
"நாமே உம்முடைய வாயிலிருந்து பேசுவோம்.. வாரும்"
என்று பகவான் அழைத்தார்..
அதே சமயத்தில், அரசனுக்கும் "இப்படி ஒரு ஒருவர் வருகிறார்" என்று கனவில் அசரீரியாக கேட்க, விஷ்ணுசித்தர் கூடல்நகர் வந்ததும், தகுந்த மரியாதை செய்து வரவேற்றான்.
சபைக்கு வந்து சேர்ந்தார் விஷ்ணுசித்தர்.
மிக பெரிய சபை ஏற்பாடாகி இருந்தது.
"குதர்க்கமாக" பேசுபவர்கள்,
"நோக்கத்துடன்" பேசுபவர்கள்,
"சாஸ்திர பிரமாணமாக" பேசுபவர்கள்,
"சாஸ்திர விரோதமாக" பேசுபவர்கள்,
என்று பல கோஷ்டிகள் குழுமி இருந்தார்கள்.
"தான் பேச போவதில்லை.. பகவான் தான் உள்ளிருந்து பேச போகிறார்" என்பதால்,
"இவர்கள் மத்தியில் பேசவேண்டுமே !!"
என்ற எந்த ஒரு கவலையும் இல்லாமல் நிம்மதியாக உட்கார்ந்தார் விஷ்ணுசித்தர்.
இப்படி ஒவ்வொருத்தரும் தன் தரப்பில் பேச ஆரம்பிக்க, இவர் தரப்பு பேச நேரம் வர, அரசர் மரியாதையோடு
"தாங்கள் தங்கள் பக்க அபிப்ராயத்தை சொல்ல வேண்டும்" என்றதும்,
"வேண்டிய வேதங்கள் ஓதி" என்று "வேதத்தின் சாரம் என்ன?" என்பதை எடுத்து, பகவானின் பரத்துவத்தை நிர்ணயம் செய்ய,
அனைவரும் பார்க்க, மேலே கட்டி இருந்த பொற்கிழி தானாகவே அவிழ்ந்து, விஷ்ணுசித்தர் அமர்ந்து இருக்கும் இடம் நோக்கி வளைந்து கொண்டு, அவர் மடியில் தானாகவே வந்து விழுந்தது.
அந்த காலங்களில், "பகவானை அடைய எது சிறந்த வழி? என்று தெரிந்து கொள்ளவே அனைவரும் ஆசைப்பட்டனர்.
தன் சமயத்தை பிடித்துக்கொண்டு, வீண் பிடிவாதம் செய்த காலம் இல்லை.
"இவர் மகிமை பொருந்தியவர்" என்று புரிந்து கொண்ட மற்றவர்களும், இவரை பெரிய ரதத்தில் வைத்து ஊர்வலமாக அழைத்து மரியாதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.
அரசரும், இவரையே ஆஸ்ரயித்து, விஷ்ணுசித்தரை பட்டத்து யானையில் ஏற்றி, ஊர்வலமாக தானே அழைத்து கொண்டு வருகிறார்.
மற்ற பண்டிதர்கள் எல்லோரும், ஆசையோடு கூடவே வந்தனர்.
சிலர் சத்ர-சாமரம் போட்டுக்கொண்டே அழைத்து வந்தனர்.
இப்படி "விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார்" மதுரையின் நான்கு வீதியை சுற்றிக்கொண்டு வரும் போது,
கூடலழகர் பெருமாள் இருப்பு கொள்ளாமல், தானும் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன், கருடவாகனத்தில் வர,
எம்பெருமானை ஆகாசத்தில் கருடவாகனத்தில் பார்த்த பெரியாழ்வார், தன்னுடன் கூட வந்திருக்கும் பண்டிதர்களில்,
சிலர் பரமாத்மா என்று ஒருவர் இல்லவே இல்லை என்றும்,
சிலர் அணுக்கள் தான் உலகம் என்றும்,
சிலர் இயற்கையே தான் உண்மை என்றும்,
சிலர் கர்மா (action-reaction ) தான் என்றும்
சிலர் காலம் தான் என்றும்,
சிலர் வேதத்திலேயே சொன்ன உபதெய்வங்களையே பரமாத்மா என்றும்,
சிலர் தெய்வம் உண்டு, ஆனால் தெய்வத்துக்கு நாமம் இல்லை, ரூபம் இல்லை, குணம் இல்லை என்றும் வாதிட்டவர்கள்.
இவர்கள் மத்தியில், இப்படி அப்பட்டமாக நாம, ரூப, குண, சௌந்தர்யத்துடன் "தானே பரமாத்மா" என்று வந்து விட்டாரே?!!
"இவர்களால் பெருமாளுக்கு கண் திருஷ்டி பட்டு விடுமோ!!" என்று நினைத்தார் பெரியாழ்வார்.
"குழுமி இருக்கும் அத்தனை பேரும் பெருமாளின் அருமை தெரிந்து இருப்பார்களா?
பக்தர்கள் நடுவில், பெருமாள் இப்படி திவ்ய காட்சி கொடுத்தால், ஆசை தீர ஆடுவார்கள், பஜிப்பார்கள்.
இவர்களோ! இத்தனை காலமும், குதர்க்கம் செய்து கொண்டிருந்தார்கள். பெருமாளின் மகிமையை உணராது இருந்தார்கள்.
இவர்களும் பார்க்கும் படியாக, கொஞ்சம் அவசரப்பட்டு தரிசனம் தந்துவிட்டாரோ?"
என்று பெரியாழவார் மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.
"பெருமாளுக்கு திருஷ்டி பட்டு இருக்குமோ!!" என்று தோன்ற, பெரியாழ்வார், "பெருமாளுக்கு பல்லாண்டு பாடி திருஷ்டி கழிக்க வேண்டும்" என்று ஆசைப்பட்டார்.
பெரியாழ்வார் அழகாக இசையோடு பாடுவார்.
"வித்வத் சபைக்கு வருகிறோமே" என்பதால், பஜனை செய்ய விடமாட்டார்கள் என்பதால் தாளம் எடுத்துக்கொண்டு வரவில்லையாம் பெரியாழ்வார்.
பெருமாள் கருடனில் அமர்ந்து காட்சி கொடுக்க, இப்போது பஜனைக்கு அவசியம் வந்ததும், பெரியாழ்வாருக்கு தாளம் தேவைப்பட்டது.
யானையின் இருபக்கமும் தொங்கி கொண்டிருந்த மணிகளையே தாளமாக எடுத்துக்கொண்டு, ஒன்றோடு ஒன்று மொத்திக்கொண்டு, பகவானுக்கு மங்களாசாஸனம் செய்கிறார் பெரியாழ்வார்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வி திருக்காப்பு
-- பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு
பெருமாள் கருடவாகனத்தில் அமர்ந்து காட்சி கொடுக்கும் போது, பெருமாளின் திருவடி இருபக்கமும் தொங்கிக்கொண்டு இருக்க, பெரியாழ்வார் அந்த சிவந்த திருவடியை, அனைவருக்கும் சரணமாக இருக்கக்கூடிய திருவடியை (சேவடி) பார்த்துவிட்டார்.
பெருமாள் "மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்று "என்னை ஒருவனையே சரணடைந்து விடு" என்று தான் தன் திருவடியை அனைவருக்கும் காட்டினார்.
முத்தும்மணியும் வைரமும் நன்பொன்னும்
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்துவிரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
-- பெரியாழ்வார் அருளிச்செய்த திருமொழி
"சங்கு சக்ர யவ வஜ்ர ரேகைகள் உடையதாக,
முத்தும் மணியும், வைரமும், நன் பொன்னும் (தங்கமும்), தத்திப் பதித்து தலைபெய்தார் போல, எங்கும் பத்து விரலும், மணிவண்ணன் பாதம்" என்று பெருமாளின் திருவடியை கொஞ்சும் பெரியாழவார்,
கூடல் நகரில், பலரும் பார்க்க தன் திருவடியை பெருமாள் காட்டி விட, பெரியாழ்வாருக்கு அற்புதமான இந்த திருவடியை பார்த்து இவர்கள் கண் பட்டு விடுமே!! என்று திருவடியை பாதுகாக்க நினைத்து, அந்த திருவடிக்கு ஒரு திருக்காப்பு (பாதுகை) போட்டு மறைத்தாராம்.
அதையே
'உன் சேவடி செவ்வி திருக்காப்பு'
என்கிறார்.
பெருமாளின் அங்கங்கள் ஜொலிஜொலிப்புடன் காந்தியுடன் இருப்பதை, மணிவண்ணா என்று அழைக்கிறார்.
முஷ்டிகன் சாணுரன் என்ற இரு மல்லர்களோடு சண்டையிடும் திண் (உறுதியான) தோளை கொண்ட பெருமாள் இவர் என்றதும், திண்தோள் என்று அழைக்கிறார்.
இந்த பெருமாளுக்கு தான் "சுந்தர பாகு" என்று பெயர். அழகிய தோள் உடையவர்.
இது திருஷ்டி கழிப்பு பெருமாளுக்கு போதாது என்று, மேலும் பாடுகிறார்.
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம், பல்லாண்டு!
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும், பல்லாண்டு!
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும், பல்லாண்டு!
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே!
-- பெரியாழ்வார் அருளிச்செய்த திருமொழி
"தன்னை பெருமாள் பார்த்து கொள்ள வேண்டுமே!" என்று சாமானியன் நினைக்கிறான்.
"தான் பல்லாண்டு பாட, பெருமாள் தனக்கு வேண்டுமே ! அவர் நன்றாக இருக்க வேண்டுமே" என்று பக்தன் நினைக்கிறான்.
"தான் செய்யும் பஜனையை பார்க்க, பெருமாள் ரூபத்துடன் வேண்டுமே" என்று பக்தன் கேட்க,
ரூபம் கடந்த, குணங்கள் கடந்த, நாமங்கள் கடந்த பரமாத்மா,
"பக்தன் செய்யும் பஜனைக்காக, நாம, ரூப, குணங்களை எடுத்துக்கொண்டு" பாரத தேசம் முழுவதும் விபவ அவதாரமும், அரச்ச அவதாரமும் செய்து தோன்றி விட்டார்.
பக்தனான பெரியாழ்வாருக்கு "பெருமாள் பல்லாண்டு சுகமாக இருக்க வேண்டும்" என்று தோன்ற,
"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் ஆண்டு"
என்று மங்களாசாசனம் செய்கிறார்.
"பெருமாள் மட்டும் பல்லாண்டு இருந்தால் போதுமா?
பெருமாளுக்கு பல்லாண்டு பாடும் பக்தனும் பல்லாண்டு இருக்க வேண்டுமே"
என்று நினைவு வர, பெருமாளும் (நின்னோடும்), பக்தனும் (அடியோமோடும்) பிரியாமல் பல்லாண்டு இருக்க வேண்டும் என்று மங்களாசாஸனம் செய்கிறார்.
அதையே
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
என்கிறார்.
அடுத்ததாக பெருமாளின் ஸ்ரீவத்சம் உடைய திருமார்பில் பிராட்டி இருக்க, மஹாலக்ஷ்மி தாயாருக்கும் பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்.
அதையே
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
என்கிறார்.
பெருமாள் மட்டுமே அழகு, அவர் கையில் வைத்து இருக்கும் சக்கரமும் (சுடராழி), சங்கும் (பாஞ்சசன்யமும்) கூட அழகாய் இருக்க,
அந்த சங்கு சக்கரத்துக்கு பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்.
அதையே
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும், பல்லாண்டு!
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே!
என்கிறார்.
பாஞ்சசன்யம் (சங்கும்) பெருமாள் கையில் தான் உள்ளது. பெருமாள் எதிரில் தான் காட்சி கொடுக்கிறார்.
இருந்த போதிலும்,
"இந்த பாஞ்சசன்யம்" என்று சொல்லாமல், "அந்த பாஞ்சசன்யம்" (அப் பாஞ்சசன்யமும்) என்று குறிப்பிட்டு சொல்கிறார் பெரியாழ்வார்.
பெருமாள் வைத்திருக்கும் சங்கு வெண்மையானது.
அன்ன பக்ஷியும் வெண்மையானது.
அன்ன பக்ஷிக்கு ஒரு பக்கம் கொண்டையும், கூரான மூக்கும் இருப்பது போல, சங்கிற்கும் உண்டு.
அன்ன பக்ஷி ஒரு தாமரை பூவில் இருந்து மற்றொரு தாமரை பூவில் அமரும் போது, "கீச்" என்று கூவுவது போல,
பெருமாளின் கையில் இருக்கும் இந்த வெண் சங்கு, அவர் கையிலிருந்து அவர் உதரத்துக்கு (உதட்டுக்கு) அருகில் சென்றது, சங்க நாதம் கொடுக்குமாம்.
"பாஞ்சசன்யமும் பல்லாண்டே"
என்று பாட வந்த பெரியாழ்வாருக்கு இந்த நினைவு வர, அந்த நிமிஷத்தில் கண்ணை மூடி பெருமாளை தியானிக்க, வெண் சங்காக இருந்த அந்த பாஞ்சசன்யம், பெருமாளின் கொவ்வை சிவப்புடன் உள்ள உதரத்திற்கு அருகில் சென்றதும், வெண் சங்கு, சிவப்பாக தெரிய, பெருமாளின் அழகில் மயங்கி நின்ற பெரியாழ்வார், 'சிவப்பு ஏறிய அந்த பாஞ்சசன்யத்துக்கும் பல்லாண்டே' என்று மங்களாசாசனம் செய்கிறார்.
அனைவரும் கூடலழகரை தரிசிப்போம். பல்லாண்டு பாடுவோம்.
1 comment:
மதுரை கூடலழகர் பெருமாள் சரித்திரம் - தெரிந்து கொள்ள வேண்டாமா?
பாசுரம் (அர்த்தம்) - பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு - பெரியாழ்வார் கூடலழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?
https://www.proudhindudharma.com/2020/03/pallaandu-pasuram.html
Post a Comment